>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 22 ஏப்ரல், 2019

பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். 

வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன. 'பெயில்' ஆனாலும் பிரச்னையே இல்லை. ஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி பெறலாம். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நினைக்கவேண்டாம்; ஏராளமான படிப்புகள் உள்ளன; சுய தொழிலும் செய்யலாம். எனவே, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையோ, 'பெயில்' ஆன மாணவர்களையோ பெற்றோர் கடிந்து கொள்ளாமல், அவர்கள் மனதைத் தேற்றி, எதிர்காலம் சிறப்பாக அமைய வழி செய்ய வேண்டியது அவசியம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியான நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம் படிப்புகளில் சேர்வர். அதே நேரம், குறைவான மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொள்வது அவசியம்.

35 மதிப்பெண்ணே போதும்
சென்னை பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரியும், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வருமான திருமகன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், மாணவர்களும், பெற்றோரும் கவலையே பட வேண்டாம். அனைத்து கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மட்டுமே போதும்.

உளவியல் ஆலோசகர் கதிரவன்

அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில், 'சீட்' கிடைக்கா விட்டால், தனியார் கல்லுாரிகளில், நிச்சயம் இடம் கிடைக்கும்.எவ்வளவு மதிப்பெண் உள்ளதோ, அதற்கேற்ற பட்டப்படிப்பில் சேரலாம். அந்த படிப்பின் வழியே, அரசு துறை வேலைவாய்ப்பு தேர்வுகள் எழுதி, அரசு அதிகாரி ஆகலாம்.மொழி சார்ந்த படிப்புகளுக்கு, எல்லா மாணவர்களுக்கும், கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்.

உளவியல் ஆலோசகர் கதிரவன்

தமிழ், ஆங்கிலம் என, மொழியியல் முடித்தவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு, பிளஸ் 2 மதிப்பெண், ஒரு தடையாக இருக்காது.ஊடகங்கள், நாளிதழ் கள், விளம்பர துறைகளில், மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த பாடங்களையும் தேர்வு செய்யலாம்.

பட்டப் படிப்புக்கு, கட்டணம் செலுத்த முடியாதவர்கள், எளிய முறையில், வங்கிகளில், கல்வி கடன் பெறலாம்.ஒரு மாணவருக்கு, ஆண்டுக்கு, 2,000 ரூபாய் வரை தான் வட்டி வரும். படிப்பு முடித்து, வேலைக்கு சென்ற பின், கடனை, மாத தவணையாக செலுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

40 - 45 போதுமே!

அண்ணா பல்கலையின், இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 தேர்வில், பொது பிரிவு மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற பிரிவு மாணவர்கள், 40 சதவீதம் மட்டும் பெற்றாலே போதுமானது.அவர்கள், ஏதாவது ஒரு, இன்ஜி., கல்லுாரியில், பி.இ., அல்லது, பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். தமிழக அரசின், கவுன்சிலிங் வழியாக இட ஒதுக்கீடு அடிப்படையில், இந்த இடங் பெறலாம்.

கலைக்கு, 35 போதும்

பிளஸ் 2வில், வெறும் தேர்ச்சி மதிப்பெண்ணான, 35 மதிப்பெண் மட்டும் எடுத்தால் கூட, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பில்சேரலாம். ஒவ்வொரு படிப்புக்கும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.

பி.ஏ., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட, இளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர முடியும்.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கலை கல்லுாரிகளில், விண்ணப்ப

பதிவு துவங்கியுள்ளது. மதிப்பெண்ணை தர வரிசைப்படுத்தி, மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு சேர்க்கை வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றவர்கள், ஏதாவது, ஒரு பல்கலையில்,பட்டப்படிப்பு மட்டும் முடித்த பின், குரூப், 1, 2, 3 என, அரசு பணிகளுக்கான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுதி, அரசு பணியில் சேரலாம்.

