>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 10 ஜனவரி, 2017

பா.வளர்மதிக்கு ஏன் பாடநூல் கழகம்? -மாஃபா.பாண்டியராஜனுக்கு கார்டனின் செக்?!

பா.வளர்மதிக்கு ஏன் பாடநூல் கழகம்? -மாஃபா.பாண்டியராஜனுக்கு கார்டனின் செக்?!



தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. ' அமைச்சருக்கும் துறையின் உயர் அதிகாரிக்கும் சமீப நாட்களாக முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகவே, பாண்டியராஜனின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் வளர்மதியின் கைக்கு அதிகாரம் சென்றது ' என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.



பள்ளிக் கல்வித்துறை அமைச்சகராக பொறுப்பேற்கின்றவர்களே, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் பதவி வகித்து வந்தனர். முந்தைய காலங்களில் அரசியல் தலைவர்கள் பலர் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர். அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனா சம்பத், பாடநூல் கழகத் தலைவராக பதவி வகித்துள்ளார்.

' அமைச்சர் பதவி ஒருவரிடமும் பாடநூல் கழக தலைவர் வேறு ஒருவரிடமும் இருப்பதால், நிர்வாகரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன' என்பதால், துறை அமைச்சரிடமே இந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வளர்மதியிடம் பாடநூல் கழகத் தலைவர் பதவி சென்று சேர்ந்துள்ளது. " தமிழக அமைச்சர்களில் மாஃபா. பாண்டியராஜனின் செயல் திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் உள்பட கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு யாருடைய அனுமதியையும் அவர் கேட்பதில்லை. அதேபோல், சீனியர் அமைச்சர்களையே பெயர் சொல்லித்தான் அழைக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து பாடநூல் கழகப் பதவியை பதம் பார்த்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தத்தில் யாருக்கும் உடன்பாடில்லை. அடுத்த மாதம், விலையில்லா பொருட்களான மிதிவண்டி, புத்தகப் பை, புத்தகம், கிரேயான்ஸ், காலணிகள், உல்லன் சுவெட்டர்கள், செயல்வழிக் கற்றல் உபகரணங்கள் என ஆயிரம் கோடி ரூபாய்க்கான பிரமாண்ட திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளன. ' இந்த நேரத்தில் பாண்டியராஜன் இருப்பது அவசியமற்றது' என அதிகாரிகள் நினைக்கிறார்கள்" என விவரித்த கல்வி அதிகாரி ஒருவர்,



" பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிக்கும் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் இடையில் சமீப காலங்களாக உரசல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரையில், ' ஆன்ட்டியிடம் பேசிக் கொள்கிறேன்' என அமைச்சர்களை அடக்கி வைத்திருந்தார் அந்த அதிகாரி. இதனாலேயே, பள்ளிக் கல்வி அமைச்சர்கள் துறை அதிகாரியிடம் பவ்யத்தோடு வலம் வந்தனர். ஆனால் பாண்டியராஜனோ, ' நான் சொல்வதை செயல்படுத்துங்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனை துறையின் உயர் அதிகாரி ரசிக்கவில்லை. இதைவிட, மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஏழைக் குழந்தைகள் கணிப்பொறி கல்வி கற்பதற்காக ஐ.சி.டி எனப்படும் ஒருங்கிணைந்த கணிப்பொறி பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 900 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஐந்தாண்டுகளாக நிதியை செலவிடாமல் தள்ளாட்டத்தில் வைத்திருந்தனர் அதிகாரிகள். இந்தப் பணியை எடுத்துச் செய்வதற்காக வந்த நிறுவனங்கள், அதிகாரியின் அழுத்தத்தால் பின்வாங்கிவிட்டன. ஒருகட்டத்தில், நிதியைத் திருப்பி அனுப்பும் வேலைகள் தொடங்கின.

