>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 5 நவம்பர், 2016

05.011.2016 நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING OF puppet MODEL


இன்று(05.11.2016) நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் தொடர்பான வீடியோ தொகுப்புகள்

இன்று  நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் MOTIVATION SONGS
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING OF puppet MODEL
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING BOTTLE puppets
இன்று நடைபெறும் CRC க்காண POMMALATTAM SHOW
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING PAPPER puppets
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING Box puppets
இன்று நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING FINGER PUPPET
இன்று நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் அறிமுகம் ...VIDEO PART -1

CLICK HERE TO SEE ALL VIDEOS LINK ..........

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. 
 கோவை மாவட்டம், சூலுார் தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சம்பவ இடத்துக்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஊக்க ஊதிய பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னறிவிப்பின்றி ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. சூலுார் ஒன்றியம், கலங்கல் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஹென்றி பீட்டர் ஆகியோர், இந்த போராட்டத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு.

ஆசிரியர் பணிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் கல்வி பணி அல்லாத இதர பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக கடந்த அக் டோபர் 25-ம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் புகார் எழுப்பினர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது சிபிஎஸ்இ பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அலுவலகப்பணி, போக்குவரத்து, கேன்டீன் நிர் வாகம் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்கு அதற்கென பயிற்சி பெற்ற பணியாளர்களை பள்ளிகள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் நேரடி நியமனம் : நாளை முதல் விண்ணப்பம்    விநியோகம் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் வருகிற 5ம் தேதி (நாளை) முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள் குடியிருக்கும் இடத்திற்கும், காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், இனம், விதவை/ கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்களுக்கு 20 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வருகிற 22ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி www.krishnagiri.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி / நகராட்சி அலுவலகத்திற்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம் !!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!:              அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு..
ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை     நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. அத்துடன், அரிசி வாங்குவோரை  இரண்டாகப் பிரிக்கவும்,தமிழக அரசின் உணவுத் துறை முடிவு           செய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.           கடந்த, 1ம் தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை       அல்லா தது' என்று பிரிக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இரண்டு          பிரிவுஅதன்படி, முன்னுரிமை பிரிவில், ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் இடம் பெறுவர். அடுக்கு மாடி வீடுகளில் வசித்து, இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், முன்னுரிமை அல்லாத பிரிவில் இடம் பெறுவர்.தற்போது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக, ஆண்கள் மட்டும் உள்ளனர். இனி, பெண்களை குடும்ப      தலைவராக குறிப்பிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து,      தமிழக உணவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு பாதுகாப்புசட்டம்
தமிழகத்தில், 1.91 கோடி அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், மத்திய தொகுப்பில்       இருந்து, 'அந்தியோதயா அன்ன யோஜனா' பிரிவில், கிலோ, மூன்று ரூபாய் விலையில், 65 ஆயிரம் டன் வாங்கப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ்       பிரிவில், கிலோ, 5.65 ரூபாய்க்கு, 1.05 லட்சம் டன்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், கிலோ, 8.30 ரூபாய் க்கு, 1.26 லட்சம் டன் அரிசி வாங்கப்படுகிறது.    மீதம், கிலோ, 19 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.
தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தியதை தொடர்ந்து,       மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65ரூபாய்க்கு            தரும் அரிசியை, மூன்று ரூபாய்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், 8.30 ரூபாய்க்கு தரும் அரிசியை, 22.50 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்து உள்ளது.
எடை குறையாதுஎனவே, தமிழகத்தில் அரிசி கார்டுதாரர்கள், முன்னுரிமை மற்றும்        முன்னுரிமை அல்லாத வர் என, பிரிக்கப்பட உள்ளனர். இந்த       விபரம், மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு, அரிசி வாங்க மட்டும் பயன்படுத்தப்படும்.அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், ரேஷன் கடைகளில், தொடர்ந்து குடும்ப உறுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்ப, இலவச அரிசி வழங்கப்படும்; யாருக்கும் எடை குறைத்து வழங்கப்பட மாட்டாது.
முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக பெண்கள் நியமிக்கப் படுவர். முன்னுரிமை அல்லாத பிரிவில், ஆண், பெண்,           அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, குடும்ப தலைவராக இருக்கலாம். இது       குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும்.   இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் அறிவியல் கற்பது இனி, எளிது!

