>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 15 அக்டோபர், 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.10.2018

Monday, October 15, 2018

அக்டோபர் 15


Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள்

இளைஞர் எழுச்சி தினம்

சர்வதேச கைகள் கழுவும் தினம்

திருக்குறள்

அதிகாரம்: நிலையாமை

திருக்குறள்:338

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.

விளக்கம்:

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.

பழமொழி

Do what you can with what you have where you are

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

இரண்டொழுக்க பண்பாடு

1. அனுதினமும் வாசிப்பை கடைபிடிக்க முயற்சிப்பேன்.

 2.ஒழுக்கத்தை, அறிவை போதிக்கும் புத்தகங்களை வாசிப்பேன்.

 பொன்மொழி

நேர்மையுடன் நில்லுங்கள். தைரியமாக இருங்கள்.
சற்றும் பிறழாத நீதிமானாக இருங்கள்.
துவளாமல் இருங்கள்.

 - விவேகானந்தர்

பொது அறிவு

1.ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர மீட்டர்?
40.47 sq.m

2. பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் யார்?

 திரு . நிதீஷ் குமார்

தினம் ஒரு மூலிகைகளின் மகத்துவம்

நந்தியாவட்டம்


1. இதன் பூவைப் பொறுத்து மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

2.இதன் பூக்கள் கண் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.

3. இதன் வேர் வயிறு உபாதைகளுக்கு சிறந்த  தீர்வாகும்.

English words and meaning

Inspection.   ஆய்வு
Inspector.    ஆய்வாளர்
Irregular.     ஒழுங்கற்ற
Immigrant.  குடியேற்றம்
Insurance.   காப்பீடு

அறிவியல் விந்தைகள்

ரோஜா

1. இது பூக்களின் ராஜா.

2. ஆண்டு தோறும் பூக்கக் கூடிய புதர்
 வகை சார்ந்த தாவரம்.

3. கனடாவின் தேசிய மலர்

4. 200 வகையான மலர்கள் உண்டு. மற்றும் பல வித வண்ணங்களில் காணப்படும்.

நீதிக்கதை

 போர்க்களம்

ஒரு நாள் மா​லை ​நேரம் அரண்ம​னைத் ​தோட்டத்தில் அரசரும் ​பெரிய தன்வந்தர்களும் ப​டைத் தளபதிகளும் கூடினர். ஒவ்​வொருவரும் அவர்கள் சண்​​டையில் ​செய்த வீரதீரச் ​செயல்கள் பற்றி ​பேசிப் ​பெரு​மைப்பட்டுக் ​கொண்டிருந்தனர், அப்​போது ​தெனாலிராமனும் அங்கு இருந்தான். அவர்கள் ​பேச்​சையும் ​கேட்டுக் ​கொண்டிருந்தான். அவர்கள் ​பேச்சு அவனுக்கு பிடிக்கவில்​லை.

''​போங்கள் ஐயா. நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள். நானும் ​போர்க்களம் சென்று இருக்கி​றேன். அதில் ஒருவனு​டைய கா​லை என் வாளால் ​வெட்டி விழ்த்தி விட்​டேன்''என்றான். அ​தைக் ​கேட்ட அ​னைவரும் ​தெனாலிராமன் கூடவா ​போர்க்களம் ​சென்றிருப்பான் என்று ​யோசிக்கத் ​தொடங்கினர்.

பின் அதில் ஒருவன் கா​லை ​வெட்டியதாகச் ​சொல்லுகிறா​யே அவன் த​லை​யை ​வெட்டுவதற்கு என்ன என்று ​கேட்டான். அ​தைக் ​கேட்ட ​தெனாலிராமன் ''த​லை​யைத் தான் எனக்கு முன்பு எவ​னோ ​வெட்டிவிட்டா​னே நான் என்ன ​செய்ய'' என்று ​சொன்னதுதான் தாமதம் மன்னர் உட்பட அ​னைவரும் ​கொல்​லெனச் சிரித்து விட்டனர்.

இன்றைய செய்திகள்

15.10.18

* இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் மாறிய சிக்கிம் மாநிலத்திற்கு ஐ. நா., சபை விருது அளித்துள்ளது.

* காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

* அதிக நுகர்வு காரணமாக, ஒன்பது மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. பொதுப்பணித்துறையின் வாயிலாக, சென்னையை தவிர்த்து, பல மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிப்பதற்காக, ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

* மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

* இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் பாட்மின்டனில்  இந்தியாவின் பிரமோத் பகாத்  இந்தோனேஷியாவின் உகுனை வீழ்த்தி தங்கம் வென்றார்.

Today's Headlines

🌻  The  Sikkim state ,in India was awarded by U.N.O,which has been  completely changed to natural agriculture

🌻The Central Government has decided to come up with a new law to solve the problems that exist between the states over the 13 rivers, including Cauvery.

🌻 Due to high consumption, in nine districts, groundwater has been decreased. Through Public work department,inspecting the wells have been set up to monitor groundwater in many districts, except Chennai.

🌻The Indian team scored 367 runs and   lost  the game in the first innings of the 2nd Test against the West Indies.

🌻In the Asian Paralympic men's batminton semi-finals held at  Indonesia's capital Jakarta, Pramoth Bagath won the gold medal by defeating Ugun from Indonesia🎖🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்

5th Std - Term 2 - Fa(b) - Slip Test - All Subjects & All Units (E/M)

  1. சுகாதாரம்,
  2. சுக்கிற்கு மிஞ்சியமருந்தும் இல்லை,சுப்ரமணிய ஸ்வாமிக்குமிஞ்சிய
  3.  கடவுளும்இல்லை என்பது அந்தகால வாக்கு. ஆனால்அதில்
  4.  அத்தனைஉண்மை உள்ளது
  5. சுக்குஇருந்தால் உங்களுக்குநோய் என்ற பகைவன்இருக்காத
  6. காலையில் இஞ்சி,மதியம் சுக்குஇரவில்கடுக்காய் என தினமும்இந்த மூன்றையும்உங்கள் அன்றாடம்சேர்த்துக் கொண்டால்உங்களுக்கு நோயேவராது என்பதுதெரியுமா?

    இஞ்சியை நன்றாகஉலர வைத்தபின் நீர்வற்றிய எஞ்சியநிலையில்இருப்பதுதான் சுக்கு.இது கெடாதுஆனால்ஆரோக்கியத்திற்குஅத்தனை நன்மைகள்அளிக்கின்றது.

    சுக்கு நமது பழங்காலஉணவிலிருந்துபயன்படுத்திவருகிறோம்எத்தகையஉணவையும் செரிக்கவைத்துவிடும்.நச்சுக்களைமுறித்துவிடும்.குடல்களையும்உணவுப்பாதையையும்சுத்தப்படுத்தும்.அத்தகைய சுக்கைஎப்படி நாம் நமது உடல்உபாதைகளுக்குபயன்படுத்தலாமெனஇந்த கட்டுரையில்காண்போம்.

    தீராத தலைவலிக்கு :
    தலையை இடிப்பதுபோல் தலைவலிவந்தால்சுக்கை நீரில்உரசி அதனை பற்றாகபோட்டால் போதும்சிலநிமிடங்களில் தலைவலிமறைந்துவிடும்.தலையில்நீர்க்கோர்த்திருந்தால்,நீரை வற்றச் செய்யும்சிறப்பை சுக்குபெற்றுள்ளது.தலைவலிக்கு இதுசிறந்த பலனைத் தரும்.
      
    அஜீரணப் பிரச்சனை :
    டம்ளர் நீரை கொதிக்கவைத்து அடுப்பிலிருந்துஇறக்கிநீரில்ஸ்பூன்சுக்குப் பொடியைகலந்து உடனே மூடிவைத்திடுங்கள்.வெதுவெதுப்பாக ஆறியபின் அந்த நீரில் தேன்அல்லது சர்க்கரைகலந்து குடிக்கவேண்டும்.

    இதனால் வயிற்று வலி,விலாப்பகுதியில்ஏற்படும்குத்தல்,குடைச்சல்,புளித்த ஏப்பம்,அஜீரணக்கோளாறு,நெஞ்செரிச்சல்,மூக்கடைப்பு,ஜலதோஷம்காதில்வலிகுணமாகும்.

