>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 10 மே, 2018

O.T.P சொன்னால் தான் ரேஷன் கிடைக்கும்... கடத்தலை தடுக்குமா பாஸ்வேர்டு முறை!

ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி
,அதை சரி பார்த்த பின்பே, ரேஷன் வழங்கும் புதிய நடைமுறை,
 கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில்
 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், 2 கோடியே, 13 லட்சத்து, 183 ஸ்மார்ட் ரேஷன் 
கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மொத்தம், 6 கோடியே, 75 லட்சத்து, 
44 ஆயிரத்து, 229 ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர்.

இதுவரை, 6 கோடியே, 40 லட்சத்து, 18 ஆயிரத்து, 310 ஆதார் 
அட்டைகளும், ஒரு கோடியே, 94 லட்சத்து, 7 ஆயிரத்து 132 மொபைல் 
எண்களும், ஸ்மார்ட் கார்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம்
 முழுக்க, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகள் வாயிலாக,
 உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
 தற்போது புழக்கத்திலுள்ள ஸ்மார்ட் கார்டில், ‘க்யூ.ஆர்.,’ கோடு 
என்ற மென்பொருள் பதிக்கப்பட்டுள்ளது.அதை ரேஷன் 
கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்து, அதன்பின்பே
 பொருட்கள் வழங்கப்படுகிறது. வழங்கிய பொருள்
 பற்றிய விபரம், ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட
 மொபைலுக்கு குறுஞ்செய்தியாகச் செல்கிறது.

இதற்குப் பதிலாக, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த 
உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
 இம்முறையில், பொருட்கள் தரும்முன்பே, ஸ்மார்ட் கார்டை,
 ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்தவுடன்,
 மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.அதில் ஓ.டி.பி.,
 (ஒரு முறை கடவு எண்) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை
 ரேஷன் கடைக்காரரிடம் தெரிவித்தால், அதை சரி பார்த்த பின்பே,
பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையினால்,
 உண்மையான
 ரேஷன் கார்டுதாரருக்கே பொருட்கள் போய்ச்சேரும்;
 உணவுப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 
தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவு 
வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

சோதனை முறையில், கோவை மாவட்டம் முழுவதும்,
 இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, மொபைல்
 எண்ணை, ஸ்மார்ட் கார்டில் இணைக்காத கார்டு தாரர்கள்
 இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வசதி,
 மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொருந்தாது என்று 
உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவையில் இத்திட்டத்தை 
சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக
 எங்களிடம் தகவல்களை சென்னையிலிருந்து கேட்டுள்ளனர். 
‘நாங்களும் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளோம்.
 அரசு உத்தரவுக்குப்பின், இத்திட்டம் கோவையில் 
நடைமுறைப்படுத்தப்படும்’ என்றனர். ரேஷன் பொருட்கள்
 கடத்தலின் முக்கிய கேந்திரமாகவுள்ள கோவையில், 
கடவு எண் முறையால், கடத்தல் தடுக்கப்பட்டால் மகிழ்ச்சி.....

புதன், 9 மே, 2018

நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை


நீலகிரி : கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மலர்க கண்காட்சி மே 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இலவச வங்கிச் சேவைக்கான வரி விதிப்பை அரசு திரும்பப் பெறுகிறது...




டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி அளித்த சேவைகளுக்கான சேவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு ஒன்றை வங்கிகளுக்கு அனுபி இருந்தது. வங்கிகள் அளிக்கும் பல சேவைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காததால் இலவச சேவைகள் வரி விதிப்பிற்கு அப்பாற்பட்டவை என வங்கிகள் கருதி வந்தன. இதனால் வங்கிகள் அதிர்ச்சி அடைந்தன.

