>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

NEET தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு காலதாமதமாக விண்ணப்பித்த 38 மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தன் உள்ளிட்ட 38 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு உண்டா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் கடைசி நாளில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்தோம்.ஆனால் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளதாகவும், அதனால் எங்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஆகவே எங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சிபிஎஸ்சி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதமாக விண்ணப்பித்த இந்த 38 மாணவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை எனில் சிபிஎஸ்இ இயக்குனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என உத்தரவிட்டார்.

பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வு: பாதுகாப்பு குறைபாடு இருந்தால் தகுதிச் சான்று கிடைக்காது- போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை.

பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ள வாகனங்களுக்கு தகுதிச் சான்று கிடைக்காது என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத் தப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்க ளுக்கு (ஆர்டிஓ) உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் பள்ளி வாகனங்களில் ஆய்வு ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், ‘‘பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆய்வு பணிகள் ஒரு வாரத்தில் தொடங்குகிறது.
வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக 16 அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால், ஒரு வாரத்தில் சரிசெய்யுமாறு உத்தரவிடப்படும். வாகனங்களில்குறைபாடுகள் இருந்தால் தகுதிச் சான்று வழங்கப்படாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட்செய்யப்படும்’’ என்றனர்.


TNPSC :குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை

குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிக்கையில், "தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, 27.04.2017 அன்று வெளியிட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில்வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953
தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப்பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர்மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி –
(i)உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii)நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.05.2017
தேர்வு நாள் – 06.08.2017
தேர்வு மையங்களின் எண்ணிக்கை – 116
விண்ணப்பிக்கும் முறை –www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இத்தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுதுவிண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
மேற்கூறிய காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது.விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாததொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எப். பணத்தை எடுத்துக்கொள்ள அரசு புது சலுகை அறிவிப்பு.

உடல் நலக்குறைவு நேரங்களில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை டாக்டர் அனுமதி கடிதம் கொடுக்காமல் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவன உரிமையாளரின் ஒப்புதலையும் டாக்டரின் சான்றையும் சமர்ப்பித்தே பி.எப் பணத்தின் ஒரு பகுதியை எடுப்பது கட்டாயமாகும் என்ற நிலை இதன் மூலம் மாறியுள்ளது.
மருத்துவ நோக்கங்களுக்காக பி.எப் நிதி சேமிப்புகளை திரும்ப பெற சுயமாக ஒரு சான்றிதழை (self-declaration form) தொழிலாளி கொடுத்து ஆறு மாத கால சேமிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது இந்த புதிய அறிவிப்பு.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பெரிய அளவிலான நோய் சிகிச்சைகளுக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும். டிபி, தொழுநோய், வாதம், இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பி.எப்.பணத்தை எடுக்க ஓ.கே. சொல்லியுள்ளது அமைச்சகம்.
மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பி.எப் தொகையை எடுக்கலாம். இதற்கு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

அறம் பழகு 1: யோகேஸ்வரி- சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்குச் செல்ல காசில்லாமல் காத்திருக்கும் அரசுப்பள்ளி மாணவி!

