>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 29 மார்ச், 2017


ANNAMALAI UNIVERSITY -DDE - Examination Results - December 2016-Results Published on 24-03-2017


மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு
அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது.
 மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை பள்ளியில் சமர்பிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
 இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் சுமார் 4.4 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் இதற்கு முன்னர், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன், மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து போலியான பெயர்ப் பட்டியல் தயார் செய்து ஆண்டு தோறும் அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வந்துள்ளனர். ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் போலியான மாணவர்களை சேர்க்க முடியாது என்பதால், தற்போது மேற்கண்ட 3 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.
3 மாநிலங்களில் மட்டுமே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிய உணவு உட்கொள்ளாத போலி மாணவர்கள் இருந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள போலியான மாணவர்கள் கண்டறியப்பட்டால், அரசுக்கு பெரும் தொகை மிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய், 28 மார்ச், 2017


மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

திங்கள், 27 மார்ச், 2017


மார்ச் 29-இல் வங்கிகளுக்கு விடுமுறை

மார்ச் 29-இல் வங்கிகளுக்கு விடுமுறை
*தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை மார்ச் 29ல் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.*
*நடப்பு நிதியாண்டு (2016-2017) வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நிதியாண்டு கணக்குகளை இறுதி செய்ய (மார்ச் 31,2017) வங்கிகளில் உள்ள அந்தப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டும் புரிவார்கள்.*
வரும் புதன்கிழமை (மார்ச் 29) தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு அன்றைய தினம் சேவை கிடையாது. மேலும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 1) வழக்கம்போல் நிதியாண்டு தொடக்கநாள் என்பதால், முதல் சனிக்கிழமை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடையாது. அன்றைய தினம் ஊழியர்கள் மட்டும் பணிபுரிவார்கள் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

ஞாயிறு, 26 மார்ச், 2017


ALAGAPPA UNIVERSITY* DDE - December 2016 Results Published today

Flash News
ALAGAPPA UNIVERSITY
DDE - December 2016 Results Published today

பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.

பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் பணி, வாக்காளர்களை சரிபார்க்கும் பணி ஆகியவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுவது வழக்கம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்கள் வரை ஒவ்வொரு தேர்தல் பணிகளிலும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என காஷ்மீர் முதல்-மந்திரி மெஹபூபா உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சையத் அல்தாப் புகாரி இதுகுறித்து கூறுகையில் “காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் மாநில அரசு ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் அவர்கள் வேலையை செய்தால் மட்டும் போதும்.
பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களிலும் இது கடைபிடிக்கப்படும். ஆசிரியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதவிர அக்கவுண்ட் பணிகள் மற்றும் பள்ளி கட்டிட வேலைகளில் சூப்பர்வைசர்களாக ஆசிரியர்கள் ஈடுபடுவதும் தடுக்கப்படும்” என்றார்.

ஏப் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கிபுதுடில்லி: ஏப்1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2016-17-ம் ஆண்டிற்காக நிதியாண்டு கணக்கு நிறைவடைவதையொட்டி வங்கிகளுக்கு நாளை (மார்ச் 26-ம் தேதி) முதல் ஏப். 1-ம் தேதி வரையில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியரின் - உலக சாதனை!!

சிறு சிறு முயற்சியும் உலக சாதனையாகலாம்...
ஆசிரியர் தினத்தன்று அறப்பணி செய்யும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் கூற நான் செய்த சிறு முயற்சி இன்று "உலக சாதனையாக" அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்கள் பள்ளி ( ஊ.ஒ.ந.நி.பள்ளி, இராஜாகுப்பம், குடியாத்தம், வேலூர் ) மைதானத்தில் மிதிவண்டி ஓட்டிய படியே "சாவித்ரிபா பூலே, டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் அப்துல் கலாம்" ஆகிய மூவரின் படங்களை சுமார் 1:30 மணி நேரத்தில் தொடர்ந்து மிதிவண்டியில் பயணித்த படியே வரைந்து முடித்தேன். இந்த சிறு முயற்சி மூலம் ஆசிரியர் பணியை அறப்பணியாய் செய்யும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் கூற முயற்சித்தேன். இந்த முயற்சி இன்று DBC world records அமைப்பின் மூலம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனது முயற்சியை உலக சாதனை பெறும் அளவிற்கு ஊக்கமும், வழிகாட்டுதலும் தந்த அன்பு தோழர் SURIYA ( URF WORLD RECORD JURY CALCUTTA, TAMILNADU ) அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
(பள்ளியில் பல தடைகளை தாண்டி செய்த முயற்சி தற்போது - உலக சாதனையாக)
- தெருவிளக்கு கோபிநாத்
7598479285



பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு
பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு, 45.57 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தொடக்கக்கல்வி- பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர் விரும்பினால் சாதி மதம் குறிப்பிட தேவையில்லை -இயக்குனர் செயல்முறைகள்


கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.
இத்தேர்வைஎழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 
தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால் மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.
குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை.இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.
மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும் ஆதார் எண் மற்றும் கே.ஓய்.சி., படிவத்தை ஒராண்டிற்குள் வாங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், யுஐடிஏஐ, டிராய் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதுசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்படும்.

சனி, 25 மார்ச், 2017


ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை

ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது. ரேஷன் ஊழியர்களுக்கு, மாதத்தின் முதல், இரண்டு ஞாயிற்று கிழமை வேலை நாள்.
அதற்கு மாற்றாக, அந்த வார வெள்ளிக் கிழமை விடுமுறை. ஏப்., 1ல் இருந்து, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவுத் துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், சமூகநலக் கூடங்களில், மக்களை அழைத்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அந்த பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். புதிய ரேஷன் கார்டு வாங்கியதும், கடைக்கு சென்று, ஊழியரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்ததும் கார்டுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., வரும். பின், வழக்கம் போல், கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். இதற்காக, ஏப்., 15 வரை, ஊழியர்கள், விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!

பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம், மத்திய அரசின்  அடுத்த செக்..! 
ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன் நிரந்தரக்கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர்  31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான்கார்டு செல்லாது.
நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பான் எண்ணை ஆதார்எண்ணுடன் இணைக்கவில்லையோ அவர்களது பான் கார்டுகள்காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது. பான் கார்டு வரி செலுத்தும்அனைவருக்கும் பான் கட்டாயம், வரி செலுத்தும் வரம்பில்இல்லாதவர்களும் பான் கார்டை அடையாள அட்டையாகப்பயன்படுத்தலாம்.
மானியம் என்றாலே ஆதார் கட்டாயம் கடந்த சில ஆண்டுகளாகமத்திய அரசு அனைத்துத் திட்டங்களுக்கும் அதார் எண் தேவைஎன்பதைக் கொண்டு வருகின்றது, முக்கியமாக மானியம் பெறும்அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பள்ளி சத்துணவு சாப்பாட்டிற்கும் ஆதார் அன்மையில் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும்மதிய உணவிற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறியுள்ளது.
ரயில்வே பாஸ் மத்திய அரசைப் பொருத்த வரை இன்னும்ரயில்வே ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும்பாஸ்களுக்கு அதார் எண் கட்டாயம் ஆக்கப்படவில்லை.
இந்தியர்களின் வருமானத்தைக் கண்டறிவது எளிது ஆதார்கார்டு, பாண் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுடன்இணைக்கப்படுவதினால் கோடி கணக்கான இந்தியர்களின்வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்களைவருமான வரித்துறையினரால் எளிதாகக் கண்டறிய முடியும்.
மாற்று அடையாள அட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லிவருங்காலத்தில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைபோன்ற அனைத்து அடையாள அட்டைகளுக்கும் ஆதார் அட்டைமாற்றாக இருக்கும் என்று வருமான வரிக்கு ஆதார் எண்கண்டிப்பாகத் தேவை என்று அறிவிக்கும் போது கூறினார்.
எதனால் பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் மேலும் ஆதார்அட்டையைப் பான் கார்டுன் இணைக்கும் போது ஒன்றுக்குமேற்பட்ட பான் கார்டு வைத்துள்ள விவரங்கள் கிடைக்கும் என்றும்அதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும்முறைகேடுகளைக் குறைக்கலாம் என்றும் அருன் ஜெட்லிதெரிவித்தார் .