அதை ஒட்டி வங்கிகள் தங்களுக்கு இதனால் இழப்பு நேரிடும் என அரசுக்கு தெரிவித்தன. மேலும் இலவச சேவைகளுக்கு வரி வசூலிப்பதை வங்கி வாடிக்கையாளர்களும் எதிர்த்தனர். இந்த வரி விதிப்பு குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைக்காதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கும் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், "வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. ஆலோசனை முடிவில் வங்கிகள் அளிக்கும் இலவச சேவைகளுக்கான வரி விதிப்பை திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.

ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் ஆங்கில இலக்கணம் மற்றும் பேசுதல் திறனை வளர்க்க உதவும் video


English Alphabet A to Z




Vowels and Consonants


Consonant Sounds

'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு


'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும், மே, 6ல் நடந்தது. விண்ணப்பித்திருந்த, 13.27 லட்சம் மாணவர்களில், 96 சதவீதமான, 12.73 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் இருந்து, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது.

இதில், வேதியியல் மற்றும் உயிரியல் கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.தவறான விடைக்கு, 'மைனஸ் மார்க்' உண்டு என்பதால், தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளை மட்டும், மாணவர்கள் எழுதியுள்ளனர். இயற்பியலில் பெரும்பாலான கேள்விகள் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் இருந்ததால், அவற்றுக்கு தவறான விடை எழுதி, மதிப்பெண் குறைந்து விடக்கூடாது என, மாணவர்கள் பதில் எழுதாமல் விட்டுள்ளனர்.இந்நிலையில், நீட் வினாத்தாள் குறித்து, பல்வேறு பயிற்சி மையங்கள், ஆய்வு நடத்தியுள்ளன. அதன்படி, வினாத்தாளில், பிளஸ் 2வுக்கு நிகராக, பிளஸ் 1 கேள்விகள் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, 'டாப்பர் டாட் காம்' இணைய பயிற்சி நிறுவனத்தின், துணை தலைவர் ராஜசேகர் ராட்ரே வெளியிட்ட ஆய்வில், 'இந்தாண்டு, நீட் தேர்வு வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்தது. 'மற்ற பாடங்களை விட, இயற்பியல் பாடம் மிக கடினமாக இருந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.பிளஸ் 2 பாடத்திட்டத்தில், இயற்பியலில், 24 கேள்விகள்; வேதியியலில், 20; உயிரியலில், 46 கேள்விகள் என, மொத்தம், 90 கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு நிகராக, பிளஸ் 1 பாடத்திட்டத்திலும், இயற்பியலில், 21; வேதியியலில், 25 மற்றும் உயிரியலில், 44 கேள்விகள் என, 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இயற்பியலில், 34; வேதியியலில், 24 மற்றும் உயிரியலில், 48 கேள்விகள் எளிதாக இருந்துள்ளன. மூன்று பாடங்களிலும் சேர்த்து, 12 கேள்விகள், மிக கடினமாகவும்; 62 கேள்விகள் சமாளிக்கும் வகையிலும் இருந்ததாக, பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில், பிளஸ் 2 பாடத்துக்கு நிகராக, பிளஸ் 1 பாட அம்சங்கள் இடம் பெற்றதால், பிளஸ் 1 பாடத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு : பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ்

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் மனுவில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகளை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட தடை விதிக்க கோரியுள்ளார். பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. ஆனால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரையும் இழந்து விடுகிறார்கள்.

எனவே பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு பதில் பெற்றோர் முன்னிலையில் உரிய பள்ளிகளிலோ அல்லது தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமோ நேரடியாக அளிக்கலாம். பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தை கூட்டி, மாணவர்களின் தேர்வு முடிவுகளை வழங்கினால், தற்கொலை முயற்சி தடுக்கப்படும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த முறைகளை பின்பற்றினால் மாணவர்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்க முடியும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். தனத கோரிக்கை பற்றி அரசுக்கு மனு அளித்ததாகவும் ஆனால் அரசோ உரிய பதில் ஏதும் அளிக்கவில்லை என்றும் மனுவில் செந்தில்குமார் கூறியுள்ளார். செந்தில்குமாரின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை  4 வாரங்களில் பதிலளிக்க கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

அரசுப்பள்ளிகள் மூடும் நிலைக்கு யார் காரணம்? - விரிவான தலையங்கம்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்.

