>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 6 மே, 2017

அரசின் அனைத்து வகை விலையில்லா பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று வழங்குதல் சார்பு - விழுப்புரம் DEEO செயல்முறைகள்!!

மாநில அளவிலான செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் ‘டியூசன்’ கட்டணம்: தமிழக அரசு முடிவு.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்பட்டு வந்தன. தனியார் பள்ளிகள் ஆங்கில மீடியத்தில் நடத்தப்பட்டு வருவதால் அதற்கு போட்டியாக தமிழக அரசும் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில் ஆங்கில மீடியம் பள்ளிகளை தொடங்கியது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் 3,400 ஆங்கில மீடியம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3.32 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகிறார்கள்.தமிழ் மீடியத்துக்கு இலவச கல்வி போல் ஆங்கில மீடியத்துக்கும் கட்டணம் இல்லாமல் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் அரசுக்கு அதிக நிதிச்சுமையும், நிதி இழப்பும் ஏற்படுகிறது.
 ஆங்கில வழி கல்விக்கு கட்டணம் இல்லாமல்இலவசமாக அளிக்க தணிக்கை துறை எதிர்ப்பு தெரிவித்தது.இதையடுத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளது.கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் வழி அல்லாத மற்ற மொழி வழி பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆங்கில வழி பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.ஆனால் அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது டியூசன் கட்டணம் வசூலிப்பதை கட்டாயமாக அமுல்படுத்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இதன்மூலம் ரூ.10 கோடி வசூலிக்க முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிபுரியும் பள்ளியிலேயே B.Ed. கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கும் இனி முழுமையாக ஊதியத்தை வழங்க செயல்முறை வெளியீடு.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனம்.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு தீர்வு காணவும், குழந்தை உரிமை மீறல் மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளை களைந்திடவும் தமிழ்நாட்டில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத் தலைவரின் பதவிக்காலம் கடந்த 2016 ஜனவரி 17-ம் தேதி முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், அணையத் தலைவர், ஆணைய உறுப்பினர்கள் நியமனம் குறித்த விண்ணப்பங்கள் அரசால் கோரப்பட்டது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உறுப்பினர்களாக ஷீலா ஜெயந்தி (சென்னை), சி.திலகவதி (தஞ்சாவூர்), மீரா ஷங்கர் (தூத்துக்குடி), ஏ.ராமநாதன் (சிவகங்கை), இ.ராமலிங்கம் (சென்னை), பி.மோகன் (திருச்சி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 5 மே, 2017

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கும் வழிமுறை

Adhaar card and Pan linking option now 
activated on income tax website whereby now,
 name as per Adhaar card also to be given.
 Both get linked even if there is difference in name. 

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் ‘டியூசன்’ கட்டணம்: தமிழக அரசு முடிவு

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசு பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்பட்டு வந்தன. தனியார் பள்ளிகள் ஆங்கில மீடியத்தில் நடத்தப்பட்டு வருவதால் அதற்கு போட்டியாக தமிழக அரசும் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில் ஆங்கில மீடியம் பள்ளிகளை தொடங்கியது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 3,400 ஆங்கில மீடியம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3.32 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகிறார்கள்.

தமிழ் மீடியத்துக்கு இலவச கல்வி போல் ஆங்கில மீடியத்துக்கும் கட்டணம் இல்லாமல் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அரசுக்கு அதிக நிதிச்சுமையும், நிதி இழப்பும் ஏற்படுகிறது. ஆங்கில வழி கல்விக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக அளிக்க தணிக்கை துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் வழி அல்லாத மற்ற மொழி வழி பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆங்கில வழி பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.

ஆனால் அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது டியூசன் கட்டணம் வசூலிப்பதை கட்டாயமாக அமுல்படுத்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

இதன்மூலம் ரூ.10 கோடி வசூலிக்க முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

INSPIRE AWARD 2017-2018-LAST DATE JUNE 30


G.O. No.212 BC Head continuation order upto 31.12.2017

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்ஜுன் 1 பள்ளி திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு.

