>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 14 மார்ச், 2017


TNPSC: தமிழக அரசில் 333 உதவி வேளாண் அதிகாரி பணி

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அறிக்கை எண்: 08/2017
விளம்பர எண்: 463
பணி: Assistant Agricultural Officer
காலியிடங்கள்: 326+7
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பதிவுக் கட்டணம்: ரூ.150
தேர்வுக் கட்டணம்: ரூ.150
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர் 18 - 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.
தகுதி: +2 தேர்ச்சி பெற்று வேளாண் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி விவரம்:
தாள்-I  02.07.2017 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை
தாள்-II 02.07.2017 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 04.03 மணி வரை
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.04.2017
மேலும்  கூடுதல்  விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_8_not_eng_asst_agrl_officer.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TRB வெளியிடவுள்ள 1111 பட்டதாரி பணியிடங்களில் பின்னடைவுப் பணியிடங்கள் (BACKLOG - VACANCY) பாடவாரியாக எவ்வளவு? TET Special Article

TRB வெளியிடவுள்ள 1111 பட்டதாரி பணியிடங்களில் எனக்கு தெரிந்த சேகரித்த சிலதகவல்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியே...
TRBன்(dated on 7.3.2017) தற்போதைய அறிவிப்பின்படி,பள்ளிகல்வித்துறை பணியிடங்கள் (DSE) 286ம்,பின்னடைவுப் பணியிடங்கள் (BACKLOG - 2012-2013) 623ம்,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் (RMSA) 202ம்,ஆக மொத்தம் 1111 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 286 + 202 = 488 பணியிடங்கள் எந்தெந்த பாடம் ? என்பன பல, யாரும்அறியாதது... (எனக்கும்..)ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்த TNTET -2012-2013 (Notificationand selectionlist) அறிவிப்பு பட்டியலிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களான 623 பின்தங்கியபணியிடங்கள் (Backlog vacancies) பாடவாரியாக மற்றும் இனவாரியாக எவையென என்னால்முடிந்தளவு சரியாக பட்டியலிட்டுள்ளேன்.
 மேலும் இப்பின்தங்கிய பணியிடங்களில்சில இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிகிறேன், ஏனென்றால் இவை யாவும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் (இனசுழற்சி அடிப்படையில்) இல்லையென ஏற்கனவே நிரப்படாமல் "NOTAPPLICABLE" என்று அறிவிக்கப்பட்டவையாகும்.எனவேஇப்பொழுது அறிவிக்கப்படயிருக்கும் 1111 பணியிடங்களில் குறைந்தது 550 (623-Backlog-ல்) மேற்பட்ட பணியிடங்களுக்கு “தகுதி வாய்ந்தவர்கள் இல்லையென்பதால்”நிரப்பட வாய்ப்பு மிகக்குறைவு, இருப்பினும் மற்றவை (286+202=488) பணியிடவாய்ப்புகள் TRB புதிய அறிவிப்பைப் பொருத்துதான் தகுதிவாய்ந்தவர்களின் பணியிடவாய்ப்புகள் இருக்கும்.
எனவே வருகின்ற தகுதித் தேர்வில்தான் நான் வழங்கியுள்ள 623ல் - 550+க்கும்மேற்பட்ட "தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் தேர்ந்தெடுக்க" வாய்ப்புள்ளது.
எனவேதேர்வுக்கு தயாராகும் ஆசிரிய நண்பர்கள் விரைந்து தங்களுக்கான பணி வாய்ப்பைபயன்படுத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
* புவியியல் பாடப்பிரிவு 400ம்
* வரலாறு பாடப்பிரிவு 95ம்
* அறிவியலில்/தாவரவியல் பாடப்பிரிவு 33+16ம்
* மற்ற பாடங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட இடங்கள் பின்தங்கிய பணியிடங்களாகஉள்ளதை நீங்களே பட்டியலில் அறிந்து உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்  ஆரியர்களே..
இவையனைத்தும் உத்தேசமான தகவல்களே...
ஆசிரியப்பணியை அறப்பணியாக அரசுப்பள்ளியில் பணிபுரிய காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்...
ப. கண்ணன்
பட்டதாரி ஆசிரியர், திண்டுக்கல்லிலிருந்து.

DSE - GUIDELINE ON SAFETY AND SECURITY OF CHILDREN - TO ENSURE SAFETY AND SECURITY OF CHILDREN IN SCHOOLS / HOSTELS / RESIDENTIAL SCHOOL




சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன. அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில், தேவை கருதி 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், கல்வித்துறையில் 11 ஆண்டுகளாக இவ்வகை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நடக்கவில்லை.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில் டி.இ.டி., தேர்வுகள் நடத்த முடிவானபோது, சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.மாநிலம் முழுவதும், தற்போது 50 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர் படிப்பு முடித்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்த அப்போது இருந்த கல்வி அதிகாரிகள், அமைச்சர்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது டி.இ.டி., தேர்வு நடத்தவுள்ள நிலையில், சிறப்பு தகுதி தேர்வும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு இசை ஆசிரியர் கழக மாநில செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தர நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர்.டி.இ.டி., தேர்வுடன் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஓய்வு வயதை 60ஆக உயர்த்த கூடாது : அரசு ஊழியர் சங்கம்

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். 