சட்டம், சி.ஏ.,வுக்கு, 45 போதும்

அதேபோல், அம்பேத்கர் சட்ட பல்கலையின், இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., - எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.ஏ., - பி.பி.ஏ., - எல்.எல்.பி., போன்ற படிப்புகளில் சேரலாம். இதற்கு, பொது பிரிவினர், பிளஸ் 2வில், 45 சதவீதமும், மற்ற பிரிவினர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றால் போதும். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் படித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். தொலைநிலையில், சி.ஏ., படிப்பும், கல்லுாரியில், பி.காம்., படிப்பும் படிக்கலாம்.

'டிப்ளமா'வுக்கு, தேர்ச்சி போதும்

மூன்றாண்டு பட்டப்படிப்பு சேராதவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால், 'டிப்ளமா' இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரலாம். இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்து, பி.இ., - பி.டெக்., போன்ற, இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் சேரலாம். இதன்படி, நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்ந்தவர்களுக்கு இணையான பட்டத்தையும், வேலைவாய்ப்பையும் பெறலாம்.

மருத்துவமும், துணை படிப்புகளும்

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், பொது பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் போதும்.பொது பிரிவில் உள்ள மாற்று திறனாளி மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும்.

மற்ற அனைவரும், 40 சதவீதம் பெற்றிருந்தால் போதும். 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், தரவரிசையில் இடம்பெற்று, மருத்துவ படிப்பில் சேரலாம்.'நீட்' தேர்வு மதிப்பெண் குறைவு காரணமாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர முடியாவிட்டால், மருத்துவம் சார்ந்த, பி.பார்ம்., கண் மருத்துவத்துக்கான, 'ஆப்தால்மாலஜி' உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேரலாம். மாணவியர், 'நர்சிங்' படிப்புகளில் சேர்வதன் வழியே, அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில், நல்ல சம்பளத்தில், பணி வாய்ப்பை பெற முடியும்.

தோல்வியே வெற்றியின் முதல் படி!

சேலத்தை சேர்ந்த, உளவியல் ஆலோசகர், கதிரவன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், வரும் தேர்வில் தேர்ச்சி பெற உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள், வரும் துணை தேர்வில், சிறந்த மதிப்பெண் எடுக்க முடியும்.

இப்போதைய சிறிய தோல்வி, அடுத்த இமாலய வெற்றிக்கு படிக்கல்.விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், பள்ளி படிப்பு கூட முடிக்காதவர். அவரது தாய் அளித்த ஊக்கத்தால், உலகம் போற்றும் விஞ்ஞானியானார். இன்னும் எத்தனையோ, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சியே பெறாமல், இரண்டாவது முயற்சியில், பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.


வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதேபோல், இன்ஜினியரிங்கும், மருத்துவமும் மட்டும், உயர்ந்த படிப்புகள் அல்ல. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் போன்ற பலர், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பும், அந்தஸ்தும் உள்ளது. இந்த படிப்பில், மதிப்பெண் வரவில்லையா; வேறு எந்த படிப்பிற்கான திறமை, நம்மிடம் இருக்கிறது என தெரிந்து கொண்டால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட, வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

வாழ்க்கையில் இத்தனை வழிகள் இருப்பதைப் பற்றித் துளியும் சிந்திக்காமல், தற்கொலை செய்து கொள்வது, வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக நினைப்பது, மற்றவர்கள் கிண்டலடிப்பரே என, தாழ்வு மனம் கொள்வது ஆகியவை, வாழ்வில் முன்னேற, எந்த வகையிலும் உதவாது. மாணவர்கள், நம்பிக்கையுடன், நல்ல, நேர்மறையான முடிவு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

துணை தேர்வு எப்போது?

பிளஸ் 2வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன் மாதம், துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு தேர்வு துறை சார்பில், ஜூன், 6 முதல், 13ம் தேதி வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்கள், இப்போதிருந்தே பாடங்களை படித்து, தயாராக வேண்டும்.

ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வுக்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்; எளிதில் தேர்ச்சி பெறலாம். தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். ஏதாவது ஒருபடிப்பில், உங்களுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது.பிளஸ் 2வில், மதிப்பெண் குறைந்தாலும், கல்லுாரி படிப்பில், உங்கள் கவனத்தை செலுத்தி,முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள். கல்லுாரியிலேயே, 'கேம்பஸ்' வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

'படி படி' என, அழுத்தம் தராதீர்!
பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரின், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எங்கள் பிள்ளைகள், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அவர்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் காரணம். இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் என, நாங்கள் வற்புறுத்தவில்லை.

மாறாக, 'நேரத்தை வீணடிக்காமல், பாடங்களை புரிந்து படித்து விட வேண்டும்' என அறிவுறுத்தினோம்.தினமும், பள்ளியில் நடத்தும் பாடங்களை, வீட்டில் படித்து, அதே நாளில், தேர்வு எழுதி, பார்த்து விட வேண்டும். அந்த பாடங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், அதை குறிப்பெடுத்து, மறுநாள் பள்ளிக்கு சென்றதும், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் பெற வேண்டும் என, வழிகாட்டினோம்.


சரியான நேரத்தில் உணவு, துாக்கம் என்பதும், மாணவர்களுக்கு முக்கியமானது. எனவே, மதிப்பெண் குறைந்த மாணவர்கள், கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளுக்கு, எந்த விதத்திலும், படிப்பின் காரணமாகவோ, மதிப்பெண் காரணமாகவோ, அழுத்தம் தரவில்லை; தரவும் கூடாது. உரிய நேரத்தில், உணவு, துாக்கம், விளையாட்டு என, திட்டமிட்டால் போதும். இதன்பிறகும், மதிப்பெண் குறைந்தால், அதற்கேற்ற படிப்பில் சேர்ந்து சாதிக்கலாம் என, நினைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திறந்தநிலை பள்ளியும் இருக்கு!

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாமலோ, மதிப்பெண் குறைவாகவோ உள்ளவர்கள், தொலைநிலை பள்ளியிலும் படிக்கலாம். மத்திய அரசின், தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில் சேர்ந்து, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம்.இதில், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பின்பற்றப்படும். இதில் படிப்பவர்கள், 'நீட்' தேர்வில் கூட பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

என்.ஐ.ஓ.எஸ்., பள்ளி படிப்பில் சேர்பவர்கள்
,www.nios.ac.in
என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட, என்.ஐ.ஓ.எஸ்., கல்வி முறையில், பிளஸ் 2 வகுப்பில் சேரலாம்.நேரடி பள்ளியில் படித்ததற்கு நிகரான சான்றிதழ், மத்திய அரசால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பயன்படுத்தி, கல்லுாரிகளில் நேரடியாக, பட்டப் படிப்புகளில் சேரலாம்.இதன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம், சென்னை, ராணிமேரி கல்லுாரி அருகில், லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ளது. அங்கு சென்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கைகொடுக்கும் தொலைநிலை பல்கலை!

பிளஸ் 2 தேர்ச்சி பெறா விட்டால், கல்லுாரியில் சேர முடியாதே என நினைப்பவர்களுக்கு, அடைக்கலம் தரும் வகையில், மத்திய அரசின், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையும், தமிழக அரசின், திறந்த நிலை பல்கலையும் உள்ளன.இங்கு, பிளஸ் 2 முடிக்காதவர் களுக்கு, ஆறு மாதம் தகுதி தேர்வு பயிற்சியும், தேர்வும் நடத்தப்படும்.

இதில், மாணவர்கள் எளிதாக தேர்வாகலாம்.அதன்பின், மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை, அதே பல்கலையில் தொலைநிலையில் படிக்கலாம். இந்த படிப்புக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு வேலைக்கும், போட்டி தேர்வுக்கும் தகுதியானதாகும். இதற்கான விபரங்களை,
rcchennai.ignou .ac.in
மற்றும்
www.tnou.ac.in
என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்

........................................................

சனி, 20 ஏப்ரல், 2019

நீட்க்கு தயாராகி கொண்டு இருக்கிறார்களா இதோ உங்கள் திறமைக்கு சவாலாக இருக்கும் நீட் quiz செயலி (application) உங்களில் அடுத்த டாக்டர் யார்?

Saturday, April 20, 2019


உங்கள் நண்பர்களுக்கு உங்களின் மதிப்பெண்ணை screen short எடுத்து அவர்களுக்கு சவால் விடுங்க

இந்த செயலியின் டவுன்லோட் லிங்கை கீலே சொடுக்கவும்

இது உங்களுக்கு பயன் படவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

https://play.google.com/store/apps/details?id=neet.entrance.exam

.................................................

பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கவனத்திற்கு...



பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துகள்.


இந்த நேரத்தில் 'பெற்றோர்கள்’ கவனத்தில் கொள்ள வேண்டியவை..

1. இது படித்தால்தான் உறவுகள் மத்தியில் கௌரவம் என்று பிள்ளைகளைப் பலியிடாதீர்கள்.

2. நீங்கள் விரும்பி, உங்களுக்குக் கிட்டாத படிப்பை பிள்ளைகளின் வாயிலாக அடைந்துவிட வேண்டுமென திணிக்காதீர்கள்.

3. பிள்ளைகள் விரும்பாத படிப்பை, இதுதான் நல்லது என்று ஒருபோதும் சுமத்தாதீர்கள்.

4. கல்லூரியில் ஒரு இடத்தைப் பிடித்து தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் உறுதியான மனநிலையோடு இருங்கள்.

5. மகள்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவதுதான் முக்கியக் கடமை, ஆகவே அதுவரை ஒரு கல்லூரியில் எதாச்சும் படிக்கட்டுமே என்ற எண்ணத்தோடு அனுப்ப நினைக்காதீர்கள்.

6. தேர்ந்தெடுக்கும் படிப்பில், ஏற்கனவே சிறப்பாக இயங்கும் சிலரைத் தேடி உங்கள் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டுங்கள்.


*மாணவ, மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது..*


1. ஆர்வம் இருக்கும், ஏதுவான கல்லூரிப் படிப்பை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

2. இந்தப் படிப்புதான் சிறந்தது, இது மோசமானது என்று எதையும் பட்டியலிட முடியாது.

3. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என ஓரளவு திட்டம் வகுத்து, அதற்கேற்ற கல்லூரி பிரிவு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கவும்.

4. தேர்ந்தெடுக்கும் படிப்பின் துறையில் முடிந்தவரை தொடர்வோம் எனும் உறுதியோடு தேர்ந்தெடுங்கள்.

5. 'இதுதான் நல்லது என யாரோ சொன்னார்கள்!’ என உங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டாம்.

6. 'சும்மா இருக்க முடியாது, எதாச்சும் படிப்பேன், வேலை, தொழிலுக்கு அதைப் பயன்படுத்த மாட்டேன் அல்லது கொஞ்ச நாள் வேலைக்குச் செல்வேன்’ என்ற மனநிலையோடு மட்டும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு பிறகு வீணடிக்க வேண்டாம். காரணம் அந்த இடம் மிகவும் தேவையுள்ள ஒருவருக்கானதாக இருக்கலாம். அதை மதிப்பெண், பணம், சிபாரிசு என்ற அடிப்படையில் பிடித்துக் கொண்டு நீங்களும் பயன்படுத்தாமல் இன்னொருவரையும் பயன்பெற விடாமல் செய்ய வேண்டாம்.

7. எது உங்களை வாழ்நாள் முழுக்க உயிர்ப்புடன் வைத்திருக்கும் என நினைக்கிறீர்களோ அந்தப் படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவும்.




மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் மற்றும் பல பயனுள்ள படிப்புக்களில் தமிழ்நாடு, வெளிநாடுகளில் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேரவும், அந்தக் கல்லூரியின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் உடனே அழையுங்கள்..

இது போட்டி உலகம்.. ஆகவே நீங்கள் தாமதிக்கும் நிமிடத்தில் அடுத்தவர் உங்கள் இடத்தினை நிரப்பிடுவார்..


JK, கல்வி ஆலோசகர் மற்றும்

மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்.


9842463437

.....?........

பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் #பல்கலைக்கழகம் அறிவிப்பு!





பிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம்  அறிவிப்பு


மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது.

ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பல் கலைக்கழகம் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி. பிஎட் படிப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல்) வழங்கி வருகிறது. பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டு களாக உயர்த்தப்பட்ட நிலையில், பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகிவிடும்.

 ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி, பிஎட் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

 கணிதம், இயற்பியல், வேதியியல்
பாடங் களுடன் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்கள் இப்படிப்பில் சேர லாம்.


குறைந்தபட்சம் 50 சத வீத மதிப்பெண் அவசியம்.

 நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்படி, கணிதம், இயற்பியல், வேதியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிக்கலாம்.

இதற்கான ஆன் லைன் பதிவு தொடங்கப்பட் டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் மாணவர்களிடம் மிகவும் குறைவான கல்விக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6,600 (வேதியியல் பாடப்பிரிவு எனில் ரூ.7,600) செலுத்த வேண்டும்.

 இறுதி ஆண்டு ஒரு செமஸ்டருக்கு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் கல்விக்கட்டணம் ரூ.8,600. தகுதி யுடைய பிளஸ் 2 மாணவ-மாணவி கள் ஆன்லைனில்


 பதிவுசெய்யலாம் என காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

..............

+2 Public Exam Results 2019 - Complete Analysis - School Education Publication

12th Result - மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்


பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

* பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின

* மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%

* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி- திருப்பூர் முதலிடம் (95.37%)

* ஈரோடு 2-வது இடம்(95.23%),

* பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)



+2 Results March 2019 Published - 3 Direct Result Links




வரும் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு!!




ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

#BREAKING: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

* பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின

* மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%

* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி- திருப்பூர் முதலிடம் (95.37%)

* ஈரோடு 2-வது இடம்(95.23%),

* பெரம்பலூர் 3-வது இடம்(95.15%)

............................

தேர்தல் பணிக்காக சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தேர்தல் பணிக்காக வந்த அரசுப்பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சம்சிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரின் மனைவி சங்கரகோமதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி, வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பணிக்கு வருவதற்காக சங்கரகோமதி, தன் கணவர் ஜெயவேல் உடன் காரில் வந்துள்ளார். காரை ஜெயவேல் ஓட்டிவந்துள்ளார். 

கோவில்பட்டி அருகேயுள்ள வெம்பூர் பகுதிக்கு வந்துகொண்டிருக்கும்போது, காரை ஜெயவேல் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டியுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காரும், ஆசிரியை வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் ஆசிரியை சங்கரகோமதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயவேல் படுகாயம் அடைந்தார்.




இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ஜெயவேலுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்காக வந்த ஆசிரியை, எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

உங்கள் தொகுதியில் யாரெல்லாம் போட்டி இடுகின்றனர்? அவர்களின் கல்வி என்ன? தொழில் என்ன? சொத்து என்ன? குற்ற வழக்கு விபரங்கள் என்னென்ன? ஒரு சில நிமிடங்களில் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்




அரக்கோணம்
ஆரணி
ஈரோடு
கடலூர்
கன்னியாகுமரி
கரூர் 
கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சிதம்பரம்


சிவகங்கை
சேலம்
தஞ்சாவூர்
தர்மபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பூர் 
திருவண்ணாமலை
திருவள்ளூர்
தூத்துக்குடி
தென் சென்னை
தென்காசி
தேனி
நாகப்பட்டினம்


நாமக்கல்
நீலகிரி
புதுச்சேரி
பெரம்பலூர்
பொள்ளாச்சி
மதுரை
மத்திய சென்னை
மயிலாடுதுறை
ராமநாதபுரம்
வட சென்னை
விருதுநகர்
விழுப்புரம்
வேலூர்
ஸ்ரீபெரும்புதூர்

?
+2 HSE ) RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்  
  
19.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில்குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண கீழ் கொடுக்கப்பட்டுள்ள தேர்வுத்துறையின் நேரடியான இணையதள இணைப்பை தேர்வு செய்து தெரிந்துகொள்ளுங்கள்...


செவ்வாய், 16 ஏப்ரல், 2019

EMIS : 2019 - 2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வேறு பள்ளிக்கு மாற்றம் , நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் EMIS Web Portal மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு மற்றும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் வழிகாட்டுதல் செயல்முறைகள்!

வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக மாணவர் தேர்ச்சி அளிப்பதற்கு பின்வரும் வழிகாட்டுதலின்படி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


......................................................................................................................................................

EMIS- How to promote/ transfer students -Video


Click here to watch video

Thanks To

T.THENNARASU
R.K.PET BLOCK
THIRUVALLUR DT
TN DIGITAL TEAM