நர்சரி வகுப்பு சேர்க்கை: சி.பி.எஸ்.இ., பள்ளிகள் விதிமீறல்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அங்கீகாரமற்ற, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், நாடு முழுவதும், 18 ஆயிரத்து, 500 பள்ளிகள் உள்ளன.
தமிழகத்தில், 660 பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகின்றன; அங்கீகாரம் பெறாமல், 2,000க்கு மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 - 18ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது; சில லட்சங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
இதில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படிப்புகளில், குழந்தைகளை சேர்த்தவர்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு காரணம், அந்த வகுப்புகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகாரமே இல்லை என்பது தான். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்பது, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே உள்ளது. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளை, மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. எனவே தான், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகள் கிடையாது. ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பல பள்ளிகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற மழலையர் வகுப்புகளையும் நடத்துகின்றன. இந்த வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன.
இந்த விபரம் எதுவும் தெரியாமல், கே.ஜி., வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த வகுப்புகளில் சேர்ந்த, எங்களின் குழந்தைகளுக்கு, வேறு புத்தகங்கள் தரப்பட்டன. அதுபற்றி விசாரித்தபோது தான், உண்மை தெரிய வந்தது.
இந்த விபரங்களை, பள்ளிகள் முன்கூட்டியே தெரிவிக்காதது தான், எங்களை போன்றவர்கள் ஏமாந்ததற்கு காரணம். இனிமேலாவது, இந்த விவகாரத்தில், சி.பி.எஸ்.இ., முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஏமாற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளை மறுநாள் 'நீட்' நுழைவு தேர்வு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை மறுநாள் நடக்கிறது. இதில், தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீட் தேர்வு, இந்த ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.இதில், தமிழக அரசு ஒதுக்கீட்டில், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி, சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்நிலையில், அறிவித்தபடி நீட் நுழைவு தேர்வு, நாளை மறுநாள், நாடு முழுவதும் நடக்கிறது. 103 நகரங்களில், இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 11 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களில், 80 ஆயிரம் பேர், தமிழக மாணவர்கள். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
இவர்களுக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நமது நாளிதழ் சார்பில், நீட் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நீட் வழிகாட்டி புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

தொடக்கப் பள்ளிகளின் ,வேலை நாட்களில் மாற்றம் இல்லை: கல்வித்துறை

அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு ஆசிரியரும், ஆண்டுக்கு, 200 நாட்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணியாற்ற வேண்டும். உயர், மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 முதல் கோடை விடுமுறை துவங்கும். தொடக்கப் பள்ளிகளில், மே, 1ல் தான் விடுமுறை துவங்கும். ஆனால், வெயில் தாக்கம் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கும், ஏப்., 15 முதல் விடுமுறை விட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.
இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். அதை ஏற்க, பள்ளிக்கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினமும், ஐந்தரை மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. அதன்படி, 200 நாட்களுக்கு, மொத்தம், 1,100 மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், தொடக்கப் பள்ளிகளில், தினமும், ஐந்து மணி நேரம் தான், பாடம் நடத்தப்படுகிறது. எனவே, 1,100 மணி நேரம் பாடம் நடத்த, 220 நாட்கள் தேவைப்படுகின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்கவோ, வேலை நாட்களை குறைக்கவோ வாய்ப்பில்லை என, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை பட்ட படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு : பல்கலை பதிவாளர் தகவல்

"மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்," என பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள முதுகலை பட்டப் படிப்புகளில், சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மரபணுவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்படுகிறது. திறமையான மாணவரை தேர்வு செய்யும் வகையில், அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே 27, 28 ல் தேர்வு நடக்கும். மே 15க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல் எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உட்பட சில படிப்புகளுக்கு மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும். இதற்கான தேர்வு ஜூன் 18 ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இல்லை, என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும் கிடைக்கும்

வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே, பதக்கமும், பரிசும் வழங்கப்பட உள்ளது. 
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவில், 'ரேங்க்' வழங்கப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு, பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில், ரேங்க் பெறும் மாணவர்களுக்கு, முதல்வர் பரிசு வழங்கி பாராட்டுவார். தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே, இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2011ல் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அதனால், பரிசு மற்றும் பதக்கத்துக்கு, தனியார் பள்ளி மாணவர்களும், ஆங்கில வழி மாணவர்களும், அதிக அளவில் தேர்வாகினர். அரசு பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும், மாநில, மாவட்ட ரேங்க் பெறுவதில்லை.
மாநில அரசின் பரிசும், பதக்கமும், தனியார் பள்ளி மாணவர்களுக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த முறைக்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்தது. 
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், மாநில, மாவட்ட ரேங்குக்கான பரிசுகளை, அரசு பள்ளியிலும், தமிழ் வழியிலும் படிக்கும் மாணவர்களுக்கே வழங்கலாம் என, அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அரசு பள்ளியில், தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், பரிசு வழங்குவதா; அரசு பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பரிசு தருவதா என, ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கும் பி.எட். : சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 2 ஆண்டு பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு 
2017--18ம் கல்வி ஆண்டில், தபால் வழியில் பி.எட். படிப்பதற்கான சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இதில் சேர தகுதியாக, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு ஆசிரியர் பட்டயப்படிப்பை நேர்முக வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடக்க கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு,புவியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரம், வணிகவியல், மனைஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விபரங்களை 'எம்எஸ்யுனிவ்.ஏசி.இன்' என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பிய விண்ணப்பத்துடன், 'பதிவாளர், நெல்லை மனோன்மணீயம் 
சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி' என்ற முகவரிக்கு பெறப்பட்ட 650 ரூபாய்க்கான காசோலையுடன் நேரில் வந்து உடனடியாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்ணீர் : அதிகாரிகள் சமாதானம்

சென்னையில் கல்வி அமைச்சர் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.பல்வேறு கோரிக்கைகள் குறித்து, ஆறு ஆண்டுகளாக ஆசிரியர் சங்கங்கள் போராடு கின்றன. 
அமைச்சர் மற்றும் செயலாளரை, எளிதில் சந்திக்க முடியாத சூழ்நிலையால், அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சமாதானம் செய்யும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன், கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 63 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்றன.
இதில் பகுதிநேர தொழில்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களைஅதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றநிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 1.4.2003க்கு முன் பணியில் சேர்ந்த, பகுதிநேர தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, அவர்களின் முந்தைய பணிக் காலம் மற்றும் 1.4.2003க்கு பின் உள்ள பணிக் காலத்திலும் முறைப்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற கோரிய போது, கண்ணீர் விட்டு அழுதனர்.
மேலும் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள், 'மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம் மூலம் குடும்பம் நடத்துவது பெரும் சிரமமாகஉள்ளது. எங்களை நிரந்தரப்படுத்தி முறைப்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்,' என கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.
இதை எதிர்பார்க்காத அமைச்சர், அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டு, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என பதில் அளித்தார். பணியேற்ற நாளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு பெற்ற பட்டதாரிஆசிரியருக்கு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என தமிழாசிரியர் கழக மாநில பொது செயலாளர் முருகேசன் வலியுறுத்தினார், என்றனர்.

வியாழன், 4 மே, 2017

பள்ளி செல்லா குழந்தைகள் 1,116 பேர் கண்டுபிடிப்பு


மேல்நிலைப்பள்ளிகளில் பாடப் பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீட்டு முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு விகித விவரம்:மேல்நிலைப்பள்ளிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு விவரம் (சதவீத அடிப்படையில்): பொதுப்பிரிவு- 31, பிற்படுத்தப்பட்டோர்- 26.5, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்- 3.5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்- 20, ஆதி திராவிடர்- 18 (ஆதி திராவிட அருந்ததியர்கள் இருப்பின் 18 சதவீதத்தில் இருந்து 3 சதவீத இடங்களை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்), பழங்குடியினர்- 1.

மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவுக்கு 31 சதவீத இடத்துக்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்தப் பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய... மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்