>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
CBSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CBSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஜூன், 2017

மீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்பந்தம்

ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வை மீண்டும் எழுத நிர்ப்பந்தம் செய்வதாக மாணவன் சார்பில் தந்தை தொடர்ந்த வழக்கில் சிபிஎஸ்இ பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் ஆதித்ய ஏகன் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1வது வகுப்பு முதல் படித்து வருகிறான். கடந்த ஆண்டு அவன் 9ம் வகுப்பு படித்தான். இந்த ஆண்டு  பத்தாம் வகுப்புக்கு அவனை அனுப்பாமல் 9ம் வகுப்புக்கான பாடங்களை மீண்டும் படிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



எனது மகனைப்போல் 41 மாணவர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. மாணவர்களை பிளஸ் 2 வரும் வரை எந்த வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கக்கூடாது என்று சிபிஎஸ்இ பல்வேறு நேரங்களில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பில் இருந்த 141 மாணவர்களில் 35 சதவீத மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்ச்சி பெறவில்லை. 

 தற்போதுள்ள நிர்வாக திறமையின்மைதான் இதற்கு காரணம். அதை சீர்படுத்தாமல் எனது மகனை மீண்டும் 9ம் வகுப்பு தேர்வை எழுத கட்டாயப்படுத்துவது விதி மீறலாகும். எனவே, பாதிக்கப்பட்ட எனது மகன் உள்பட 42 மாணவர்களையும் இந்த பள்ளி இல்லாமல் வேறு பள்ளியில் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகியவை 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் ெசய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

புதன், 14 ஜூன், 2017

சி.பி.எஸ்.இ., துணை தேர்வு ஆன்லைன் பதிவு,...

சி.பி.எஸ்.இ., தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்கான, துணை தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்காக, ஜூலையில், துணை தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. வரும், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், தாமத கட்டணத்தில், ஜூலை, 3 வரை விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துஉள்ளது.இதற்காக மண்டல அலுவலகங்களில், உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 12 ஜூன், 2017

38,000 மரங்கள் நட்ட கோவை நடத்துனர்... சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை....

கோவை: கோவையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் யோகநாதன் 38,000 மரங்களை நட்டதற்காக, சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

யோகநாதன், கோவை மாநகரப் பேருந்து கழகத்திற்கு உள்பட்ட மருதமலை - காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 70 பேருந்தில், நடத்துனராகப் பணிபுரிகிறார்.
கடந்த 28 ஆண்டுகளாக, நடத்துனர் வேலை பார்க்கும் யோகநாதன், தனது இளம் வயதில் தொடங்கி, கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக, மரம் நடும் வேலையில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அதற்காகவே இந்த மரம் நடும் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாகக் கூறுகிறார் யோகநாதன்.
சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில், ' யோகநாதன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசுப் பேருந்து நடத்துனர். தனி ஒருவனாக, கடந்த 28 ஆண்டுகளில் 38,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார்.
வன உயிரின பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர் இந்த செயலை செய்து வருகிறார்,' என்று குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு, 4 ஜூன், 2017

100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகள்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில், சென்னையிலுள்ள பல பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், தேர்வு எழுதிய 2௫௮ மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 59 பேர், தரவரிசையான, சி.ஜி.பி.ஏ.,வில், 10க்கு, 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை, பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் பாராட்டினார்.

அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில், தேர்வு எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 199 மாணவர்கள், ஏ 1 கிரேடான, 10க்கு, 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை,
பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி வாழ்த்தினார்.
ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 640 பேர் தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88 மாணவர்கள், 10க்கு, 10 மதிப்பெண்ணுடன் சி.ஜி.பி.ஏ., தரம் பெற்றுள்ளனர். அவர்களை, பள்ளியின் தாளாளர் மீனா முத்தையா மற்றும் முதல்வர் அமுதலஷ்மி வாழ்த்தினர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்திலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேர்வு எழுதிய, 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர், 10க்கு, 10 மதிப்பெண் தரம் பெற்றுள்ளனர். அவர்களை, சென்னை மண்டல துணை கமிஷனர் எஸ்.எம்.சலீம் மற்றும் முதல்வர் மாணிக்கசாமி வாழ்த்தினர்.

சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு.....

மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன.
'நீட்' தேர்வு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்
கேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளி கள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காம லேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன.பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்பெற்றோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

விதிமுறைகள் வருமாறு: பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும். வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும். நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
எழுத வேண்டும்அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து
உள்ளது. அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றனவா என, பெற்றோர் அறிவது அவசியம்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை...

