செவ்வாய், 25 செப்டம்பர், 2018
வியாழன், 20 செப்டம்பர், 2018
அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு விடைத்தாள் நவம்பர் முதல் அமல்
காரைக்குடி அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு முறையிலான விடைத்தாள் பரீட்சார்த்த முறையில் நவம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தேர்வாணையர் சக்திவேல் கூறும்போது: அழகப்பா பல்கலையில் விடைத்தாள்கள் தற்போது பார்கோடு மூலம் திருத்தப்பணிக்கு செல்கிறது. இதைவிட அதிக பாதுகாப்பு மிக்க விடைத்தாளை உருவாக்கும் 'என்கிரிப்ட் கியூ ஆர் கோடு' முறையிலான விடைத்தாள்கள் வடிவமைக்கும் பணி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து அழகப்பா பல்கலை தேர்வு துறை கடந்த ஆறு மாதமாக மேற்கொண்டு வந்தது.
பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகின்ற நவம்பரில் அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இணைப்பு கல்லுாரி மற்றும் பல்கலையின் அனைத்து துறைகளுக்கு நடக்கும் தேர்வில் பரீட்சார்த்த முறையில் இந்த விடைத்தாள் பயன்படுத்தப்பட உள்ளது. மிகுந்த பாதுகாப்பு என்பதால் மாணவர்களுக்கு பயனளிக்கும். தமிழகத்தில் அழகப்பா பல்கலையில்தான் இது முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது, என்றார்
மாணவர் சேர்க்கை அதிகரிக்க அவகாசம் குறைவு:அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான காலஅவகாசம் குறைந்து வருவதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் மாணவர் விகிதம் அடிப்படையில், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டது.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளின் பட்டியல் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சமாக, 4 பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றன.
மேலும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், மாணவர் எண்ணிக்கை குறைவான பள்ளிகளில் இருந்த கூடுதல் ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளிகளை இணைப்பதனால், மீண்டும் 'சர்ப்பிளஸ்', அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு, தீர்வாக, மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம், ஆசிரியர்களுக்கான மாறுதல் மட்டுமின்றி, பள்ளிகளை இணைக்கும் திட்டத்தையும் அரசு கைவிடும் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான சேர்க்கை நடத்த, ஆக., மாதம் வரை மட்டுமே வழக்கமாக அவகாசம் வழங்கப்படும். நடப்பாண்டில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, செப்., மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில், 'கிண்டர் கார்டன்', வகுப்புகளும் பள்ளிகளில் துவக்கப்படும் என்ற அறிவிப்புகளும், பள்ளி நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். சில பகுதிகளில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பள்ளிகளிலும் சரிந்துள்ளது. அரசு வழங்கிய அவகாசம் நிறைவு பெற குறுகிய நாட்கள் மட்டுமே உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பள்ளிகளில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கை அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது,'' என்றார்.
ஆசிரியர்கள் கண்காணிப்பு : மாணவர்களுக்கு பாதுகாப்பு
கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டுமின்றி, நகரப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும், பஸ்சில் நெருக்கடியான பயணங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே சில கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பதோடு, படிக்கட்டில் நின்று அபாயகரமான பயணங்களையும் செய்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதிகள் இல்லாததால், அந்தந்த நேரத்துக்கு வரும் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால், வேறுவழியின்றி, படிக்கட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு முதன்மையாக இருப்பதால், ஆபத்தான பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென, கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாலையில் பள்ளி முடியும் நேரத்தில், பஸ் பயணம் செய்யும் மாணவர்களை நேரடியாக கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
பள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவை,
பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
இதன் துவக்க விழா ஈ.வெ.ரா., பள்ளியில் நடந்தது. கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி பேசுகையில், ''மாநகராட்சியின் 54 பள்ளிகளிலும் இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அதன்படி சம்பளம் வழங்கப்படும்,'' என்றார். கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்
'கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
QR Code முறை தெரியாத ஆசிரியர்கள் மதுரையில் தொடக்க பள்ளிகளில் 'கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 6, 7, 8 ம் வகுப்பு மாணவரின் எழுத்து, வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கான அடிப்படை செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது: பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முதலில் ஆசிரியர் பின்பற்றி மாணவருக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். நான்கு மற்றும் 6ம் வகுப்பு மாணவரின் கல்வித் திறனை அதிகரிக்க அடிக்கடி தேர்வு நடத்தி கண்காணிக்க வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர்.,கோடு முறையை பயன்படுத்தி பாடங்களை ஆடியோ - வீடியோவாக கற்பிப்பதை சில ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என தெரிகிறது. இதை ஆசிரியர் பயிற்றுனர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்: முதன்மைச் செயலர் சு.ஜவஹர்...!!
அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய பணி பதிவேட்டை தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கமுடியும் என தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.
தென்காசியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது.
தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 9 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம், 7 லட்சம் அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கி வருகிறோம்.
ஓய்வூதியர்களுக்காக பலசிறப்பு திட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே இருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் 2018 அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சமாக இருந்த தொகை 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் என 12 லட்சம் பேர் பயனடைவர்.
கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் தமிழகம் முழுவதும் அனைத்துஅரசு திட்டங்களுடைய வரவு செலவுகளை 294 அலுவலகம் மூலம் செயல்படுத்தி வருகிறோம்.
