>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 22 மே, 2018

புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல்


அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன்


புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள  ஆசிரியர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று சென்னை  கோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து  சென்னையில் மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர்  ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம்  குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, 7 நாள் பயிற்சிக்காக 4 மையங்கள்  அமைக்கப்படும்.

செப்டம்பர் மாதத்திற்குள் மாணவர்கள் எண்ணிக்கை சரியாக இருப்பதை  ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும்  மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அரசு பள்ளிகளில்  தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் எனவும், கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன்பு தூய்மையாக வைத்திருக்க  ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மாற்றப்பட்ட பள்ளிச்சீருடைகள் வரும் 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.  மேலும் தனியார் பள்ளியில் கட்டணங்கள் வரைமுறைப்படுத்தப்படும்.  தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  கட்டண வரைமுறை தொடர்பாக தனியார் பள்ளிகளில் ஆய்வு  மேற்கொள்வது குறித்து 2 நாள் சிறப்பு முகாம் அமைக்கப்படும்.  கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் சேர 1.32 லட்சம் பேர்  விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார். 

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?


இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்அப் ஆன்லைன் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம் பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும். இந்த ரீடவுன்லோடு அப்டேட் பொறுத்தவரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

விரைவில் வாட்அப் செயலியில் புதிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

TNPSC-DEPARTMENT EXAM MAY-2018 HALL TICKETS RELEASED


10 th Public Exam Result Reg - Director Proceedings






திங்கள், 21 மே, 2018

ஞாயிறு, 13 மே, 2018

புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக அதிமுக குரல் எழுப்பும்: தம்பிதுரை


புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார். 
கரூர் நகராட்சிக்கு உள்பட்ட 46-வது வார்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
ஜெயலலிதாவை பொறுத்தவரை மத்தியில் உள்ள ஆட்சியை, கட்சியை என்றும் நம்பவில்லை. நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை. ஜெயலிலதா உயிரோடு இருக்கும்போது எடுத்த முயற்சியால் காவிரி பிரச்னை விரைவில் தீரும். இதற்கான முழுப் பெருமையும் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் சேரும். 
இப்போது சிலர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். வெற்றிடம் என்பது கிடையாது. அரசியலில் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியானது ஆட்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சியை தவிர பிறகு தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தான் ஆளுகின்றன. 
எந்த ஓர் இயக்கத்திற்கும் அஸ்திவாரம், அடிப்படை வேண்டும். தந்தை பெரியார் உருவாக்கிய சமூக நீதியே திராவிட இயக்கத்துக்கு அடித்தளமாக அமைக்கப்பட்டது. அதைத்தான் அண்ணாவும் பின்பற்றினார். எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் தந்தை பெரியார், அண்ணா வழியில் வந்து அரசியல் நடத்திக் காட்டினர். 
ஜனநாயகத்தில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதற்கு நாங்கள் தடையாக இல்லை. ஆனால் அடிப்படைக் கொள்கை இருக்க வேண்டும். ரஜினியும், கமலும் என்ன செய்தார்கள், எந்தப் பாசறையில் இருந்து வந்திருக்கிறார்கள். திடீரென்று வந்துவிட்டு நாங்கள், அதை செய்வோம், இதைச் செய்வோம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யாரும் அரசியலுக்கு வர உரிமையுண்டு, மக்களுக்கு பணியாற்றுவதை வரவேற்கிறோம். ஆனால் மக்கள் யாருக்கு தலைமையைத் தர போகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் திட்டம் வந்துவிட்டது என்றால் அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றார். 
பேட்டியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

CPS திட்டத்தில் 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்து அரசாணை ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா? - RTI REPLY

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு





பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும், பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை- DIR PROC

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு



சனி, 12 மே, 2018

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும், பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை- DIR PROC

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


பள்ளிகள் வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்வதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. .......

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

* http://www.dge.tn.nic.in , http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.


வியாழன், 10 மே, 2018

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.




















10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு 
முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில்
 நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான
 பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக
 அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் 
இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என
 உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான
 தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.

அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை
 செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம்
 செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை 
அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின்
 தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை
 வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர்.
 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி 
படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு,
 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை
 நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி)
 ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் 
தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள்
 தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண்
 சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் 
பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில்
 கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் 
கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர்
 அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள்
 வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் 
நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின்
 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக
 அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது
. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் 
அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ
 அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை
 அறிந்து கொள்ள முடிந்தன.

அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு 
பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம்
 ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு
 சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் 
தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின்
 தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை
 நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப்
 பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை
 இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால்
 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் 
மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு
 வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு 
முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான
 இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு

 வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் 
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. 
இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 
நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு
 அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில 
பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி 
தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் 
பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு

 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்
.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில்
 முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், 
மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின்
 விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும்
 மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை
 ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு
 பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த
 செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின்
 இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட 
மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும்
 மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான
 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை
 நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள்
 மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன்
 தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி 
துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி 
வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் 
அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது 
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள்
 முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும்
 வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம்
 அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய 
பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை 
அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே 
வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு 

பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்

படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து
 பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு
 அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என
 தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை
 அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி
 காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்
 பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் 
தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின்
 விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை 
அதிகாரிகள் தெரிவித்தனர்

CBSE மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை'

சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக 
பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில்
 தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
.

தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார்
 பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் 
கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

உத்தரவு :

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், 
ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும்,
 ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு
 உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் 
வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.


பிறமொழியை தாய்மொழியாக உடைய, மொழி சிறுபான்மை
 மாணவர்கள், தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை படித்தால்,
 அவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பில் சேர்ந்தால், தமிழ் கட்டாயமில்லை என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாடத்திட்டம் இல்லாமல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில், தமிழகத்திலேயே படித்த மாணவர்கள், தமிழக பாடத்திட்டத்தில், ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களுக்கும் தமிழ் கட்டாயம் இல்லை என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

3ம் வகுப்பு வரை :

பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு,
 2017 - 18 கல்வியாண்டு வரை, 3ம் வகுப்பு வரை மட்டுமே,
 தமிழ் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, நான்காம் வகுப்பு
 முதல், 10ம் வகுப்பு வரையுள்ளவர்கள், தமிழை
படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு தமிழக
 பாடத்திட்டத்தில், திடீரென தமிழை கட்டாயமாக்க முடியாது 
என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து, உயர் நீதிமன்றமும் பள்ளிக்கல்வித்துறைக்கு 
உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி, தமிழுக்கு
 விலக்கு அளிக்கும் அரசாணையை, அரசு பிறப்பித்துள்ளது. 
தமிழ் படிக்க விலக்கு அளிக்கும் சட்டம், 2024 - 25 வரை அமலில்
 இருக்கும். பின், பிறமொழி பாடத்திட்ட மாணவர்களுக்கும், 
10ம் வகுப்பில், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என,
 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
..........................................................................................................................................