செவ்வாய், 8 மே, 2018

பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 6ல் முடிந்தது. இதில், 8.66 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 11ல் துவங்கி, அந்த மாத இறுதியில் முடிந்தது. மாநிலம் முழுவதும், 80 மையங்களில் விடை திருத்த பணிகள் நடந்தன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இதில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மதிப்பெண்களை பதிவு செய்து, பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே, 12க்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி, 16ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிரு

சனி, 5 மே, 2018

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை சொன்னதை செய்த மாணவி


திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 'ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்' எனக் கூறிய மாணவி, அதேபோல், சாதித்து காட்டினார்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே, தேவனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நீலகண்டன் என்ற மகனும், நித்யா என்ற மகளும் உள்ளனர்.இதில், நித்யா, 34. கடந்த, 2013ல், ஐ.ஆர்.எஸ்., தேர்வெழுதி வெற்றி பெற்று, வருமானவரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
'தினமலர்'
இவர், திருப்பூர், பாளையக்காடு முருகப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில், 1998 - 99ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 468 மதிப்பெண்பெற்றார்.அப்போது, 'தினமலர்' திருப்பூர் பகுதியில் வெளியான, 'சாதனை மொட்டுகள்' பகுதிக்கு, அவர் அளித்த பேட்டியில், 'கல்வியில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ்., ஆவது என்லட்சியம்' என்றார்.நம்பிக்கையை சிறிதும் தளரவிடாத அவர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,085 மதிப்பெண்பெற்றார். 
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அதன்பின், ஐதராபாதில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருப்பினும், அவரது ஐ.ஏ.எஸ்., கனவு, அவரது துாக்கத்தை கலைத்து கொண்டே இருக்க, ஐதராபாதில், சிறப்புப் பயிற்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினார். நான்காவது முயற்சியில், அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
223வது, 'ரேங்க்'
நித்யா கூறிய தாவது:இன்ஜி., படிப்பு முடித்து, வேலை செய்து கொண்டே, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினேன். நான்காவது முயற்சியில், இந்திய அளவில், 223வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றேன்.ஒன்றரை வயது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். கிராமப்புற மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், எனது பணி அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
...............................................................................................................................................................

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை...

சென்னை:''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வரும், 31ம் தேதி வரையிலான, கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நேற்று துவங்கின. இதை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:தமிழகத்தில், அரசு பள்ளிகளை சேர்ந்த, 3,145 மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 
ஒன்பது தனியார் கல்லுாரிகளில், உணவு, உறைவிடத்துடன் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, அரசின் கட்டண நிர்ணய கமிட்டி வழியாக, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரத்தை, பள்ளிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். கமிட்டி நிர்ணயித்ததைவிட, அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. அதிக கட்டண வசூல் குறித்து, புகார் அளித்தால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய பாடத்திட்டத்திட்டங்கள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உதயசந்திரன் பேச்சு

மே 4ல் புதிய பாடத்திட்டம் வெளியீடு....

அனைத்து பகுதிகளிலும் மழலையர் பள்ளி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

ஆந்திராவைப் போல் ஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிடங்கள் மாற்றம்... பள்ளிக்கல்வித் துறை புதிய முடிவு.

புதன், 2 மே, 2018

ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? அனுதீப்பின் அனுபவங்கள் #BBCExclusive

யு.பி.எஸ்.சி 2017ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த முறை 990 மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைISHETTY
பிபிசி சந்தித்தபோது அனுதீப் தன்னுடைய வெற்றிக்கதையை பகிர்ந்து கொண்டார்.
"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் முதலிடம் பெற்றதைவிட என் எதிரில் இருக்கும் பொறுப்புகளே பெரிதாக தெரிகிறது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
"கடின உழைப்பின் அடிப்படையில் மட்டுமே இந்த இடத்தை பிடித்திருக்கிறேன், உழைப்புக்கு எந்த ஒரு மாற்றும் இல்லை" என்கிறார் அனுதீப்.
"நாம் எதைச் செய்தாலும் சரி, அது விளையாட்டாக இருந்தாலும்கூட நமது இலக்கு எப்பொழுதும் சிறப்பானதை அடைய வேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும். இதை என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன், தேர்வுகளுக்கு தயார் செய்யும்போதும் என் தந்தையின் மந்திரத்தையே பின்பற்றினேன்" என்று விளக்குகிறார் அனுதீப்.
சரித்திரம், சுயசரிதை புத்தகங்களை படிப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் அனுதீப், அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் ஆளுமை தமக்கு மிகவும் பிடித்தமானது என்று சொல்கிறார்.
ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைபடதTTY
"ஆபிரகாம் லிங்கன் எப்பொழுதும் எனக்கு உத்வேகம் அளிக்கும் தலைவராகவே திகழ்கிறார். பல தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் அவர், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் சவால்களை எதிர்நோக்கி வெற்றி பெற்று தனது நாட்டை வழிநடத்தி சென்றவர்" என்கிறார் அனுதீப்.
சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தான் தயார் செய்ததை பற்றி விரிவாக விளக்கியபோது. "இது மிகவும் கடினமான தேர்வு. ஏனெனில் தகுதி வாய்ந்த பலர் அதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சி பட்டியலில் தகுதிவாய்ந்தவர்களில் சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது, விடுபட்டவர்களில் பலர் திறமையானவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தினசரி எத்தனை மணிநேரம் படிக்கிறோம் என்பதைவிட என்ன படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பது முக்கியம்" என்று கூறினார்.
2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய வருவாய் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அனுதீப்.
"தற்போது ஐதராபாத்தில் வருவாய்துறை உதவி ஆணையராக பதவி வகிக்கிறேன், பணியில் இருக்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களிலும், வார இறுதிகளிலும் தேர்வுகளுக்காக தயார் செய்துக் கொண்டிருப்பேன். எப்போதும் நமது முயற்சி சிறந்ததாக இருக்க வேண்டும், கடின முயற்சியும், தொடர் உழைப்பும் பலன் தருவது உறுதி" என்று தனது வெற்றியின் ரகசியத்தை சொல்கிறார் அனுதீப்.
வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அனுதீப்புக்கு கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதிலும், கால்பந்து போட்டிகளை பார்ப்பதில் விருப்பம் கொண்டவர் அவர்.
