>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 17 மார்ச், 2017


10ம் வகுப்பு ஆங்கில தேர்வில்அச்சு பிழையால் குழப்பம்

பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில், மொழி பெயர்ப்பு பகுதியும், உரையாடலும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
வேடசந்துார் செல்லக்குட்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர், சுப்ரமணி கூறுகையில், ''நன்றாக படிக்கும் மாணவர்கள், 'சென்டம்' எடுக்கலாம். மற்ற மாணவர்கள், எளிதாக தேர்ச்சி பெற முடியும். உரையாடல் பகுதியில், தொடர்ச்சியாக இரு வார்த்தைகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் தடுமாறி உள்ளனர்.
ஐந்து மதிப்பெண்களுக்கான படத்திற்கு விளக்கம் எழுதும் பகுதி, எளிமையாக இருந்துள்ளது,'' என்றார்.மாணவர்கள் கூறுகையில், 'மொழி பெயர்ப்பு பகுதியில், 'சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருங்கள்' என்ற வார்த்தையில்,
தவறான அச்சுப்பதிப்பால் கூடுதலாக, இரு எழுத்துக்கள் இடம் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது' என்றனர்.

பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் தலைமையாசிரியர் வலியுறுத்தல்

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பொன்முடி, பொருளாளர் சண்முகநாதன், கவுரவ ஆலோசகர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட
தலைவர் அனந்தராமன் ஆகியோர் சென்னையில் உதயசந்திரனை சந்தித்தனர்.அப்போது, தமிழகத்தில் மேல்நிலை பள்ளிக்கான தனி இயக்குனரகம், டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு, மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை ஓய்வு பெற்ற கல்வி இயக்குனர் கருணாகரன் கமிட்டி அரசுக்கு அளித்துள்ளது.
இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை பணியாளர்கள் சம்பளம் உயர்வு, பொதுத் தேர்வு விடைத்
தாளின் முகப்பு தாள்களை தைக்கும் பணிக்காக ஒரு விடைத்தாளுக்கான ஊக்க ஊதியம் ரூ.2.50ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வியாழன், 16 மார்ச், 2017


