>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 21 மார்ச், 2017


Supply of NCERT Books - CBSE

The following steps have been taken in this regard: -

(i) The National Council of Educational Research & Training (NCERT) has empanelled 680 vendors across the country for the purpose of distribution of their textbooks. The list of these vendors along with their addresses and contact numbers are uploaded on NCERT website for the schools ensuring them an easy approach to vendors.

(ii)       NCERT books are also made available to the students and schools from NCERT sales counter located at NCERT headquarter. In addition, NCERT books are made available from the sales counter of its Regional Centres located at Ahmadabad, Bangalore and Kolkata. The sales counters located at Regional Institutes of Education in Ajmer, Bhopal, Bhubaneswar, Mysore and Shillong also cater to their respective areas.

(iii)       So far NCERT has released approximately 1.53 crore copies of their textbooks in the market. Further NCERT sales counters are equipped with adequate stock of books to supply to the schools as and when they desire to lift their stock from NCERT outlets.

(iv)       All the NCERT textbooks are available on public domain as they have been uploaded on the NCERT website www.ncert.nic.in and also on e-pathshala mobile app.

(v)        The Central Board of Secondary Education (CBSE) has created a link on its website for raising online indent for requirements of NCERT books for CBSE affiliated schools.

(b)        Regular meetings have been held in the Ministry to review the requirement of NCERT textbooks in CBSE affiliated schools so as to ensure adequate supply of books to these schools

So far, no complaint has been received from schools and parents regarding non-availability of NCERT textbooks. The Ministry has, however, been receiving many complaints from parents and public with regard to spending exorbitant amount for purchasing of books of private publishers.  Keeping in view such complaints, CBSE has created a link on its website for raising online indent for requirements of NCERT books for CBSE affiliated schools to facilitate parents and students.  This has resulted in receiving indents from 2091 CBSE affiliated schools for supply of 51.61 lakh NCERT books from across the country.

NCERT has already released approximately 1.53 crore copies of their textbooks in the market. Additional 30 lakh books are available in stock and 63 lakh books are under print. The NCERT has also granted Copyright permission to 14 States Education Boards/Agencies for adoption/ adaptation and translation etc., of their text books.

This information was given by the Minister of State (HRD), Shri Upendra Kushwaha today in a written reply to a Lok Sabha question.

Source:http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=0

அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

UPLOAD YOUR EDUCATIONAL VIDEOS TO SCERT YOUTUBE CHANNEL

THANKS : MR.ASIR JULIUS,
PROF, SCERT

திங்கள், 20 மார்ச், 2017



முக்கிய அரசாணைகள் (Important GO’S !!)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

1.G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

2.G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்

3.G.O.No. 123 Dt : may 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

4.G.O.No. 178 Dt : July 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

5.G.O.No. 270 Dt : July 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்

6.G.O.No. 264Dt : July 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை

7.G.O.No. 243 Dt : June 29, 2012
புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்

8.G.O.No. 96 Dt : June 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்

9.G.O.No. 140 Dt : June 11, 2012
2012 – 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012
10.G.O.No. 133 Dt : June 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012
11.G.O.No. 203 Dt : June 8, 2012
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government – Interest rates for the year 2012-2013 2012 – 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்
12.G.O.No. 123 Dt : may 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்
13.G.O.(Ms).No.139 Dated: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139
14.G.O.(Ms).No.56 Dated: 24.4.2012.
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education
15.Lr No 35574 Dated: 23.4.2012.
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification
16.G.O Ms. No. 20309/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் –
17. G.O Ms. No. 21223/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :
18.G.O Ms. No. 193 02/12/2011
2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக
19.G.O Ms. No. 190 29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.
20. G.O Ms. No. 325 28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
21.GO MS No-325 Dated the 28/11/2011Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO – FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION
22.G.O Ms. No. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011
23.G.O Ms. No. 175 08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011
24.G.O Ms. No. 29421-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011
25.G.O Ms. No. 994 20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011
26.G.O Ms. No. 273 03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை
27.G.O Ms. No. 141 13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் – தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011
28.G.O Ms. No. 141 13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்
29.G.O Ms. No. 112 28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை
30.G.O Ms. No. 51 16-06-2011
மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள் amendment
31.G.O Ms. No. 51 16-05-2011
மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள்
32.G.O Ms. No. 58 

ஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக பி.எட்., கணினி அறிவியல் பயின்றுள்ள ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கடந்த 2011-12 ஆம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.அப்போது, 6-10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.ஆனால், சில மாதங்களிலேயே திடீரென இப்பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.அதேநேரத்தில், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் கணினிஅறிவியல் பாடம் கட்டாயப் பாடமாக உள்ளது. தமிழகத்தில்800-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை.மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இவற்றுக்கு இணையானது என அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் மட்டும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பது தவிர்க்கப்படுவது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வரும் காலகட்டத்தில், அதுகுறித்த கல்வி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினி அறிவியல் போன்ற அவசியமான பாடத்தை அரசுப் பள்ளிகளில் புறக்கணிப்பது தான் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் தான் பயில்கின்றனர். தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாணவர்களும் சிறந்து விளங்க கணினி கல்வி அவசியமாகும்.எனவே, அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.2006-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை. இதுபோன்ற பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டுவர வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் டி.அகிலன் கூறியதாவது:கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்தே கொண்டு வர வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றன. மாணவர்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரவேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, முன்னாள் கல்வி அமைச்சர்கள் கே.சி. வீரமணி, கே.பாண்டியராஜன் ஆகியோரிடமும், தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடமும் மனு அளித்துள்ளோம்.தமிழகத்தில் 1992-ஆம் ஆண்டு முதல் அங்கீகாரம் பெற்றபல்கலைக்கழகத்தில் பி.எட்., கணினி அறிவியல் படித்த பட்டதாரிகள் 39,019 பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களுக்கு ஆசிரியர்தகுதித் தேர்வில் பங்கேற்க தகுதியில்லை என்று கூறுகின்றனர். பி.எட்., கணினி அறிவியல் படித்தவர்களை தேர்வு செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் இதுவரை தேர்வு நடத்தவில்லை. இதேபோல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுகளில் பங்கேற்கவும் தகுதியில்லை எனக் கூறப்படுகிறது.சில அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் மட்டும் கணினி பாடப்பிரிவு உள்ளது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே கணினி ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். அதிலும் கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்களை நியமிக்காமல், பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
எனவே, தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தவும், அதற்கான பணியிடங்களில் பி.எட்., கணினி அறிவியல் முடித்துள்ள ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறுவார்கள்.இதன்மூலம் தற்போதைய காலத்துக்கு ஏற்ப அவர்களுடைய கணினி அறிவும் மேம்படும் என்பது உறுதி.

VOWEL CHART


TNPSC RECRUITMENT 2017

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI - RECRUITMENT NOTIFICATION
NAME OF THE POST - ASSISTANT DIRECTOR
NO. OF VACANCIES - 4
LASTDATE : 13.04.2017
DATE OF EXAMINATION : 16.07.2017

பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை நள்ளிரவில் விரட்டியடித்த போலீஸ்-DINAMALAR

பணி நிரந்தரம் கோரி, உண்ணாவிரதம் இருந்த ஆசிரியைகளை, போலீசார், நள்ளிரவில் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 அரசு பள்ளிகளில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களை நடத்தினர். அவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. 
இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, 5,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், சென்னையில், நேற்று முன்தினம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 
அவர்களிடம், அரசு தரப்பில், அதிகாரபூர்வ பேச்சு நடத்தவில்லை. போராட்ட பந்தலில், சீனிவாசன் என்ற ஆசிரியர், விஷ விதையை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, ஆசிரியர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, பல முகாம்களில் தங்க வைத்தனர். 
நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு, அனைத்து முகாம்களில் இருந்தும், ஆசிரியர்களை கட்டாயமாக, போலீசார் வெளியேற்றினர். அதில், வெளி மாவட்டங்களை சேர்ந்த, 1,000 ஆசிரியைகளும் இருந்தனர். 'நள்ளிரவில் வெளியில் பாதுகாப்பு இல்லை; முகாம்களில் தங்கி விட்டு, காலையில் செல்கிறோம்' என அவர்கள், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதை, போலீசார் கண்டுகொள்ளாமல், இரக்கமின்றி அனைவரையும், நடுரோட்டில் துரத்தி விட்டனர். இதனால், ஆசிரியைகள், எங்கு செல்வது என, தெரியாமல், பிளாட்பாரங்களில் அச்சத்தில் விடியும் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பெண்கள் என்றும் பாராமல், போலீசார் நள்ளிரவில் கடுமையாக நடந்து கொண்டனர்; அமைதியாக உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், போலீசார் நடந்து கொண்ட விதம், ஆசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

DEE - தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்துதல் சார்ந்த - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..






ஏப்., 15 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
 தமிழகத்தில், மார்ச் 2ல், பிளஸ் 2; மார்ச் 8ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இரு தேர்வுகளிலும், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க உள்ளது. 
ஏப்., 15க்குள் விடை திருத்தங்களை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. பல ஆசிரியர்கள் விடை திருத்தத்தில் இருந்து தப்பிக்க, மருத்துவ விடுப்பு, காது குத்து, கல்யாணம் என, பல சாக்கு போக்குகளை சொல்லி, விடுப்பு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.அதனால், அனைத்து அரசு பள்ளிகளிலும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஏப்., 15 வரை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இதற்கான உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா?

அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் அறிமுகமானது. அப்போது, கணினி இயக்கத் தெரிந்த, 'டிப்ளமோ' பட்டம் பெற்றவர்கள், கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி அறிவியல் படித்த, மற்ற பாட ஆசிரியர்கள், வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதனால், 1992ல் பணியில் சேர்ந்தவர்கள், 2008ல் நீக்கப்பட்டனர்; அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும், சிறப்புத் தேர்வு நடத்தி, 1,652 பேர் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணியிடம், 'சார் நிலை பணியாளர்' என, அறிவிக்கப்பட்டது. 
இதுகுறித்து, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணை அமைப்பாளர் முத்து வடிவேல் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளாக, கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. ஆசிரியராக சேரலாம் என, பி.எட்., முடித்த, 40 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மற்ற பாடங்களைப்போல, கணினி அறிவியலுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை பட்டம் முடித்தவர்களை, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முனைவர் பட்டம் பெற்றவர்களின் விவரங்களை 2 மாதங்களுக்குள் தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் !

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
முனைவர் பட்டம் பெற்றவர்களின் தகவல்கள்அனைத்தையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டே யுஜிசி சுற்றறிக்கை
அனுப்பியிருந்தது.எனினும், யுஜிசியின் உத்தரவை சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே பின்பற்றின.
இந்நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யுஜிசி நிர்வாகம் வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தரவிட்டது. ஒருவேளை அத்தகைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், அதை செய்யத் தவறிய பல்கலைக்கழங்களின் பெயர்கள் தனது இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் யுஜிசி எச்சரித்தது.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு...

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

3rd Term Exam - 2017 Time Table

6th TO 9 th STD THIRD TERM EXAM TIME TABLE - 2017

DEE - பள்ளி வேலைநாட்கள் குறைவுநாட்களை ஈடுசெய்தல் சார்பு | விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்


தமிழக பட்ஜெட். ....நிதி அமைச்சர் ஜெயக்குமார்அவர்கள் உரையில் இருந்து.....

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
* காவல்துறைக்கு ரூ 1,483 கோடி
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
*  கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
*  தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
*  உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
*  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
*  ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஐடி துறைக்கு ரூ.116 கோடி
*  போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
*  வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
*  நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும்
* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.
* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.
* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.

பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் தலைமையாசிரியர் வலியுறுத்தல்

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பொன்முடி, பொருளாளர் சண்முகநாதன், கவுரவ ஆலோசகர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட
தலைவர் அனந்தராமன் ஆகியோர் சென்னையில் உதயசந்திரனை சந்தித்தனர்.அப்போது, தமிழகத்தில் மேல்நிலை பள்ளிக்கான தனி இயக்குனரகம், டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு, மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை ஓய்வு பெற்ற கல்வி இயக்குனர் கருணாகரன் கமிட்டி அரசுக்கு அளித்துள்ளது.
இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை பணியாளர்கள் சம்பளம் உயர்வு, பொதுத் தேர்வு விடைத்
தாளின் முகப்பு தாள்களை தைக்கும் பணிக்காக ஒரு விடைத்தாளுக்கான ஊக்க ஊதியம் ரூ.2.50ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு.

மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், தமிழகம், கேரளா, அரியானா உட்பட, ௧௦ இடங்களில், மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில்,இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, 'கியூசெட்' என்ற, மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, நாடு முழுவதும், 76 இடங்களில், மே, 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ளது. தமிழகத்தில், திருச்சி, திருவாரூர், நாகர்கோவில், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. ஏப்., 14 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்ப கட்டணத்தை, ஏப்., 16க்குள் செலுத்த வேண்டும். தமிழகத்தில், திருவாரூரில், மத்திய பல்கலை செயல்பட்டு வருகிறது.
இதில், பிளஸ் 2 முடிக்கவுள்ள மாணவர்கள் மற்றும் பட்டப் படிப்பு மாணவர்கள், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த, எம்.எஸ்சி., - நான்கு ஆண்டு பி.எஸ்சி., - பி.பி.ஏ., மியூசிக் - எம்.பில்., போன்ற படிப்புகளில் சேர,இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்.

