சனி, 5 நவம்பர், 2016
இன்று(05.11.2016) நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் தொடர்பான வீடியோ தொகுப்புகள்
இன்று நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் MOTIVATION SONGS
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING OF puppet MODEL
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING BOTTLE puppets
இன்று நடைபெறும் CRC க்காண POMMALATTAM SHOW
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING PAPPER puppets
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING Box puppets
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING FINGER PUPPET
இன்று நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் அறிமுகம் ...VIDEO PART -1
CLICK HERE TO SEE ALL VIDEOS LINK ..........
அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
கோவை மாவட்டம், சூலுார் தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சம்பவ இடத்துக்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஊக்க ஊதிய பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னறிவிப்பின்றி ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. சூலுார் ஒன்றியம், கலங்கல் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஹென்றி பீட்டர் ஆகியோர், இந்த போராட்டத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு.
ஆசிரியர் பணிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் கல்வி பணி அல்லாத இதர பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக கடந்த அக் டோபர் 25-ம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் புகார் எழுப்பினர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது சிபிஎஸ்இ பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அலுவலகப்பணி, போக்குவரத்து, கேன்டீன் நிர் வாகம் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்கு அதற்கென பயிற்சி பெற்ற பணியாளர்களை பள்ளிகள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் நேரடி நியமனம் : நாளை முதல் விண்ணப்பம் விநியோகம் !
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் வருகிற 5ம் தேதி (நாளை) முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள் குடியிருக்கும் இடத்திற்கும், காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், இனம், விதவை/ கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்களுக்கு 20 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வருகிற 22ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி www.krishnagiri.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி / நகராட்சி அலுவலகத்திற்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம் !!
ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு..
ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. அத்துடன், அரிசி வாங்குவோரை இரண்டாகப் பிரிக்கவும்,தமிழக அரசின் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லா தது' என்று பிரிக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இரண்டு பிரிவுஅதன்படி, முன்னுரிமை பிரிவில், ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் இடம் பெறுவர். அடுக்கு மாடி வீடுகளில் வசித்து, இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், முன்னுரிமை அல்லாத பிரிவில் இடம் பெறுவர்.தற்போது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக, ஆண்கள் மட்டும் உள்ளனர். இனி, பெண்களை குடும்ப தலைவராக குறிப்பிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, தமிழக உணவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

உணவு பாதுகாப்புசட்டம்
தமிழகத்தில், 1.91 கோடி அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், மத்திய தொகுப்பில் இருந்து, 'அந்தியோதயா அன்ன யோஜனா' பிரிவில், கிலோ, மூன்று ரூபாய் விலையில், 65 ஆயிரம் டன் வாங்கப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65 ரூபாய்க்கு, 1.05 லட்சம் டன்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், கிலோ, 8.30 ரூபாய் க்கு, 1.26 லட்சம் டன் அரிசி வாங்கப்படுகிறது. மீதம், கிலோ, 19 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.
தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தியதை தொடர்ந்து, மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65ரூபாய்க்கு தரும் அரிசியை, மூன்று ரூபாய்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், 8.30 ரூபாய்க்கு தரும் அரிசியை, 22.50 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்து உள்ளது.
எடை குறையாதுஎனவே, தமிழகத்தில் அரிசி கார்டுதாரர்கள், முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாத வர் என, பிரிக்கப்பட உள்ளனர். இந்த விபரம், மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு, அரிசி வாங்க மட்டும் பயன்படுத்தப்படும்.அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், ரேஷன் கடைகளில், தொடர்ந்து குடும்ப உறுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்ப, இலவச அரிசி வழங்கப்படும்; யாருக்கும் எடை குறைத்து வழங்கப்பட மாட்டாது.
முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக பெண்கள் நியமிக்கப் படுவர். முன்னுரிமை அல்லாத பிரிவில், ஆண், பெண், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, குடும்ப தலைவராக இருக்கலாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் அறிவியல் கற்பது இனி, எளிது!
அறிவியல் பாட வரையறைகளை, எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மாதிரிகள் தயாரித்து வகுப்பு நடத்த,அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புதிய கற்பித்தல்செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி, கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டபல்வேறு பணிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துதல் எனும்திட்டத்தின் கீழ், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், எளிமையாக அறிவியல் பாடத்தை கற்க, புதிய செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூரில் கிடைக்கும் வளங்களை கொண்டு, மாணவர்களின் புரிதல் திறனுக்கு ஏற்ப, மாதிரிகள் தயாரித்து, கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை, மாணவர்களுக்கு கற்பிக்க, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி கோவை, ராஜவீதி, ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இவர்களின் உதவியுடன், அந்தந்த வட்டாரத்தில் உள்ள, பள்ளி ஆசிரியர்களுக்கு, செயலாக்க திட்டத்தை விளக்கி, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,”நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட செயலாக்க திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், காற்றின் விசை, அழுத்தம் மற்றும் வேகத்தை, பலுான், ரப்பர் பாட்டில்கள் கொண்டு விளக்கி புரிய வைக்கலாம்.மேலும், விலங்குகளின் உடலமைப்பு, தாவரங்களின் அமைப்பு ஆகியவற்றை, செய்முறை வாயிலாக விளக்க பயிற்சி அளித்துள்ளோம். விரைவில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி,உள்வாங்கும் திறன் குறித்து, பரிசோதித்து அறியப்படும்,” என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)