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்?பேரவையில் அரசு தகவல்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்தவிவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங்களும் அப்போதுகண்டறியப்படும்.உதய் திட்டம் இல்லாவிட்டால்….மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, அரசு கடன் ரூ.2.72 லட்சம் கோடியாக இருக்கும். ரூ.22,815 கோடி மின்சார வாரியத்தின் கடனைஅரசு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. இல்லையென்றால், அரசின் கடன் மார்ச் 31 நிலவரப்படி ரூ.2.50 லட்சம் கோடியாகத்தான் இருந்திருக்கும். பொது நிறுவனங்களின் கடன் இந்த ஆண்டு இறுதியில் ரூ.94,000 கோடி அளவு மட்டுமே இருக்கும். அடுத்த நிதியாண்டு இறுதியில் அரசின் கடன் அளவு ரூ.3.14 லட்சம் கோடியாகும் என்றார்ஜெயக்குமார்

ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' வெளியீடு ...,முழு விவரம்....

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும்.
சான்றிதழ் சரிபார்த்தல்
சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும்.
மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:-
‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம்
வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
கல்வித்தகுதிக்கு மதிப்பெண்
கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
கருத்தில் கொள்ளப்படும் தேதி
இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிப்படையான நியமனம்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2016-17 ஆம் ஆண்டிற்கான தொடக்க பள்ளி ஆசிரியர்கள் | பணி மாறுதல் விண்ணப்பம்..




பொது இடங்களில் அசுத்தம் செய்தால் ரூ 5000 அபராதம்: உத்திரகாண்ட் அரசு!!


பொது இடங்களில் எச்சில் துப்பியோ அல்லது குப்பைகள் கொட்டியோ அசுத்தம் செய்தால் ரூ 5000 அபதாரம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என .உத்திரகாண்ட் அரசு எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்திரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக திரிவேந்திரசிங் ரவாத் பதவியேற்றுள்ளார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் தலைநகர் டேராடூனில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபதாரமாக ரூ 5000 அல்லது 6 மாதம் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுகாதார ஆய்வாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். யாராவது அசுத்தம் செய்பவர்கள் தென்பட்டால் அவர்களிடம் இருந்து ‛‛ஸ்பாட் பைனா'' ரூ 5000 வரை வசூலிக்கப்படும் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு -மார்ச் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம்

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அளவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 4,362 காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு மே 31-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வை மாநில அளவில் 8 லட்சம் பேர் எழுதினார்கள்.
இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிடாவிட்டால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து கடைநிலைப் பணிகளுக்கு, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவை என்றால் எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை மொத்தமாகக் கணக்கிட்டு இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டு ஆக.7-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை அரசு தேர்வு துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதியோர் www.dge.tn.nic  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதில் தேர்வு பெறுவோருக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறிவியல் வினாக்கள் எளிமை : 'சென்டம்' வாய்ப்பு அதிகம்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் 'சென்டம்' எடுக்க முடியும், என மாணவிகள் கூறினர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வுநேற்று நடந்தது.
அனைத்து பகுதி வினாக்களும் எளிதாக இருந்ததால் இக்கல்வியாண்டில் 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர்.
ஆர்.சந்தோஷ்சிவன், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர் நலச்சங்க மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: பாடங்களை முழுமையாக படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க முடிந்தது. எந்த பகுதியிலும் கடின வினாக்கள் கேட்கப்படவில்லை. விரைவாக எழுதும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 40 நிமிடத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம். பள்ளியில் மாதிரி தேர்வு எழுதி பாடம் முழுவதும் மனப்பாடம் ஆனதால் சென்டம் உறுதி.
எம்.லேகாஸ்ரீ, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாவில் 11 வது வினா மட்டும் புத்தகத்திற்கு உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டதால் பதில் எழுதுவதில் சற்று சிரமம் இருந்தது. ஏனைய பகுதிகளில் அனைத்து வினாக்களும் எளிமை. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் கூட 75 மதிப்பெண்களுக்கு அதிகம் எடுத்து விடலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் எடுப்பது உறுதி.
எம்.ஷேக் அப்துல்லா, ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: இயற்பியல், உயிரியல், வேதியியல் என அனைத்து பிரிவுகளில் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுவதும் படித்து தயாரான மாணவர்களுக்கு குழப்பம் தரும் வினாக்கள் எதுவும் இல்லை.மாதிரி தேர்வு எழுதி பார்த்து விடைகளை விரல் நுனியில் வைத்திருந்த மாணவர்கள் நிச்சயமாக 'சென்டம்' எடுப்பர். மெல்ல கற்கும் மாணவர் கூட 80 மதிப்பெண் எளிதாக எடுக்கலாம். கடந்தாண்டை விட இந்தாண்டு வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள்எண்ணிக்கையை கடந்தாண்டை விட அதிகரிக்கும்.