TN BUDGET 2017-18:150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார்

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும்
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி துறை
உயர்கல்வி துறைக்கு ரூ.3,680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். உயர்கல்வி உதவி தொகைக்காக ரூ.1,580 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார்.
பின்னர் அவர்ராஜினாமா செய்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதை தொடர்ந்து தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ’நற்றமிழ் அறிவோம்' தூய தமிழகராதி!!!
தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த அகராதியை தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகத முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.செழியன் புதன்கிழமை கூறியது: அகர முதலித் திட்டத்தின் தனித்திட்டப் பிரிவாகச் செயல்படுவது தமிழ்க் கலைக் கழகமாகும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை வழங்கப்பட்டது.
வல்லுநர் குழு: இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கென இயக்ககத்தின் இயக்குநர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர், பதிப்பாசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியல் தமிழறிஞர்கள், சொல்லாக்க வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு அறிஞர்கள், தமிழ் அகரமுதலி வல்லுநர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டதாகும்.
தாய்மொழிப் பற்றை வளர்க்க...: பிற மொழியை எழுதுவதும், பேசுவதும் பெருமை என்ற எண்ணம் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் தாய்மொழிப் பற்றை வளர்ப்பதற்காக எங்களது இயக்ககம் சார்பில் புதிய நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே மாணவர்களுக்கு பிறமொழிக் கலப்பில்லாத வகையில் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' என்ற தூய தமிழ் அகராதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வண்ணப் படங்களுடன் தமிழ்ச் சொற்கள்: இன்றைய தலைமுறையினர் ஆப்பிள், பலூன் உள்ளிட்ட வார்த்தைகளை தமிழ் என்று நினைத்து உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தக்கூடிய சொற்களைக் கொண்டு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அரத்தி (’ஆப்பிள்'), ஊதாம்பி (’பலூன்'), ஒளிப்படம் (’போட்டோ'), கூராக்கி (’ஷார்ப்னர்'), கவ்வி (’கிளிப்'), சொடுக்கி (’பொத்தான்'), சேணியக்கி (’ரிமோட்'), சாளரம் (’ஜன்னல்') ஆகியவை உள்பட மொத்தம் 150 தூய தமிழ்ச் சொற்கள் அதற்குரிய வண்ணப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் வரும் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து தலைமை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் குறிப்பிட்ட பாட வேளைகளில் மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்கள் குறித்து ஆசிரியர்கள் கற்றுத்தருவர். இந்தத் திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்த கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நூலைத் தொகுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ’நற்றமிழ் அறிவோம்' தூய தமிழகராதி!!!
தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த அகராதியை தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகத முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.செழியன் புதன்கிழமை கூறியது: அகர முதலித் திட்டத்தின் தனித்திட்டப் பிரிவாகச் செயல்படுவது தமிழ்க் கலைக் கழகமாகும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை வழங்கப்பட்டது.
வல்லுநர் குழு: இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கென இயக்ககத்தின் இயக்குநர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர், பதிப்பாசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியல் தமிழறிஞர்கள், சொல்லாக்க வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு அறிஞர்கள், தமிழ் அகரமுதலி வல்லுநர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டதாகும்.
தாய்மொழிப் பற்றை வளர்க்க...: பிற மொழியை எழுதுவதும், பேசுவதும் பெருமை என்ற எண்ணம் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் தாய்மொழிப் பற்றை வளர்ப்பதற்காக எங்களது இயக்ககம் சார்பில் புதிய நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே மாணவர்களுக்கு பிறமொழிக் கலப்பில்லாத வகையில் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' என்ற தூய தமிழ் அகராதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வண்ணப் படங்களுடன் தமிழ்ச் சொற்கள்: இன்றைய தலைமுறையினர் ஆப்பிள், பலூன் உள்ளிட்ட வார்த்தைகளை தமிழ் என்று நினைத்து உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தக்கூடிய சொற்களைக் கொண்டு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அரத்தி (’ஆப்பிள்'), ஊதாம்பி (’பலூன்'), ஒளிப்படம் (’போட்டோ'), கூராக்கி (’ஷார்ப்னர்'), கவ்வி (’கிளிப்'), சொடுக்கி (’பொத்தான்'), சேணியக்கி (’ரிமோட்'), சாளரம் (’ஜன்னல்') ஆகியவை உள்பட மொத்தம் 150 தூய தமிழ்ச் சொற்கள் அதற்குரிய வண்ணப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் வரும் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து தலைமை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் குறிப்பிட்ட பாட வேளைகளில் மாணவர்களுக்கு தூய தமிழ் சொற்கள் குறித்து ஆசிரியர்கள் கற்றுத்தருவர். இந்தத் திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்த கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நூலைத் தொகுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். ஓய்வூதியம் பெறும் 55.51 லட்சம் பேரும் இதனால் பயனடைவார்கள்.
மேலும், ஐஐடி சட்டத்திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐஐடியை நடத்தவும், நாடு முழுவதும் புதிய 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும், திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கவனத்துக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்புதான் பிறந்த தேதி, பெயரை மாற்ற முடியும்+

சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பு தான் அப்பணியை செய்ய முடியும். தேர்வு எழுதிய பிறகு மாற்றம் செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் கடந்த 1989ம் ஆண்டு பிறந்தேன். எனது பெற்றோர் அதை மறந்து நான் பிறந்தது 1992ம் ஆண்டு என்று மாற்றி கொடுத்து விட்டனர்.
பள்ளியில் எனது பெற்றோர் செய்த தவறினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகு எனது சான்றிதழை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது கல்வி சான்றிதழில் எனது பிறந்த தேதியை மாற்றி கொடுக்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் மாற்றி தர மறுத்துவிட்டார்கள். எனவே எனது சான்றிதழில் பிறந்த தேதியை மாற்றி தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் நேற்று விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூறியபடி, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பு தான் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்ற முடியும். மனுதாரர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகு பிறந்த தேதியை மாற்ற கோரி உள்ளார்.
இதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா?