 ''சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்திலும், கல்விக் கட்டணம் உயர்ந்து வருவதே, பெற்றோரின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
கல்விக் கட்டணம் எவ்வளவு, முந்தைய ஆண்டுடன் எந்த அளவுக்கு அது உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை வந்துள்ள தகவல்கள் குறித்து ஆராயப்படுகிறது. தகவல் அளிக்காத பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில், கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும்,
அதனடிப்படையில் மசோதா கொண்டு வர திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதும் அதுபோன்ற மசோதா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு திருவனந்தபுரம் மண்டலம் முன்னிலை.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம் மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது.
16 லட்சம் பேர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.26 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம், 99.85 சதவீத தேர்ச்சியுடன், வழக்கம் போல, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 99.62
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
'கிரேடு' முறை
இந்த தேர்வில், விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டு, மொத்த மதிப்பெண்களுக்கு, சி.ஜி.பி.ஏ., என்ற, தர வரிசை குறிக்கப்பட்டுள்ளது. மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, மொத்தம், 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்களுக்கு, 'கிரேடு' முறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கிரேடு அடிப்படையில், உயர்கல்வி தகுதி; மதிப்பெண்ணை உயர்த்தும் தேர்வு தகுதி, தகுதியில்லை என, 10 விதமான குறிப்புகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதவீத கணக்கீடு எப்படி?
சி.பி.எஸ்.இ., தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 தர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தாங்கள் எடுத்த, தர மதிப்பெண்களை கூட்டி, அதை ஐந்தால் வகுத்தால், மொத்தம் எவ்வளவு சி.ஜி.பி.ஏ., என்ற, தரவரிசை கூட்டுத் தொகை வரும். இதுவும், 10 மதிப்பெண்களுக்குள்
மட்டுமே வரும். பின், மதிப்பெண் சதவீதத்தை தெரிந்து கொள்ள, சி.ஜி.பி.ஏ., எண்ணை, 9.5 என்ற எண்ணால் பெருக்கினால், மொத்தம் எத்தனை மதிப்பெண் என்பது, சதவீதமாக வரும். உதாரணமாக ஒருவர், ஒன்பது சி.ஜி.பி.ஏ., எடுத்திருந்தால், அவரது மொத்த மதிப்பெண் சதவீதம், 85.5 சதவீதமாகும்.

சனி, 3 ஜூன், 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

புதுடில்லி: ''சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும், கல்விக் கட்டணம் உயர்ந்து வருவதே, பெற்றோரின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
கல்விக் கட்டணம் எவ்வளவு, முந்தைய ஆண்டுடன் எந்த அளவுக்கு அது உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை வந்துள்ள தகவல்கள் குறித்து ஆராயப்படுகிறது. தகவல் அளிக்காத பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில், கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களும், அதனடிப்படையில் மசோதா கொண்டு வர திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதும் அதுபோன்ற மசோதா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு....

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நேற்று 

வெளியாவதாக இருந்தன; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில், தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்த நேரம் என்பதை தெரிவிக்க வில்லை. பெரும்பாலும், நண்பகலுக்கு முன் வெளியாகலாம். தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், www.bing.com 
என்ற தேடல் தளம் மூலமும், தேர்வு முடிவை அறியலாம். 

வியாழன், 1 ஜூன், 2017

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், நேற்று வெளியாவதாக இருந்தது; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நாளை தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தாமதம் ஏற்பட்டால், ஜூன், 4ல் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 29 மே, 2017

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு - நொய்டா மாணவி முதலிடம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்ச்சி பட்டியலில், மத்திய 
அரசு பள்ளிகள் முதல் இடத்திலும், தனியார் பள்ளிகள் கடைசி இடத்திலும் உள்ளன. 

