>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
ENGINEERING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ENGINEERING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 நவம்பர், 2017

தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பொறியியல் பட்டங்கள் ரத்து -உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

ஞாயிறு, 5 நவம்பர், 2017

பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை

வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி
நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் இது தொடர்பாக பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

புதன், 11 அக்டோபர், 2017

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில், இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன.
கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, நுாலக, ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, கல்லுாரிகளின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர அமைப்பின் அனுமதி பெற்ற கல்லுாரிகள் மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கலாம். இந்நிலையில், வரும் கல்வியாண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான விதிகள், நவ., இறுதியில் அல்லது டிச., முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டுக்கான விதிகளில், பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு கல்லுாரியும், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்; தொழிலக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்; திறன்சார் பயிற்சிகளை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கலாம். புதிய விதிகள் குறித்து, உயர்மட்டக் குழு இறுதி ஆய்வு செய்வதாக, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்...

தனியார் இன்ஜி., கல்லுாரிaகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு,
செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், ௮௯ ஆயிரம் பேர், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தனர்.
தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., 1ல், வகுப்புகள் துவங்க உள்ளன.
சில கல்லுாரிகள், செப்., ௪ல் வகுப்புகளை துவக்குகின்றன. செப்., ௨ல் பக்ரீத் பண்டிகை; செப்.,௩ ஞாயிறு என்பதால், பல கல்லுாரிகள், செப்., ௪ல் பெற்றோருக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளன. முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லுாரிகள் சார்பில், அலைபேசி, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் வழியாக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதல் நாளில், மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, வழிகாட்டும், 'ஓரியன்டேஷன்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மறுநாள் கல்லுாரி வளாகம், ஆய்வகம், வகுப்புகள் சுற்றி காட்டப்பட்டு, பேராசிரியர்கள், மூத்த மாணவர்களின் அறிமுகம் நடக்கும். அதன்பின், வகுப்புகள் முறையாக துவங்க உள்ளதாக, கல்லுாரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு...

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், ஜூலை, 31க்குள், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும்.
ஆக., 1ல், அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். 'நீட்' நுழைவுத்தேர்வு பிரச்னையால், தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப் போனதால், இன்ஜி., மாணவர் சேர்க்கை, தாமதமாக துவங்கியது. ஆக., 18ல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. 'தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, வரும், 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்' என, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. செப்.,1ல், வகுப்புகள் துவங்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதன், 16 ஆகஸ்ட், 2017

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்....

இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் வகுப்புகளை துவங்க உள்ளன. இரண்டு வாரங்களுக்கு, மாணவர்களுக்கு இன்ஜினியரிங் முன் தயாரிப்பு பயிற்சி வழங்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, ஆங்கில மொழித்திறன் பயிற்சி, தொடர்பு ஆங்கிலம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இடம் பெற்றுள்ள, கணிதம், இயற்பியல் போன்ற அடிப்படை பாடங்களை நடத்த, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
'சமீபத்தில் நடந்து முடிந்த, அண்ணா பல்கலையின் தேர்வில், இயற்பியலில், 70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதன் எதிரொலியாகவே, கணிதம், இயற்பியலில், இந்த ஆண்டு முதல், முன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது' என, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

சனி, 12 ஆகஸ்ட், 2017

30% கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அதிரடி முடிவு

புதுடெல்லி: 30 சதவகிதத்துக்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் குறைவாக சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது
என்று அதன் தலைவர் அனில் டி.சாஸ்ரபுத்தே தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மூட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 10,361 பொறியியல் கல்லூரிகளில் 27லட்சம் காலியிடங்கள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு...

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஆறு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுபோல், பி.இ. இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் (சிவில்) படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளது.
கணினி அறிவியல், மின்னணுவியல் -தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர் என்றபோதும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதுவும் குறைவுதான் என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக இந்த முறை 570 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஜூலை 17 கலந்தாய்வு தொடங்கியது. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கியதுமுதல் கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்தனர். கடந்த ஆண்டுகளில், இதுபோன்று கலந்தாய்வு தொடக்கத்தில் கணினி அறிவியல், மின்னணுவியல் - தொடர்பியல் பொறியியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். பின்னர், படிப்படியாக அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக இயந்திரவியல் பிரிவு மாறிவிடும்.கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் நீடித்து வந்தது.
இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் குறைந்தது ஆர்வம்: இந்த நிலையில், 2017 -18 பி.இ. கலந்தாய்வு முடியஇன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், தொடக்க நாள் முதல் அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளாக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவுகளேஇருந்து வருகின்றன. பி.இ. கணினி அறிவியல் பிரிவில் மொத்தமுள்ள 27,695 இடங்களில் இதுவரை 9,500 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 33,881 இடங்களில் இதுவரை 12,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், பி.இ. இயந்திரவியல் பிரிவில் மிக அதிகமாக 38,333 இடங்கள் உள்ளன. இதில் 11,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதுபோல பி.இ. சிவில் பிரிவில் 25,237 இடங்களில் 5,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்...:
ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல், பி.இ. சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 115 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 116 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 120 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 122 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 140 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 65 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 111 இடங்களும், சிவில் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 72 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 38 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 73 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 74 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. இதேபோல, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும் நடைபெற்றிருப்பது அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..!

