>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 6 ஜூன், 2018


1,2,3,4,5 PRIMARY TIME TABLE - PEDAGOGY METHOD

FLASH NEWS :- MIDDLE SCHOOL HM TO BEO PANEL | RELEASED

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410 முடிய)



சத்துணவில் முட்டை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க திட்டம்

சென்னை; சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ண விரும்பாத சிறுவர்களுக்கு ரூ.3.50 மதிப்பிலான வாழைப்பழம் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஒரு வாழைப்பழத்தின் செலவினத்தை ரூ.1.25-லிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். 

வியாழன், 31 மே, 2018

புதன், 30 மே, 2018

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. 

உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

New DEO Office Lists & Contact Numbers 2018





இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடர் கல்வித்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள்....

மொழி பாடத் தேர்வுக்கு இனி ஒரே தாள்!

அரசு பள்ளிகளை LKG, UKG வகுப்புகளில் துவக்க நடவடிக்கை

*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.


*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.

*அரசு பள்ளி ஆசிரியருக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு

*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.

*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.

*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்
சட்ட பேரவையில்
மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில், ஆங்கில வழியிலான, LKG மற்றும் UKG வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றும் செம்மலை கூறினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரோடு ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களோடு இணைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டமும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்.....

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :


இந்தக் கல்வியாண்டு (2018-2019) முதல்... இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார்.  தகவல் பின்வருமாறு :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம். மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT -Official Link direct link updated

Image result for 11 TH RESULT

HSE ( +1 ) First Year -Examination Results Expected on 30th May 2018 at 09:00 Hrs.


கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

  • நேர்முக உதவியாளர் பத விக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE 
  • கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து )CLICK HERE 
  • இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

FLASH NEWS- 2018-19 TEACHERS COUNSELING GO -403 DATE-29.05.2018 PUBLISHED

செவ்வாய், 29 மே, 2018

'கட் ஆப்’ மதிப்பெண்களை கணக்கிடுவது, கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது குறித்த வீடியோ அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

 கட் ஆப் மதிப்பெண் எப்படி தயார் செய்வது என்பது குறித்தும், எவ்வாறு கல்லூரிகளை, பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பது என்பது குறித்தும் வீடியோவுடன் கூடிய ஆடியோ விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டியதில்லை.

வாட்ஸ் அப் மற்றும் கல்வி இணைய தளங்களில் உலா வலம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி என்ற தகவல் உண்மையா?


வாட்ஸ்அப் மற்றும் கல்வி இணையதளங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெறும் என்று செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.



ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
காரணம் என்னவெனில் இது கடந்த ஆண்டு வெளிவந்த செய்தியாகும்

கடந்த ஆண்டு இதே தேதிகளில் பயிற்சிகள் நடைபெற்றது

மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். இது கடந்த ஆண்டு வெளியானது. இது சம்மந்தமாக எந்த ஒரு ஆணையும் இதுவரை இந்த ஆண்டு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'பிளஸ் 1ல் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'

'பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை இயக்குனர், இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.


பிளஸ் 1 வகுப்பில், முதல், இரண்டாவது, மூன்றாவது குரூப்களில் சேர, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சில பள்ளிகளில், மாணவர் விரும்பிய குரூப் வழங்க, நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டையும் நடத்துகின்றனர். 

இத்தவறு நடக்கக்கூடாது என்பதற்காக, கல்வித்துறை இயக்குனர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றிக்கையில், 'மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீட்டு விதிகளை பாடப்பிரிவு வாரியாக, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

'ஸ்டார்ட் அப் இந்தியா' மாணவருக்கு அங்கீகாரம்....

கோவை : மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணரும் வகையில், 'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது. 


இதில் பங்கேற்கும் மாணவர்கள், செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்தால், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு, பரிசுத்தொகையுடன், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வரும் கல்வியாண்டு முதல், சிறந்த படைப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தில், மாணவர்களின் படைப்புகள் சந்தைப்படுத்தப்படவுள்ளன. 

இதற்கு பள்ளி வாரியாக, சிறந்த மூன்று மாணவர்களின் படைப்புகள் மட்டும், ஜூன், 30ம் தேதிக்குள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து, படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும், இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம் குறித்து, அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ''அரசு பள்ளி மாணவர்கள், இத்திட்டத்தில் சேர ஊக்குவிப்பது அவசியம். இதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு 2018 - 11,268 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண் "ஜீரோ" - விளக்கம் கோரி உத்தரவு - செயல்முறைகள்








அரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.-அமைச்சர் செங்கோட்டையன்

தற்போது அரசு பள்ளிகளை மூடும் முடிவு இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.


 புதிய பாடத்திட்டத்தில் பிழைகள் இருந்தது. தற்போது, வெளியிடப்படும் புத்தகத்தில் எந்த பிழைகளும் இல்லாமல் சரி செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை பார்த்து சிபிஎஸ்இ பள்ளிகளே வியந்து போய் உள்ளன. அதைப்போல் சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகிறார்கள் என்று குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்