>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 2 மார்ச், 2017

'TET - 2017' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதியகட்டுப்பாடு

'ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வுவாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டமையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதன், 1 மார்ச், 2017

குறுவளமையப் பயிற்சி proceedings

குறுவளமையப் பயிற்சி proceedings - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்"
CRC NEWS :- UPPER PRI & PRI CRC ON 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
அகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை
ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்" என்ற தலைப்பில் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.

மார்ச் 3-வது வாரத்தில் தமிழகபட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு

தமிழகஅரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில்தாக்கல்செய்யப்படுகிறது. 
இதில், அரசு ஊழியர்களுக்கானஓய்வுபெறும் வயது 60 ஆகஉயர்த்தப்படும் எனதெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின்இந்தஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதிதொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர்வித்யாசாகர் ராவ்உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம்தேதிவரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராகஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதன்பிறகுஅதிமுகவில்எழுந்தபிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும்குழப்பமும் நிலவியது. பின்னர் புதிய முதல்வராகஎடப்பாடிபழனிசாமி கடந்த 16-ம்தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித்துறை இருந்தது. கடந்த 23-ம்தேதிஅமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டது. முதல்வரிடம்இருந்த நிதித்துறை, மீன்வளத் துறைஅமைச்சர்டி.ஜெயக்குமாரிடம்ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போதுநடக்கும் என்றஎதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம்நிதித் துறைஒப்படைக்கப்பட்ட பிறகுபட்ஜெட்தயாரிப்புக்கான பணிகள்முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நிதித்துறைஅதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடந்த வாரம் துறைகள் வாரியாகமுக்கிய தகவல்கள்பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையானபட்ஜெட்தயாரிக்கப்படும். இப்பணிகள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்நாள் குறித்து முதல்வர்முடிவு செய்வார். வழக்கமாக மார்ச் இரண்டாம்வாரத்தில்பட்ஜெட் தாக்கல்செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம்வாரத்தில் தாக்கல் செய்யவாய்ப்புள்ளது'' என்றார். முதல்வர்எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனதுஅரசுமீதான பெரும்பான்மையைநிரூபித்து கிடைத்தவாய்ப்பை தக்கவைத்துள்ளார். 500 மதுக்கடைகள்மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம்வாங்கமானியம், மகப்பேறுஉதவித் தொகை உயர்வு எனபல்வேறுஅறிவிப்புகளைவெளியிட்டுள்ளார். இந்தஅறிவிப்புகளுக்குஅரசாணையும்பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கானநிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவேண்டும். மேலும், பல்வேறுதிட்டங்களுக்கான தொடர்நிதியும்ஒதுக்கப்படவேண்டியுள்ளது. மேலும்தற்போதுள்ளஅரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களிடையேஅதிருப்தியும் எதிர்ப்பும்உள்ளது. இதைமாற்றுவதற்காகபொதுமக்களைகுறிப்பாக பெண் களை கவரும்வகையில், பல்வேறு புதியதிட்டங்களை அறிவிக்கவேண்டியஅவசியமும் எடப்பாடிபழனிசாமி அரசுக்குஏற்பட்டுள்ளது. ஓய்வு வயதுஉயர்வு இந்த பட்ஜெட்டில் அரசுஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆகஉயர்த்தும்அறிவிப்பு வெளியாகும் எனதெரிகிறது. இதுதொடர்பாக, அரசுஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வதுஊதியக்குழு பரிந்துரைஊதியத்தை நம்பியுள்ளனர். இதைநிர்ணயிக்க குழுஅமைக்கப்பட்டுள்ளது. குழுவின்பரிந்துரையை ஏற்றுசெயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடிஅளவுக்கு அரசுக்குநிதிதேவைப்படும். ஏற்கெனவே தமிழகஅரசுத்துறைகளில் 3.5 லட்சம்காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்தமுடிவுபல்வேறு குழப்பங்களைஏற்படுத்தும் என அரசுஊழியர்கள்தரப்பில்கூறப்படுகிறது. இது தொடர்பாகஊழியர் சங்கநிர்வாகி ஒருவர்கூறியதாவது: மத்திய அரசுஓய்வுபெறும்வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசும்உயர்த்த உள்ளதாகபலமுறைகூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போதுஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும்அறிவிப்புபட்ஜெட்டில் இடம் பெறும்என தகவல் கசிந்துள்ளது. இதுஓய்வு வயதைநெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சிஅளிக்கும். அவர்கள்ஆதரிப்பார்கள். அதே நேரம் வயதுஉச்சவரம்பைநெருங்கி அரசுப்பணிக்கு விண்ணப்பித்துகாத்திருக்கும்இளைஞர்களுக்குபாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம்பேர் வரை பணிமூப்பால் ஓய்வுபெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள்நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல்செலவுஏற்படும். மேலும், வரும்ஆண்டுகளில் பணியாளர்தேர்வும்நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்குகிடைக்கும்வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்தமுடிவை அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

March 2017 Diary !!

1 -R.L-Ash wednesday
4 -Grievance day, Primary CRC, Upper primary CRC,
                   
4-R.L-Vaikundasamy birthday
11 -R.L-Maasi maham
29 -G.H-Telegu new year.

ரூபெல்லா தடுப்பூசி பற்றி தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் எச்சரிக்கை !!

ரூபெல்லா தடுப்பூசி பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
விடுத்துள்ளார். மேலும் சென்னையில் விஜயபாஸ்கர் தலைமையில தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் !!

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற
இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதவித்தொகை பெறுவதில்... சிக்கல்! பள்ளி குழந்தைகள் அவதி!!!

உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு, வங்கிகளில் கணக்கு துவக்க முடியாததால், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், கரட்டூர், அமராவதிநகர், லிங்கமாவூர், திருமூர்த்திநகர் உள்ளிட்ட நான்கு மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் ஓரு உண்டு உறைவிடப்பள்ளியும்
செயல்படுகிறது. கோடந்தூர், குழிப்பட்டி, குறுமலை, தளிஞ்சி, கரட்டுபதி உட்பட சுற்றுப்பகுதி மலைகிராமங்களிலுள்ள குழந்தைகள் மட்டுமின்றி, மூணார், வால்பாறை உட்பட தொலைதூரபகுதிகளிலிருந்தும் இப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கான தங்கும் வசதியோடு, கல்வியும் வழங்குவதற்காக உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர் இல்லாத அல்லது குடும்ப சூழல் சரியில்லாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளும் இப்பள்ளிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் குழந்தைகளுக்கான சீருடை உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் பராமரிப்புக்கென, சோப்பு, எண்ணெய் போன்ற செலவுகளுக்கு, மாதம், 50 ரூபாய் அரசின் சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை, உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
ஆனால், இரண்டாண்டுகளாக, அப்பள்ளி குழந்தைகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த உதவித்தொகையை பெறுவதில், பல குழந்தைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் வழங்கப்படுவதால், குழந்தைகளுக்கான தனித்தனி கணக்குகள் துவக்கப்பட வேண்டும். கணக்கு துவக்குவதற்கு, அவர்களுக்கான முகவரி அடையாள அட்டை அவசியமாக உள்ளது. இதில், பல குழந்தைகள் ஆதரவில்லாத நிலையில் இருந்து பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், முகவரிக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.
வங்கிகளில், பள்ளியின் முகவரியைக்கொண்டும் கணக்கு துவங்க முடிவதில்லை. வங்கிகளின் மூலம் மட்டுமே உதவித்தொகை செலுத்தப்படுவதால் அந்த குழந்தைகளுக்கான, உதவித்தொகை கடந்த இரண்டாண்டுகளாகவே கிடைப்பதில்லை.
நலத்துறை நடவடிக்கை அவசியம்
இப்பிரச்னை கடந்த இரண்டாண்டுகளாக தொடர்ந்தும், ஆதிதிராவிட நலத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனால், அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை அக்குழந்தைகளை சென்றடைவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. குழந்தைகளுக்கு பள்ளியின் முகவரியைக்கொண்டு, வங்கி கணக்குகள் துவங்குவதோடு, உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனுக்கு அடுத்த வருடம் ‘நாசா’ விண்கலம் அனுப்புகிறது

15 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும் சூரியனுக்கு நாசா நிறுவனம் விண் கலம் அனுப்புகிறது.
பிப்ரவரி 28, 11:44 AM
வாஷிங்டன், 
சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).சூரியன்,புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. 
சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
மற்ற கிரகங்களை விட கடுமையான வெப்பம் கொண்டது. எனவே அதற்கு ஏற்றாற்போல் விசேஷ விண்கலம் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ‘நாசா’ விஞ்ஞானிகளின் முதல் முயற்சி என காட்டார்ட் விண்வெளி மைய விஞ்ஞானி எரிக்- கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். சூரியனை மிக நெருக்கத்தில் சென்று ஆய்வு செய்ய முடியாது. அதே நேரத்தில் அதன் மேற்பரப்பில் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
சூரியனின்  சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது அடுத்த ஆண்டு அதாவது 2018-ல் சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாதசம்பளம் பெருவோர் கடும் அதிருப்தி

