செவ்வாய், 19 செப்டம்பர், 2017
வங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்விக்குமா எஸ்.பி.ஐ?
எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்’ என்ற நடைமுறையைத் தளர்த்துவதுகுறித்து தற்போது ஆலோசித்துவருகிறது.
'ஏப்ரல் 1-ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ கூறியிருந்தது.
அதன்படி, பெருநகரங்களில் மினிமம் பேலன்ஸைவிட 75 சதவிகிதம் குறைவாக இருந்தால், 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். மினிமம் பேலன்ஸ் 50-75 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால் 75 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். 50 சதவிகிதத்துக்குக் கீழ் இருந்தால், 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். நகரப் பகுதிகளில் மினிமம் பேலன்ஸைவிட குறைவாக இருந்தால், 20 முதல் 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தொடர் புகார்களை அடுத்து, தனது அபராத விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்துவதுகுறித்து எஸ்.பி.ஐ ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், அது மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மட்டுமானதாகக் கொண்டுவரப்போவதாகவே வங்கி வட்டாரம் கூறுகிறது.
நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, அவர்களின் விண்ணப்பம் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் பிழைகள், மாற்றங்கள் இருந்தால், திருத்தி கொள்ளலாம்.
இதற்கான அவகாசம், இன்று முதல், வரும், ௨௫ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.திருத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், cbsenet.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளலாம்
வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்
வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..
'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை என்றும் வரும் நவம்பரில் தமிழகப் பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய பாட திட்டம் தயாரிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதய சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என கோரி காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உதய சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உதயசந்திரனை நீக்கிவிட்டு, பிரதீப் யாதவை செயலாளராக அரசு நியமித்துள்ளது என மனுதாரர் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் விளையாடக் கூடாது. அந்த அதிகாரியை மாற்றியது ஏன்? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், உதய சந்திரன் நீக்கப்படவில்லை. அதே நேரத்தில் துறையின் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பாட திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் மாதம் புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்படும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, உதய சந்திரன் நீக்கப்படவில்லை என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் சூரியப்பிரகாசம் ஆஜராகி, நீதிபதியிடம் பள்ளிகளில் அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால், நீட் போன்ற தேர்வுகளை எழுத மாணவர்கள் கடும் சிரமப்படுகிறார்கள் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, அரசு வக்கீலைப் பார்த்து, ஏற்கனவே, இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் உத்தரவை அமல்படுத்தவில்லை. மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்...
அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அசல் கல்விச் சான்றுகளுடன் செல்ல வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களுக்கான கவுன்சலிங்கும் நடத்தப்படும். பணி நியமன உத்தரவுகள், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் 21ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார்.
CPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்.
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்?
2003ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை என்றால் எப்போது கொடுக்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நிதித்துறை செயலாளர் சித்திக் சார்பில் அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய் காந்தி நீதிமன்ற கேள்விகளுக்கு பதிலளித்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2004 ஆகஸ்ட் 4ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவின்படி அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்துடன் அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து பொது கணக்கில் செலுத்தப்படுகிறது. மார்ச் 2017 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.18,016 கோடி இருப்பு உள்ளது. 2016-17 கணக்கு சீட்டு அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டு, இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியம் தொடர்பாக 2016 பிப்ரவரி 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு, மரணம், பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தொகை உடனடியாக கொடுக்கிறோம். கருவூலம், கணக்கு துறை ஆணையர் அறிக்கைபடி 2017 ஆகஸ்ட் 31 வரை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கணக்கை முடிக்க கேட்டு 7450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125,24,24,317 வழங்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான ஆவணங்கள் கிடைத்தபிறகு ஒப்புதல் வழங்கப்படும். அரசு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
* 2003 ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
* 2004 ஆகஸ்ட் 6ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதை பின்பற்றி 2004 ஜனவரி 1 முதல் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்.
'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
திங்கள், 18 செப்டம்பர், 2017
தேனியில்.... நாடகத்துடன் இணைந்த கல்விசார் உரையாடல் நிகழ்ச்சி. ....
கலகலப்பு வகுப்பறை சிவாவும்
மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும்
கோமாளிகளாக நடிப்பதோடு கல்வி சார் உரையாடலை நெறியாள்கையும் செய்யஉள்ளனர்.
மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும்
கோமாளிகளாக நடிப்பதோடு கல்வி சார் உரையாடலை நெறியாள்கையும் செய்யஉள்ளனர்.
நாடகம் -"கோமாளியின் குதிரை "
உரையாடல் - " கனவு பள்ளி கனவு ஆசிரியர் கனவு சமூகம் "
உரையாடல் - " கனவு பள்ளி கனவு ஆசிரியர் கனவு சமூகம் "
தலைமை
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கத்தின் முன்னோடியும்
விஞ்ஞானச்சிறகுகள் இதழின் ஆசிரியருமான
பேரா.பொ.இராசமாணிக்கம் அவர்கள்.