சென்னை  கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த திவ்யா ஷாரோனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 
முதுநிலை மருத்துவ படிப்பிற்காக நீட் எனப்படும் தகுதி தேர்வில் நான் அதிக   மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். அரசுக்கான இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களே நிரப்பிக் கொள்வதால் என்னைப்  போல் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கும் உரிய இடங்களை அளிக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு  நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி வாதாடினார். மனுதாரர் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி வாதாடினார். 
தனியார் கல்லூரிகள் சார்பாக மூத்த வக்கீல்கள் சோமையாஜி உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள். அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்  கூறியிருப்பதாவது:  “நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கேட்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக நீங்கள் கூறலாம்.  இதன் மூலம்  தமிழக மாணவர்களின் தரத்தை நீங்கள் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். இந்த நடவடிக்கை அவமானகரமனதாக இல்லையா?.  
கோடிக்கணக்கில் பணம் கட்டி மருத்துவம் படிக்கும் மாணவன் எப்படி மக்களுக்கு சேவை செய்வான். முதுகலை படிப்பில் உரிய விதிகளை மருத்துவ கவுன்சில் பின்பற்றவில்லையா?. விதிகளை பின்பற்ற நீங்கள் வற்புறுத்தாமல் கல்வியை வணிகமாக மாற்ற மருத்துவ கவுன்சில் அனுமதித்துள்ளது.
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்  இந்த தொழில் நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.    தமிழகத்தில் உள்ள அரசு, தனியார்,நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எத்தனை இடங்களுக்கு  மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2016- 17 கல்வியாண்டில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன.
அப்போது மருத்துவ கவுன்சில் விதிகளின்படி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டு தகுதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்ற விதிகள்  பின் பற்றப்பட்டதா? . தமிழக அரசு தனியார் கல்லூரிகளிடம் இருந்து பெறப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை?. உள்ளிட்ட கேள்விகளுக்கு  அரசு பதில் அளிக்க வேண்டும். இந்த   வழக்கு விசாரணையை  ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்.  மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். அவர்களும் பதில் அளிக்கவேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு

 'பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 
150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாக கேட்கப்படும். இதற்கான விடைகள், தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆன்சர் கீ' வெளியிடப்படுமா: பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், 'ஆன்சர் கீ' விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் 'தியரி' பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 
75 மதிப்பெண் பகுதியான 'ஓ.எம்.ஆர்., ஷீட்' நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் 'ஆன்சர் கீ' வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது

புதன், 15 மார்ச், 2017


3rd Term Exam - 2017 Time Table

6th TO 9 th STD THIRD TERM EXAM TIME TABLE - 2017

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு...

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த எந்த துறைத் தேர்வுகளை எழுத வேண்டும், எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்களுடன்]

தமிழக பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வு தாள்கள் 👇
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும். 👇
5 தேர்வுகள்
📚 Deputy Inspectors Test – First Paper (without Books ) [Subject Code 004]
📚 Deputy Inspectors Test-Second Paper (without books) [Subject Code 017]
📚 Deputy Inspectors Test Educational Statistics (With Books) [Subject Code 119]
📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code
208]
📚 Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்.
2 தேர்வுகள்
📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]
📚 Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]
(அல்லது)
📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]
📚 The Account Test for Executive Officers (With Books) [Subject Code 114]

'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப்பு மாணவர் மகிழ்ச்சி

'தமிழ்த் தேர்வைப் போலவே ஆங்கில முதல்தாள் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெறுவது உறுதி' என, 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் மாணவர்கள் கூறியதாவது: பி.அருண்அஸ்வந்த் (எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 'இ- பிரிவில் 51வது வினாவில் 'ஏ' வினாவிற்கு 'எஷன்ஷியல்' என்ற வார்த்தைக்கு ஒரே மாதிரியான பொருள்படும்படி 3 விடைகள் கொடுத்திருந்தது மாணவர்களை சிரமப்படுத்தியது. அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எம்.பாண்டீஸ்வரி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): கடந்தாண்டு வந்த கேள்விகள், 'ப்ளூ பிரின்ட்' படி பாடங்களை படித்ததால் விடையளிக்க எளிதாக இருந்தது. அரசு பள்ளி மாணவர்களை சிரமப்படுத்துவதாக, 'படம் பார்த்து விடையளி' பகுதியில் 53வது வினா இடம் பெற்றிருந்தது. அதேசமயம், 'கரகாட்டம்' குறித்தது என்பதால் எளிதாக விடையளிக்க முடிந்தது. மொத்தத்தில் அரசு பள்ளி மாணவர்களும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம்.
டி.ஆனந்தவினிதா,(புனித வளனார் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): ஒரு மதிப்பெண் வினாக்கள் விடையளிக்க எளிதாக அமைந்திருந்தன. 'எதிர்ச்சொல், பிரதிபெயர் சொல்' பகுதி வினாக்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக பகுதி, இலக்கணப்பகுதி வினாக்கள் எல்லாம் எளிமையே. முறையான பயிற்சியும், முந்தைய பொதுத் தேர்வு வினா வங்கியை படித்ததும் மிகவும் உதவியது.
டி.எல்.அழகுமீனாள் (ஆங்கில ஆசிரியை, புனித வளனார் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): தேர்வில் எந்த வினாவும் சிரமமாக இருக்காது. ஏனெனில், ப்ளு பிரிண்ட், வினா வங்கி, புத்தகத்தில் உள்ள பாடங்களில் இல்லாத எதுவும் இடம் பெறவில்லை. மாணவர்களின் மனத்திறன், மொழி ஆளுமை திறனை சோதிக்கவே 'மொழிப் பயன்பாடு' பிரிவில் 'எஷன்ஷியல்' என்பதற்கு 3 பொருள் தரும் விடை அளிக்கப்பட்டுள்ளது. 
இறுதியாக கரகாட்டம் குறித்த வினாவிற்கு மாணவர்களால் எளிதாக விடையளிக்க முடியும். அதனால் சாதாரண மாணவரும் அதிக மதிப்பெண்களை அள்ளுவது உறுதி, என்றார்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக 2 ஆண்டுகள் (58 வயதில் இருந்து 60 வயது ஆக)பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைவர் கே.சந்திரசேகரன் கூறி இருப்பதாவது பஞ்சாப்,ஹிமாசல பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க சட்டம் இயற்றி செயல்படுத்தி வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி செயல்பட்டு வரும் தமிழகஅரசும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி கௌரவிக்க வேண்டுகிறோம். எங்களது இந்த நீண்ட கால கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாளை தமிழக பட்ஜெட்

