வெள்ளி, 29 டிசம்பர், 2017
*EMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*
🌟 அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் EMIS தளம் பயன்பாட்டில் இருக்கும் அந்த நாட்களில் பயன்படுத்திக்கொண்டு பதிவேற்றம் செய்யவும்.
🌟 மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
🌟 *STUDENT ID CARD*- ற்கு சென்றால் அதில் *DATA APPROVAL* மற்றும் *STUDENT ID CARD* என்று இரண்டுதலைப்பு இருக்கும்.
🌟 முதலில் *DATA APPOROVAL* ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
🌟 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே *EDIT* என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொள்ளவும்.
🌟 Photo பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்
🌟 GALLERY *(ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )*
🌟 Camera *( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் )*தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் *UPLOAD* செய்து கொள்ளவும்.
🌟 பின் *DATA APPROVAL* கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து *ID CARD APPROVAL* ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு *APPROVAL*கொடுத்தால் அது *ID CARD* அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.
🌟 இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.
🌟 கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.
🌟 பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
🌟 EMIS APP Download link 👇👇👇
TOUCH HEAR
https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation
வியாழன், 28 டிசம்பர், 2017
EMIS APP now working (Updated in google Play store)..
*EMIS APPS*
*Now Updated Your EMIS Apps in Google play Store*
*Then Login with Your Dise Code & Password*
*(Login on- Ur District Scheduled Days)*
*Bug fixed and Improved performance*
*Gallery & File manager mode enabled*
*Crop option enabled in camera mode*
*EMIS APP now working*
ICT MATERIALS AND HANDBOOK
Click here
Hand book ICT CLICK HERE..
https://drive.google.com/file/d/1WBs-iLdkuedhylAfXg63guWMQg_0d_2E/view?usp=drivesdk
BASIC ICT ..CLICK HERE..
ROLE ICT PAPER CLICK HERE....
இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்!!!
புதுடில்லி : இந்தியாவில் இனி பேஸ்புக்
பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.
மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு
தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்
மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்,
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்.
திண்டுக்கல் மாவட்டம்
*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*
1.பெரிச்சிபாளையம்
2.சின்ன கரட்டுப்பட்டி
3.K C பட்டி
4.பூலத்தூர்
5.கவுஞ்சி
6.பெரியூர்பட்டி
7.சித்திரகவுடன்பட்டி
8.மூங்கில்பட்டி
9.கோட்டைப்பட்டி
10.மணக்காட்டூர்
11.லிங்கவாடி
12.பிள்ளையார்நத்தம்
13.கொரக்காரக்கல்வலசு
14.ஆணைபட்டி
15.தங்கமாள்பட்டி
16.பொருளுர்
*திண்டுக்கல் மாவட்டம்*
*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*
1.பெரிச்சிபாளையம்
2.சின்ன கரட்டுப்பட்டி
3.K C பட்டி
4.பூலத்தூர்
5.கவுஞ்சி
6.பெரியூர்பட்டி
7.சித்திரகவுடன்பட்டி
8.மூங்கில்பட்டி
9.கோட்டைப்பட்டி
10.மணக்காட்டூர்
11.லிங்கவாடி
12.பிள்ளையார்நத்தம்
13.கொரக்காரக்கல்வலசு
14.ஆணைபட்டி
15.தங்கமாள்பட்டி
16.பொருளுர்
*விழுப்புரம் மாவட்டம்*
*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*
1. பாக்கம் பாடி
2.கருந்தலாகுறிச்சி
3. புக்கிரவாரி
4. விளம்பூர்
5. கா. அலம்பலம்
6. மாத்தூர்
7. வானவரெட்டி
8. தெங்கியாநத்தம்
9. பழயனூர்
10. கடுவனூர்
11. புதுப்பாலப்பட்டு
12. ரிஷிவந்தியம் (ம)
13. பெரியகோழி(லி) யூர்
14. ஷேஷாசமுத்திரம்
15. தொழுவந்தாங்கல்
16. பொ(ல்)குணம்
17. ஊரங்கனி
18. வானியந்தல்
19. சித்தலூர்
20. நினையூர்
21. பனையலங்கள்
22. S. கொத்தமங்களம்
23. நகர்
24. முன்னூர்
25. மரக்காணம்
26. மொடையூர்
27. கப்லாம்பாடி
28. எய்யல்
29. தடாகம்
30. சாந்தம்பாடி
31.கள்ளப்புலியூர்
32. தேவதானப்பேட்டை
33. மேட்டு வயலாமூர்
34. துத்திப்பட்டு
35. நரணமங்களம்
36. கூவனூர்
37. பொன்னியந்தல்
38. திம்மச்சூர்
39. பையூர்
40. ஒட்டம்பட்டு
41. தடுத்தாட்கொண்டூர்
42. வேங்கூர்
43. டி. எடையார்
44. டி. கொளத்தூர்
45. குன்னம்
46. சேமங்களம்
47. காட்டு எடையார்
48. செ. குன்னத்தூர்
49. ஏழுசெம்பொன்
50. கல்யாணம் பூண்டி
51. கல்பட்டு
52. மேலக்கொந்தை
53. சிக்காடு
54. E. மண்டகபட்டு
55. நன்னாரம்
56. குண்டபுலியூர்
57. கொண்டங்கி
58. முண்டியம்பாக்கம்
59. தென்கீரனூர்
60. வடதொரசலூர்
*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்
*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*
1தெத்தூர்.
2.வி,பூசாரிப்பட்டி
3.டி.இடையப்பட்டி
4.யாகப்படையான்பட்டி
5.கஞ்சநாயக்கண்பட்டி
6.ஊனையூர்
7.வேங்கடத்தானூர்.
8.பில்லாபாளையம்.
9.தேனூர்.
10.ஆணாம்பட்டி.
11.புத்தாநத்தம் (பெ)
12.சுக்காம்பட்டி.
13.கண்ணூத்து.
14.சடையம்பட்டி .
15.ஓலையூர்.
16.காணக்கிளியநல்லூர்
17.பழுவஞ்சி .
18.சின்ன கொடுந்துறை.
19.பெரிய கொடுந்துறை.
20.தேவஸ்தானம்.
21வா. கணேசபுரம்.
22.நாகையநல்லூர்.
கரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்
கரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*.
1).குரும்பபட்டி
2).மஞ்சபுளிபட்டி
3).தென்னிலை கடவூர்
4).புதுவாடி
5).கோவிலூர்
6).கோ.சீத்தப்பட்டி
7).கடவூர்
8).பொம்மாநாயக்கன்பட்டி
9).பெரியதிருமங்கலம்
10).அரவை மகளிர்
11).முத்தம்பட்டி
12).தேசியமங்கலம்
13).ஒட்டப்பட்டி
14).குப்பாண்டியூர்
15).நாகனூர்
16).திம்மம்பட்டி
17).நச்சலூர்
18).பில்லூர்
19).தோ.செல்லாண்டிபாளையம்
20).அ.உடையாபட்டி
21).வடசேரி
22) .நல்லூரான்பட்டி.
நாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்
நாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*
*1.தொட்டிப்பட்டி*
*2.நத்துகுழிப்பட்டி*
*3.ஜம்புமடை*
*4.சேலூர்நாடு*
*5.கே.கொளந்தாபாளையம்*
*6.கொண்டரசம்பாளையம்*
*7.எஸ்.புதுப்பாளையம்*
*8.நஞ்சப்பகவுண்டம்பாளையம்*
*9.செட்டியாம்பாளையம்*
*10.ஆயில்பட்டி*
*11.சிங்கிலியன்கோம்பை*
*12.குப்பாண்டாபாளையம்*
*13.ஆனங்கூர்(தி.கோடு)*
*14.ஆண்டிபாளையம்*
*15.வெடியரசம்பாளையம்*
*16.வேமன்காட்டுவலசு*
*17.காவேரி ஆர்.எஸ்*
*18.மொளசி*
*19.குமரமங்கலம்*
*20.குப்புச்சிபாளையம்*
*21.தத்தாரிபுரம்*
*22.படலூர்*
*23.சின்னப்பநாய்க்கன்பாளையம்*
திருவாரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்
திருவாரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்
1.எழிலூர்
2.பாண்டி, 3.மாங்குடி(முத்துப்பேட்டை),
4.செங்காங்காடு
5.,ஜாம்புவானோடை வடக்கு,
6.ஆலங்காடு,
7.தெற்கு"நாணலூர்
8.தண்ணீர் குன்னம்,
9.பெரம்பூர்,
10.கரையங்காடு,
11.கீரனூர்,
12.முனியூர்,
13.விக்கிரபாண்டியம்
14.,திருவீழிமழலை,
15.கோவிந்தகுடி,
16.வேளுக்குடி,
17.பில்லூர்
18.மேனாங்குடி,
19சீதக்கமங்கலம்,
20.கொட்டாரக்குடி
சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை
10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிகளில் பெயர் பலகைகளாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
செவ்வாய், 26 டிசம்பர், 2017
மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியரின் புதுமை முயற்சி
மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி
ஆசிரியரின் புதுமை முயற்சி
பெரும்பாலான மாணவர்களால் கடினம் எனக் கருதப்படும் கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காக கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், நாடகம் மூலம் கணிதம் கற்பிக்கும் முயற்சியை கையாண்டு வருகிறார்.
கணிதப்பாடம் இன்றும் பல மாணவர்களுக்கு புரியாத ஒன்றாகவே உள்ள நிலையில், கணிதக் கருத்துகளை (Mathametical concepts) காட்சி மற்றும் செயல் வடிவத்தைக் கொண்டு கற்பிக்கும்போது மாணவர்கள் புரிதலுடன் கற்கிறார்கள் என்று கூறுகிறார் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் சு.சுரேஷ்.
மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கணித ஓவியப் போட்டி, கணித பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, கணிதப் பட்டறை, பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி என பலவித முறைகளை தனது கற்பிக்கும் முறையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இவர், தற்போது நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை புதிதாக மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் இவர் தனது முயற்சியில், கணித நாடகப் போட்டியை மாணவர்கள் பங்கேற்புடன் நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியது: மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கணிதப் பாடத்தை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்துவந்தது.
அதை நடைமுறைப்படுத்தும்போது, மற்றவர்களால் கேலி செய்யப்படுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனாலும், அதற்கான தயாரிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். தற்போது அவ்வப்போது மாணவர்களுக்கு நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
நாடகத்தின் கதையையும், காட்சியமைப்பையும் நானே உருவாக்குகிறேன். மாணவர்கள் அதற்கேற்ற வகையில் தயாராகி நடிக்கிறார்கள். கடையில் சென்று காய், கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவது, வீடுகளில் தளத்தில் டைல்ஸ் போடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது, தச்சு வேலைகள் மூலம் சில பொருட்களை உருவாக்குவது போன்ற கருத்தாக்கங்களுடன் காட்சிகள் அமைக்கப்படும்.
இதில் மாணவர்கள் பங்கேற்று நடிக்கும்போது நிறுத்தல் அளவு, பரப்பளவு, கொள்ளளவு, நீளம், அகலம், கூட்டல், பெருக்கல் உள்ளிட்டவற்றை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்கிறார்கள். அவர்களாகவே அளவீடுகள் குறித்து நேரிடையாக உணர்ந்து பேசிக்கொள்கிறார்கள். இது எளிதில் மனதில் பதிவதாக உள்ளது.
மேலும், பொருட்களின் விலை உள்ளிட்ட அன்றாட பொருளாதார நடைமுறைகளையும் தெரிந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் பயன்பாடு உள்ளது என்பதை அறிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உணர்கிறார்கள். 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் இவ்வாறு கணிதத்தை கற்பிக்கிறேன். வழக்கமான வகுப்பறை கட்டுப்பாடுகளின்றி சற்று ரிலாக்ஸ் ஆக, எளிதாக கற்றுக்கொள்ள முடிவதால் மாணவர்கள் இதை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்கின்றனர் என்றார்.
TRB - சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து
சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாடத்துடன் நற்பண்புகளை கற்பிக்க ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
டிசம்பர் 31-க்கு பின் இந்த மாடல்களில் சேவை கிடையாது : வாட்ஸ்அப் அதிரடி
நடப்பாண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-க்குப் பிறகு சில மொபைல்
மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது.
மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க இதற்கான காலக்கெடு 2017 ஜூன்-30 வரை நீடிக்கப்பட்டது. மேலும் இது 2017டிசம்பர் வரையிலும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட மென்பொருள் கொண்ட மொபைல் போன்களில் இனியும் தங்களால் தொடர்ந்து சேவையை வழங்க முடியாது என கூறியுள்ளது. தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ள தங்களது முடிவால் பாதிக்கப்படுபவர்கள் நவீன வகை மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
EMIS - video conference on 27th Dec 2017 @ 3.00 PM regarding - SPD PROCEEDINGS!
1.Aadhaar data seeding for students,
2..EMIS students data entry and ID card module in EMIS.
3. U-DISE data entry status
All District Chief Educational Officer, Computer programmers of SSA office, EMIS district coordinators CEO office and U-DISE coordinators SSA are requested to join the video conference
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)