>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 25 ஜனவரி, 2018

கல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை..

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதல்வர், அமைச்சர் பங்கேற்கும் விழா போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லுாரி, பல்கலை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 
இதனால் துாய்மைக் கேடுஏற்பட்டதுடன் மைதானங்களில் விளையாட்டு பொருட்களும் சேதமடைந்தன.மேலும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அரசு விழாக்களை கல்வி நிலையங்களில் நடத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கருத்தரங்கு போன்ற கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர, பொருட்காட்சிகள் நடத்துவது, நலத்திட்டங்களை வழங்குவது போன்ற அரசு விழாக்களுக்கு கல்வி நிலையங்களை பயன்படுத்த கூடாது என, கலெக்டர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்...

பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்காததால், ஆசிரியர்ஒருவர், தனக்கு தானே தண்டனை கொடுத்து, மண்டியிட்டு மாணவர்களை படிக்க வைக்கிறார். 
இந்த காட்சி, ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவுகிறது.கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை, பள்ளி மாணவர்கள் தவறு செய்தால், அவர்களை பெற்றோர் அனுமதியுடன், ஆசிரியர்கள் தண்டிக்கும் பழக்கம் இருந்தது. அதனால், பெற்றோருக்கு பயப்படாத மாணவர்கள் கூட, ஆசிரியருக்கு பயந்து, தவறுகளை குறைத்து கொண்டனர்.
சமீப காலங்களாக, பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கு, அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பதால், மாணவர்கள் தவறு செய்தால், ஆசிரியர்களால் தண்டிக்க முடியாத நிலை உள்ளது.மேலும், பல மாணவர்கள், உடல் மற்றும் மனரீதியாக வலுவிழந்த நிலையில் உள்ளனர். அதனால், ஆசிரியர்கள் சாதாரணமாக கண்டித்தால் கூட, தற்கொலை செய்வது; வீட்டை விட்டு மாயமாவது என, விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதற்கு பயந்து, பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிகளில் பாடத்தை நடத்துவதுடன் பணியைமுடித்து கொள்கின்றனர். மாணவர்களின் ஒழுக்க விஷயங்களில் தலையிடுவதில்லை.
ஆனாலும், சில ஆசிரியர்கள் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களை திருத்தி விட வேண்டும்; அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என, கடமையே கண்ணாக உள்ளனர்.இந்த வரிசையில், விழுப்புரம், காமராஜ் அரசு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு, வித்தியாசமான முறையில் மாணவர்களை நெறிப்படுத்துகிறார்.
பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்கள், வகுப்புகளை சரியாக கவனிக்காத மாணவர்களை, வகுப்பறையில் முழங்காலால் நிற்க வைத்து, தானும் அவர்களுடன் மண்டியிட்டு நிற்கிறார்.பின், அந்த மாணவர்களிடம் இரு கைகளையும் ஏந்தி கும்பிட்டு, 'தயவு செய்து நன்றாக படி; பெற்றோருக்கு மரியாதை கொடு; ஒழுக்கமாக நடந்து கொள்' என, கெஞ்சி கேட்கிறார்.
இந்த முயற்சியில், பல மாணவர்கள் திருந்துவதாக உறுதி அளிக்கின்றனர்.தலைமை ஆசிரியர் பாலு, தரையில் மண்டியிட்டு மாணவனை திருத்தும் படம், 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவுகிறது

பிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்...

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து பாடத் திட்டங்களையும் பின்பற்றி, வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. தேர்வுக்கான பயிற்சியில், தமிழக மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்கும் என, பல மாணவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., விதிகளில் கூறப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களில் பொது பிரிவினர், இயற்பியல், வேதியியல், உயிரியலில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். மற்ற பிரிவினர், 45 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என, 'நீட்' தேர்வு விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கவனம் தேவை- சமூகவியல் 5 ஆம் வகுப்பு வீடியோ

ஜியோ அதிரடி ஆஃபர்!

