காலையில் இஞ்சி,மதியம் சுக்கு, இரவில்கடுக்காய் என தினமும்இந்த மூன்றையும்உங்கள் அன்றாடம்சேர்த்துக் கொண்டால்உங்களுக்கு நோயேவராது என்பதுதெரியுமா?
இஞ்சியை நன்றாகஉலர வைத்தபின் நீர்வற்றிய எஞ்சியநிலையில்இருப்பதுதான் சுக்கு.இது கெடாது. ஆனால்ஆரோக்கியத்திற்குஅத்தனை நன்மைகள்அளிக்கின்றது.
சுக்கு நமது பழங்காலஉணவிலிருந்துபயன்படுத்திவருகிறோம். எத்தகையஉணவையும் செரிக்கவைத்துவிடும்.நச்சுக்களைமுறித்துவிடும்.குடல்களையும், உணவுப்பாதையையும்சுத்தப்படுத்தும்.அத்தகைய சுக்கைஎப்படி நாம் நமது உடல்உபாதைகளுக்குபயன்படுத்தலாமெனஇந்த கட்டுரையில்காண்போம்.
தீராத தலைவலிக்கு :
தலையை இடிப்பதுபோல் தலைவலிவந்தால், சுக்கை நீரில்உரசி அதனை பற்றாகபோட்டால் போதும். சிலநிமிடங்களில் தலைவலிமறைந்துவிடும்.தலையில்நீர்க்கோர்த்திருந்தால்,நீரை வற்றச் செய்யும்சிறப்பை சுக்குபெற்றுள்ளது.தலைவலிக்கு இதுசிறந்த பலனைத் தரும்.
அஜீரணப் பிரச்சனை :
1 டம்ளர் நீரை கொதிக்கவைத்து அடுப்பிலிருந்துஇறக்கி, நீரில்1 ஸ்பூன்சுக்குப் பொடியைகலந்து உடனே மூடிவைத்திடுங்கள்.வெதுவெதுப்பாக ஆறியபின் அந்த நீரில் தேன்அல்லது சர்க்கரைகலந்து குடிக்கவேண்டும்.
இதனால் வயிற்று வலி,விலாப்பகுதியில்ஏற்படும்குத்தல்,குடைச்சல்,புளித்த ஏப்பம்,அஜீரணக்கோளாறு,நெஞ்செரிச்சல்,மூக்கடைப்பு,ஜலதோஷம், காதில்வலி, குணமாகும்.
வாய் துர் நாற்றம் :
சுக்குப்பொடியைஉப்புடன் சேர்த்துதினமும் காலையில்பற்களை விளக்கலாம்.மேலும் ஈறுகளையும்இந்த பொடிக் கொண்டுமசாஜ் செய்தால் பல்கூச்சம், பற்சொத்தைஏற்படாமல் தடுக்கும். பல்வலி குறையும். வாய் துர்நாற்றம் குணமாகும்.
வாய்வுபிடிப்பிற்கு :
சரியான சாப்பாடு,தூக்கம்இல்லாதபோதும், மனஅழுத்தம்இருக்கும்போதும்வாய்வுபிடிப்புஉண்டாகும். அந்தசமயத்தில் அரை ஸ்பூன்சுக்குப் பொடியுடன்,அரை ஸ்பூன் சர்க்கரைசேர்த்து வாயில் போட்டுதண்ணீர் குடித்தால்உடனடி நிவாரணம்பெறலாம்.
நோயில்லாத வாழ்வு :
வாரம் ஒருநாள் சுக்குப்பொடி சேர்த்து குழம்புசெய்து சாப்பிட்டுவந்தால் நோய்கள்இல்லாமல் வாழலாம்.
முக்கியமாக 40வயதுக்குமேற்பட்டவர்கள்இதுபோன்று உணவில்சுக்கை சேர்த்து வந்தால்வாத நோய்கள்,மலச்சிக்கல், ஆஸ்துமாபோன்றவை வராமல்காத்துக்கொள்ளலாம்.
மூட்டு வலி:
மத்திய வயதுஆனவுடன் மூட்டு வலிஆரம்பிக்கும். சில சமயம்அமர்ந்து எழ முடியாதபடிஆகும்.அப்படியானவர்கள்சுக்கை தட்டி பாலுடன்சேர்த்து அரைத்துமூட்டுகளுக்கு பற்றுபோல் போட்டு வந்தால்மூட்டு வலியிலிருந்துவிடுதலை பெறலாம்.
கபம் கரைய :
சுக்கு, மிளகு, தனியா,திப்பிலி, சித்தரத்தை,ஆகியவற்றை பொடிசெய்து அல்லது இந்தஐந்தும் கலந்துபொடியை நாட்டு மருந்துகடையில் வாங்கிஅதனை னீரில் காய்ச்சிகுடித்தால் எப்பேர்ப்பட்டசளி மற்றும் கபம்விலகும்.
வயிற்றுப் பூச்சிகள்அழிய :
சுக்குப் பொடியைஅல்லது சுக்கைவெங்காயத்துடன்அரைத்து சாப்பிட்டால்வயிற்றிலுள்ள பூச்சிகள்அழிந்துவிடும்.உடலிலுள்ள நச்சுக்கள்வெளியேற்ற உதவும்.
போதை தெளிய :
சுக்கை , வரகொத்துமல்லியுடன்சிறிது நீர் சேர்த்துநைசாக அரைத்துஅதனை சாப்பிட்டால்மதுவினால் ஏற்பட்டபோதை அடியோடுகுறைந்துவிடும்
சுக்குக் காபி :
சுக்குக் காபி குடிப்பதால்சோர்வு நீங்கிபுத்துணர்வுபெறுவீர்கள். அஜீரணப்பிரச்சனைகள் நீங்கும்.முக்கியமாகமலச்சிக்கல்குணமாகும்.மந்தத்தன்மை மறையும்.
விஷக்கடிகள்குணமாகும் :
தேள், வண்டு போன்றவிஷப் பூச்சிகள்கடித்துவிட்டால்உடனடியாக ஒருவெற்றிலையில் சுக்கு, 5மிளகு சேர்த்து மென்றுசாப்பிட்டால் பூச்சியின்விஷத்தை முறிக்கலாம்