குத்துச்சண்டைப் போட்டியொன்றில் வீராங்கனை யோகேஸ்வரி.
படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான அரசுப் பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் புதிய தொடர் இது. |
2015 ஆம் ஆண்டு. யோகேஸ்வரி பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்போது 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்திய குத்துச்சண்டைக் கூட்டமைப்பு அந்த அரசுப் பள்ளிக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தது. ஆர்வத்தின் காரணமாகப் பயிற்சியில் கலந்துகொண்டார் யோகேஸ்வரி.
திறமையும், ஆர்வமும் அவரைத் தொடர் வெற்றிகளை நோக்கித் தள்ளின. பயிற்சி எடுக்க ஆரம்பித்து, ஒரு வருடத்திலேயே 1 மாநில விருது, 7 தேசிய விருதுகள், 1 டைட்டில் பெல்ட் வாங்கினார் யோகேஸ்வரி.
மாநில அளவில் கீழ்ப்பாக்கத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம், 2016-ல் தேசிய அளவில் மகாராஷ்டிராவில் நடந்த போட்டியில் வெண்கலம், பெங்களூருவில் நடந்த போட்டியில் வெள்ளி, கேரளாவில் இரண்டு தங்கங்கள், ஒரு டைட்டில் பெல்ட், டெல்லியில் ஒரு தங்கம் என ஒரே வருடத்தில் பதக்கங்களைக் குவித்திருக்கிறார் யோகேஸ்வரி.
அதே யோகேஸ்வரி இன்று, சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள நேபாளம் செல்ல பணமில்லாமல் காத்திருக்கிறார்.
வீட்டில் தன் தாயுடன் குத்துச்சண்டை வீராங்கனை யோகேஸ்வரி
பெரம்பூர், திருவிக நகர், 19-ம் தெரு, 496-ம் எண்ணில் அமைந்திருக்கிறது அந்த வீடு. வீடு என்றால் ஓலைக்குடிசை. அதிலேதான் தங்கியிருக்கிறது யோகேஸ்வரியின் குடும்பம்.
அப்பா குடிக்கு அடிமையாய்க் கிடக்க, அம்மாவுக்கு பெரம்பூர் வீனஸ் 'அம்மா' உணவகத்தில் வேலை. தனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி, மகளையும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கிறார்.
தேசியப் போட்டிகளில் கலந்துகொள்ள போதிய நிதியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டார் யோகேஸ்வரி. அப்போது அவரின் அம்மா தன் நகையை அடகு வைத்துப் பணம் புரட்டிக் கொடுத்தார்.
திறமையுடன் விளையாடி தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற யோகேஸ்வரி, தற்போது நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெறும் சர்வதேச அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளார். ஜூன் 15 முதல் 18 வரையிலான 3 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.32,500 தேவைப்படுகிறது.
அதற்கான பணத்தைப் புரட்ட முடியாததால், தற்போது சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள இயலாமல் தவித்து வருகிறார் யோகேஸ்வரி.
நல்லுள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குத்துச்சண்டை வீராங்கனை யோகேஸ்வரிக்கு முடிந்தவர்கள் உதவலாமே!
யோகேஸ்வரியின் தாயாரின் தொடர்பு எண்: 9003045167

கணித பயத்தை போக்க கழகம் தொடங்கிய பள்ளி

வியாழன், 27 ஏப்ரல், 2017


⏰TIME SCHEDULE FOR TNTET 2017 EXAMINATION


TNPSC - 1953 GROUP-2A POST NOTIFICATION




பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு - Court News

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்கில்,
8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வித்துறை, சுகாதாரத் துறை, வனத்துறை, உள்ளிட்ட துறைகளில் பனியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மற்ற துறைகளில் இது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைச் செயலருக்கு உத்தரவிட்டார்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.a

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244/- முதல் ரூ.3080/- வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122/- முதல் ரூ.1540/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜனவரி, 2017 முதல் ஏப்ரல், 2017 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், மே, 2017 மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.986.77 கோடியாக இருக்கும்'' என்று முதல்வர் பழனிசாமிதெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப் பெரும் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC :இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு

இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 30 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்வில் 4,413 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் நேர்காணலுக்கு 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தமிழ்நாடு மருத்துவ சார் நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 173 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வை 4,270 பேர் எழுதினர்.
இதில் நேர்காணலுக்கு 342 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும். குரூப்-3 ஏ தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில் 24 காலியிடங்களை நிரப்ப கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு (பட்டியல்-5) 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 8-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தெரிவு செய் யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

GPF - Rate of interest is 7.9%

G.O. No.102 Dt: April 25,2017 -PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders 
Click Here For Download

அரசாணை எண் 78 நாள்:21/4/17- கருணை அடிப்படையில் பணி நியமனம்- பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை பணி வழங்குதல் !!

