>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூலை, 2017

அகில இந்திய கவுன்சிலிங்: 4,018 பேருக்கு மருத்துவ 'சீட்'...

சென்னை: அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 4,018 பேர் இடம் பெற்றுள்ளனர்.


நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங் ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. தமிழகத்தில் இருந்து, 456 எம்.பி.பி.எஸ்., மற்றும், 30 பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும், 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் இடம் பெற்றுள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், 13, 14ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், 4,018 பேர் இடங்கள் பெற்றுள்ளனர். அவர்கள், வரும், 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும்.

சேராதவர்களின் இடங்கள் காலி இடமாக அறிவிக்கப்பட்டு, ஆக., 5 முதல், 7 வரை நடைபெறும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சேர்க்கப்படும். இதில், இடம் பெற்றவர்கள், ஆக., 9 - 16க்குள் மருத்துவ கல்லுாரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

புதன், 12 ஜூலை, 2017

மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு...

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  
இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நளினி சிதம்பரம் ஆகியோர் ஆஜராகினர். அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 4000 மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 தேர்வு எழுதினர்.கிராமப்புறங்களில் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகள் மிகக்குறைவு. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 80 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர். 
இதில் 2000 பேர்  சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி மாணவர்கள் 2000 பேர் தேர்வு எழுதியதில் 520 பேர் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சேர்க்கை கிடைக்கும். எனவே, தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது  என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

செவ்வாய், 11 ஜூலை, 2017

*மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க. சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்;
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

*மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க. சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்;
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

ஞாயிறு, 25 ஜூன், 2017

எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர்....

சென்னை: மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.

மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?....

சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்.* 'நீட்' தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு * அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம்சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, 'கட் - ஆப்' விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.* அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்.* தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிளஸ் 2 மதிப்பெண் உண்டாதமிழகத்தில், பல மாணவர்கள், 'நீட்' தேர்வில், 450 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்படி நடக்குமா என, குழப்பம் நீடிக்கிறது.
பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில், 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், "தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், 'நீட்' தேர்வில், தேர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு, பிளஸ் 2 மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவருக்கு சேர்க்கை வழங்க வேண்டும்," என்றார்.கல்வியாளர்கள் கூறுகையில், 'தமிழக பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வு சிந்திக்கும் திறன் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அதில் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, 'நீட்' தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு சமவாய்ப்பு வழங்கி, இரண்டிலும் அதிகம் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம்' என்றனர்.உள் ஒதுக்கீடு அவசியம்'நீட் தேர்வில் பங்கேற்ற, தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாகவே உள்ளது.
1,000க்கும் மேல் மாணவர்கள் படித்த டாப் பள்ளிகளில் கூட, நீட் தேர்வில், 300 மதிப்பெண்களை தாண்டியவர்களின் எண்ணிக்கை, 15ஐ கூட எட்டவில்லை. ஓராண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழக அரசு, மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், உள் ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அனைத்து மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு சென்றுவிடுவர்.
நீட் தேர்வில், கடந்த ஆண்டு 118 ஆக இருந்த தேர்ச்சி, நடப்பாண்டில் 125 முதல் 150 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது', என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!


நீட் தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!
தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை. 
இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 
4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்திருக்கிறது இந்தத் தேர்வு. நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்கள். 10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினார்கள். 15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியுள்ளார்கள். ஆங்கிலம், இந்தி தவிர்த்து, குஜராத்தியில் 47,853 மாணவர்களும், பெங்காலியில் 34,417 மாணவர்களும் தேர்வை எழுதினார்கள். 
தேர்ச்சி பெற்றுள்ள 6,11,739 பேரில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 14,637 பேர் தான். எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 6,028 பேர். அகில இந்திய அளவில் பஞ்சாபைச் சேர்ந்த நவ்தீப் சிங் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா இரண்டாம் இடத்தையும், மனீஷ் முல்சந்தானி மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். நான்காம் இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த சந்தீப் சதானந்தா பிடித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த டெரிக் ஜோசப் 6-வது இடத்தையும், தெலுங்கானாவைச் சேர்ந்த லக்கீம்ஷெட்டி அர்னாவ் திரிநாத் 12-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். டாப்-25 இடத்துக்குள் தென்னிந்தியாவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். 
தமிழக மாணவர் ஒருவர்கூட அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை அரசு எதிர்த்து வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடுமுழுவதும் நீட் தேர்வுகள் நடந்து, நேற்று முடிவுகளும் வெளியானது. இதில், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.
இந்நிலையில், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது மாணவர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் யார் முதலிடம் பிடித்தார்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
ஓரிரு நாளில் விண்ணப்ப வினியோகம் துவங்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலைத் தரக்கூடும் என நம்பப்படுகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை ஏற்கெனவே குஜராத் மாநிலம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்  மருத்துவ பாடச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு அனுமதி பெற தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செல்லாததாகிவிடும். தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது என்பதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ கல்விக்கான சேர்க்கை என்பது இந்த முறை மிகுந்த குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.