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தத் தேர்வை, 10 ஆயிரத்து, 673 பள்ளிகளை சேர்ந்த, 10.20 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இவர்களில், 8.37 லட்சம் பேர், அதாவது, 82.02 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டை விட, இது, 1.03 சதவீதம் குறைவாகும். மாணவர்களில், 78; மாணவியரில், 87.50 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நுாற்றுக்கு நுாறு : உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த, அமிட்டி பள்ளி மாணவி, ரக் ஷா கோபால், 498 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர், ஆங்கிலம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியலில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். 
பள்ளிகள் அளவில், மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகள், 95.73; கேந்திரிய 
வித்யாலயா பள்ளிகள், 94.6 சதவீதத்துடன், தேர்ச்சியில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 
அரசு பள்ளிகள், 82.29; அரசு உதவி, 81.63; மத்திய திபெத்திய பள்ளி, 83.57 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 79.27 சதவீதத்துடன், தேர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளன.மொத்த மதிப்பெண்ணில், 95 சதவீதத்திற்கு மேல், 10 ஆயிரத்து 91 பேர்; 90 சதவீதத்திற்கு மேல், 63 ஆயிரம் பேர் பெற்றுஉள்ளனர். மண்டல அளவில், திருவனந்தபுரம் முதல் இடத்திலும், சென்னை மற்றும் டில்லி, இரண்டு, மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளன.

19 கே.வி.,க்கள் 'சென்டம்' : தமிழகத்தில் உள்ள, 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 19 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, கே.வி.,யில், தேவிகா ராதாகிருஷ்ணன், அகிலாண்டேஸ்வரி ஆகியோர், 480 மதிப்பெண்கள் பெற்று, கே.வி., முதன்மை மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அஞ்சனா என்ற மாணவி, பொருளியலில் 'சென்டம்' பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாணவி 3ம் இடம் : சி.பி.எஸ்.இ., பிளஸ் ௨ தேர்வில், மாற்று திறனாளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளி மாணவி தர்சனா, 
483 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 
மாணவி தர்சனா கூறுகையில், ''எனக்கு, பிறந்ததில் இருந்த வலது கண் குறைபாடு இருந்தது. இடது கண்ணிலும், இரண்டு வயதில் கார்னியா ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு இருந்தாலும், சாதிக்க முடியும் என, என் பெற்றோர் ஊக்கம் அளித்தனர். நான், பி.காம்., படித்து, பிஸினஸ் மேனேஜ்மென்டில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறேன்,'' என்றார்.

ஞாயிறு, 28 மே, 2017

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10 ஆயிரத்து, 678 பள்ளிகளைச் சேர்ந்த, 4.60 லட்சம் மாணவியர் உட்பட, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வில், விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், கருணை மதிப்பெண் வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் தடை விதித்தது. 

அதனால், கருணை மதிப்பெண் இன்றி, தேர்வு முடிவுகளை, 25ல் வெளியிட, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், 'கருணை மதிப்பெண் முறையை, திடீரென ரத்து செய்யக்கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தேர்வு முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில், வாரிய உறுப்பினர்கள் கூடி ஆலோசித்து, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, 'தேர்வு முடிவுகள், இன்று நண்பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும்' என, அதிகாரப்பூர்வமாக, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. தேர்வு முடிவுகளை,
 www.results.nic.in, 
www.cbseresults.nic.in, 
www.cbse.nic.in 
என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்....

சனி, 27 மே, 2017

12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (28.05.2017)வெளியீடு.. கல்வி வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி : சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 24ந் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணை
மதிப்பெண் விவகாரத்தால் தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை. நாளை அல்லது நாளை மறு நாள் தேர்வு முடிவுகள் வெளியாகும்என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 12ம் தேதி தொடங்கிஏப்ரல் 9ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது. இந்ததேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
கருணை மதிப்பெண் மே 19ந் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மே 24ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்தஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டகடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்முறையை சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்தது.
நீதிமன்ற தீர்ப்பு இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் இதனை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதைரத்து செய்வது நியாமற்ற செயல் என உத்தரவிட்டனர்.
மதிப்பெண் வழங்க ஏற்பாடு இதையடுத்து நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்துவதற்காக சிபிஎஸ்இ இயக்குநர் சதுர்வேதி, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச்சந்தித்து பேசினார். கருணை மதிப்பெண் மாணவர்களுக்குவழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளன.
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு  நாளை மறுநாள் தேர்வு முடிவுகள்வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வெள்ளி, 26 மே, 2017

சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 'ரிசல்ட்' எப்போது?

