>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 25 ஜனவரி, 2017

NMMS - Examination-2017 - Instructions for Candidates...

NMMS EXAM - Instruction Regarding Director Proceedings..



1.தமிழ்தாய் வாழ்த்து  http://www.fitt-iitd.org/images/gif-new.gif

2.வந்தேமாதரம்   http://www.fitt-iitd.org/images/gif-new.gif
                                                                                                                                                                                        
3.NATIONAL ANTHEM          http://www.fitt-iitd.org/images/gif-new.gif

4.NATIONAL ANTHEM BY A.R.REHMAN (INSTRUMENTAL)     http://www.fitt-iitd.org/images/gif-new.gif

5. கொடிப்பாடல் http://www.fitt-iitd.org/images/gif-new.gif

6.அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம்  இல்லை   http://www.fitt-iitd.org/images/gif-new.gif

செவ்வாய், 24 ஜனவரி, 2017

குடியரசு தினம் வரலாறு!(ஒரு சிறப்பு பார்வை)


இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். 
அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்:
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!!

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

தினம் தினம் 
இன்று குடியரசு தினம்;
சுகம் சுகம்
அதை உணர்ந்திடும் மனம்;
ஆதிக்கம் படைத்த முடியாட்சி - அது
முடிந்துபோன கதையாச்சு;
அடிமை விலங்கை உடைச்சாச்சு - இது
ஆனந்தமான மக்களாட்சி;
உரிமை என்பது நம் உடைமை
உண்மை பேசுவதே வலிமை;
வாழ்வில் தேவை என்றும் எளிமை
எதிலும் கொள்ளாது இருப்போம் பெறாமை;
சுதந்திரம் கண்டது நம் பொறுமை - என்றும்
சுகத்தினை அளித்திடுவது ஒருமை;
நல் தலைவர் அமைவது பெருமை - அதற்கு
அனைவரும் வாக்கிடுவது நம் கடமை;
ஜெய்ஹிந்த்...!
தினம் தினம் 
இன்று குடியரசு தினம்
சுகம் சுகம்
அதை உணர்ந்திடும் மனம்...!!

சனி, 14 ஜனவரி, 2017

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு.

தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர்பன்னீர்செல்வம், நேற்று வெளியிட்டார். புலவர் வீரமணி - திருவள்ளுவர்; பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு - பெரியார்; மருத்துவர் துரைசாமி - அம்பேத்கர்; கவிஞர் கூரம் துரை - அண்ணா; நீலகண்டன் - காமராஜர்; பேராசிரியர் கணபதிராமன் - பாரதியார்; கவிஞர் பாரதி - பாரதிதாசன்; பேராசிரியர் மறைமலை இலக்குவனார் - திரு.வி.க.; மீனாட்சி முருகரத்தினம் - கி.ஆ.பெ.விசுவநாதம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கில், நாளை காலை, 10:30 மணிக்கு நடைபெறும், திருவள்ளுவர் திருநாள் விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்குவார். விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும், வயது முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்படும்.

ஏ.டி.எம்.களுக்கு ரூ.9000 கோடி சப்ளை: பணத்தட்டுப்பாடு 2 வாரத்தில் நீங்கும்


ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பண புழக்கத்தில் 86 சதவீதம் இந்த நோட்டுகளே இருந்தன. இவ்வளவு நோட்டுகளையும் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவித்த அதே நேரத்தில், அதற்கு ஈடாக புதிய ரூ. 2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. 100 ரூபாய் நோட்டும் போதுமான அளவுக்கு புழக்கத்தில் இல்லை.
எனவே, பண தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஆரம்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏ.டி.எம்.களில் எடுக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது ரூ.4,500 ஆக உயர்த்தி உள்ளனர். ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் பல இடங்களில் ஏடி.எம்.களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட கியூவில் நிற்கும் நிலையே நிலவுகிறது.
ஆரம்பத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடி இருந்த நிலையில் இப்போது ஓரளவு ஏ.டி.எம்.கள் இயங்குகின்றன. எனவே, எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம் நிலைமை முற்றிலும் சீராகி விடும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் 2 லட்சத்து 24 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ரூபாய் நோட்டுகள் இல்லாததால் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஏ.டி.எம்.கள் மட்டுமே இயங்கி வந்தன.
தற்போது ரிசர்வ் வங்கியில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ஏ.டி.எம்.கள் இயங்கி வருகின்றன.
வழக்கமாக ஏ.டி.எம்.களுக்கு நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பப்படும். ஆனால், கடந்த 2 மாதமாக ஏ.டி.எம்.களுக்கு 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி வரை மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது. சமீப காலமாக பணம் அதிகமாக அனுப்பப்படுகிறது. தற்போது ரூ.9 ஆயிரம் கோடி வரை அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, பண தட்டுப்பாடு பெருமளவு நீங்கி விட்டது. பிப்ரவரி மாதத்தில் முற்றிலும் நிலைமை சீராகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2017-18-ல் அதிகரிக்கும்


