சாதிச் சான்றிதழ் / Representational Image


சாதி மதம் அற்றவர் எனச்சான்றிதழ்பெறுவதற்கெனஅரசாங்கத்தில் தனிவழிமுறைகள் எதுவும்கிடையாதுவழக்கமாகசாதிச் சான்றிதழ்பெறுவது போலத்தான்சான்றிதழ் பெறமுடியும்.

விகடனின்#DoubtOfCommonManபக்கத்தில், ``சாதி மதம்அற்றவர் சான்றிதழ்வாங்குவது எப்படி?அதை அரசுத்துறைசார்ந்தவிண்ணப்பங்களில்குறிப்பிடலாமா?" என்றகேள்வியைஎழுப்பியிருந்தார் வாசகர்சூர்யபிரகாஷ்அந்தக்கேள்வியின்அடிப்படையில்எழுதப்பட்ட கட்டுரை இது.சாதிமத ஒழிப்பு குறித்தஉரையாடல்கள்எழும்போதெல்லாம் , `சாதிச் சான்றிதழ்களில்சாதியற்றவர்களாகக்குறிப்பிட்டாலே சாதிஒழியும்என்ற கருத்தும்முன்வைக்கப்படும்'.ஆனால்அது சரியானதீர்வு அல்லமக்களின்மனமாற்றமேமுழுமையான தீர்வாகஅமையும் என்றும் சிலர்கருதினாலும்சாதிமதஅடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப்பலரும் வரவேற்கவேசெய்கிறார்கள்.
  

சாதிமதஅடையாளமற்றவர்களாகத் தங்களைமுன்னிறுத்திக்கொள்ளவிரும்புகிறவர்களில்சிலர் சாதிச்சான்றிதழிலும் சாதி,மதம் இல்லை எனக்குறிப்பிடமுடிவெடுக்கின்றனர்.அவ்வாறு சாதிமதம்இல்லை எனப்பெறப்படும்சான்றிதழ்களைக்கொண்டு அரசுத்துறைசார்ந்து விண்ணப்பிக்கமுடியுமா என்ற கேள்விஎழுவது இயல்புதான்.இந்தியாவில்முதல்முறையாக சாதி,மதம் அற்றவர் எனச்சான்றிதழ் பெற்றுள்ளவழக்கறிஞர்..சினேகாவிடம்இதுகுறித்துப்பேசினோம்.

``சாதி மதம் அற்றவர்எனச் சான்றிதழ்பெறுவதற்கெனஅரசாங்கத்தில் தனிவழிமுறைகள் எதுவும்கிடையாதுவழக்கமாகசாதிச் சான்றிதழ்பெறுவது போலத்தான்சான்றிதழ் பெறமுடியும்.கிராம நிர்வாகஅலுவலரிடம் (V.A.O) நாம்விண்ணப்பத்தைஅளிக்க வேண்டும்.அதை அவர்உறுதிசெய்து வருவாய்ஆய்வாளருக்கு (R.I)பரிந்துரை செய்வார்.வருவாய் ஆய்வாளர்அதை வட்டாட்சியருக்குப்பரிந்துரை செய்வார்.வட்டாட்சியர் அதைத்சரிபார்த்து சம்பந்தப்பட்டபகுதியின் வி.. நேரில்சென்று கள ஆய்வுநடத்திய பின் சான்றிதழ்வழங்கப்படும்
  