அறிவியல் பாட வரையறைகளை, எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மாதிரிகள் தயாரித்து வகுப்பு நடத்த,அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புதிய கற்பித்தல்செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி, கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டபல்வேறு பணிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துதல் எனும்திட்டத்தின் கீழ், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், எளிமையாக அறிவியல் பாடத்தை கற்க, புதிய செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூரில் கிடைக்கும் வளங்களை கொண்டு, மாணவர்களின் புரிதல் திறனுக்கு ஏற்ப, மாதிரிகள் தயாரித்து, கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை, மாணவர்களுக்கு கற்பிக்க, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி கோவை, ராஜவீதி, ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இவர்களின் உதவியுடன், அந்தந்த வட்டாரத்தில் உள்ள, பள்ளி ஆசிரியர்களுக்கு, செயலாக்க திட்டத்தை விளக்கி, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,”நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட செயலாக்க திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், காற்றின் விசை, அழுத்தம் மற்றும் வேகத்தை, பலுான், ரப்பர் பாட்டில்கள் கொண்டு விளக்கி புரிய வைக்கலாம்.மேலும், விலங்குகளின் உடலமைப்பு, தாவரங்களின் அமைப்பு ஆகியவற்றை, செய்முறை வாயிலாக விளக்க பயிற்சி அளித்துள்ளோம். விரைவில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி,உள்வாங்கும் திறன் குறித்து, பரிசோதித்து அறியப்படும்,” என்றார்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முயற்சி - முதற்கட்டமாக 8 பள்ளிகள் தேர்வு!!

பாடம் இருந்தும் பாடத்திட்டம் இல்லை

கல்வி செயல்பாடுகளுக்கு நிதியில்லாமல் திண்டாட்டம் -தலைமை ஆசிரியர்கள் புலம்பல்!

யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது                       பெரியார் பல்கலை...

சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலை        தூர கல்வி மையமான பிரைடுதுவங்கப்பட்டது. அதில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ,     சான்றிதழ் உள்ளிட்ட,150 படிப்புகள் வழங்கப்படுகின்றன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 188, அண்டை மாநிலங்களில், 105,அண்டைநாடுகளில், மூன்று என, 295 படிப்பு மையங்கள் செயல்படுகின்றன.
எச்சரிக்கை:
அதில், அண்டை நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களை நடத்தக்கூடாது என,யு.ஜி.சி., உத்தரவிட்டது.மேலும், விதிக்கு     மாறாக, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, படிப்புகளை வழங்கியதால், பெரியார் பல்கலை தொலைதூர படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம் என, சில மாதங்களுக்கு முன், யு.ஜி.சி.,எச்சரித்தது.
ஆதரவு:
இதனால், பெரியார் பல்கலை, தொலைதூர    கல்வியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. பல்கலை சார்பில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், பல்கலைக்கு ஆதரவாக  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால்,        நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்             சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது என, பல்கலை அறிவித்துள்ளது.
தொடரலாம்:
பிரைடு இயக்குனர் பாலகுருநாதன் கூறு            கையில், மற்ற பல்கலைகளில் பின்பற்றும் விதிமுறைப்படி,பெரியார் பல்கலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடரலாம் என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெரியார் பல்கலை, தொலைநிலை       கல்வி மையத்தில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது, என்றார். தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை நடத்த, பல்கலை மானியக்குழு விதித்த தடைக்கு, பெரியார்     பல்கலை, நீதிமன்றத்தில் தடை உத்தரவு     பெற்றதால், நடப்பு கல்வியாண்டுக்கான           மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

6,7,8ம் வகுப்பு தமிழ் ஆசிரியர்களுக்கு இன்று (04.11.2016) முதன்மைகல்வி அதிகாரி அதிரடி !!

வெள்ளி, 4 நவம்பர், 2016

SSA:35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  ஆங்கிலத் திறனை மேம்படுத்த பயிற்சி.

ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் 35 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெஃப் உதவியுடன் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சி திட்டத்தை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக வட்டார வள மைய (பிஆர்டி) ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதுதான் இந்த திட்டம்.
 கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த பயிற்சி திட்டத்தில் ஆர்வமும், திறமையும் மிக்க 300 ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர் களைக் கொண்டு பயிற்சி அளிக் கப்படுகிறது. அதன்படி, முதல் கட்ட, 2-ம் கட்ட பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 3-வது கட்ட பயிற்சி சென்னையில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சியை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பயிற்சி திட்டமானது வெறுமனே ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் மட்டுமல்ல. ஆங்கில ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறமையை மேம்படுத்தும் திட்டமும் கூட. 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் பலன்களை நன்றாக பார்க்க முடிகிறது. பயிற்சியின் பலன் பள்ளி மாண வர்களை நல்லமுறையில் சென் றடைந்திருக்கிறது. அவர்களின் ஆங்கில மொழித்திறனில் நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. இந்த ஆங்கில பயிற்சியானது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கும் நல்ல கற்றல் அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப் பேசும்போது, "கல்வித்துறையில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 70 ஆண்டு காலமாக உறவு இருந்து வருகிறது. கல்வி யில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் பல் வேறு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் கல்வித்துறை யில் புதுமையை புகுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்கான முயற்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆங்கிலப் பயிற்சி தொடர்பாக எஸ்எஸ்ஏ திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர் ஆங்கில பயிற்சி திட்டம் குறித்துஅறிமுகவுரை ஆற்றினார். ஆங்கிலப் பயிற்சி யால் ஆசிரியர்கள் மற்றும் மாண வர்களிடம் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களையும் மாற்றங்களையும் யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் எடுத்துரைத்தார். ஆசிரி யர்களின் திறமையை மேம்படுத்த அதிகளவு செலவிடுவதற்கு எஸ்எஸ்ஏ இயக்ககத்துக்கு பாராட்டு தெரிவித்தார். எஸ்எஸ்ஏ முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பயிற்சி தொடக்கவிழா முடி வடைந்த பிறகு பூஜா குல்கர்னி நிருபர்களிடம் பேசும்போது, ''இந்த ஆங்கில பயிற்சிக்கு 300 ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக் கிறார்கள். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவற் றுடன் ஆங்கிலத்தை எப்படி எளிதான முறையில் கற்றுக்கொடுப் பது என்பது குறித்தும், மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இந்த 300 ஆசிரியர் பயிற்றுநர் களைக் கொண்டு இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் பயிற்சி அளிக்கப்படு கிறது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 35 ஆயிரம் ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார். எஸ்எஸ்ஏ, பிரிட்டிஷ் கவுன்சில், யுனிசெப் சார்பில் சென்னையில் நேற்று தொடங்கிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடக்க விழாவில் (இடமிருந்து) யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர், இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி.

குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ளி ஆசிரியை தரும் எளிய டிப்ஸ்

*உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி* *விடுகிறதா?* *உங்கள் குழந்தை* *மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய* *நாகப்பட்டினம், அரசுப்பள்ளி ஆசிரியை தேவகுமாரி தரும் எளிய டிப்ஸ்:*
1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.
2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு நேர மேலாண்மை பழக்கத்தையும் ஏற்படுத்தும்.
3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வீட்டுப் பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள். இப்போது டோராவின் வீட்டுப் பாடம் முடிந்துவிட்டது. இனி சோட்டா பீமின் வீட்டுப் பாடம் மட்டுமே மீதம் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்தப் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை தரும்.
4.குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது. வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது அடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள்.ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்
5.உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. குழந்தைகளின் மனது அடிக்கடி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. அறிவியல் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, தமிழ் வீட்டுப் பாடம் செய்கிறேன் ப்ளீஸ் எனக் கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அவர்களுக்கு எதில் விருப்பம் ஏற்படுகிறதோ அதை செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். இல்லையெனில் விருப்பம் இல்லாமல் தப்பும் தவறுமாக செய்து நேரத்தை தான் வீணடிப்பர். ஆனால் திரும்பவும் அறிவியல் பாடத்தையும் எழுத வைக்க மறக்காதீர்கள்.
7.குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைச் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை இன்டர்நெட்டில் தேடுங்கள். அப்போது கிடைக்கும் தகவல்களை அதற்குரிய படங்களோடு, சார்ட் பேப்பரில் ஒட்டுங்கள். அதில் நூலைக் கட்டி, ஜன்னலில் தொங்க விடுங்கள். ஆனால் அதன்பின்புறம் தெரிவதுபோல தொங்க விடுங்கள். உங்கள் குழந்தையிடம் நீ விரைவராக வீட்டுப்பாடம் எழுதிவிட்டால், அதோடு தொடர்புடைய இந்தச் செய்தியைக் காட்டுவேன் எனச் சொல்லுங்கள். அது என்ன செய்தி எனும் ஆவலில் விரைவாக மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் வீட்டுப் பாடத்தை செய்வாா்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 39 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது - நீதிபதி வேதனை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 39 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.அரசு பள்ளிகளின் நிலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி  வேதனை!