புதுடில்லி : ''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


குழப்பம்:

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. மதிப்பெண் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

விளக்கம்:

இந்நிலையில், ''இது போன்ற தகவல்களால், மாணவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி, தீவிர கதியில் நடந்து வருகிறது. திட்டமிட்டபடி, சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்; அதில் எவ்வித தாமதமும் ஏற்படாது. தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 25 மே, 2017

'கிரேஸ் மார்க்' பிரச்னையால் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

'கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், கணிதம் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டும், கடினமாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவர்கள் இருந்தனர். 
ஆனால், கணிதம் எளிதாகவும், விலங்கியல் கடினமாகவும் இருந்தது. எனவே, விலங்கியல் வினாத்தாளை ஆய்வு செய்து, 'கிரேஸ் மார்க்' எனப்படும் கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது.ஆனால், கிரேஸ் மதிப்பெண், போனஸ் மதிப்பெண் போன்ற முறைகளை கையாளக் கூடாது என, மத்திய மனிதவள அமைச்சகம், ஏப்., 27ல் உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றம் உத்தரவு : இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவை, நேற்று வெளியிடுவதற்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் முடிவு செய்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, டில்லி உயர் நீதிமன்றம், கிரேஸ் மதிப்பெண் தொடர்பாக, ஒரு உத்தரவு பிறப்பித்தது.அதில் கூறப்பட்டு
உள்ளதாவது:தேர்வு அறிவித்து, அதன் நடைமுறைகளை மாணவர்களுக்கு தெரிவித்த பின், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. கிரேஸ் மார்க் இருப்பதால், மாணவர்கள் பலர், பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி, வெளிநாட்டு பல்கலைகளில், உயர் படிப்புக்கு இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 

நிதி நெருக்கடி : தற்போது, திடீரென மதிப்பெண் முறையில் மாற்றம் செய்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடியும் ஏற்படும். எனவே, இந்த ஆண்டு மதிப்பெண் கொள்கையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதை, சி.பி.எஸ்.இ., திடீரென நிறுத்தி 
வைத்துள்ளது. இதுகுறித்து, வாரிய உறுப்பினர்கள் கூடி முடிவு செய்த பின், மதிப்பெண் மாற்றுவதா அல்லது ஏற்கனவே தயாரான மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதா என, முடிவு செய்யப்பட உள்ளது.

புதன், 24 மே, 2017

சி.பி.எஸ்.இ. ரிசல்ட் இன்று இல்லை

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது. டெல்லி நீதிமன்ற உத்தரவால் மே மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

CBSE - க்கு இணையாக கல்வித்துறை மாற்றம்!!!

CBSE - க்கு இணையாக கல்வித்துறை மாற்றம்!!! மாற்றங்கள் 11&12 வகுப்பு
--------------------------------------------
மொழிப்பாடம் 1&2
----------------------------------------------
அகமதிப்பீடு மதிப்பெண் 10
கேள்வித்தாள் 90
மொத்தம் -------
100
--------
செய்முறைத்தேர்வு உள்ள பாடங்கள்
--------------------------------------------
அகமதிப்பீடு 10
செய்முறை மதிபெண் 20
கேள்வித்தாள் 70
மொத்தம் -----------
100
-----------
செய்முறை அல்லாத பாடங்கள்
—--------------------------------------
அகமதிப்பீடு மதிப்பெண் 10
கேள்வித்தாள் 90
மொத்தம் -------
100.........

செவ்வாய், 23 மே, 2017

சிபிஎஸ்இ +2 ரிசல்ட் : மே 24 !

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 24-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
http://cbse.nic.in/newsite/index.html ,   http://cbseresult.nic.in/ என்ற இணையத்தளத்தில்  தேர்வு முடிவுகளை அறியலாம்.

சிபிஎஸ்இ +2 ரிசல்ட் : மே 24 !

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 24-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
http://cbse.nic.in/newsite/index.html ,   http://cbseresult.nic.in/ என்ற இணையத்தளத்தில்  தேர்வு முடிவுகளை அறியலாம்.

சனி, 13 மே, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 சேர கடும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் சேர, மாணவர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பாடத்திட்டத்திற்கு மாறிய பள்ளிகள், மீண்டும் சி.பி.எஸ்.இ.,க்கு மாற விண்ணப்பித்துள்ளன.
தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், பாடங்களின் தரம் மற்றும் கற்பித்தல் திறன் குறைவாக உள்ளதாக, கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். அதனால், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற, தேசிய நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பு, குறைந்து வருகிறது. அதிலும், மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் தான் நடத்துகிறது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர, மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில், இதுவரை, பிளஸ் 2 மதிப்பெண்படி, 'கட் ஆப்' தரவரிசையில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
எனவே, அதிக, 'கட் ஆப்' மதிப்பெண் பெறுவதற்காக, பல சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2க்கு மட்டும், மாநில பாடத்திட்டத்தில் இணைந்து, தங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். தற்போது, நீட் தேர்வு கட்டாயமானதால், பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மீண்டும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற, பள்ளிக் கல்வித்துறையில் விண்ணப்பித்துள்ளன.