ஒவ்வொரு வீட்டிலும் அழையா விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. ஓடு வீடுகளிலும், குடிசை வீடுகளிலும், உத்திரம் உள்ள வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன.
வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால், அந்த வீடுகளில் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும், மக்கள் மத்தியில் உண்டு. சிட்டுக்குருவிகளின் அழகில் மயங்கி சிறுவர், சிறுமிகள் அவற்றை செல்லமாக வளர்த்தனர்.1980–களில் செழிப்புடன், பரவலாக அதிக எண்ணிக்கையில்வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் இனம் காலப்போக்கில்அழிய தொடங்கின. இதற்கு முதல் காரணம் உணவு தட்டுப்பாடு தான். விவசாய பயிர்களிலும், செடிகளிலும் உள்ள புழுக்களும் மற்றும் தானியங்களும், பூச்சிகளும் சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய உணவாக இருந்தன. 1990–களில் விவசாயத்தில் இயற்கை உரங்களுக்கு பதில்,ரசாயன உரங்கள் பயன்படுத்த தொடங்கினர்.
 இதனால் பயிர்கள், செடிகளில் இருந்த பூச்சிகளும், புழுக்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதுதான் சிட்டுக்குருவிகளுக்கு வந்த முதல் ஆபத்து ஆகும்.விழிப்புணர்வுகுடிசை, ஓடு வீடுகள் இடிக்கப்பட்டு, காற்றோட்டம் குறைவாக உள்ள ‘கான்கிரீட்’ வீடுகள் கட்டப்பட்டன. ஆண்டாண்டு காலமாக மனிதனுடன் வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகளுக்கு, இதுபோன்ற வீடுகளுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இது குருவிகளுக்கு வந்த இரண்டாவது ஆபத்தாகும். ஏற்கனவே இரையின்றி தவித்தசிட்டுக்குருவிகளுக்கு இருப்பிடமும் பறிபோனது. இதுமட்டுமல்ல வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மூலை முடுக்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவை சிட்டுக்குருவி இனங்களின் பெரும்பகுதியை அழித்து விட்டது.எஞ்சியிருக்கும் குருவிகளையாவது காக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர் முகமது திலாவார் முதலில் குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘அவான்’ போன்ற அமைப்புகள் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க களம் இறங்கின. இந்த அமைப்புகள் மார்ச் 20–ந்தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து, கடந்த 2010–ம் ஆண்டு முதல் சிட்டுக்குருவிகளை பற்றியும், அவற்றின் நன்மை குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரே பறவைஇதன் தொடர்ச்சியாக, சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, டெல்லி முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித், டெல்லி மாநில பறவையாக சிட்டுக்குருவியை கடந்த 2012–ம் ஆண்டு அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20–ந்தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக சிட்டுக்குருவி தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இயற்கை ஆர்வலரும், சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பல ஆண்டுகளாக போராடி வருபவருமான, ஏ.சாதனா ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
சிட்டுக்குருவி இந்த நாட்டை சேர்ந்தது, அந்த நாட்டை சேர்ந்தது என்று குறுகிய வட்டத்துக்குள் அதை கொண்டு வந்து விட முடியாது. மனித இனம் எங்கெல்லாம் வாழ்கிறதோ,அங்கெல்லாம் சிட்டுக்குருவியும் வாழும். மனிதனை சார்ந்து வாழும் ஒரே பறவை, சிட்டுக்குருவி தான். ஆஸ்திரேலியா தீவில் மனிதன் குடியேறியபோது, அவனுடன் சிட்டுக்குருவியும் சேர்ந்து அங்கு குடியேறி விட்டது.
பட்டினி சாவு
இயற்கையை அழிக்கும் விதமான மனிதனின் செயல்பாடும், அறிவியல் வளர்ச்சியும், இந்த அரிய வகை இனத்தை அழிக்க தொடங்கிவிட்டது. குளம், குட்டைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இப்போது நடைபெறும் விவசாயமும், இயற்கை உரங்களை புறம் தள்ளி விட்டு, செயற்கை ரசாயன உரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாறி விட்டது. வீட்டு முற்றத்தில் தானியங்களை காயவைத்து அரைத்த காலம் போய், ‘பாக்கெட்’ மசாலாவுக்கு மாறிவிட்டோம்.
இதனால் குருவிகள் இரைகள் கிடைக்காமல், பட்டினியில் சாகத் தொடங்கின.காற்றோட்டம் இல்லாத ‘ஏர்கண்டி‌ஷன்’ வீடுகள் அதிகரித்ததாலும், குடிசை, ஓடு வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் சிட்டுக்குருவிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. உணவும், உறைவிடமும் இல்லாமல் இந்த இனம் தற்போது அழியும் தருவாயில் உள்ளது.சிட்டுக்குருவிகளின் அழிவு, அந்த இனத்துக்கு மட்டும் அழிவல்ல, மனிதனுக்கும் பலவகையான அழிவுகளை ஏற்படுத்துகின்றன. டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கும், அதனால் உயிர்இழப்பு ஏற்படுவதற்கும், சிட்டுக்குருவிகள் அழிவும் ஒரு காரணமாக இருக்கிறது.
ஆரோக்கிய வாழ்வு
கொசுக்கள் முட்டையில் இருந்து வெளியில் வரும்போது புழுவாகத்தான் இருக்கும். அந்த புழுவை தான் தன் குஞ்சிகளுக்கு சிட்டுக்குருவிகள் இரையாக கொடுக்கும்.இப்போது, சிட்டுக்குருவி அழிவினால், கொசு இனம் பல்கி பெருகி விட்டது. அதனால் புதுப்புது நோய்கள் எல்லாம் மனிதனுக்கு வருகிறது. எனவே மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிட்டுக்குருவிகள் மிகவும் அவசியமாகும்.அதனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
அதற்காக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக கூடுகட்டி வாழ வழிவகைசெய்யவேண்டும். குருவிகள் கூடு கட்டுவதற்கு வீட்டில் வசதி இல்லை என்றால், செயற்கை கூண்டுகளை வீட்டில் வைக்கலாம். இந்த செயற்கை கூண்டுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். இந்த கூண்டு வேண்டுபவர்கள், 9445249240 என்ற என்னுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

CBSE 10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை.

'சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில், தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன.இவற்றில், பெரும்பாலான பாடங்களுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, 41 பாடங்களை நீக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய விதிகளை, சி.பி.எஸ்.இ.,அறிவித்தது.
அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், தொழிற்கல்வி பாடத்தையும் சேர்த்து, ஆறு பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில், ஏதாவது ஒன்றில், மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், தொழிற்கல்வி பாடம், ஐந்தாம் பாடமாக கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர்கள் அடுத்த நிலைக்கு தேர்ச்சி செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.இரு மொழி பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால், அதற்கு மாற்றாக தொழிற்கல்வி, ஐந்தாம் பாடமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற குழப்பம், பல பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்த விளக்கம்:இரு மொழி பாடங்களிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்; அதில் மாற்றம் இல்லை. மூன்று முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் மட்டுமே, தொழிற்கல்வி மாற்று பாடமாக எடுக்கப்படும். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு, மாணவர்கள் விரும்பினால், துணை தேர்வு எழுதலாம்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது.

'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது.
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, 'நெட், செட்' என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், 'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், 'ரெகுலர்' என்ற வகையில் சேர்க்கப்படுவர்.'ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு,ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது' என, தெரிவித்துள்ளது.

'TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்.

பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல்துவங்கி, வரும், 22ல் முடிகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஞாயிறு, 19 மார்ச், 2017


ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்!

சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம்கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல்,சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
சென்னையில் மட்டும்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை.
முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்; மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

டான்செட்' தேர்வு குவிந்தது விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., போன்ற படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வு, மார்ச், 25 மற்றும் 26ல் நடக்கிறது.இதற்கான விண்ணப்ப பதிவுகள், ஜன., 29 முதல், பிப்., 20 வரை நடந்தன. இதில், கடந்த ஆண்டை விட, அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 992; எம்.சி.ஏ., 6,448; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 16 ஆயிரத்து, 742 பேர் என, மொத்தம், 41 ஆயிரத்து, 182 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, 39 ஆயிரத்து, 930 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, அண்ணா பல்கலையின் டான்செட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, டான்செட் செயலர் பேராசிரியர், மல்லிகா தெரிவித்துள்ளார்.

நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

மதுரை, : உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடந்து வந்த நிலையில், நாடு முழுவதும் 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்துமாறு, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த தேர்வு முறை பின் பற்றப்படவில்லை. ஆனால் இந்தாண்டு முதல், 'நீட்' தேர்வு முறையை அமல் படுத்த வேண்டும்.
இருப்பினும் தமிழக அரசு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. ஆனால் இதற்கு ஒப்புதல் கிடைக்காது என்றே மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி 
வருகின்றனர்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் டில்லி சென்று மத்திய அரசிடம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 'நீட்' தேர்வு முறையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., ஐ.ஐ.டி., பொறியியல் படிப்பு போன்றவற்றுக்கான தகுதித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., போன்ற கல்வி திட்டங்களுக்கு இணையாக, சமச்சீர் கல்வி திட்டத்தின் பாடத் திட்டங்கள் இல்லை என்பதே இதற்கான காரணம்.அக்கல்வி திட்டங்களை, பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் கொண்டு வந்
திருந்தால், தற்போது இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
குழப்பும் மசோதா'நீட்' தேர்வு கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 
பெரிதும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களான 5500ல், அரசு பள்ளியில் படித்து சேர்ந்த மாணவர்கள் 250 பேர் மட்டுமே. இவர்களும் தங்கள் திறமையினால் தேர்வானார்களே தவிர சமச்சீர் கல்வியினால் அல்ல.
தமிழக அரசின் எதிர்ப்பு மசோதா பெற்றோர், மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எந்த கல்வி திட்டத்தில் மாணவர்கள் பயில வேண்டும் என்ற தெளிவு இல்லை.எனவே அரசு 'நீட்' தேர்வை முற்றிலும் புறக்
கணிக்க நடவடிக்கை எடுக்காமல், ஓரிரு ஆண்டுகள் மட்டும் விலக்கு கேட்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வுக்கு 'நீட்'டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தை, தமிழ் வழியில் முதற்கட்டமாக 10 சதவீத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் துவக்க வேண்டும், என்றார்