பொறியியல் படிப்புக்கான ஏழாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் இன்று ஏழாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது. ஏழாவது நாள் கலந்தாய்வில் 7,261 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 2,390 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
இதுவரையில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகமாக இ.சி.இ துறை மற்றும் மெக்கானிக்கல் துறையில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவருகின்றனர். இதுவரையில் இ.சி.இயில் 6,631 பேருக்கும் மெக்கானிக்கலில் 5,191 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான ஏழு நாள்கள் கலந்தாவில் 27 % பேர் கலந்து கொள்ளவில்லை. அதனால், கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு அதிக இடங்கள் காலியாக இருக்கும் என்று கல்வியலாளர்கள் கருதுகின்றனர்.

சனி, 29 ஜூலை, 2017

TRB - Polytechnic Engineering Lectures Post Recruitment - New Notification Published

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18
          
Dated:28-07-2017
Chairman

வியாழன், 27 ஜூலை, 2017

அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும்,

சனி, 22 ஜூலை, 2017

1.66 லட்சம் இன்ஜினியரிங் : நாளை பொது கவுன்சிலிங் துவக்கம் இடங்கள்

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 1.66 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 553 இன்ஜி., கல்லுாரிகளில், 1.68 லட்சம் இடங்களுக்கு, இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல் துவங்கியது. தொழிற்கல்வி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதில், 2,000 இடங்கள் நிரம்பிஉள்ளன. மீதமுள்ள, 1.66 லட்சம் இடங்களை நிரப்ப, பொது கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும், இந்த கவுன்சிலிங்குக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நாளை முதல், ஆக., 11 வரை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்காக, மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளே சென்னைக்கு வரும் மாணவியர், தாய் அல்லது பெண் உறவினருடன் வந்தால், அவர்கள் அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள விடுதியில் தங்க, இலவச இட வசதி வழங்கப்படுகிறது.மருத்துவ உடற்தகுதி பரிசோதனை மையம், கேன்டீன், கவுன்சிலிங் கட்டணம் செலுத்த, வங்கி கவுன்டர்கள், கடன் பற்றி தெரிவிக்க, வங்கியின் விசாரணை அரங்குகள்.
அரசின் உதவித்தொகை தகவல் மையங்கள், 'அம்மா' குடிநீர் விற்பனை மையம், விசாரணை மையம் என, அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்குக்கு வருவோர், காத்திருக்க பெரிய அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில், நான்கு பெரிய, டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. காலியாக இருக்கும், கல்லுாரி இட விபரங்கள், நேரடி ஒளிபரப்பாக, இணையதளம் மூலம் திரையிடப்படும்.மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களில் ஏதாவது தகவலை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்றால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் முன்பாக வந்து, திருத்தங்களை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 21 ஜூலை, 2017

ஒரே பெயரிலான இன்ஜி., கல்லூரிகளால் 

குழப்பம்...

'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒரே பெயர் உடைய கல்லுாரிகளால் குழப்பம் ஏற்படலாம் என்பதால், மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 533 இன்ஜி., கல்லுாரிகளில், 1.68 லட்சம் இடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு கவுன்சிலிங் நடத்துகிறது. இந்த கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது. தொழிற்கல்வி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. அவர்களுக்கு, இன்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், 23ம் தேதி முதல், ஆக., 11 வரை, நடக்கிறது. 
கவுன்சிலிங்கின் போது, தங்களுக்கு பிடித்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு களை, அதன் குறியீட்டு எண் மூலமே தேர்வு செய்ய வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏனெனில், ஒரே பெயரில், சிறிய வித்தியாசங்களுடன் பல கல்லுாரிகள் உள்ளன.அதனால், குறியீடு எண் இல்லாமல், கல்லுாரியை தேர்வு செய்தால், தவறான கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு முறை தேர்வு செய்தால், பின் கல்லுாரியை யோ, பாடப்பிரிவையோ மாற்ற முடியாது. எனவே, கல்லுாரி குறியீட்டு எண்ணை, தவறாமல் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், ஒரே பெயரிலுள்ள கல்லுாரி களின் பெயர்கள் மற்றும் அதன் குறியீட்டு எண்களை தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 17 ஜூலை, 2017

பி.இ., - பி.டெக்., படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்...