இதனை அறிந்த அமைச்சர் பாண்டியராஜன், ' ஐ.சி.டி திட்டத்தால் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும்' என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வாங்கிவிட்டார். ' கணிப்பொறி தொடர்பான கல்வி என்பதால், எல்காட் வசம் பணிகள் ஒப்படைக்கப்படுவதைவிட, பள்ளிக்கல்வித்துறையே எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும்' என அதற்கான பணிகளில் இறங்கினார். மீண்டும் ஐ.சி.டி கொண்டு வரப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்தார் துறை அதிகாரி. ' ஐ.சி.டியை முன்வைத்து நடந்த விஷயங்கள் தெரிந்துவிடும்' என்பதால், சில ஐ.ஏ.எஸ்கள் துணையோடு கார்டன் வட்டாரத்துக்கு தகவல் அனுப்பினார். ' யாரைக் கொண்டு வருவது' என பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. ' அ.தி.மு.கவில் சீனியராக வளர்மதி இருப்பதால், பாண்டியராஜனால் எதிர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்' என்பதை உணர்ந்தே, அவருக்குப் பதவியைக் கொடுக்க வைத்துள்ளனர்" என்றார் விரிவாக.



" கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு ஆதாரபூர்வமாக தகவல் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலரும், ஒரே துறையில் நீண்டகாலம் அமர்ந்து கோலோச்சுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் விலையில்லா புத்தகப் பை, காலணி தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும், மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கினர். பாடநூல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம்பெற்றுவிட்டது என்பதற்காக, மூன்று கோடி ரூபாய் செலவில் மறு அச்சடிப்பு பணிகளைச் செய்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காகவும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் டெண்டரை வழிநடத்தும் முடிவில்தான் இதுபோன்று முடிவு எடுத்திருக்கிறார்கள்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

" அ.தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து வாரியம் உள்பட பல்வேறு பதவிகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. பாடநூல் கழகத்துக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதன் மூலம், அமைச்சரின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. எந்தவித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படியே டெண்டர்கள் கோரப்படுகின்றன. தகுதியில்லாத நிறுவனங்கள் தேர்வாகும்போதுதான் மறுடெண்டர் கோரப்படுகிறது. மற்றபடி, வளர்மதியின் நியமனத்தை அரசியல் ஆக்குவது அர்த்தமற்றது" என்கிறார் பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர்.

TNPSC உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

TNPSC உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 11 பேரின் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் மீது தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை வரும் ஜனவரி 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவால் தமிழகத்தில் வீடு மற்றும் மனை விற்பனை முடங்கியதால் பத்திரப் பதிவும் கடும் பாதிப்பை சந்தித்தது. இவ்வழக்கு கடந்த 2016 அக்டோபர் 21-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 20 வரை பதிவான மனைகளின், மறு விற்பனையை அனுமதிப்பதற்கான அரசாணை நகல் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் நிலங்களின் வகைப்பாட்டு விவரங்களை பட்டியலிட்டு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் அடுத்தடுத்து நவம்பர் 16 மற்றும்  டிசம்பர் 5-ம் தேதிகளில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, அங்கீகாரமில்லாத மனைகளை வரன் முறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட செயலாக்கம் குறித்த, முழு விபரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று அதாவது ஜனவரி 9-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது  நிலங்களை வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். நிலங்களை வகைப்படுத்த மேலும் 2 வார காலம் அவகாசம் கேட்டு அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி தடையை ஜனவரி 30-ம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மறுபரிசீலனை செய்ய கோரிக்கை:
பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தரப்பு வாதிட்டது. மேலும் பிரச்சனைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் கோரினர். நிபந்தனைகளுக்குட்பட்டு பத்திரப்பதிவு செய்ய உத்தரவிடுமாறும் நீதிபதிகளிடம் ரியல் எஸ்டேட் தரப்பினர் வாதிட்டனர்.      

SERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது

SERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*
பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள
1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப
*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*
💥 அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.
💥 வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.
💥 ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?
💥 பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?
💥 ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)
💥 அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.
📡📡📡📡📡📡📡📡
🔴 *பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*
10th, 12th,
DTEd,
UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)
*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*
🔴 துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,
🔴 CPS / TPF எண்,
🔴 துறை முன் அனுமதி /பின் அனுமதி,
🔴 உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,
🔴 பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,
மாறுதல் பெற்ற ஆணை,
பதவி உயர்வு பெற்ற ஆணை,
தகுதிகாண் பருவத்திற்கான ஆணை,
🔴 Pay commission Pay fixation / arrear/P.P ஆணை,
🔴 தேர்வுநிலை/சிறப்புநிலை பெற்றதற்கான ஆணை,
🔴 கற்பித்தல் பயிற்சி சென்றதற்கான ஆணை
🔴 இதுவரை ML, EL, halfpay, loss of pay, மகப்பேறு விடுப்பு,
 & கருச்சிதைவு விடுப்பு எடுத்த விபரம்,
🔴 EL ஒப்படைத்த விபரம்,
🔴 இன்சென்டிவ் பெற்ற ஆணை,
🔴 அரசு கடன் பெற்ற ஆணை,
*மேற்கண்டவற்றில் தங்களிடம் உள்ள ஆணைகளின் நகல்கள் மற்றும் விபரங்களை வைத்து தங்களின் பணிப்பதிவேட்டினை சரிபார்க்கவும்.*

பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவிப்பு

பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : பொங்கல் விடுமுறை அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பொங்கல் விடுமுறை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. 

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு.

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு.

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது.இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை!.

டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை!.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர்.
காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல் நியமிக்கப்பட்டனர்.இதில், விதிமீறல் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என அறிவித்தது; உச்ச நீதிமன்றமும், உறுதி செய்துள்ளது.
அரசு பணி நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்த மொத்தம், 15 பேரில், ஐந்து பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது.

புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.

புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழகஅரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலையில், அரசு ஊழியர் சங்கத்தின், 12வது மாநில மாநாடு, 6ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. மாநாட்டில், அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி பேசியதாவது:தமிழகத்தில், குறைந்த சம்பளத்துடன், 25 ஆண்டுகளாக, கடும் பணிச்சுமையில், மூன்று லட்சம் பகுதி நேர ஊழியர்கள் தவித்து வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க வேண்டும்; இல்லையேல், தமிழக அரசு பெரும் போராட்டத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்., 2ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; மார்ச், 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி; ஏப்ரல், 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 9 ஜனவரி, 2017

ரத்தாகிறது பொங்கல் விடுமுறை..

ரத்தாகிறது பொங்கல் விடுமுறை..

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்குபொங்கல்  பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடும் நபர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து
கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், அலுவலக உயர் அதிகாரி நினைத்தால் விடுமுறையை ரத்து செய்யலாம்.

அறிவோம்! கண்டுபிடிப்புகளின் தந்தைகளை.

அறிவோம்! கண்டுபிடிப்புகளின் தந்தைகளை.

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET - நீட்) நடத்தப்படுகிறது.
இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு போலவே அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இம்மாத இறுதியில் நடை பெறவுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) கூட்டத்தில் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்துவது பற்றி விவாதிக் கப்பட உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு வந்தால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பிஇ, பிடெக் இடங்கள் நுழைவுத் தேர்வு மூலமாகவே நிரப்பப்படும்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க் கையை வெளிப்படையாக நடத்த வும் நுழைவுத்தேர்வை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களுக்கு எக்ஸ்சிட் என்ற சிறப்பு தகுதி தேர்வு நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என, திருவண்ணாமலையில் நடை பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நக ராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து அரசு ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நேற்று மாலை நடை பெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்து, காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டு திடலை வந்தடைந்தது. பின்னர் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை யில் மாநாடு நடைபெற்றது.
அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன தலைவர் முத்துசுந்தரம் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், "20 சதவீத இடைக் கால நிவாரணம் வழங்க வேண் டும், ஊதிய மாற்றக் குழுவை உடனே அமைக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும், சிறப்பு ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறுபவர் களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மார்ச் 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவது, மார்ச் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நடத்துவது, ஏப்ரல் 25-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சீதரன், பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசில் 8,300 பணியிடங்கள்: 30க்குள் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

