காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
04-10-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
மு.வ உரை:
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
கருணாநிதி உரை:
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
சுயக் கட்டுப்பாடுதான் எல்லா வெற்றிகளுக்கும் மூல காரணம். எனவே நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
விளக்கம் :
உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய தவறான செயலாகும். உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவர்கள் நம்மை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவும் தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும். உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Spittle
- எச்சில்
Asthma
- ஆஸ்துமா
Pain
- வலி
Headache - தலை வலி
Stomach Ache - வயிற்று வலி
✍✍✍✍✍✍✍
பொது அறிவு
1. வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டு எது ?
கபடி
2. மனசப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார் ?
அக்பர்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன ?
செருப்பு
2. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி. அவன் யார் ?
சந்திரன்
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
சவரத் தொழிலாளி மற்றும் அரசன்
அரசர்கள் அன்றைய காலத்தில் பொது மக்களைப் பற்றி அறிந்து கொள்ள பல முயற்சிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் ஒரு முறையைப் பின் பற்றி மக்களைப் பற்றி அறிந்தனர். இரவில் மாறுவேடம் அணிந்து நகர்வலம் வருதல், மாறுவேடம் அணிந்து மக்களோடு மக்களாகப் பழகுதல், சிலரை அழைத்து கருத்து கேட்பது என்று பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஒருமுறை அரசர் ஒருவர் சவரம் செய்து கொண்டார். சவரத் தொழிலாளி அவருக்குச் சவரம் செய்தபோது, தன் நாட்டு மக்களின் நிலை குறித்து சவரத் தொழிலாளியின் கருத்தைக் கேட்டார். எனது குடிமக்கள் அனைவரும் வளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்களா? என்று வினவினார் அரசர். ஆமாம் மகராஜா என்று பதில் சொன்னான் சவரத் தொழிலாளி. நம் நாட்டில் மிகவும் வறிய ஏழைகள் கூட எலுமிச்சை அளவு தங்கம் வைத்திருக்கிறார்கள் என்றும் சவரத் தொழிலாளி கூறினான்.
அரசர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். சவரத்தை முடித்துத் தொழிலாளி சென்றதும், தனது மூத்த, மதியூக மந்திரியை அழைத்தார் அரசர். நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆக, நான் ஒரு நல்ல ராஜா! அரசர் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டார். அரசர் எப்படி அவ்வாறு நம்புகிறார் என்பதை ஆராய்ந்து அறிந்த அமைச்சர், மக்களின் நிலை குறித்த கருத்தை நம்பவில்லை.
ஒருநாள் அமைச்சர், சவரத் தொழிலாளி இல்லாத நேரத்தில் அவனது வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அங்கே ஒரு பையில் எலுமிச்சை அளவில் ஒரு தங்க உருண்டை இருப்பதை அமைச்சர் கண்டார். சவரத் தொழிலாளி அப்படிக் கூறியதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அமைச்சர்.
பின்னர் அவர் அந்த தங்க உருண்டையை எடுத்துக்கொண்டு சத்தம் போடாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அரசரிடம் தான் செய்ததைக் கூறி, சவரத் தொழிலாளியிடம், மறுநாள், முன்பு கேட்ட கேள்வியையே கேட்குமாறும், அவன் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பான் என்றும் அமைச்சர் கூறினார். அடுத்தநாள், தொலைந்த தங்கத்தைத் தேடி அலுத்துக் களைத்துப் போயிருந்த சவரத் தொழிலாளி தாமதமாக அரண்மனைக்கு வந்தான். அவன் வாடிப்போன முகத்தோடு அரசருக்குச் சவரம் செய்யத் தொடங்கினான்.
குடிமக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று முந்திய நாள் கேட்ட கேள்வியையே மறுபடி கேட்டார் அரசர். மகாராஜா, எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. சிலர் மன அமைதியின்றி கவலையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்! என்றான் சவரத் தொழிலாளி. உடனே அரசர், ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையின் அடிப்படையிலேயே உலகத்தைப் பற்றிக் கணிக்கிறான் என்பதை அரசர் உணர்ந்தார். அந்த உண்மையை உணர வைத்த அமைச்சருக்கு அரசர் உரிய பரிசளித்துக் கவுரவித்தான்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச் சுருக்கம்.
🔮 பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு.
🔮டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய தொடக்க ஆட்டக்கார இணை என்ற சாதனையை ரோகித் மற்றும் மயங்க் படைத்து உள்ளனர்.
🔮போக்குவரத்து விதிமுறை மீறல் காரணமாக ஒரே மாதத்தில் 3602 பேர் மீது வழக்குப்பதிவு: ரூ.2.75 லட்சம் அபராதம் விதிப்பு.
🔮இந்தியாடெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் ஜம்மு மக்களுக்கான நவராத்திரி பரிசு: பிரதமர் மோடி.
🔮இந்தியாஇந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் மகராஷ்டிரா அருகே அரபிக்கடலில் திறப்பு.
HEADLINES
🔮Tamil Nadu wins Swachh Bharat award for rural sanitation.
🔮Experts examine firecrackers blast spot in Gingee
🔮Manmohan Singh to be part of first batch of pilgrims to Kartarpur Sahib.
🔮PMO seeks clarity from high-level panel on revival plan of MTNL, BSNL.
🔮Madras HC gives the nod to erect banners welcoming Chinese President Xi Jinping.
🔮Annu became the first Indian woman javelin thrower to qualify for the final round of the World Championships but in the end finished eighth here on Tuesday
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