சென்ற நிதியாண்டில் அரசின் செலவு 1 லட்சத்து 70ஆயிரம் கோடியாகும். முக்கிய செலவினம் என்பது அரசு ஊழியர்களுடைய மாத ஊதியம், ஓய்வூதியம், அரசின் நலத் திட்டங்களுடைய செலவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சாலை வசதி, பொதுப்பணித்துறை கட்டடங்கள்கட்டுவது உள்ளிட்டவையாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுதிட்டத்தின் மூலம் 15 நிமிடத்தில் பணிகள் முடியும். காலையில் பில் மாலையில் பணம் என்பது தான் எங்கள் நோக்கம்.
இத்திட்டத்தின் சிறப்பம்சம் தமிழக அரசில் பணியாற்றும், கருவூலம் மூலம் ஊதியம் பெறும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணி பதிவேடு கணினி மயமாக்கப்படும். அதன் மூலம் பணி பதிவேடு தீ விபத்து, தொலைந்து விட்டது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்.
தங்களுடைய பணி பதிவேடுகள் குறித்த விவரங்களை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்.
அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணி ஓய்வு நாளன்று அனைத்து சலுகைகளும், ஓய்வூதியத்துக்கான உத்தரவும் வழங்கப்படும் என்றார்
EMIS இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!
சில பள்ளிகளில் நாங்கள் சரியான அளவில் ( 150 x 175 , below 25 kb ) போட்டோவை ரீசைஸ் செய்து அப்லோடு பண்ணும் போது அப்லோட் ஆகிவிட்டதாக தகவல் வருகிறது..ஆனால்
பழைய போட்டோவே டிஸ்பிளே ஆகிறது என்று ஒரு இடர்பாட்டை நமக்கு கொண்டு வந்தார்கள்...இதற்கான தீர்வை விளக்கப்படங்கள் மூலம் விளக்கியுள்ளோம்...பார்த்துப் பயன் அடையவும்..
CLICK HERE TO DOWNLOAD -EMIS PHOTO UPDATES AND DOUBTS......
DA ARREARS CALCULATOR - JULY 2018
CLICK HERE TO DOWNLOAD D.A ARREARS EXCEL SHEET ...........
SEPARATE SHEET FOR SURRENDER FOR 15 DAYS AND 30 DAYS ....
THANK YOU... .
SEPARATE SHEET FOR SURRENDER FOR 15 DAYS AND 30 DAYS ....
THANK YOU... .
போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!!
போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!! - மத்திய அரசு
போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்’!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 19) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அரசு ஊழியர்கள் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தெரிவித்திருப்பதாவது:
“அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் நடத்தை விதிகள் 1964இன் பிரிவு 7ஆவது விதிமீறலாகக் கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.”
என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.09.18
திருக்குறள்
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.
விளக்கம்:
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
பழமொழி
Coming events cast their shadows before
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
இரண்டொழுக்க பண்பாடு
1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.
2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.
பொன்மொழி
ஒன்றை பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு .... விளைவுகளையோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே!!
- விவேகானந்தர்
பொது அறிவு
1.தாவரங்களின் வளர்ச்சியை
அளவிட உதவும் கருவி எது?
கிரிஸ்கோகிராப்
2. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?
ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்)
English words and Meanings
Humble. தாழ்மையான
Hub. மையமாக
Herbal. மூலிகை
Hurricane சூறாவளி
Heal. குணமடை
தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்
*புதினா*
1.ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
2.பசியைத் தூண்டுகிறது.
நீதிக்கதை
நாய் வால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...
நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
இன்றைய செய்திகள்
20.09.18
* மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது.
* தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
* மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா மற்றும் விதா்பா பகுதிகளில் உள்ள 17 மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
* இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன ஓபன் முதல் சுற்றில் டென்மார்க் வீரரை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
* இலங்கையுடனான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Today's Headlines
🌸The Metur dam is continuously lasting for more than a hundred feet in the 62nd day⭐
🌸10 IAS officers in Tamil Nadu have been officially displaced ⭐
🌸 In 17 districts in Maharashtra, Marathwada and Vidhba regions, water shortages have been evolved⭐
🌸 India's leading Badminton player Gimpi Srikanth advanced to the 2nd round of the Chinese Open batminton in the first round by defeating Denmark player⭐
🌸 Indian women's cricket team won by 13 runs in the first T-20 match against Sri Lanka🤝🎖
செவ்வாய், 18 செப்டம்பர், 2018
நெட்' தேர்வுக்கு ஆதார் வேண்டாம்
சென்னை : 'பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது, 'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டுக்கான நெட் தேர்வை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்த உள்ளது. டிச., 9 முதல் 23 வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்., 1ல் துவங்கி, செப்., 30ல் முடிகிறது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், அடையாள அட்டை எண் பதிவிட அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் 'ஆதார் எண்ணை பதிவிடலாம்' என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, தேர்வர்களால் பல்வேறு புகார்கள் கூறப்பட்ட நிலையில் 'ஆதார் கட்டாயம் இல்லை' என என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் எண், வருமான வரித்துறை பான் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DGE-Directorate of Government Examinations - NTSE Examination - DEO Address for submission of fees
ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களுக்கும் video ,file,Audio, document அனுப்பும் பிரமாண்ட App
ஒரே நேரத்தில் ultra Sound மூலம் இயங்கும் இந்த App ஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுக்கும் videos , file , document,Audio Share செய்ய முடியும். அனைவரும் இந்த App download செய்து open செய்து அனைவருக்கும் ஒரு வரிடம் உள்ள வீடியோ , file,Audio Share செய்ய முடியும்.
இது முற்றிலும் ultra Sound மூலம் இயங்கக் கூடிய ஒரு பிரமாண்ட App.
பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தை உணருங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)