மத்திய அரசில் 8,300 பணியிடங்கள்: 30க்குள் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 8,300
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துவின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்விற்கான வினாக்கள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: புதுச்சேரி(8401), சென்னை(8201), கோயம்புத்தூர்(8202), மதுரை(8204), திருச்சிராப்பள்ளி(8206), திருநெல்வேலி(8207)
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 16.04.2017, 30.04.2017 மற்றும் 07.05.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஜனவரி 13 ஆம் தேதி வரை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடலாம். - தடை விதிக்கும் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.

ஜனவரி 13 ஆம் தேதி வரை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடலாம். - தடை விதிக்கும் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் ஜனவரி 13 ஆம் தேதி வரை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடலாம். - தடை விதிக்கும் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.



🚖 டெபிட், கிரெடிட் கார்டுகளில் பெட்ரோல் போட தடை விதிக்கும் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு.

💳 ஜனவரி 13 ஆம் தேதி வரை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடலாம். - பங்க் உரிமையாளர்கள் நள்ளிரவில் அறிவிப்பு.

🔴 டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என வங்கிகள் அறிவித்திருப்பதை கண்டித்து பெட்ரோல் பங்க்குகளில் நேற்று (08.01.2017) நள்ளிரவு முதல் நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஜனவரி 13 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. 
 இவற்றில், தங்கி படிக்கும், மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாடநூல் கழக தலைவராக பா.வளர்மதி நியமனம்

பாடநூல் கழக தலைவராக பா.வளர்மதி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். பா.வளர்மதி கடந்த 2011-16 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சமூக நலன்-சத்துணவு திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம்.
அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.
உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.
 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.
அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.
 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!''

10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!!!

10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!!!

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வரும் தகவல்கள் தவறானவை; மக்கள் அச்சமடைய வேண்டாம்; அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என, ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.
தவறான தகவல்:
செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி
வருகிறது. செல்லாத நோட்டுகளை மாற்ற வாய்ப்பு தரப்பட்ட போது, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, நாணயங்களையும் மக்கள் வாங்கி சென்றனர். இவ்வாறு, 10 ரூபாய் நாணயங்கள் பெற்றவர்களும், ஏற்கனவே அவற்றை சேர்த்து வைத்திருந்தோரும், தற்போது, செலவு செய்ய முடியாமல் போய் விடுமோ என, அச்சமடைந்து உள்ளனர்.
'10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, தவறான தகவல்கள் பரவி வருவதே இதற்குக் காரணம். இதை உண்மை என நம்பி, வியாபாரிகளும் வாங்க மறுப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
செல்லும்:
இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: பத்து ரூபாய் நாணயங்கள், 2009ல் அறிமுகம் ஆனது. அவ்வப்போது, சில மாற்றங்களுடன், அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவரை, போலி நாணயங்கள் எதையும் கண்டறியவில்லை.
இந்த நாணயங்கள், இரு உலோகத்தால், வட்ட வடிவில் உருவாக்கப்பட்டவை; 27 மி.மீ., விட்டம், 7.71 கிராம் எடை உடையவை. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று, ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அவை அனைத்தும் செல்லும்; பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய் நோட்டு  அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால் நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
அதாவது 2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தை பிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதி வரை ரூ.2.5 லட்சம் வரை செய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர் 9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும் ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக வங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டு எண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு முன் அவர்கள் கணக்கில் இருப்பில் இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும் கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின் ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள் பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்க வேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாத நிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.

தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளிய பொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களை செய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும் அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.