விஞ்ஞானச்சிறகுகள் இதழின் ஆசிரியருமான
பேரா.பொ.இராசமாணிக்கம் அவர்கள்.
சிறப்பு விருந்தினர்கள்
* நீதியரசர் ப.மதுசூதனன் அவர்கள்
மாவட்ட நீதிபதி, வேலூர்.
மாவட்ட நீதிபதி, வேலூர்.
* திருமிகு. V. பொன்ராஜ் அவர்கள்
பாரதரத்னா A.P.J.அப்துல்கலாம் அவர்களது அறிவியல் ஆலோசகர்
பாரதரத்னா A.P.J.அப்துல்கலாம் அவர்களது அறிவியல் ஆலோசகர்
* திருமிகு. துளசிதாசன் அவர்கள்
கனவு ஆசிரியர் - நூலாசிரியர்
கனவு ஆசிரியர் - நூலாசிரியர்
* திருமிகு. பாஸ்கர்சக்தி அவர்கள்
எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா
எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா
நாள் - 30.09.17 சனிக்கிழமை
இடம் - அம்பி வெங்கிடுசாமி திருமண மண்டபம், உழவர்சந்தை அருகில்,
தேனி.
இடம் - அம்பி வெங்கிடுசாமி திருமண மண்டபம், உழவர்சந்தை அருகில்,
தேனி.
* ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
* நுழைவுக்கட்டணம் ஒரு ரூபாய்
* நுழைவுக்கட்டணம் ஒரு ரூபாய்
மேலதிக தகவல்களுக்கு 9942052222
ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமையும் பள்ளிகள் எவை?
தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, 3,௦௦௦ பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான பணிகள் துவங்கி உள்ளன; ஒவ்வொருசரகங்களில், ஏழு பள்ளிகள் வீதம் தேர்வு செய்ய, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு சரகத்துக்கு, நான்கு தொடக்கப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் என, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், கணினி வசதி, டிஜிட்டல் திரை, நவீன ஒலி அமைப்பு வசதிகளும், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகளும் இடம் பெறும். இதற்கான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை, 21 ஆம் தேதிக்குள் முடித்து, அரசின் அனுமதி பெற, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு சரகத்துக்கு, நான்கு தொடக்கப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் என, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், கணினி வசதி, டிஜிட்டல் திரை, நவீன ஒலி அமைப்பு வசதிகளும், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகளும் இடம் பெறும். இதற்கான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை, 21 ஆம் தேதிக்குள் முடித்து, அரசின் அனுமதி பெற, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞாயிறு, 17 செப்டம்பர், 2017
வால்பாறை,பந்தலுார்,கூடலுார் பள்ளிகளுக்கு நாளை(செப்-18)விடுமுறை
வால்பாறையில் கன மழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18 )விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பந்தலூர் அருகே சேரம் பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் குமுளி அருகே கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பெரியார் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
கோவை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
கோவை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா?
தேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை பணி நிறைவு பெறாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சி; 123 நகராட்சி; 529 பேரூராட்சி; 385 ஊராட்சி ஒன்றியம்; 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் பதவி காலம், 2016 அக்., 24ல் நிறைவடைந்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக, மாநில தேர்தல் ஆணையம், 2016 செப்., 26ல், தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது. 'இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தேர்தல் அறிவிப்பு முறையாக செய்யப்படவில்லை' என, தெரிவித்து, அக்., 4ல், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.இதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில், தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்தும், தன்னார்வ அமைப்பு சார்பில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.அத்துடன், உள்ளாட்சி தேர்தலை, விரைவாக நடத்த வலியுறுத்தி, தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே, 14க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், 'வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இவ்வழக்கு, செப்., 4ல் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'உள்ளாட்சி தேர்தலை, நவ., 17க்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை, செப்., 18க்குள் வெளியிட வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், தற்போது அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. 'அரசுக்கு பெரும்பான்மை இல்லை. முதல்வர் சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அக்கட்சிக்கு, இன்னமும் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை.மேலும், இட ஒதுக்கீடு அடிப்படையில், தொகுதி வரையறை பணிகள், இன்னமும் முடிவு பெறவில்லை. எனவே, நாளை தேர்தல் அறிவிப்பு வெளியாவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேலும் அவகாசம் கேட்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு...
பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர் .
*ஆசிரியர் படிப்பு*
தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில் ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில் ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .
அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்?
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 21ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் வெயிட்டேஜ் முறை மாற்றி அமைக்கப்படும் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)