வெளி மாவட்ட , மாநிலங்களுக்கு செல்ல விண்ணப்பிப்பது எப்படி : முழுவிவரம்.....
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளும் ,மாநில எல்லைகளும் மூடி சீல் வைக்கபட்டுள்ளன
இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர் குடும்ப அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் வெளிமாநில பயணம் செய்யமுடியாமல் தவித்தார்கள்
இந்நிலையில் திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய மூன்று அவசர காரணங்களுக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்ல விண்ணபிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதற்க்காக ஒரு தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள், சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்களுக்கிடையோ அல்லது வெளிமாநிலங்களுக்கிடையோ பயணிக்க விரும்பினால், அவர்கள்
அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
அல்லது அந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலமூம் செய்தி அனுப்பலாம்
மேலும் gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.
சென்னை அல்லாமல் மற்ற இடங்களில் உள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்ச்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்
விண்ணப்பிப்பவர்களின் உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றது.
ஒரு அனுமதிச் சீட்டில் மொத்தம் 4 பேர் செல்லலாம். அனுமதிச் சீட்டில், எந்த இடத்துக்குச் செல்கிறார்கள், தேதி, நேரம், காரின் பதிவு நம்பர், நிறம், டிரைவரின் பெயர், விண்ணப்பித்தவரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன
....................................................................