அடிக்கடி கை கால் மரத்து போகிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்
அடிக்கடி கைகால்கள் மரத்து போகும் அதற்கு காரணம் என்ன என்று தெரியுமா..!
அல்லது அப்படி அடிக்கடி ஏற்பட்டால் உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று யாராவது யோசித்தது உண்டா அப்படி யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்..! கால் மரத்து போக காரணம்: ஒரு மனிதனுக்கு இயற்கையாக நிறைய விஷயங்கள் நடக்கும் அதில் ஒன்று தான் இதுவும். தும்மல், விக்கல் போன்ற பிரச்சனைகளை இயல்பாக அதிகம் மனிதனுக்கு வரக்கூடியவை அதில் ஒன்று தான் இந்த மரத்தல் பிரச்சனையும்.
கை கால் அடிக்கடி மரத்து போக காரணம் ஒரு மனிதனுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அமைதி கிடைத்தால் அவர்களுக்கு இந்த பிரச்சனை வராது. அப்படி ஒவ்வொரு மனிதனும் மனதளவில் பாதிக்கப்படும் போது தலைவலி மற்றும் தூக்கமின்மை, செரிமான பிரச்சனை ஏற்படும்
இதனால் மனிதனுக்கு தசை பிடிப்பு, மனக்கவலை என சொல்லகூடிய ஆன்சைட்டில் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. எப்போவாது மட்டும் விறைப்பு தன்மை இருப்பதால் அதனால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் அடிக்கடி இது போன்ற விறைப்பு தன்மை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்வது நல்லது.
அடிக்கடி மரத்து போனால்..?அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்:
அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர் சத்து குறைவாக இருக்கும் அதனால் நீரிழப்பு நோய்கள் ஏற்படும். உடலில் அளவுக்கு அதிகமாக வேர்த்துக்கொட்டினாலும் அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும் தசை பிடிப்பு ஏற்பட்டு மறைத்து போகும். மனிதன் அதிகளவு டிப்ரஷன், பதட்டம், படபடப்பு, கோவம் ஏற்படும் போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இரத்த நாளங்களில் அதிகப்படியான பாரம் ஏற்பட்டு தசைகள் சுருளும் வாய்ப்பு உள்ளது.
******************************************************************-***********************************