இதுதான் சாதிச்சான்றிதழ்வாங்குவதற்கானவழிமுறைசாதி,மதமற்றவர் (`No Caste No Religion') எனச் சான்றிதழ்பெறவும் இதேவழிமுறைதான்நான்முதல்முறையாக இந்தச்சான்றிதழ் பெறுவதால்அந்த விண்ணப்பத்துடன்என் பள்ளி மாற்றுச்சான்றிதழை (School Transfer Certificate)சமர்ப்பித்தேன்அதில்நான் சாதிமதம்அற்றவர் எனக்குறிப்பிட்டிருந்தேன்.அதைச் சான்றாகவைத்து எனக்கு `No Caste No Religion'சான்றிதழ்வழங்கினார்கள்இதைப்போலவே சான்றிதழ்யாராவதுவைத்திருந்தார்கள்எனில்அதைஆவணமாக சமர்ப்பித்து`No Caste No Religion'சான்றிதழ் பெறலாம்.நான் சான்றிதழ் பெற்றபிறகுஊட்டியைச்சேர்ந்த பகத்சிங்,சுக்தேவ் , ராஜகுரு என்றமூன்று சகோதரர்கள்வாங்கினார்கள்.அவர்களின் பள்ளிச்சான்றிதழிலும் `No Caste No Religion' என அவர்கள்குறிப்பிட்டிருந்தார்கள்.ஆத்தூரைச் சேர்ந்த ரவிஎன்கிற தோழர் தனதுMBC சான்றிதழைக்கொடுத்துவிட்டு `No Caste No Religion'சான்றிதழ் பெற்றார்.இது சவாலான ஒன்று.ஏற்கெனவே சாதிச்சான்றிதழ்வைத்திருந்தவர் அதைச்சமர்ப்பித்துவிட்டு `No Caste No Religion'சான்றிதழ் வாங்கினார்.இவர் மட்டுமே பள்ளி,கல்லூரிகளில்சாதியைக் குறிப்பிட்டுபின் `No Caste No Religion'சான்றிதழ் பெற்றவர்.
  
இவற்றையெல்லாம்விடகவனிக்க வேண்டியமுக்கியமான ஒன்றுஎங்களுக்கெல்லாம்சான்றிதழ் வழங்கியதாசில்தார்கள்முற்போக்கு சிந்தனைகொண்டவர்களாகஇருந்ததுதான்.ஏனென்றால்இவ்வாறுசான்றிதழ் வழங்கவேண்டும் எனக்கேட்கும்போது வழங்கமுடியாது எனத்தெரிவிக்கதாசில்தார்களுக்குசட்டப்படியான உரிமைஉண்டு. `No Caste No Religion' சான்றிதழ்வழங்க வேண்டும் எனஎந்த அரசாணையும்நீதிமன்ற உத்தரவும்கிடையாதுஎனவே,தாசில்தார்கள் தங்கள்அதிகாரத்துக்கு உட்பட்டுஅதை மறுக்கவும்வாய்ப்புள்ளது.
  
தமிழ்நாடு அரசுபள்ளிச்சான்றிதழ்களில்சாதியைக் குறிப்பிடவேண்டியகட்டாயமில்லை எனஅரசாணைவெளியிட்டுள்ளது.தமிழகத்தில் மட்டுமேஇது நடைமுறையில்உள்ளதுபள்ளிச்சான்றிதழில் சாதிமதம்எனக் குறிப்பிட்டுள்ளஇடத்தில் `Verify Community Certificate'எனக் 
குறிப்பிடுகிறார்கள். `No Caste No Religion'சான்றிதழைஅரசுத்துறை சார்ந்தவிண்ணப்பங்களில்பயன்படுத்தலாம்.ஊட்டியில் `No Caste No Religion' சான்றிதழ்பெற்ற சுகுதேவ்தற்போது ராணுவத்தில்சேர்ந்துள்ளார்அவர் `No Caste No Religion'சான்றிதழைச்சமர்ப்பித்தே பணியில்சேர்ந்தார்
அதிகாரிகள் அவரைவெகுவாகப் பாராட்டியும்உள்ளனர். `No Caste No Religion' சான்றிழ்வழங்கலாம் எனஅரசாணை வரும்போதுஇது இன்னும்எளிமையாகும்.இடஒதுக்கீடு மட்டுமேசமூகநீதியைக் குறைந்தஅளவேனும் உயிர்ப்புடன்வைத்துள்ளது.இடஒதுக்கீடு மூலம்பயனடைபவர்கள்,முதல்முறை பட்டதாரிகள்சாதிச்சான்றிதழ்களையேபயன்படுத்த வேண்டும்என்பதான் நம் எண்ணம். `No Caste No Religion'சான்றிழ் வாங்குவதால்மட்டுமே சாதி ஒழியும்என்பதும் சரியானதல்ல"என்றார்.


.................................................................