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் முற்றிலும் முடங்கியது. மாத சம்பளம் பெருவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கி போனது.
இதில், இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகளும் தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேரும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள பொதுத்துறை, தனியார் துறையைச் சேர்ந்த 7,000 வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிப் பணிகளும், சேவைகளும் பாதிக்கப்பட்டது. மாதத்தின் கடைசி நாள் என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாத சம்பளம் பெருவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் இல்லை

பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச, 'லேப் - டாப்' கிடைக்காது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயின்ற, 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இதுவரை இலவச, லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 4,331 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங் கள் பின்பற்ற துவங்கியுள்ளன.
மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலவச லேப் -- டாப் திட்டத்தைத் தொடரப் போவதாக, அ.தி.மு.க., அரசு தெரிவித்தது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறை : ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருக்கு, மற்ற துறைகளின் பொறுப்பு தரப்பட்டதால், லேப் - டாப் வழங்கும் பணியில், அவர் தீவிரம் காட்டவில்லை. பள்ளி தேர்வுகள் முடிவதற்குள், லேப் - டாப் தந்துவிட்டால், அது, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க உதவியாக இருக்கும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது சாத்தியம் இல்லை என, தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: இரு வாரங்களுக்கு முன் தான், லேப் - டாப் கொள்முதலுக்கான, 'டெண்டர்' விண்ணப்பங்களை பெறும் தேதி நிறைவடைந்தது. அதை, தற்போது பரிசீலிக்க துவங்கியிருக்கிறோம். இதில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அதனால், தேர்வு துவங்கு வதற்குள், டெண்டரை இறுதி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. 
அவகாசம் : அதை இறுதி செய்தாலும், கொள்முதல் செய்ய, அவகாசம் தேவை. பின், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதற்கும் கால அவகாசம் வேண்டும். அதனால், இந்த ஆண்டில் லேப் - டாப் வழங்குவது சிரமம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

விழுப்புரத்தில் விடுமுறை திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு

'விழுப்புரம் மாவட்டத்தில், திட்டமிட்டபடி நாளை, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் விழாவுக்காக, அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் இயங்காது. ஆனால், தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு நாளை துவங்குகிறது. 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 தேர்வு என்னாகும் என, தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மார்ஸ் கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு, திட்டமிட்டபடி நடக்கும். தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் கூடாது. மற்ற பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார். 

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மின் ஊழியர்கள் 'அலர்ட்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கி, இம்மாத இறுதி வரை நடக்கிறது. கோடைக் காலம் துவங்கும் முன், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் உள்ளது.இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க, மின் வாரியம், ஊழியர்களை, 'அலர்ட்' செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு மையங்களில், மின் தடை ஏற்படக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்ட படி, மார்ச் முதல், மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நிறுத்தப்படும்.தேர்வு மையங்களுக்கு மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களை, காலை, 7:00 மணி முதல், மாலை வரை, பிரிவு அலுவலக ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும்.பழுது ஏற்பட்டால், உடனே சரி செய்ய வேண்டும். தேர்வு முடியும் வரை, குறித்த நேரத்தில் அலுவலகம் வருமாறு, பிரிவு அலுவலக உதவி செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுத் தேர்வு பணிகள் ஒதுக்கீடு : 'அடம் பிடிக்கும்' அரசு ஆசிரியர்கள்

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள், அலுவலர்களுக்கு 'விழி பிதுங்கும்' நிலை ஏற்பட்டுள்ளது.மார்ச் 2 முதல் பிளஸ் 2 அதை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்குகின்றன. 
தேர்வுகளை புகார் மற்றும் முறைகேடின்றி நடத்துவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிற துறைகளின் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தலையீடு காரணமாக அரசு ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில், அனைத்து மாவட்டங்களிலும் பெரும் சவாலாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பொதுவாக, ஒரு தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளராக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஒரு மையத்தில் மாணவர் எண்ணிக்கை 500க்கு மேல் இருக்கும்பட்சத்தில், கூடுதல் முதன்மை மற்றும் கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவர். கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள், நகர்ப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். இதனால் தேர்வு நேரத்தில் அவர்கள் நகர் பகுதி பள்ளிகளில் பணியாற்ற விரும்புகின்றனர். அதேநேரம், 5 - 10 கி.மீ.,க்குள் உள்ள பள்ளிகளில் தான் தேர்வுப் பணி ஒதுக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கின்றனர்.இதனால் கல்வி மாவட்ட எல்லையோரங்களில், அமைந்துள்ள பள்ளிகளில் அரசு ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கினால் அரசியல், அதிகாரிகள், சங்கம் பின்னணியில் அருகாமை பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வற்புறுத்துகின்றனர். முடியாதபட்சத்தில், மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து தேர்வுப் பணியில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர். இதனால், அதுபோன்ற பள்ளிகளில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்வுப் பணிகள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு தேர்வுப் பணி உழைப்பூதியம் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவை தட்டாமல் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. இயக்குனர், இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள பல அதிகாரிகளே அரசு ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட பள்ளி மையங்களில் பணி ஒதுக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடுகின்றனர். சங்க நிர்வாகிகளும் நெருக்கடி கொடுக்கின்றனர். இல்லாவிட்டால் போராட்டங்களில் இறங்கி விடுகின்றனர். இச்சூழ்நிலையில் தான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்க வேண்டி வருகிறது. சில அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகாரிகள் உதவியுடன் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை தேர்வு பணி ஒதுக்கவும் வியூகம் வகுக்கின்றனர். இதற்கு ஒருசில அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சிபாரிசு காரணமாக தேர்வுப் பணி ஒதுக்கீடு உத்தரவு அடிக்கடி மாற்றப்படுவதால் கல்வி அலுவலர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர், என்றார்.

பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

* 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த கல்வி ஆண்டில் 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 
*கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.
தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தேர்வு கட்டண சலுகை பெற்றனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள். 
மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடக்கும் போது, மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. உரிய பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டர் எடுத்து வரக்கூடாது. ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது. வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது. 
ஹால் டிக்கெட்டிலும், வருகை பதிவேட்டில் உள்ள போட்டோவிலும் வேறுபாடு இருந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட வாரியாக கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வருவாய்துறையினர் தலைமையில் தேர்வை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் ‘தமிழ் தாள் 1’ தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் 9.30 மணிக்கு வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்படும். அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டும். 
அதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும். சரியாக 10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். அதை படித்து பார்ப்பதற்கு மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதைதொடர்ந்து 10.15 மணிக்கு, விடை எழுத தொடங்க வேண்டும். மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள் வழங்குவார்கள். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அறை போன் எண்கள்
பிளஸ் 2 தேர்வுகள் நாளையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 8ம் தேதியும் ெதாடங்க உள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் தேர்வு காலங்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என அரசுத்தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி : 3,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி : விரைவில் நிரப்ப வலியுறுத்தல்

பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000 ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், 30 கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள்; 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங் களும் காலியாக உள்ளன. அதனால், பொதுத் தேர்வு பணிகளை ஒருங்கிணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 145 இடங்களில் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், பொறுப்பு பணிகளில் நியமிக்க, 100 அதிகாரிகளே உள்ளனர்; 45 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல், காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வியில், 3,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் தாமதமின்றி நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

பெட்ரோலுக்கு மாற்று - வந்துவிட்டது தண்ணீர் பைக்.. ஒரு லிட்டருக்கு 500 கிமீ மைலேஜ் !!