திங்கள், 13 மார்ச், 2017


TRB - 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: பாடவாரியாக காலியிடங்கள் விவரத்தை வெளியிடுமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை

ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், முன்பு குறிப்பிட்ட தகவல்களை உறுதி செய்துகொள்ளவும் நேற்று சிறப்பு வசதி செய்யப்பட்டது.அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு வாரிய இணையதளத் துக்கு (www.trb.tn.nic.in) சென்று விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.கூடுதல் கல்வித்தகுதி, அண்மை யில் பிஎட் முடித்திருந்தால் அதன் மதிப்பெண், தமிழ் வழியில் படித்திருந்தால் அதுபற்றிய விவரம், புகைப்படம், டிஜிட்டல் கையெ ழுத்து உள்ளிட்ட விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.
இவ் வாறு ஆன்லைனில் அனைத்து விவ ரங்களையும் உள்ளீடு செய்த பிறகு அதை ஒரு பிரின்ட் அவுட் எடுத்து ஒப்புகைச் சீட்டுபோல வைத்துக்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.விவரங்கள் ஆன்லைனில் பதி வேற்றம் செய்யப்பட்டதும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாடவாரியாக காலியிடங்கள் குறித்த விவரத்தை வெளியிடுமாறு விண்ணப்பதாரர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்


750 PP - தனி ஊதியத்தை பதவி உயர்வில் எப்படிநிர்ணயிக்க வேண்டும் என்ற திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் மாதிரி நிர்ணயம் - புதிய கணக்கீடு


வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறதா..? உங்களது செல்போன் எண், ஆதார் விவரம் வழங்க ரெடியாகுங்கள்!

வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறதா..? உங்களது செல்போன் எண், ஆதார் விவரம் வழங்க ரெடியாகுங்கள்!
தற்போதுள்ள சேமிப்பு கணக்குதாரர்களில் 65 % அளவுக்கே செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர்.
50 % வாடிக்கையாளர்கள்தான் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர்.
சேமிப்பு கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் செல்போன் மற்றும் ஆதார் எண்ணை வங்கிகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடுபிடி விதித்துள்ளது.
மேலும், மொபைல் பேங்கிங் வசதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றும், அரசு கூறியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள சேமிப்பு கணக்குதாரர்களில் 65 % அளவுக்கே செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர்.
50 % வாடிக்கையாளர்கள்தான் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர்.
சேமிப்பு வங்கி கணக்கு வைத்துள்ளோரில் 20 % பேர் மட்டுமே, மொபைல் பேங்கிங் வசதி வைத்துள்ளனர்.
எனவே ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன் மூலம் அனைவருக்கும் மொபைல் பேங்கிங் வசதி கொடுக்கப்படும்.
டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நோக்கி நகர மொபைல் பேங்கிங் வசதி அவசியம் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம், வாடிக்கையாளர்களை வங்கிக்கு உடனடியாக வர வைத்து அவர்களுக்கு நெருக்கடி தராமல் வங்கிகள் சுமுகமாக இதை நடத்திக் காட்ட வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பம் தொடர்பான வழக்கு - மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை ஏற்பது  தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் சீரங்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த +2 மாணவன் தேசியன் என்பவர்  தாக்கல் செய்த மனுவில்,  ’’கடந்த 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்பதோடு அதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
‌இந்நிலையில் இந்தாண்டிற்கான நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விலிருந்து  விலக்கு அளிக்ககோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை குடியரசு தலைவர் ஒப்புதல் தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வந்ததால் நான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் நான் தாமதமாக விண்ணப்பித்தால் விண்ணப்பித்தை ஏற்க உத்தரவிட வேண்டும்" என  மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று  நீதிபதி கிருபாகரன் மீது விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மார்ச் 20 ஆம் தேதிகுள்  பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை  அதே தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.

TET தாள் 2-ல் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ளவர்கள் இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம்-புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி

ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்11-ல் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ளவர்கள் வருகிற 20ந்தேதி வரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில் இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி தகவல்.
புதுக்கோட்டை மார்ச் 11- ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ளவர்கள் வருகிற 20ந்தேதி வரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில் இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பதுக்கோட்டை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள் பின்னடைவுப்பணியிடங்கள்623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் 202பட்டதாரி ஆசிரியர் (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012-2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014-ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. 
இந்நிலையில் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் பி.எட் பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்தக்கல்வி ஆண்டே பி.எட் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சாரிபார்ப்பின்போது பணித்தேர்வுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர்கள் மீளவும் வாய்ப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்து உள்ளார்கள். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு 2012-2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014-ல் (தாள்11- ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. 
நாடுநர்கள் மேற்கண்டுள்ள விவரங்களை இணையதள வழி மூலம் (Online) சாரிபார்த்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்11-ல் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். புதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்தநாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்டுள்ள நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 
நாடுநர்கள் (candidates) தங்களின் ஒரு சில விவரங்களைத் திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் ஆன்லைனிலேயே அதாவது இணையதளத்திலேயே மேற் கொள்ளலாம். நாடுநர்கள் தங்களது அசல் ஆவணங்களைக் கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச்சான்றினைத் தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை வருகிற 20-03- 2017 (திங்கட்கிழமை) அன்று இரவு 10.30 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில் ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ எழுத்துமூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்ற வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்பட மாட்டாது. 
மேற்கண்டவாறு சாரிபார்க்கப்பட்ட விவரங்களைக் கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டு தான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தெரிவிக்கலாகிறது. இவ்வாறு அவர் செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பேச்சுக்கலை பயிற்சி

ஞாயிறு, 12 மார்ச், 2017


பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை

பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன.
இதில், 20 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்து, முக்கிய பாடங்களுக்கு தேர்வு துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடக்கும் போதே, முந்தைய நாளில் முடிந்த பாடங்களுக்கு, விடை திருத்தம் துவங்கி விடும். இந்த ஆண்டு, அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகே, ஏப்., 1 முதல் விடை திருத்தம் துவங்குகிறது.இந்நிலையில், விடைக் குறிப்புகள் தயாரிக்கும் பணி, வரும், 15 முதல் துவங்குகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பொது தேர்வுக்கான விடை திருத்தம் துவங்கும் நாளில், விடைக் குறிப்புகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். அப்போது தான், விடைக் குறிப்பில் இருக்கும் தவறுகள் தெரியவரும். ஆனால், உடனடியாக தவறுகள் திருத்தப்படாது என்பதால், முதலில் திருத்தப்படும் விடைத்தாள்களில், சரியான விடை இருந்தாலும், விடைக் குறிப்பு தவறாக இருப்பதால், அந்த மாணவருக்கு மதிப்பெண் கிடைக்காது.
எனவே, தேர்வை சரியாக எழுதும் மாணவர்களும், அதற்கான மதிப்பெண்ணை பெறாமல் பாதிக்கப்படுவது உண்டு.
சில மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததும், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே, அவர்களுக்கு முறையே சேர வேண்டிய மதிப்பெண் கிடைக்கும்.
எனவே, விடைக்குறிப்பை தயாரித்து, அதை விடைத்தாள் திருத்தம் துவங்கும் முன்னரே சரிபார்த்தால், எந்த மாணவரும் பாதிக்கப்பட மாட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல் தேர்வு நடந்தால், பணி நியமனத்தில் முறைகேடு ஏற்படும்' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015 ஆக., 7ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 'எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்கலாம்' என, தெரிவித்தார்.
இந்த உத்தரவு வெளியாகி, ஒன்றே முக்கால் ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனால், இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வர்கள் கூட்டமைப்பினர், பல முறை அரசுக்கு மனு அனுப்பியும், தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேர்வு முடிவுகள் மாயமாகி விட்டதாக, துறையில் திடீர் வதந்தி கிளம்பியது; அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

TET No Need For Before 23.08.2010 Appointment Teachers (TRB - 04/2012 , Date - 07.03.2012)

TRB நாளிதழில் அறிவிக்கை (திருத்தம் / விளக்கம்) - 23.08.2010 க்கு முன் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, Aided & Un-Aided பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வைஎழுத தேவையில்லை. - TRB அறிவிக்கை தகவல்.
TRB நாளிதழ் அறிவிக்கை எண்: 04/2012,
நாள்: 07.03.2012
திருத்தம் / விளக்க அறிவிக்கை 
(Corrigendum என்பதன் பொருள் திருத்தப்பட வேண்டிய தவறு

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல் தேர்வு நடந்தால், பணி நியமனத்தில் முறைகேடு ஏற்படும்' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015 ஆக., 7ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 'எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்கலாம்' என, தெரிவித்தார்.
இந்த உத்தரவு வெளியாகி, ஒன்றே முக்கால் ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனால், இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வர்கள் கூட்டமைப்பினர், பல முறை அரசுக்கு மனு அனுப்பியும், தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேர்வு முடிவுகள் மாயமாகி விட்டதாக, துறையில் திடீர் வதந்தி கிளம்பியது; அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

TNPSC - VAO இரண்டாம் கட்ட, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது.இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.இன்னும், காலியாக உள்ள, 147 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், பட்டியலில் உள்ளோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 10 மார்ச், 2017

FLASH NEWS: TRB- TET- Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Online updation

தேசிய திறனாய்வு தேர்வு : இன்று வெளியாகுது 'ரிசல்ட்'



பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்கள், உயர் கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இதற்கு தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவிலும், பின், தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல், தமிழகம் முழுவதும் நடந்தது. 6,580 பள்ளிகளை சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர்.இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு வெளியாகிறது.'இதன் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர், மே, 14ல் நடக்கும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

டெட்' தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், 'காலியாக உள்ள, 1,111 ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அதற்கேற்ற வகையில், ஏற்கனவே, 'டெட்' தேர்வு முடித்தோரின் மதிப்பெண் பட்டியலுடன், சுய விபரங்கள், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின்றன.

தேர்வர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.