கல்வி கடனை பெற மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்கிற இணைய தளத்திலும் விண்ணபிக்கலாம். மத்திய அரசால் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த இணைய தளத்தில் 39 வங்கிகள் இணைந்துள்ளன. இதை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.
இந்த இணையதளத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததால், மாணவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் வங்கிகளை நேரடியாக அணுகுகிறார்கள். வங்கிகளும், இந்த தளத்தைப்பற்றி சொல்லுவதில்லை. மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
உப்பு சப்பில்லாத விவாதங்களை நடத்தும் டி.வி கள் இரண்டு மூன்று நாட்களுக்கு “வித்யாலட்சுமி கல்வி கடன் இணைய தளம் - சமஸ்கிரத திணிப்பா? அல்லது இந்துத்துவா திணிப்பா?” என்கிற தலைப்பில் விவாதம் நடத்தினால், மோடி எதிப்பாளர்கள் பொங்குவார்கள். செக்யூலர் தலைவர்களும் பொங்கி அறிக்கை மேல் அறிக்கை விட்டு www.vidyalakshmi.co.in தளத்தை பிரபலபடுத்துவார்கள். தேசிய ஊட்கங்களும் பொங்கி எழுவார்கள்.
அரசாங்கமும், வங்கிகளும் இந்த தளத்தை மணவர்களிடையே பிரபலபத்தவில்லை. மாணவர்கள் நலன் கருதி டி.வி.களும், செக்யூலர் தலைவர்களும், இந்த பணியை செய்தால், நன்றாக இருக்கும். லட்சக்கணக்கான மாணவர்களும் பயனடைவார்கள்.
எனக்கு வேறு வழியே தெரியவில்லை.
www.vidyalakshmi.co.in தளத்தை மாணவர்களிடையே பிரபலப்படுத்த வேண்டுகிறேன்.
PM.ELUMALAI. BT Tr