தமிழக சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.
இதற்காக சட்டப் பேரவையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். வரும் 23-ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார். 
கடன் சுமை: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதங்கள் அதிகரிக்கும் சூழலில், நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு அளவும் உயரும். இந்த நிதி ஒதுக்கீட்டு உயர்வால், தமிழகத்தின் கடன் சுமை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சுமையின் அளவு ரூ.2.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதீத கடன் சுமையால் பெரிய அளவிலான புதிய திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் சூழல்: அதிமுகவில் இருந்து பிரிந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக ஓர் அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணிக்கு 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. திமுக, ஓ.பி.எஸ். அணியினர் பல முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை, ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் நிறுத்தம், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு உள்பட பல முக்கிய விஷயங்களை திமுகவைப் போன்றே, ஓ.பி.எஸ். அணியினரும் எழுப்ப முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSLC விடைத்தாள் ஏப்ரல் 1 முதல் திருத்தம்

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு 28-ம் தேதி முடிவடைகிறது. விருப்ப மொழித்தாள் தேர்வு 30-ம் தேதி நடக்கிறது.தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணிக்கொடை: திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்.

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவைக்கூட்டம்
தில்லியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பணிக்கொடை செலுத்தகைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை வரிப் பிடித்தம் இல்லாமல் பணிக்கொடை பெறுவதற்கு வழிவகை பிறக்கும்.முன்னதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன்கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்தத் திட்டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன.எனினும், மேற்கண்ட பணிக்கொடையை வழங்க வேண்டுமானால் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொழிலாளர் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை பணிக்கொடை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரின.
மேலும், வரிப்பிடித்தம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறலாம் என்ற ஷரத்தானது கடந்த ஆண்டு (2016) ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது

TNTET - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும்: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு புதிதாக 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறையில் 286 பணியிடங்கள், 623 பின்னடைவு இடங்கள் (பேக்-லாக் வேகன்சி), அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (ஆர்எம்எஸ்ஏ) 202 பணியிடங்கள் அடங்கும். ஏற்கெனவே நடந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், முன்பு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பிஎட் படித்துக் கொண்டிருக்கும்போது தகுதித் தேர்வில் தற்போது அப்படிப்பை முடித்தவர்கள் தேவையான விவரங்களை ஆன்லைனில்பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 இதற்கான கடைசி தேதி மார்ச் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் பெற சென்னை டிபிஐ வளாகத்தில் ஈ.வி.கே. சம்பத் மாளிகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில்தான் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.முந்தைய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில், அக்காலியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் மையத்துக்கு நேற்று வந்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிக் கல்வித்துறை, ஆர்எம்எஸ்ஏ என பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்பப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பாட வாரியாக காலியிடங்களை வெளியிட்டால்தான் பணிவாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களால் ஊகிக்க முடியும். பாட வாரியான காலியிடங்கள் வெளியிடப்படாததால் குழப்பம் ஏற்படுகிறது.இந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் பாடப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு வாரியாக பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு...

*முக்கியச் செய்தி.....*
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு...