>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 11 மே, 2017

புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆசிரியர்கள் 750 கோரும் விண்ணப்பம்!!

CPS - திட்டத்தில் பணித்துறப்பு மற்றும் மரணம் அடைந்த அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களிடமிருந்து 4192 பேர் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது .மேலும் பணிக்கொடை வழங்குவது குறித்த அரசாணை இதுநாள் வரை வெளியிடப்படவில்லை - RTI

இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம்: SBI

கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கியின் கேரளப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஜுன் மாதம் முதல் எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரூ.25 கட்டணமாக விதிக்கப்படும். அதே போல ரூ.5000கு மேல் மதிப்பில் கிழிந்த / பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் அதற்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் தொகுதி மார்க்சிஸ்ட்  கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், 'இது மிகவும் மூர்க்கத்தனமானது;மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகையில் இருந்தே இந்த அரசு மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.  இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்நடவடிக்கை குறித்து திரைபிரபலங்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் சிலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு டாப் ரேங்க் அறிவிப்பு முறையில் வருகிறது மாற்றம்?

நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படுவது மரபாக இருந்து வந்தது. ஆனால் இம்முறையின் காரணமாக மற்ற மாணவர்களுக்கு ஒருவித மன உளைச்சல் ஏற்படும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட சில பள்ளிகள் தங்களை வணிக ரீதியில் முன்னிறுத்தும் நிலை உருவாவதாகவும் கல்வி நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
அதனை ஏற்று தற்பொழுது நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வர உள்ளது.இதன்படி நாளை வெளியாகும் +2 முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும், மாணவர்கள் தங்களது தனிப்பட்ட மதிப்பெண்களை இணையதளம் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். வழக்கம் போல் பள்ளிகளுக்கு முடிவுகள் அனுப்பப்படும்.
இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளொரு சுற்றுலாத்தலம் - அனைத்து மாவட்டங்கள் மற்றும் காண வேண்டிய முக்கிய இடங்கள் - முழு தகவல் வழிக்காட்டி  

-CLICK HEAR

'அதிகாரிகளை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்... ஜாக்கிரதை!' -கல்வித் துறை செயலர் உதயசந்திரன் எச்சரிக்கை

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மதுரையில் நடந்தது. அதில், கல்வித் துறை செயலர் உதயசந்திரன் பேசும்போது, 

மாணவர்கள் போல், சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களும் சுதந்திரமாக செயல்படலாம்; சர்வாதிகாரத்துடன் செயல்படக் கூடாது. அதிகாரிகளை தலைமை செயலகத்தில் இருந்து, 'இரண்டு கண்கள்' எப்போதும் கண்காணித்து கொண்டிருக்கும். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு' என்றார்.


கூட்டத்தில் பங்கேற்ற, 'கை சுத்தம்' உள்ள அதிகாரிகள் சிலர், 'கல்வித்துறையின் மானம் காற்றில் பறக்கும் அளவிற்கு இதுவரை தவறு செய்த அதிகாரிகள், இனிமேலாவது திருந்துங்கள். 'உங்களை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்; ஜாக்கிரதை...' என, இதம், பதமாக எச்சரிக்கை விடுத்திருக்காரே, சபாஷ்' என்றனர்.

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்க சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஏராளமான அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக் கல்வி இல்லை எனக் கூறி, சில ஆசிரியர் சங்கங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக தகவல் பரவியது. இதனால் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் இருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் வழக்கம்போல் தொடரும். பெற்றோர்கள் விரும்பும் பயிற்று மொழியில் மாணவர்களைச் சேர்க்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம்” என்று தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு 9 லட்சம் மாணவர்களுக்கும் செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் செல்போனில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து முதல்வருடன் இன்று நான் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தில், பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழக மாணவர்கள் நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையிலான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறும் வகையில் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதியைப் பயன்படுத்தி அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுகுறித்து கிராமப்புறங்களிலும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டை சரிவர பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

TNPSC : குரூப் 2 தேர்வு: வரும் 15 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., தகவல்

குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.  இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்தது.  அதற்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியானது.
ஏற்கெனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.  இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. 
விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் ஆகிய தகவல்கள் அடங்கிய அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு : தமிழக அரசின் நிலை என்ன?

முதுநிலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிகளின்படி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இரு டாக்டர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். 'தமிழக அரசும், மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது அவசர சட்டம் இயற்ற வேண்டும்' என, அரசு டாக்டர்கள் கோரி வருகின்றனர்.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கவுன்சிலிங் நடந்து வருகிறது. மேல்முறையீடு செய்வது குறித்து, மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். ஏற்கனவே, 'நீட்' தேர்வு தொடர்பாக இயற்றப்பட்ட அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுக்கு போகாமல், உள்துறை அமைச்சகத்தில் உள்ளது. மீண்டும், மற்றொரு அவசர சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகம் முழுவதும் மே 17 முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் மே 17 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
ஜமாபந்தி எனப்படும் வருவாய்த் தீர்வாயம் இந்த ஆண்டு 17-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் கூட்டம் நடைபெறும். ஜமாபந்திக்கான வட்டவாரியாக மற்றும் கிராம வாரியாக நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்படும். இதில், பொதுமக்கள் மனுக்கள் அளிக் கலாம். மேலும், கிராம நிர்வாக அதிகாரிகளால் பராமரிக்கப்படும் கிராம கணக்குகள் ஜமாபந்தி நிறைவு அன்று சரிபார்க்கப்படும். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தீர்வு ஏற்படவில்லை எனில் அதற்கான விளக்கம் சம்பந்தப்பட்ட மனுதாரர் களுக்கு தெரிவிக்கப்படும். ஜூலை மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு எனப்படும். அக்பர் காலத்தில் நிலவரி பணத்தைப் பிரித்து பார்ப்பதற்கு பசலி ஆண்டு என்ற ஒரு கணக்கு ஆண்டு தோன்றியது. இது வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. பின்பு ஆட்சிக்கு வந்த ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டது. பசலி ஆண்டு முன்காலத்தில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது ஜூலை 1-ஆம் தேதி மாற்றப்பட்டது. தற்போது வரை இதுவே பின்பற்றப்பட்டு வருகிறது. அரசுக்குச் சொந்தமான நிலங்களில் நிலவரி, புறம்போக்கு நில ஆக்ரமணத் தீர்வை, அபராதம் மற்றும் உள்ளூர் வரிகள் மரத்தீர்வை ஆகியவை முறையாக கணக்கிடப்பட்டு, கிராம கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு வருவாய்த் தீர்வாயம் ஆகும் என்றார்.

அரசு கல்லூரி விண்ணப்பம் மே 22 வரை வினியோகம்

அரசு கல்லுாரிகளில், மே, 22 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்காக, ஒரு வாரமாக, விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை பெற்று, அதை, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, 10 நாட்களில் சமர்ப்பிக்கலாம் என, கல்லுாரி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. எனவே, மே, 22 வரை, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

இலவச எல்.கே.ஜி., சேர்க்கை இதுவரை 20ஆயிரம் விண்ணப்பம்

தமிழகத்தில், சுயநிதி பள்ளிகளில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கைக்கு, 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத சுயநிதி பள்ளிகள், எல்.கே.ஜி.,யில், 20 சதவீத இடங்களில், இலவசமாக மாணவர்களை சேர்க்க வேண்டும். இதற்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இதன்படி, தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஏப்., 20ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. இதில், நேற்று முன்தினம் வரை, 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். இலவச சேர்க்கைக்கு, இன்னும் ஒரு வாரம், அதாவது, மே, ௧௮ வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி துவக்கம்.

தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
தமிழகத்தில், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக இருந்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிந்தது. அவர், 2016 - 17ம் கல்வி ஆண்டு வரை, 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்திருந்தார்.இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டியின் புதிய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், புதிய கல்வி ஆண்டுக்கான, கட்டண நிர்ணய பணிகளை துவக்கி உள்ளார். இரு வாரங்களுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகார கடிதம், அடிப்படை கட்டமைப்பு, வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்ய, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதன்படி, மே, ௮ முதல், பள்ளிகள் தரப்பில், விபரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
முதலில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பள்ளி முதல்வர்கள், முக்கிய நிர்வாகிகளை அழைத்து விசாரித்து, கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதை தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். 

SSA : CEO க்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) காலியாக உள்ள, 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், 25 சி.இ.ஓ.,க்கள், 14 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர், நான்கு பேருக்கும் சி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களையும் கூடுதலாக கவனிப்பதால், ரெகுலர் சி.இ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் தொடக்க கல்வி தரம் கண்காணிப்பு, இடைநிற்றலை தடுப்பது போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், வகுப்பறை கட்டட பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிமூப்பு பட்டியலில், இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறுகின்றனர்.
தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க கல்வித்துறை தயாராகி வருகிறது. எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், 32 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், டி.இ.ஓ.,க்களாகவும், 32 டி.இ.ஓ.,க்கள் சி.இ.ஓ.,க்களாகவும் பதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக நிர்வாகி சாமிசத்தியமூர்த்தி, "இப்பணியிடங்களை நிரப்பி ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் பணிகளையும் அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்விற்கு முன், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

தாமதமாகும் பல்கலை சான்றிதழ்கள் : TRB, தேர்வர்கள் அச்சம்

மதுரை காமராஜ் பல்கலையில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
ரெகுலர் மற்றும் தொலைநிலை கல்வியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களுக்குள், மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்களை பல்கலை வழங்க வேண்டும். ஆனால் நவ.,2016ல் தேர்வு எழுதி, முதுகலை முடித்த பலருக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டி தேர்வு டி.ஆர்.பி., சார்பில் ஜூலை 2ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 2016ல் முதுகலை படிப்பு முடித்த பலர், இதற்கு விண்ணப்பிக்கவுள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலை இதுவரை வழங்கவில்லை. இதனால் விண்ணப்பிக்க முடியுமா என அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், "மதிப்பெண் சான்றிதழ் மட்டுமல்ல பட்டச்சான்று ('கான்வக்கேஷன்') எம்.பில்., சான்றிதழ்கள் பெறாதவர், அதற்காக உரிய கட்டணம் செலுத்தியும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
இதனால் பலர் பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். துணைவேந்தர் இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு தற்போதுள்ள பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றனர்.

தாமதமாகும் பல்கலை சான்றிதழ்கள் : TRB, தேர்வர்கள் அச்சம்

மதுரை காமராஜ் பல்கலையில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
ரெகுலர் மற்றும் தொலைநிலை கல்வியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களுக்குள், மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்களை பல்கலை வழங்க வேண்டும். ஆனால் நவ.,2016ல் தேர்வு எழுதி, முதுகலை முடித்த பலருக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டி தேர்வு டி.ஆர்.பி., சார்பில் ஜூலை 2ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 2016ல் முதுகலை படிப்பு முடித்த பலர், இதற்கு விண்ணப்பிக்கவுள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலை இதுவரை வழங்கவில்லை. இதனால் விண்ணப்பிக்க முடியுமா என அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், "மதிப்பெண் சான்றிதழ் மட்டுமல்ல பட்டச்சான்று ('கான்வக்கேஷன்') எம்.பில்., சான்றிதழ்கள் பெறாதவர், அதற்காக உரிய கட்டணம் செலுத்தியும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
இதனால் பலர் பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். துணைவேந்தர் இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு தற்போதுள்ள பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றனர்.

'NEET'' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': கூடுதல் இடங்கள் கிடைக்கும்

மத்திய அரசு நடத்தியுள்ள, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்து வக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு, இத்தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில், மசோதா நிறைவேற்றப் பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், மே 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. உச்ச நீதிமன்றம், 2015ல் வழங்கிய வழிகாட்டுதல்படி, தேர்வை நடத்தி முடித்ததாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
வாய்ப்பு :
அதேநேரத்தில், 'நீட்' தேர்வால், தமிழக மாண வர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதல் இடம்கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதுவரை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை இணைப்பில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி களில், 85 சதவீத இடங்களிலும்; தனியார் கல்லுாரிகளில், 50முதல், 60 சதவீத இடங்களிலும் மட்டுமே, தமிழக மாணவர்கள் கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கப்பட்டனர்.
அரசு கல்லுாரிகளில், மீதமுள்ள, 15 சதவீத இடங் கள், அகில இந்திய அளவில் நடந்த, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஒதுக்கப்பட்டன.
முந்தைய ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் பேர், 'நீட்' தேர்வை எழுதாததால், மற்ற மாநில மாணவர்களே,இந்த, 15 சதவீத இடங்களில் சேர்ந்தனர்.
மத்திய அரசு ஒதுக்கீடு :
இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள் அதிகம் பேர், 'நீட்' தேர்வை எழுதி உள்ளனர். இதில், தேர்ச்சி
அத்துடன், 'நீட்' தேர்வு எழுதிய தமிழக மாண வர்கள், நாட்டின் எந்த தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் பல்கலையிலும் சேரலாம். அதேபோல், கூடுதல் மதிப்பெண் பெற்றால், மற்ற மாநில அரசு கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், கூடுதல் இடங்கள் பெற முடியும். 

புதன், 10 மே, 2017

SSA - தொடக்க மற்றும் உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான (15.05.2017 - 19.05.2017) பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

PGTRB எவ்வாறு விண்ணப்பிப்பது ? - வழிகாட்டி பதிவு

PGTRB எவ்வாறு விண்ணபிக்க ? - வழிகாட்டி பதிவு

🐝 இம்முறை தேர்வு விண்ணப்பம் இணைய வழி வழங்கப்படுகிறது

🐝 இன்று காலை 10 மணி அளவில் விண்ணப்பிக்க போர்டல் திறக்கப்படும்

🐝 விண்ணப்பிக்க தேவை SSLC, HSC, UG, PG, B.ED சான்றிதழ்கள்

🐝 விண்ணப்ப கட்டணம் SC / ST ரூ 250
மற்றவர் ரூ 500

🐝 பண பரிவர்த்தனை Debit / Credit / online banking வழியே மட்டுமே அனுமதி

🐝 தேர்வர்கள் விண்ணபிக்கும் கடைசி நாளுக்கு முந்தைய நாளிலே அனைத்து கல்வி தகுதியும் முழுமையாய் பெற்றிருக்க வேண்டும் ( 29.5.17)

🐝 முழுமை தகுதியற்றவர் தேர்ச்சி பெற்றாலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவராவார் 

🐝 விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.17

🐝 இரட்டை பட்டம், UG வேறு பட்டம் PG வேறு பட்டம் என படித்தவர் தமிழக அரசின் அரசாணை படி உட்பட்டவர்

🐝 வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்...
வெற்றி வாய்ப்பு உழைப்பவருக்கே துய்க்கும்...🐝

விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு _ 

நன்றி : - பிரதீப் ப.ஆ