அரசாணை எண் 78 நாள்:21/4/17- கருணை அடிப்படையில் பணி நியமனம்- பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை
அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்...https://app.box.com/s/vb1m8xib8yr2wqw4y96xqlqmbf7to00t

பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 - திருக்குறளை 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு - நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது - நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.


குரூப் 3 : சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 3 : சான்றிதழ் சரிபார்ப்புசென்னை: 'குரூப் - 3' பதவி உட்பட, மூன்று பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: * தடய அறிவியல், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங்களுக்கு, 2016, அக்., 16ல், தேர்வு நடந்தது. இதில், 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, மே, 5ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் * மருத்துவ சார்நிலை பணியில், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவியில், 173 காலியிடங்களுக்கு, ஜூன் 5ல், தேர்வு நடந்தது. 342 பேர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு, மே 15 முதல், 19 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்
* 'குரூப் - 3 ஏ' பிரிவில் அடங்கிய, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 இடங்களுக்கு, 2013, ஆக., 3ல், தேர்வு நடந்தது. 34 பேர்
தேர்வு பெற்றனர். அவர்களுக்கு, மே 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல்
விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணைய
தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், 1௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும். 
அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, 'மாடரேட்' முறை பின்பற்றப்படுகிறது. இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், 'கிரேஸ் மார்க்' என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டே நீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது.
அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன.
பள்ளி கல்வி சொல்வது என்ன? : இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை. விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,'' என்றார். 
சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ''பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு

அமைச்சர்கள் உறுதிமொழியை ஏற்று, ஜூலை மாதம் வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற ஸ்டிரைக்கை துவக்கினர். நேற்று இரண்டாவது நாளாக, ஸ்டிரைக் நீடித்தது. இதனால், அரசு பணிகள் முடங்கின. போராட்டத்தில் ஈடுபட்ட, சங்கங்களின்
நிர்வாகிகளுடன், தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோர் பேச்சு நடத்தினர். கோரிக்கைகளை, ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக, அமைச்சர்கள் உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை, ஜூலை வரை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, மாநில பொதுச்செயலர் அன்பரசு கூறுகையில், ''எங்கள் கோரிக்கைகளை உறுதி அளித்தபடி, ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்

டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.           மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினருக்கு, மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
வரும், 29ம் தேதி, 598 மையங்களில், 'டெட்' முதல் தேர்வு நடக்கிறது. மறுநாள், 963 மையங்களில், இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 18 ஆயிரம் ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 
அதன் விபரம்:
● தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காலை, 7:30 மணிக்கே, மையத்திற்கு வந்துவிட வேண்டும். ஆசிரியர்களின் முன்னிலையில் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுகளை பிரிக்க வேண்டும்
● தேர்வறையில், எந்த உணவுப் பொருட்களையும் அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்களும் உணவு உட்கொள்வது, நொறுக்கு தீனி சாப்பிடுவது கூடாது. நீரிழிவு நோய் பிரச்னை இருந்தால், அதற்கான மருந்தை எடுத்து கொள்ளலாம்
● காப்பியடிக்கவோ, முறைகேட்டில் ஈடுபடவோ உதவக் கூடாது
● தேர்வு எழுதுவோரை கண்காணிக்காமல், நாற்காலியில் உட்கார்ந்து, புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!!

பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.
ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப்
புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.
வட்டி வீதம்:
கடன் தொகையில்
முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.
கடன் வரம்பு:
அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.
யாரெல்லாம் கடன் பெறலாம்?:
சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
கடனின் பல்வேறு பிரிவுகள்:
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம்:
வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.
* மனை வரைபடம்
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்
கடன் ஏற்பளிப்பு:
மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.
முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.
இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.
ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.
கடன் பிடித்தம்:
ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.
இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.
காப்பீடு:
வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு குடும்ப நலத்திட்டம்:
வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

புதன், 26 ஏப்ரல், 2017


6 முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி அறிவியல் பாடநூல்களின் நிலை - RTI தகவல்