மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் வீடு, அலுவலகம், மற்றும் தொழிற்சாலையில் சுமார் 8 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்க நகைகள், ரூ.16 கோடி மதிப்புள்ள வைர மற்றும் முத்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை கணக்கிட அதிகாரிகளுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், சோதனை நடவடிக்கைக்காக மாநிலம் முழுவதும் இருந்து 260 அதிகாரிகளைக் கொண்ட ஐந்து குழுக்களை அமைத்து. இந்த நடவடிக்கையில் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரும்பு வியாபாரி வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள் மற்றும் சில பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததனர்.மேலும் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கட்டுகட்டாக மறைத்து வைத்த பணத்தை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/MohammedAkhef/status/1557586678243504128
******************************************************************************************************