"கால்பந்து எப்போதும் என் வாழ்வின் ஓர் அங்கமாகவே இருந்தது, நான் மிகவும் நன்றாக கால்பந்து விளையாடுவேன். மன அழுத்தம் ஏற்பட்டால் அதை குறைக்க கால்பந்து விளையாடுவேன். கதை புத்தகங்கள் படிக்கவும் எனக்கு பிடிக்கும். கற்பனைக் கதைகளை அதிகம் படித்ததில்லை, ஆனால் உண்மையான விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை படிப்பேன்" என்கிறார் அவர்.
ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைபடத்தY
கல்வி துறையில் பணியாற்ற விரும்பும் அனுதீப்
"நேரம் கிடைக்கும் போதெல்லாம், விளையாடுவேன் அல்லது படிப்பேன். அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். இவை நமது மன அழுத்தத்தை போக்குவதோடு, நம்மை வலிமையாக்குகிறது. எனது பொழுதுபோக்கு என்னை உருவாக்கியிருக்கிறது என்றே கூறுவேன்" என்கிறார் அவர்.
அனுதீப்பின் குடும்பத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் இந்த செய்தியை கேட்டதும் குடும்பத்தினரின் மறுமொழி எப்படி இருந்தது? "இந்த செய்தியை கேட்டபிறகு, அம்மாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழியத் தொடங்கியது, அப்பாவுக்கோ அதை இன்னும்கூட நம்ப முடியவில்லை, அது மிகவும் மகிழ்ச்சியான தருணம், என்னாலும் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அனுதீப்.
தனக்கு வழங்கப்படும் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கும் அனுதீப், கல்வி துறையில் பணிபுரிவது தனது முதல் தெரிவு என்று சொல்கிறார்.
கல்வி பற்றி விரிவாக பேசும் அனுதீப், "உலகின் வளர்ந்த நாடுகளில், உதாரணமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் கல்வி நிலை மிக உயர்ந்த நிலையில் உள்ளது, வலுவான கல்வி முறையே அவர்களின் வளர்ச்சிக்கான ஆணிவேர்" என்று சொல்கிறார்.
“நாம் புதிய மேம்பட்ட இந்தியாவை உருவாக்க விரும்பினால், நமது கல்வி முறையை மேம்படுத்த வேண்டும். அதற்கான திசையில் வேலை செய்ய வேண்டும். என்னுடைய வளர்ச்சி பயணத்தில் நாட்டிற்கான பங்களிப்பை ஏதாவது ஒருவகையில் வழங்க விரும்புகிறேன் " என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைபடத்தின் காப்புரிTTY
தெங்கானாவின் கிராமத்தை சேர்ந்தவர் அனுதீப்
தனது வெற்றியின் பின்னணியில் இருப்பது தனது தந்தைதான் என்று உறுதியாக கூறுகிறார் அனுதீப். "அப்பாதான் எனக்கு முன்மாதிரியாக இருக்கிறார், தெலங்கானாவில் உள்ள தொலைதூர கிராமத்தை சேர்ந்த என் தந்தை கடினமாக உழைத்து முன்னேறியவர். அவருடைய உழைப்புதான் எனக்கு சிறந்த கல்வியை தந்தது. வேலையில் கடினமாக உழைப்பதோடு, உயர் தரத்தையும் கடைப்பிடித்து வரும் என் அப்பாவைப் போல இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்கிறார் இந்த கடின உழைப்பாளி.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - என்ற திருக்குறளுக்கு ஏற்ப அனுதீப்பின் தந்தை கடின உழைப்பினால், கற்றவர் கூட்டத்தில் முந்தியிருக்கும்படியாக மகனை கல்வியில் மேம்படச் செய்தால், மகனோ,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று பெற்றவர்களை பெருமை கொள்ள செய்திருக்கிறார்.
...............................................................................................................................................................................

ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன்; வெற்றிக்கு யாரெல்லாம் காரணம்? உற்சாக பேட்டி...



தருமபுரி ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன் கீர்த்திவாசனுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இவரை காண அரசியல் கட்சியினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் தருமபுரியைச் சேர்ந்த வெ.கீர்த்திவாசன் என்பவர் அகில இந்திய அளவில் 29-வது இடத்திலும், தமிழகத்தில் முதலாவது இடத்திலும் முதல் முயற்சிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், சொந்த ஊரான தருமபுரி வந்த வெ.கீர்த்திவாசனுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதை தொடர்ந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு, ஓய்வு பெற்ற ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முனியப்பன் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வெ.கீர்த்திவாசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு அதிக அளவில் படித்து தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

தருமபுரியில் பள்ளி படிப்பை முடித்து தொடர்ந்து திருச்சி ஐ.ஐ.டி. கல்லூரியில் கட்டிட பொறியாளர் படிப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரிக்கு வருகை தந்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பார்த்து நாமும் இது போன்று உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன்.

என்னை போன்று இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக்கி கொள்ள வேண்டுமானால் கடுமையாக படித்து போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.

நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகி ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிவதுடன், அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன். எனது இந்த முயற்சிக்கு தந்தை வெங்கடேஷ்பாபு, தாயார் தீபா மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் திறன்: ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வித் 
திறனை மேம்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும்
 புதிய கற்பித்தல் முயற்சிகளை ஊக்குவிக்க பள்ளிக்
 கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1.3 கோடி மாணவர்கள்
 படித்து வருகின்றனர். அவர்களுக்கு வகுப்பறையில்
 வழக்கமான கற்பித்தலுடன் வரைபடங்கள், கணினி, 
விடியோக்கள், கணிதப் பாட பாடல்கள், பெருக்கல் வாய்ப்பாடு 
ஒப்புவிக்கும் போட்டி என, பல்வேறு வித்தியாசமான முறைகளில் 
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் மாணவர்கள்
 மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் அறிவியல், 
கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் கூறப்பட்டுள்ள
 விஷயங்களைத் தாங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள
 முடிகிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்,
 குறிப்பாக கிராமப்புறங்களில் வித்தியாசமான கற்பித்தலில்
 ஈடுபடும் ஆசிரியர்களை ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை
 முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசுப் பெண்கள்
 மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியை கேத்தரின் ரூபி தெரசா, 
கணித கற்பித்தல் குறித்து 100 -க்கும் மேற்பட்ட விடியோக்களை
 உருவாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதேபோன்று, ஈரோடு மாவட்டம், நாதகவுண்டன் பாளையம்
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தே.தாமஸ்
 ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்) உள்பட
 தமிழகம் முழுவதும் 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
 புதுமையான செயல்பாடுகள் மூலம் கற்பித்து வருகின்றனர்.

புதிய வலைதளம் உருவாக்கம்: இதுபோன்ற புதிய முயற்சிகளை
 ஒரே கூரையின்கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், புதுமையான
 கற்பித்தல் முறை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களைச்
 சென்றடையும்.

இதற்காக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் புதிய வலைதளம்
 தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஆசிரியர்களின் விடியோக்கள், புதுமையான கற்பித்தல்
 திட்டங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்

படும்.

அதில் அதிகம் பேரின் கவனத்தைப் பெறும் ஆசிரியர்கள் உரிய
 முறையில் கௌரவிக்கப்படுவர். வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 
வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள
 நிலையில், இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவியாக
 இருக்கும் என்றனர் அவர்கள்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமா?

புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி 
ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இந்தப்
 பயிற்சியின்போது பாடநூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
 புதிய தொழில்நுட்பம், கற்பித்தலில் செய்யப்பட்டுள்ள
 மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்படும்.

தற்போது தங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என தனியார்
 பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப்
 பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முழுவதுமாக 
முடிவடைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக
 புதிய பாடத் திட்டம் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும் என
 பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். Court Order - கள்ளர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு. முறையான காலிப் பணியிடம், முறையான நியமனம்.

TAMILNADU ENGINEERING ADMISSION 2018

அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதிகளின் மகள் IAS தேர்வில் வெற்றி

செவ்வாய், 1 மே, 2018

மே 1 உழைப்பாளர் தினம் பற்றிய தகவல் !!!!





இன்று உழைப்பாளர் தினம். உழைக்கும்

 மக்கள் எல்லோருக்கும்  கல்விச்சிகரத்தின்

 வாழ்த்துகள்.......


எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும் முக்கியமாக கட்டிடம் கட்டும் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் போன்ற கடின உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து, அவர்களது உழைப்பின் கடினத்தை உணர்ந்து நம்முடைய நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.
அதோடு இந்த உழைப்பாளர் தினம் எப்படி வந்தது? என்று சில நாட்களுக்கு முன் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
உழைப்பாளர்கள் தினம்!
தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம்தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
உழைக்கும் உழைப்பாளிகளுக்கு கல்விச்சிகரத்தின் வாழ்த்துக்கள்.............
இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே தினம் !!!