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 583 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.67 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. 

இதில் பங்கேற்க, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 988 பேர் தகுதி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது. தொழிற்கல்வி பிரிவில், 6,224 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது. இதில், 2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால், 4,500 இடங்கள் வரை காலியாகும். வரும், 23ல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்குகிறது.

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கடிதம் : இன்ஜி., படிப்பில் சேர விளையாட்டு பிரிவில் 2,105 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 2,082 பேர் தகுதி பெற்றுள்ளனர்; அவர்களில் 571 பேர் மாணவியர். அவர்களுக்கு 19, 20ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியின் www.tnea.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் தேதி விபரம்

தொழிற்கல்வி ஜூலை 17,18
மாற்றுத் திறனாளி பிரிவு ஜூலை 19
விளையாட்டு பிரிவு சான்றிதழ் ஆய்வு ஜூலை 19,20
விளையாட்டு பிரிவு கவுன்சிலிங் ஜூலை 21
பொதுப்பிரிவு ஜூலை 23
பொது கவுன்சிலிங் நிறைவு ஆக., 11
துணை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு ஆக., 16
காலியிடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆக., 17
அருந்ததியர் காலியிடத்துக்கு, ஆதி திராவிடர் கவுன்சிலிங் ஆக., 18

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று தொடக்கம்.


என்ஜினீயரிங் படிப்பில் சேர தொழில் கல்வி பிரிவுக்கு இன்று (திங்கட்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டன. பின்னர், பதிவு செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 21 பேர் விண்ணப்பங்கள் வரப்பெற்றிருந்தன. அதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது. இன்றும், நாளையும் தொழில் கல்வி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 19-ந் தேதி நடக்கிறது. மேலும், விளையாட்டு பிரிவு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு 21-ந் தேதி அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, 23-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்டு 16-ந் தேதி துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 17-ந் தேதி துணை கலந்தாய்வும், 19-ந் தேதி ஆதி திராவிடர், அருந்ததியர் ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 583 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அவற்றுள் தொழில் பிரிவு மாணவர்கள் மூலம் 6 ஆயிரத்து 224 இடங்கள் நிரப்பப்படுகிறது. பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 419 மாணவர்கள் சேர்க்கபட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 583 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 204 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் தொழில் பிரிவு கலந்தாய்வில் உள்ள 6,224 இடங்களுக்கு தகுதியான 2 ஆயிரத்து 84 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலை 10.30 மணிக்கு தொடங்கும் அந்த கலந்தாய்வு நாளை (18-ந் தேதி) மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பிரிவில் முதலாவதாக மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்படுகின்றனர்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ந் தேதி தொடங்குகிறது. அன்று மட்டும் காலை 10 மணி முதல் இரவு 6.30 மணி வரை மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து, தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். தினமும் 9 பிரிவாக மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு முன்கூட்டியே கலந்தாய்வு முடிவுக்கு வரும் என தெரிகிறது.

ஒரே மாதிரி பெயர் கொண்ட கல்லூரிகள் பல உள்ளதால் அந்த கல்லூரியை தேர்வு செய்யும் முன் கல்லூரி குறியீட்டு எண், விலாசம் இவற்றை சரிபார்த்த பின் பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். மேலும், கல்லூரிகள் பற்றிய விவரங்களை (விடுதி போன்றவை) அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கல்லூரி மற்றும் பாடப்பிரிவை ஒரு முறை தேர்வு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் கவனமாக கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, 2 மணி நேரத்திற்கு முன்னதாக கலந்தாய்வு அரங்கிற்கு வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரியில் காலியிடங்கள் உள்ளது என்பதை அறிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

சுயநிதி தொழிற்கல்வி கட்டண நிர்ணயக்குழு 2017-18-ம் கல்வி ஆண்டில் இளங்கலை என்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த கட்டணத்தின்படி, தேசிய தர அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவிற்கு ரூ.55 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவிற்கு ரூ.50 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு தேசிய தர அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கு ரூ.87 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவிற்கு ரூ.85 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு..

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மூன்றாம் வாரத்தில், கவுன்சிலிங் துவங்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போடப்பட்டுள்ளது. 

அதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும் தாமதமானது. ஆனால், 'நீட்' பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளதால், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தேதி அறிவிக்கப்பட்டது.இதன்படி, நாளை முதல் இன்ஜி., கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 988 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.2,083 பேர் தொழிற்கல்வி பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளையும், நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடக்கிறது. இதில், மொத்தம், 6,224 இடங்களுக்கு,2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தொழிற்கல்வியில், அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்ணாக,179 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2:00 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது.

இந்த கவுன்சிலிங் முடியும் போது, 4,500௦ இடங்கள் வரை, காலியாக இருக்கும் என, தெரிகிறது. இந்த காலியிடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். மாற்று திறனாளி களுக்கு, ஜூலை, 19; விளையாட்டு பிரிவுக்கு, ஜூலை, 21; பொது பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 23௩ல் கவுன்சிலிங் நடக்கிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் மற்றும் எந்த மாணவர்கள், எந்த நாளில் வர வேண்டும் என்ற பட்டியல், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜி., கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டுகளில், மாணவர்களின் மொபைல் போன் மற்றும், 'இ - மெயில்' முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டன. மேலும், கவுன்சிலிங்கின் ஒவ்வொரு நிலையும், மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு, அதுபோன்ற தகவல்களை அனுப்புவதில் தாமதம் காணப்படுகிறது.


ஏற்பாடுகள் என்ன... மாணவர்கள் குழப்பம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், நாளை துவங்கும் நிலையில், அதற்கான வசதிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் குறித்து, முறையான அறிவிப்புகள் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், நாளை துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோரில் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, அரசு பஸ்களில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அதேபோல், மாணவியர் மற்றும் அவருடன் வருவோர் தங்குவதற்கும், அண்ணா பல்கலையில் இட வசதி செய்யப்படும்.

மாணவர்கள், தங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி, அரசு பஸ்களில், இலவசமாக சென்னை வரை பயணிக்கலாம். கவுன்சிலிங் முடிந்ததும், அதே கடிதத்தை காட்டி, திரும்ப செல்லலாம். இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி மூலம், போக்குவரத்து துறைக்கு தெரிவித்து, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே, மாணவர்கள் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இந்த ஆண்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் பாஸ் பெறுவது எப்படி என்ற விபரங்களை, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி, இதுவரை வெளியிடவில்லை. மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விபரங்களையும், இணையதளத்திலோ, ஊடகங்கள் மூலமோ, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி வெளியிடவில்லை.

புதன், 12 ஜூலை, 2017

தொலைநிலையில் பி.இ., படிக்க தடை

'தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்ஜினியரிங், தொழிற்நுட்பம், கட்டடக் கலை, நகர கட்டமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழிற்நுட்பம், 'அப்ளைட் ஆர்ட்ஸ்' ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை, தொலைநிலை கல்வியில் படிக்க, அங்கீகாரம் வழங்கப்படவில்லை.எனவே, இந்த படிப்புகளை தொலைநிலையில் படித்து பட்டம் பெற்றால், அது செல்லாது. இதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 10 ஜூலை, 2017

இன்ஜி., படிப்புக்கு 'நீட்' விலக்கு: அமைச்சர் உறுதி...

''அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்களித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழகத்தில், இன்ஜி., கலந்தாய்வை நடத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம்,'' என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சேலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட அரசு கலைக் கல்லுாரியில் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கல்வியாண்டில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத சட்டம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், அதை அனுமதிக்காத வகையில் பார்த்துக் கொள்வோம், மேலும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இன்ஜி., கலந்தாய்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். 

புதன், 28 ஜூன், 2017

பி.இ., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்

காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது.

டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், மே 17-ல் துவங்கியது. ஜூன் 19,- வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 13 ஆயிரத்து, 69 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 30-ல் துவங்குகிறது.
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர், இளங்கோ கூறியதாவது:
சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது. அன்றே லெதர் மற்றும் பிரின்டிங் பிரிவுக்கும், மறுநாள் கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கும் நடக்கிறது. ஜூலை, 1 முதல் 3ம் தேதி வரை சிவில், 3 - 7ம் தேதி -வரை மெக்கானிக்கல், 7 - 10ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கும், 10ம் தேதி பி.எஸ்சி.,க்கும் நடக்கிறது.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கவுன்சிலிங் நடக்கும் இடமான அழகப்பா இன்ஜி., கல்லுாரி வரை போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1,500 மாணவர்கள் அழைக்கப்படுவர். மாணவர்கள் கல்லுாரியில் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ள வெளிப்புறம் காட்சி திரை வசதி செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.