100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களை கீழே பார்ப்போம்.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016- ம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 3.4% அதிகரிக்கக் கூடும்.
வளர்ந்து வரும் நாடுகளில் வேலையின்மை விகிதம் 3.6 மில்லியன் ஆக உள்ளது. அதே சமயம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருக்கும் நாடுகளில் இரண்டு பேரில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளனர்.  இந்தியா போன்ற நாடுகளில் ஐந்தில் இரண்டு பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வேலையின்மை விகிதம் பன்மடங்கு அதிகமாக உள்ளது.

பிஎஸ்என்எல்: பொங்கலுக்கு சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்த விவரம்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு "ப்ரீபெய்டு' திட்டங்களில் ரூ.120க்கு டாப்அப் செய்தால் முழு டாக் டைம் (முழு டாக் டைம்), ரூ.310க்கு ரூ.330க்கான டாக்டைம், ரூ.500க்கு ரூ.550க்கான டாக்டைம், ரூ.890க்கு ரூ.1000த்துக்கான டாக்டைம், ரூ.2000க்கு ரூ.2300க்கான அதீத டாக்டைம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, ஜனவரி 12 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிபி 249 திட்டம்: அதுபோல், மாத வாடகை திட்டங்களில் தொலைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் பிபி 249 (experience unlimited BB 249)  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகண்ட அலைவரிசை திட்டமான இதில், வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.249 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதத்துக்கு 390 ஜிபி அளவிலான பயன்பாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்படி, 1 ஜிபிக்கு குறைந்த மாத கட்டணமாக ரூ.1க்குள்ளாகவே வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 18003451500 என்ற இலவச எண்ணிற்கும், www.bsnl.co.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விவரங்களை அறிந்து கொள்ளலலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் தலங்கள் குறித்த: புதிய செயலி அறிமுகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செயலியை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
 தமிழ்நாடு சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அவர் அறிமுகம் செய்தார்.
புதிய செயலி: "பினாகின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியில் தமிழ்நாட்டின் புராதன சுற்றுலாத் தலங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்கள் தொடர்பான தகவல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஒலி வசதியோடு தெரிந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
தமிழகத்துக்கு பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த செயலி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாச் சந்தை வரும் மே 20 -ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொடர்பான பிரமுகர்களும், கலை, பண்பாடு, கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவை சார்ந்த அரசு நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன என்றார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஹர் சஹாய் மீனா, பொது மேலாளர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் !!

ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் -  ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இப்போதைக்கு
நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
அமைச்சரின் இந்த அறிவிப்பால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தான் கடைசியாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் இன்னும் 3 ஆண்டுகளில் காலாவதியாகியாகிடும். அதற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை இத்தேர்வு நடத்தப்பட்டால் விருப்பப்பட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தங்களின் தகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து 60 சதவீதம் வரை தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படுவதால், ஒருமுறை குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் அவர் அடுத்த ஆண்டே மீண்டும் தேர்வெழுதி அவரது தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், அமைச்சரின் அறிவிப்பால் இந்த இரு வாய்ப்புக்களும் பறிக்கப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தகுதித் தேர்வின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டிருந்தால், இந்த 30,000 பேருக்கும் எப்போதோ வேலை கிடைத்திருந்திருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்

தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. கடந்த, 2005ல் வழங்கிய, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்கான, ஒருங்கிணைப்பு பணிகள், 2015ல் துவங்கின. 
மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்களை வாங்கி, அவற்றின் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் வாங்கும் பணி, 2016ல் துவங்கியது. அதே ஆண்டு, அக்டோபர் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராததால், கார்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்ச், 1ல் இருந்து, ஸ்மார்ட் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள, 2.03 கோடி ரேஷன் கார்டுகளில், 1.91 கோடி கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் பெயர் உள்ளதோ, அத்தனை பேரின் ஆதார் எண்களை, ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும். அப்படி முழுமையாக பதிவு செய்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 93 லட்சம். குடும்ப தலைவரின் ஆதார் எண் மட்டும், பதிவு செய்த கார்டுகளின் எண்ணிக்கை, 87 லட்சம். 
ஆதார் விபரம் தர, ரேஷன் கடை தவிர்த்து, 'மொபைல் ஆப்' வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், பலர் பதிவு செய்யவில்லை. சட்டசபையில், வரும், 23ல் கவர்னர் உரையாற்ற உள்ளார். அதில், ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு வெளியாகும். ஆதார் பதியாதவர்களுக்கு, பிப்., வரை அவகாசம் தரப்படும். அதற்குள், எத்தனை பேர் முழு ஆதார் விபரத்தை தருகிறார்களோ, அவர்களுக்கு, மார்ச் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆதார் தராத கார்டுகள் ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர சோதனை! : ஸ்மார்ட் கார்டுக்காக, ஆதார் விபரம் தராத வீடுகளில், ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வினியோகம் துவங்கிய பின், அவசரமாக ஆதார் பதிவு செய்வோர் ஆவணங்களை, தீவிர சோதனை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆவணங்களில் எழுத்து பிழை, முகவரி குழப்பம் உள்ளிட்டவை இருந்தால், ஸ்மார்ட் கார்டு பெறுவது கடினம். எனவே, அனைவரும் ஆதார் பதிவு செய்வது நல்லது.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்

தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. கடந்த, 2005ல் வழங்கிய, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்கான, ஒருங்கிணைப்பு பணிகள், 2015ல் துவங்கின. 
மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்களை வாங்கி, அவற்றின் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் வாங்கும் பணி, 2016ல் துவங்கியது. அதே ஆண்டு, அக்டோபர் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராததால், கார்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்ச், 1ல் இருந்து, ஸ்மார்ட் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள, 2.03 கோடி ரேஷன் கார்டுகளில், 1.91 கோடி கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் பெயர் உள்ளதோ, அத்தனை பேரின் ஆதார் எண்களை, ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும். அப்படி முழுமையாக பதிவு செய்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 93 லட்சம். குடும்ப தலைவரின் ஆதார் எண் மட்டும், பதிவு செய்த கார்டுகளின் எண்ணிக்கை, 87 லட்சம். 
ஆதார் விபரம் தர, ரேஷன் கடை தவிர்த்து, 'மொபைல் ஆப்' வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், பலர் பதிவு செய்யவில்லை. சட்டசபையில், வரும், 23ல் கவர்னர் உரையாற்ற உள்ளார். அதில், ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு வெளியாகும். ஆதார் பதியாதவர்களுக்கு, பிப்., வரை அவகாசம் தரப்படும். அதற்குள், எத்தனை பேர் முழு ஆதார் விபரத்தை தருகிறார்களோ, அவர்களுக்கு, மார்ச் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆதார் தராத கார்டுகள் ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர சோதனை! : ஸ்மார்ட் கார்டுக்காக, ஆதார் விபரம் தராத வீடுகளில், ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வினியோகம் துவங்கிய பின், அவசரமாக ஆதார் பதிவு செய்வோர் ஆவணங்களை, தீவிர சோதனை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆவணங்களில் எழுத்து பிழை, முகவரி குழப்பம் உள்ளிட்டவை இருந்தால், ஸ்மார்ட் கார்டு பெறுவது கடினம். எனவே, அனைவரும் ஆதார் பதிவு செய்வது நல்லது.

NHIS-2016 card Download...

NHIS -2016 card for the period 01.07.2016 to              30.06.2020 can be downloaded online in the                   above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in     (DD/MM/YYYY)format.