>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
MBBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MBBS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 டிசம்பர், 2017

NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு  கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து நவம்பர் 13ம் தேதி காணொலி காட்சி மூலம் 25 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசின் இந்த திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எந்த அளவு பயன்பெற்றுள்ளனர் என்பது 2018 நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும். 
இந்நிலையில், நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள தமிழக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

திங்கள், 27 நவம்பர், 2017

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு, ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படலாம் என, கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க, சி.பி.எஸ்.இ.,யின், நீட் தேர்வு கமிட்டி, விரைவில் கூடுகிறது. டிச., மூன்றாம் வாரம் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள், முழுமையாக, நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதனால், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 11.35 லட்சத்திலிருந்து, 13 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 3 நவம்பர், 2017

நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்....

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
'ஹெல்ப் லைன்'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், கவுன்சிலிங் நடத்தவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்கும் திட்டம் உள்ளதா என, தெரிவிக்கும்படியும், அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார்.
இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், ௩௨ மாவட்டங்களிலும், 'ஹெல்ப் லைன்' வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவு ெவளியான தேதியில் மட்டும், ௧௦ ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தேர்விலும், நுழைவு தேர்விலும் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக, முறையாக பயிற்றுவிக்கப்படும்.ரூ.75 லட்சம்ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. ௭௨ லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு அமைப்புகளால், ௧,௪௨௨ போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், அரசியல் கட்சிகள், ௯௩௩ போராட்டங்களையும், மாணவர்கள், ௩௧௩ போராட்டங்களையும் நடத்தினர். நீட் தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசார ணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை

மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது..
கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார்.இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக,தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. ஒதுக்கீடுஅரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளஅரசு ஒதுக்கீடு இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்கள் என, 3,532 இடங்கள் உள்ளன. அதேபோல், பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், 1,201 இடங்கள் உள்ளன.இவற்றில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 4,546 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்; 1,,434 இடங்கள், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.சமூக ஊடகங்களில், பிற மாநில மாணவர்கள் மற்றும் இரட்டைபூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் பரவி வருகின்றன.
ஜூலை, 30 வரை நடந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த, 4,090 மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, 428 வெளிமாநில மாணவர்கள்; பிற மாநிலத்தைச் சேர்ந்த, 8 - 12 வகுப்பு வரை, தமிழகத்தில் ஐந்தாண்டுகள் படித்த, 28 மாணவர்கள் என, மொத்தம், 4,546 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.உறுதிமொழிமேலும், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து ஆராய, குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெறவில்லை என, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ் வாங்குகிறோம். மாணவர்கள் வழங்கிய சான்றிதழ் அனைத்தும், மாவட்ட கலெக்டர்களால், அவற்றின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.
இரட்டை சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் படித்த மாநிலத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி, அம்மாநிலத்தில் மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனரா என்பது கண்டறியப்படும்.விதிகளை மீறி நடந்திஇருந்தால், மாணவர்களின் சேர்க்கைரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

MBBS படிப்பு: அரசு ஒதுக்கீடு, 'ஹவுஸ்புல்'

அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின. 
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 
அதேபோல, பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198 பி.டி.எஸ்., இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்களும் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சென்னை, பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்காக கவுன்சிலிங்கில், 14 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாளில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கியது. 
அன்று, 1,029; மூன்றாம் நாளில், 1,260 இடங்கள் நிரம்பின. மூன்று நாட்களில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில் உள்ள, 80 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.
இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 1,596 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர, அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும், பிற்பகலுக்குள் நிரம்பின. 
எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்., படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி

'நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.




அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர். 

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

மருத்துவ கவுன்சிலிங் எப்போது

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்
ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது.நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய,85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மருத்துவ கவுன்சிலிங் எப்போது

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், 
ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது.நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய,85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதன், 2 ஆகஸ்ட், 2017

'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற டில்லியில் அமைச்சர் முகாம்....

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக, டில்லியில் முகாமிட்டுள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார்.
'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றுத்தரும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சில தினங்களுக்கு முன், டில்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். நேற்று முன்தினம் டில்லி சென்ற, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை, மூன்று முறை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார். பின், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துப் பேசினார். நேற்று, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் சேர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கை சந்தித்து, அதே கோரிக்கையை வலியுறுத்தினார். தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணனும் உடன் சென்றார்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரவிச்சந்திர பாபு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக்கீடு அரசாணையை கடந்த 14ம் தேதி நீதிபதி ரவிசந்திர பாபு ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கும், மேலும் காலம்தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துமாறு தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் பின்னணி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து... இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்... இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் இவற்றை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இயற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
95 சதவீத மாணவர்களின் நலன் காக்க... தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தயாரித்துள்ளது.
பாரபட்ச முறையில் நீட் தேர்வு: தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. இது, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட மத்திய இடை நிலை கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
வேறு வழியில்லாததால்... எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தைச் சீர்செய்ய, ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களைச் சமமாகக் கருத முடியாது. ஆகவே, அனைத்துத் தரப்பு வாரிய மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைச் சட்டத்தை இது வரை அரசு பின்பற்றி வருகிறது.
எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

செவ்வாய், 18 ஜூலை, 2017

"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?" - பிரின்ஸ் கஜேந்திர பாபு...


மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்யும் வகையில் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பில் 1000-க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் கூட, நீட் தேர்வில் போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.நீட் தேர்வுக்கான கேள்விகள் என்பது சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் இருக்கிறது. எனவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கடினமாக இருக்கும். எனவே, அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைஎழுந்தது.

 இதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நாங்கள் விலக்கு பெற்று விடுவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூறி வந்தார்.எனவே, மாணவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், நீட் தேர்வுத் தேதியும் நெருங்கி வந்தது. தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து பெரும்பாலான தமிழகமாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் பெரும் அளவில் தேர்ச்சியும் பெறவில்லை. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எல்லோரும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள்தான்.இந்தச் சூழலில் தமிழக மாணவர்களைக் காப்பாற்றும் வகையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

இந்த நிலையில்தான் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விபடிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களில் கூட்டமைப்பைச்(COTSO) சேர்ந்தவர்கள் 17-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசினர். " கடந்த ஆண்டு +2 முடித்த மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்று கூறினர். ஆனால், அதில் இருந்து தமிழகத்துக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்துக்கு விலக்கு அளித்தது.

இதேபோல நமக்கும் நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு கிடைக்கும் என்று கடந்த ஆண்டு ப்ளஸ் ஒன் படித்து, இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதிய நாங்கள் எதிர்பார்த்தோம். +2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் இரவு பகல் பாராது படித்தோம். நீட் தேர்வு கட்டாயம் என்பது கடைசி வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இப்போது நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. கட்டாயம் என்று சொன்ன பிறகு எங்களுக்கு படிக்க இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நேரம் கிடைக்கவில்லை.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த நாங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி அமைந்த கேள்விகளைக் கொண்ட நீட்தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும். எங்களுடன் படித்த மாணவர்கள் +2 வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் அதிக மதிபெண்கள் எடுத்ததால் இப்போது, அவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழக மாணவர்கள் பாதிக்காதவாறு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர்பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், "நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தரப்பினர் வசதியில்லை அதனால், நீட் தேர்வுக்கான கோச்சிங் கிளாஸுக்கு போக முடியவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு தரப்பினர், ஓரளவுக்கு வசதி இருக்கிறது. ஆனால், கோச்சிங் சேர்வதற்கான நேரமில்லை என்று சொல்கின்றனர். இப்போது இருக்கும் மாநில அரசு, எம்.ஜி.ஆரை பின்பற்றுவதாகச் சொல்கிறது. இந்திரா காந்தி காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது மத்திய அரசு மாநிலங்களுக்கு அரிசி விநியோகம் செய்தது. அப்போது, தமிழகத்துக்குக் குறைவாக விநியோகம் செய்ததை எதிர்த்து எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம்இருந்தார்.

காவிரி பிரச்னைகாக முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'அ.தி.மு.க ஜெயித்தால், நீட் தேர்வு கட்டாயம் தமிழகத்துக்கு வராது. வந்தாலும் தகுந்த சட்டம் அமைத்து அதற்கு தடைக் கோர முடியும்' என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். இப்போது ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பின்பற்றுவதாக சொல்கிறார். ஆனால், மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் நீட் தேர்வை எதிர்த்து அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை.

நீட் தேர்வு குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருக்கிறார்? இங்கு கூடியிருக்கும் மாணவர்கள் முதலமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். முதல்வரை பார்ப்பதற்கு முன்பாக நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்த உள்ளனர். கல்லூரிகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் மெழுகுவத்தி ஏற்றி அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து +2வில் மதிப்பெண்கள்வாங்கினாலும், இரண்டு மூன்று மாதங்கள் படித்து தேர்ச்சி பெறும் நீட் தேர்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும்.

மருத்துவப் படிப்பில் 85% உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!!..

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பின்னணி என்ன?
மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தமாணவரான தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.அதில், ''சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் உள்ள 2,500 இடங்களில் 319 இடங்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டு தற்போது மாநில வழிக்கல்வி, மத்திய வழிக்கல்வி என மாணவர்களை பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. மருத்துவ கவுன்சில் விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்.
 ஓபிசி பிரிவினர் என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, பாடத் திட்டத்தின் அடிப்படையில் 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்குவது என்பது சட்ட விரோதமானது. இந்த அரசாணையை செயல்படுத்தும் அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது. எனவே கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.
இந்நிலையில் ஜூலை 14-ம் தேதியன்று வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டார்.இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) உயர்நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:''மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீடு செய்தது அரசின் கொள்கை முடிவு.
தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு சிபிஎஸ்இ வழியாகப் படித்தவர்களுக்கு மட்டுமே எளிதாக இருந்தது.மாநில வழிப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங்களில் கிடையாது.குறிப்பாக தமிழக அரசு நீட் தேர்வை எதிர்க்கும் சூழ்நிலையில், சிபிஎஸ்இ வழியாகக் கற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் அதிகமாக நுழைய இம்முறை வழிசெய்யும்.சாதிய ஒதுக்கீடுகள் தவிர்த்து தேசிய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என ஏராளமான ஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன.
இத்துடன் இதுவும் சேர்ந்தால் மாநில வழிப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள்.அரசாணையையும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியே பிறப்பித்துள்ளோம். அதனால் உள் இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது.

வியாழன், 6 ஜூலை, 2017

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை கடைசி நாள்

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம். சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார். விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை கடைசி நாள்....

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம். சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார். விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.

புதன், 5 ஜூலை, 2017

மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு...

மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. 
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 
மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளி, 30 ஜூன், 2017

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்....

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 
சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.
அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும் இடம் உள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.
அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

செவ்வாய், 27 ஜூன், 2017

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.
2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.
அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.
மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.
3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.
4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.
5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.
9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.
10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.
11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.
12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.
13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.
14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.
15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.
16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.
17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.
18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.
19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.
20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.
21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.
விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது.

NEET - MBBS Reservation 85% G.O