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்ததில் இருந்து
சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால், மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், வருமான இழப்பை தவிர்க்கவும் சலுகைகளை வழங்குகிறது.
இதன் காரணமாக புதிய சலுகை அல்லது திருத்தங்களுடன் பழைய சலுகை என சலுகை அற்விப்புகள் அதிக அளவில் வெளியாகின்றன. அந்த வகையில் ஜியோ குடியரசு தினத்தை முன்னிட்டு விலை குறைப்பு + அதிக சலுகைகளை வழங்கியுள்ளது.
# ரூ.98-க்கு வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
# ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 திட்டங்களில் முறையே 42 ஜிபி, 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி டேட்டா ஆகியவை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
# ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்களில் முறையே 56 ஜிபி, 140 ஜிபி, 168 ஜிபி மற்றும் 182 ஜிபி டேட்டா ஆகியவை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

The Joy Of Sharing- 4th std 3rd term video Lesson...

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *Tpf கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம்
Cps தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.

```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.

எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே  நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.

www.kalvicikaram.blogspot.in................

பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்!!!

சேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

TNPSC Advertisment No.488.Notification No.02/2018.Following post

அரசுத் தேர்வு இயக்ககம்,சென்னை 6.மதிப்பெண் சான்றிதழ்கள்-உண்மைத் தன்மை ஆய்வுப் பணி சார்பு!!!

வருமான வரி பிடித்தம் 80c= 150000(savings) மற்றும் 80ccd(1)B= 50000 (cps amount) முதன்மை ஆணையர் இந்திய வருமான வரித்துறை அவர்களின் தெளிவுரை

உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சங்கங்கள் எதிர்ப்பு..

உயர்கல்வி பயின்ற 4,322 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கூட்டணி மாவட்டத் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஜோசப்சேவியர் கூறியதாவது:ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப தங்களது கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ள உயர்கல்வி பயில்கின்றனர். இதனை ஊக்கப்படுத்த அரசும் உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு அளித்து வருகிறது.
தொடக்கக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் உயர்கல்விபடிப்பதற்கு ஆசிரியர்கள் முறையாக விண்ணப்பித்து வந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உயர்கல்வி படிப்பதில் தடை ஏற்பட்டது.இதையடுத்து மாநிலம் முழுவதும் 4,322 பேர் முன்அனுமதிபெறாமலேயே உயர்கல்வி பயின்றனர். அவர்களுக்கு பின்னேற்பு அனுமதி கொடுக்க வேண்டுமென, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.ஆனால் முன்அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4,322 ஆசிரியர்களுக்கும் பின்னேற்பு அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

புதன், 24 ஜனவரி, 2018

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை...

நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உயர்த்தப்பட்டு உள்ளதால், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம், இந்நகர்வில் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோன்று வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் விலக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை ரூ.2.50 லட்சமாக உயர்த்துவதால் வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள் இதில் அரசுக்கு செலவு ரூ.7,500 கோடியாவே இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம், பட்ஜெட்டில் விவசாயம், சிற மற்றும் குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்திய தொழிற் கூட்டமைப்பினர் (சி.ஐ.ஐ.) தெரிவித்த தகவல்கள் வருமாறு:–
தற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான ரூ.2½ லட்சம், ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படலாம். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயராது. இதுதவிர, வருமான வரி செலுத்துவதில் உள்ள அடுக்கில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கு, குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும்.
கடந்த ஆண்டு வருமான வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் (இது தற்போது 20 சதவீதம்). இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.
இதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டும் தனிநபருக்கு மட்டும் 20 சதவீத வரி விதிக்கப்படலாம் (தற்போது 30 சதவீதம்). ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 30 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் இந்த பிரிவினருக்கு இதைவிடவும் அதிக சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி அடுக்கு இல்லை என்பதும், மாதச் சம்பளம் பெறுவோர் ரூ.10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் அடுக்கிற்குள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வருமான பிரிவுகளில் தொகையை அதிகரித்து அதன் மூலம் மாதச்சம்பளம் பெறுவோரின் வருமான வரிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அதே நேரம், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க கோரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் கோரிக்கையை கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

INSPIRE AWARD 2017 - 18 | Selected Students List Published ( All District )

GO No. 2 for Smart class rooms for 3000 Primary and Middle schools attached....

பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்!!!

தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ௧ - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 14 ஆண்டுகளாகவும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை.
எனவே, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் அளவுக்கு, பாடத்திட்டங்களை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
அதன்பின், சில மாற்றங்கள் செய்து, இறுதி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கும், பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலாகிறது.
எனவே, முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு அமலாகும் வகுப்புகளுக்கான புத்தக தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதத்துக்குள், புத்தக பணிகளை முடித்து, தமிழ்நாடு பாடநுால் கழகத்திடம், புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.