தண்ணீரில் இயங்கும் பைக்கா? என நம்ம சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் அதை தன் வீட்டு பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே உருவாக்கி சாதித்துக்காட்டியுள்ளார் பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர்.
பிரேசில் நாட்டு முதியவர் உருவாக்கிய 'தண்ணீர் பைக்கின்" செயல்பாடு பற்றிய விளக்கம்:
புதிய வரவான கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் படங்கள்:
தண்ணீரில் இயங்கும் பைக்கா? என நம்ம சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் அதை தன் வீட்டு பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே உருவாக்கி சாதித்துக்காட்டியுள்ளார் பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர்.
Ricardo Azevedo என்ற பிரேசில் நாட்டுக்காரர், தனது 1993 மாடலான ஹோண்டா என்எக்ஸ்200 பைக்கினை தண்ணீரை கொண்டு இயங்கும் வகையில் முற்றிலும் உருமாற்றியுள்ளார். இதற்கு 'டி பவர் ஹச்20 மோட்டார்பைக்' என பெயரிட்டுள்ளார் அவர்.
இந்த பைக் எலெக்ட்ரோலைசிஸ் எனப்படும் மின்னாற்பகுப்பு என்ற முறையின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த பைக்கில் ஒரு கார் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கார் பேட்டரியின் சக்தியானது தண்ணீரில் உள்ள ஹைட்ரோஜன் மூலக்கூறுகளை பிரித்தெடுக்கிறது, இப்படி பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோஜன் மூலக்கூறுகள் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த மூலக்குறுகளை வைத்து தான் பைக் இஞ்சின் இயங்க தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
பொதுவான பைக்குகளில் பெட்ரோல் எரித்து வெளியாகும் புகை வெளியேர எக்சாஸ்ட் பைப் உள்ளது போல இதில் வெளியேறும் கழிவான நீராவி வெளியேறுவதற்கு ஒரு பைப் அமைத்துள்ளார் இவர்.
இதில் ஒரு சுவாரஸ்யமாக நல்ல தண்ணீருக்கு பதிலாக தன் வீட்டருகே இருக்கும் ஒரு மாசடைந்த ஆற்றிலிருந்து எடுக்கும் தண்ணீரையே பயண்படுத்துகின்றார். நல்ல தண்ணீரை விட மாசடைந்த தண்ணீர் உபயோகப்படுத்தும் போது தான் அதிக தூரம் பைக் பயணிக்கிறதாம்.
இந்த பைக்கில் ஒரு லிட்டர் தண்ணீரை எரிபொருளாக செலுத்தினால் 300 மைல்களுக்கும் மேலாக, அதாவது கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்கள் பயணிக்குமாம்.
இவரின் கண்டுபிடிப்பானது ஆட்டோமொபைல் துறையையே முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளது. இவரின் பைக் புகையை வெளியேற்றாது என்ற காரணத்தினால் முற்றிலும் ஒரு பசுமை தொழில்நுட்பமாகவே இது அமைந்துள்ளது.
அதிக விலை கொடுத்து பெட்ரோல் உபயோகிக்கத் தேவையில்லை என்பதால் இது மக்களுக்கும், புகையை வெளியேற்றாததால் சுற்றுச்சூழலுக்கும் சேர்த்தே நன்மையைத் தருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஒரு சாமானியரால், தன் வீட்டு கேரேஜிலேயே இப்படிஒரு அற்புத கண்டுபிப்பை அரங்கேற்றியிருக்க முடியும் என்றால் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தி இவ்வாறான பைக்குகளை பெரிய அளவில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் போது மக்களுக்கும், சுற்றுச்சூழலிற்கும் பெரும் நன்மை ஏற்படும்.

ஊதியக்குழுவினை அமுல்படுத்தும் முன் 30% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்கள் போர்க்கொடி !!

16529 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது?

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர்,துணை நூலகர், உதவிப் பணிப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, தனியார் செயலாளர், பிரிவு அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, நர்ஸ், தனிப்பட்ட உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 44
கல்வித்தகுதி: இளநிலை பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டணம்:ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-
கடைசித் தேதி: 21.03.2017.
மேலும் விவரங்களுக்கு http://meta-secure.com/CUTN-Phase3/pdfs/notifications.pdf என்ற இணையதள முகவரியைபார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த கல்வி ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில் 200 பள்ளிகள் மூலம் 14 ஆயிரத்து 649 மாணவர்கள், 16 ஆயிரத்து 878 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 527 பேர் மேல்நிலை தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 7 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலை தேர்விற்கு 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 20 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இத்தேர்விற்கு 83 முதன்மைக் கண்காணிப்பாளர், 83 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், தேர்வறை கண்காணிப்பு பணிக்கு 1621 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வறையில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 240 ஆசிரியர்களை கொண்டு பறக்கும்படை மற்றும் நிலைப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பணி மேற்கொள்ளவுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வுஎஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 8 ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வில் கடலுார் மாவட்டத்தில் 410 பள்ளிகளில் இருந்து 18 ஆயிரத்து 722 மாணவர்கள், 18 ஆயிரத்து 553 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 275 மாணவ மாணவியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 118 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கட்டுகளை பாதுகாக்க 12 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கட்டுக்காப்பு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வினாத்தாட்களை தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 28 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்கள் தங்களுடைய பணியில் எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.