ஞாயிறு, 28 மே, 2017

கால்நடை மருத்துவ கவுன்சிலிங்

தமிழக கால்நடை அறிவியல் பல்கலையில் கால்நடை இளங்கலை படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்பு போன்ற படிப்புகள் உள்ளன.
இப்பல்கலையின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 31 வரை கால்நடை படிப்புகளுக்காக 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பின், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன், 6க்குள் அனுப்ப வேண்டும். ஜூலை துவக்கத்தில், தரவரிசை பட்டியல் வெளியாகும். ஜூலை, 20க்குப் பின் கவுன்சிலிங் நடத்தப்படும்.

பல் மருத்துவ கட்டணம் நிர்ணயம்

நிகர்நிலை பல்கலையில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டு நிகர்நிலை பல்கலைகளில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பில், 100 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதற்கான கல்விக் கட்டணத்தை, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதில், மூன்று லட்சம் முதல், அதிகபட்சம், 13 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், நேற்று நடந்தது. அதில், அரசு கல்லுாரிகளில் உள்ள, எட்டு இடங்களும் நிரம்பின. சுயநிதிகல்லுாரிகளில் உள்ள, 110 இடங்களில், 105 இடங்கள் நிரம்பின.

ஞாயிறு, 14 மே, 2017

தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலை. மருத்துவமேற்படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ்) 562 இடங்கள், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்கள்உள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) 19 இடங்கள் உள்ளன.இந்நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான முதல்கட்ட கலந் தாய்வு கடந்த 8-ம் தேதி முதல் 11- தேதி வரை நடைபெற்றது.
இதில் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் மற்றும் பட்டயமேற்படிப்பில் 722 இடங்களும், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 17 இடங் களும் நிரப்பப்பட்டன. கலந் தாய்வு முடிவில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக உள்ளன.மருத்துவ பட்டமேற்படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 42 இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் நிரப்பப்படஉள்ளன.
இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நேற்று வெளியிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேர் இடம் பெற்றுள்ளனர். நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களின் இடங் களுக்கான தரவரிசைப் பட்டிய லில் 4,107 பேர் இடம் பிடித் துள்ளனர்.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,107 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

ஞாயிறு, 7 மே, 2017

NEET-UG 2017: Download Answer Key, Question Paper & Solution

NEET-paper-download
EET-UG (National Eligibility cum Entrance Test) 2016 is a single entrance exam for MBBS and BDS Course in India, from next year it will be also replacing state entrance exam for AYUSH Courses. NEET-UG 2017 has been conducted in single phase on 7th May,2016. This year total 11,35,104 candidates will be appearing for exam, there has been 41.42% increase in the number of candidates from last year which registered overall 8,02,594 candidates. NEET-UG paper duration is of 3 hours and a total of 180 multiple choice questions are asked from Biology, Physics and Chemistry.

CLICK HERE - NEET 2017 QUES PAPER - "A/B/C/D" SERIES - P SERIES QUESTION PAPERS
CLICK HERE - NEET 2017 QUES PAPER - "P/Q/R/S" SERIES - B SERIES QUESTION PAPERS.

NEET 2017 TENATIVE ANSWER KEY

CLICK HERE - QUESTION PAPER CODE - B  RAO IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - R  RAO IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - S RAO IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - P AKSASH IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - P/Q/R/S BRILLIANT COACHING CENTRE

BreaBreaking News: மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது - சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு.


💉 மருத்துவ மேற்படிப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.


💊 மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
💉 இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக . மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

💊  தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.
இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

💉 இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

💊 நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'.

💉 நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

💊 இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

💉  வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யாநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

💊 இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது.

💉  மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது.

💊 இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



💉 மருத்துவ மேற்படிப்பிற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.


💊 மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
💉 இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக . மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

💊  தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.
இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

💉 இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

💊 நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'.

💉 நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார்.

💊 இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

💉  வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யாநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

💊 இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது.

💉  மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது.

💊 இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதன், 3 மே, 2017

முதுகலை மருத்துவ படிப்பு : ஐகோர்ட் இன்று உத்தரவு.

முதுகலை மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
'முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கையை, இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளின் படி நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 10க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், 'மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு வெளியிட்ட விளக்க குறிப்பின் படி, விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய சிறப்பு பெஞ்ச், நேற்று விசாரித்தது.
 அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மணிசங்கர் ஆஜரானார்.மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், விஜயன், வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஜி.சங்கரன், திலகவதி உள்ளிட்டோரும், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயணன், வழக்கறிஞர் வி.பி.ராமன் ஆஜராகினர். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், இவ்வழக்கு மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

திங்கள், 24 ஏப்ரல், 2017


தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.எம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாகதேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

பதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது:அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றனர். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.

திங்கள், 30 ஜனவரி, 2017

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 கடைசி

அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில், டில்லி உட்பட, நாடு முழுவதும் ஏழு இடங்களில், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டிற்கு, மே, 28ல், 'ஆன்லைன்' வழியில் நுழைவு தேர்வு நடக்கும் என, எய்ம்ஸ் அறிவித்து உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜன., 24ல் துவங்கியது. பிப்., 23 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை, http://www.aiimsexams.org/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 9 ஜனவரி, 2017

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே 7ம் தேதி இந்த தேர்வு நாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.
இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்த பிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.
இந்த தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.