    வாய் துர் நாற்றம் :
    சுக்குப்பொடியைஉப்புடன் சேர்த்துதினமும் காலையில்பற்களை விளக்கலாம்.மேலும் ஈறுகளையும்இந்த பொடிக் கொண்டுமசாஜ் செய்தால் பல்கூச்சம்பற்சொத்தைஏற்படாமல் தடுக்கும்பல்வலி குறையும்வாய் துர்நாற்றம் குணமாகும்.

    வாய்வுபிடிப்பிற்கு :
    சரியான சாப்பாடு,தூக்கம்இல்லாதபோதும்மனஅழுத்தம்இருக்கும்போதும்வாய்வுபிடிப்புஉண்டாகும்அந்தசமயத்தில் அரை ஸ்பூன்சுக்குப் பொடியுடன்,அரை ஸ்பூன் சர்க்கரைசேர்த்து வாயில் போட்டுதண்ணீர் குடித்தால்உடனடி நிவாரணம்பெறலாம்.

    நோயில்லாத வாழ்வு :
    வாரம் ஒருநாள் சுக்குப்பொடி சேர்த்து குழம்புசெய்து சாப்பிட்டுவந்தால் நோய்கள்இல்லாமல் வாழலாம்.

    முக்கியமாக 40வயதுக்குமேற்பட்டவர்கள்இதுபோன்று உணவில்சுக்கை சேர்த்து வந்தால்வாத நோய்கள்,மலச்சிக்கல்ஆஸ்துமாபோன்றவை வராமல்காத்துக்கொள்ளலாம்.

    மூட்டு வலி:
    மத்திய வயதுஆனவுடன் மூட்டு வலிஆரம்பிக்கும்சில சமயம்அமர்ந்து எழ முடியாதபடிஆகும்.அப்படியானவர்கள்சுக்கை தட்டி பாலுடன்சேர்த்து அரைத்துமூட்டுகளுக்கு பற்றுபோல் போட்டு வந்தால்மூட்டு வலியிலிருந்துவிடுதலை பெறலாம்.
      
    கபம் கரைய :
    சுக்குமிளகுதனியா,திப்பிலிசித்தரத்தை,ஆகியவற்றை பொடிசெய்து அல்லது இந்தஐந்தும் கலந்துபொடியை நாட்டு மருந்துகடையில் வாங்கிஅதனை னீரில் காய்ச்சிகுடித்தால் எப்பேர்ப்பட்டசளி மற்றும் கபம்விலகும்.

    வயிற்றுப் பூச்சிகள்அழிய :
    சுக்குப் பொடியைஅல்லது சுக்கைவெங்காயத்துடன்அரைத்து சாப்பிட்டால்வயிற்றிலுள்ள பூச்சிகள்அழிந்துவிடும்.உடலிலுள்ள நச்சுக்கள்வெளியேற்ற உதவும்.

    போதை தெளிய :
    சுக்கை , வரகொத்துமல்லியுடன்சிறிது நீர் சேர்த்துநைசாக அரைத்துஅதனை சாப்பிட்டால்மதுவினால் ஏற்பட்டபோதை அடியோடுகுறைந்துவிடும்



    சுக்குக் காபி :
    சுக்குக் காபி குடிப்பதால்சோர்வு நீங்கிபுத்துணர்வுபெறுவீர்கள்அஜீரணப்பிரச்சனைகள் நீங்கும்.முக்கியமாகமலச்சிக்கல்குணமாகும்.மந்தத்தன்மை மறையும்.

    விஷக்கடிகள்குணமாகும் :
    தேள்வண்டு போன்றவிஷப் பூச்சிகள்கடித்துவிட்டால்உடனடியாக ஒருவெற்றிலையில் சுக்கு, 5மிளகு சேர்த்து மென்றுசாப்பிட்டால் பூச்சியின்விஷத்தை முறிக்கலாம்

Loading

DEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் - மாநிலக்கணக்காயர் அலுவலகத்தால் கணக்கு எண் வழங்கி பேணப்படுவது - நிலுவையிலுள்ள கணக்குகள் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர 1,2 & 3 மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலக பிரிவு கண்காணிப்பாளர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்துதல்





செவ்வாய், 9 அக்டோபர், 2018

மூன்றாம் வகுப்பு தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி!