சனி, 6 ஜனவரி, 2018
குரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு!!!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
வெள்ளி, 5 ஜனவரி, 2018
41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.
இதில் 450 பதிப்பாளர்கள் வரை ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தக திருவிழா 10 நாட்கள் நடக்கும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் கொண்டாட்டமாக இருக்கும்.
தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகத்தினரும் தங்கள் புத்தகங்களை அரங்குகளில் விற்பனைக்கு வைப்பார்கள்.
கடந்த ஆண்டு கண்காட்சி நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நுழைவுக்கட்டணம் அரங்குகள் மற்ற விபரங்கள் பற்றி தெரிவிப்பதற்கு வரும் ஜன.5 அன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
வியாழன், 4 ஜனவரி, 2018
“பஸ் வசதிகூட இல்லாத கிராமத்தை திரும்பிப் பார்க்க வைச்சது எங்க மாணவிதான்” மழலையின் வைரல் வீடியோ!
“சுகாதார உறுதிமொழி... நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருள்களைப் போட மாட்டேன். அவ்வாறு, ஏதேனும் பொருள்கள் கிடந்தாலும் உடனே அவற்றை அகற்றிவிடுவேன். எனது வீட்டில் தண்ணீர் சேமித்துவைக்கும் குடங்கள், டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றைக் கொசு புகாதவாறு மூடிவைப்பேன். வாரம் ஒரு முறை தொட்டியைத் தேய்த்து சுத்தம் செய்வேன். இதன்மூலம் ஏடிஸ் கொசு வளராமல் பார்த்துக்கொள்வேன். தற்போது, அரசு எடுத்துவரும் அனைத்துக் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்”
அந்தப் பிஞ்சுக் குழந்தை, தன் மழலை மொழியில் இந்த உறுதிமொழியைச் சொல்லும்போது, தென்றல்கூட சில நிமிடங்கள் நின்று, மௌனம் காக்கிறது. அப்பப்பா... அந்தக் குரலில்தான் எத்தனை இனிமை. எப்படியான உச்சரிப்பு அது. 'கணீர் கணீர்' என வார்த்தைகள் வைரமாகத் தெறிக்க, சோசியல் நெட்வொர்க்கில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறாள் அந்தச் சுட்டி.
வீடியோ
“கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குப் பக்கத்துல இருக்கும் அ.வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் நான். பஸ் வசதிகூட இல்லாத எங்க கிராமத்தை, உலகத்தின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் மக்களும் திரும்பிப் பார்த்திருக்காங்க. அதுக்கெல்லாம் காரணம், ஜெயபெனடிக்டா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் துறுதுறு குழந்தை. எப்பவும் எதையாவது செஞ்சுட்டே இருப்பாள்'' என்றவர் சட்டென அமைதியாகிறார்.
அந்த அமைதி எதற்கோ அர்த்தம் சொல்ல தொடர்கிறார், “ஜெயபெனடிக்டா பற்றி சொல்லிட்டே போகலாம். இவ்வளவு ஆக்ட்டிவான அவள், மற்ற குழந்தைகள் மாதிரி கிடையாது. உயரம் குறைவு. உடம்பு திடீர் திடீர்னு சரியில்லாம போயிடும். அதனால், அடிக்கடி ஸ்கூலுக்கு வரமாட்டா. ஆனால், ஸ்கூல் வந்துட்டா ரொம்ப ஜாலியா இருப்பா. இன்னமும் எழுதத் தெரியாது. மணி மணியா பேசுவா. தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு நல்லா வாட்ச் பண்ணிட்டே இருப்பா. எங்க பள்ளியில மொத்தம் 50 மாணவர்கள் படிக்கிறாங்க. ஜெயபெனடிக்டா இப்போ ஒன்றாம் வகுப்பு. அவள் அப்பாவுக்கு பெயின்ட் அடிக்கிற வேலை.
இந்தக் கிராமம் எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊராட்சி. டீ கடைகூட கிடையாது. மொபைலுக்கு எப்பவாச்சும்தான் சிக்னல் கிடைக்கும். இந்த நிலைமையிலதான் டெங்கு பரவுவதையும், தூய்மையின் அவசியம் பற்றியும் கிராமம் முழுக்க விழிப்பு உணர்வு பண்ணிட்டிருந்தோம். எங்க பள்ளியில் முழுத் தூய்மையைக் கொண்டுவந்தோம். அதற்காக, எங்க பள்ளிக்கு மத்திய அரசின் தூய்மைப் பள்ளிக்கான விருது கிடைச்சது. தினமும் தூய்மைகுறித்த உறுதிமொழியை ஒவ்வொரு மாணவர்களும் சொல்வாங்க. அப்படி சொல்வதை ஜெயபெனடிக்டா நல்லா கவனிச்சு அப்சர்வ் பண்ணியிருக்கா. அடிக்கடி அந்த உறுதிமொழியை சொல்லுறான்னு கிளாஸ் டீச்சர் என்கிட்ட சொன்னாங்க. அதை ரெக்கார்டு பண்ணி எங்க டீச்சர்ஸ் குரூப்ல ஷேர் பண்ணினோம். எல்லாரும் பார்த்து ஆச்சர்யத்துடன் பாராட்டினாங்க. அடுத்தடுத்த நாளில் அந்த வீடியோ நிறைய ஷேர் ஆகிருக்கு. யார் யாரோ போன் பண்ணி இந்தக் குழந்தைக்கு உதவுறதா சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி நியூ இயர் செலிப்ரேஷனில் எங்க கிராமத்து மக்கள் எல்லார் முன்னாடியும் அந்தச் சுட்டி உறுதிமொழி எடுக்க, ஊர்க்காரங்களும் சேர்ந்து சுகாதாரம் குறித்த உறுதிமொழி எடுத்துக்கிட்டாங்க. சின்னப் பொண்ணு இந்த வயசுலயே சுத்தம் பற்றி பேசுதே எனப் பலரும் சுத்தமா இருக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க பல நாள்கள் செய்த விழிப்பு உணர்வு பிரசாரத்தைவிட ஜெயபெனடிக்டாவின் ஒரு வீடியோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு. எங்களைப் பொறுத்தவரை, ஜெயபெனடிக்டா ஒரு சுகாதாரத் தூதுவர்தான்” எனப் பெருமையுடன் சொல்கிறார், தலைமையாசிரியர் சாகுல் ஹமீது.
ஜெயபெனடிக்டா வகுப்பறையில் ஆத்திசூடி படித்துக்கொண்டிருப்பதாகச் சொல்ல, தொலைபேசியைக் கொடுக்குமாறு கேட்டோம். சில நிமிடங்களில், அந்த மழலைக் குரல்... எடுத்த நொடியிலேயே, ''நான் தொரத்தி புடிச்சு வெளாடப்போறேன்' எனச் சொல்லிவிட்டு, குடுகுடுவென ஓடும் சத்தம். இரண்டாவது முயற்சியில் பேசவைத்தார் ஆசிரியர்.
'வணக்கம் சார்... நான் ஜெயபெனடிக்டா பேசுறேன். நீங்க நல்லா இருக்கீங்களா? என்ன சாப்டீங்க?'' எனத் தேன் ஒழுகும் குரல் மனதை வருடியது. “குட்டிப் பாப்பா ஒரு எடத்துல இருக்க மாட்டீங்களா? ஓடிட்டே இருப்பீங்களா?” என்று கேட்டதும், “சார், நான் ரொம்ப நல்ல பொண்ணு. வேணா ஆத்திசூடி சொல்லட்டா... அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்” என அத்தனை வரிகளையும் கடகடவென பாடினாள்.
“அம்முக்குட்டி ரொம்ப அழகா பாடுறீங்களே, அப்படியே அந்த உறுதிமொழியையும் சொல்லுங்க பாப்போம்” என்றதும், “சுகாதார உறுதிமொழி. நான் எனது வீட்டிலோ...” என்று ஆரம்பித்து அத்தனை வரிகளையும் அழகாகச் சொல்லி முடித்து, “சார், நான் தொரத்தி புடிச்சு வெளாடப் போறேன். நீங்க வர்றீங்களா” என்றவாறே ஓடிவிட்டாள்.
பேருந்து வசதிகூட இல்லாத ஊராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவி ஜெயபெனடிக்டா, தன் உறுதிமொழியில் இறுதியாக ஒன்றைச் சொல்லியிருப்பார். 'தற்போது அரசு எடுத்துவரும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்' என்பதே அது.
அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் இந்த ஏழை மாணவியை அரசு கண்டுகொள்ளுமா?
நன்றி :விகடன்....
EMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தலாம்
EMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தும்
விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
எனவே ஆசிரிய பெருமக்கள் தங்களது பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் EMIS எண் உடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது,
ஆதார் எடுத்து ஆதார் வராத மாணவர்களின் ENROLMENT NUMBER எண்ணை 1947 எண்ணில் அலைபேசியில் அழைத்தால் அவரது ஆதார் எண் அம்மாணவனின் அலைபேசிக்கு சென்று விடும்
சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு
சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு.
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, போனஸ், பெண் ஆசிரியர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு, ஒன்றித்திற்குள் பணிமாறுதல், அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணி மற்றும் பணிநிரந்தரம் இல்லாததால் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் அரசுப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்களாக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன்கல்வி மற்றும் கட்டிடக்கலைக்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பணிநியமனம் செய்யப்பட்டனர்.
வாரம் 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்ய உத்தரவிடப்பட்டது.
முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக ரூ.700ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் தற்போது ரூ.7 ஆயிரத்து எழுநூறு தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 7வது ஊதியக்குழு அரசாணையிட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 30% ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவோ அல்லது தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதுபோலவோ பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் போன்ற சலுகைகள் இவர்கள் தற்காலிக ஒப்பந்த பணியில் இருப்பதால் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் பகுதிநேர பெண் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்புகூட வழங்கப்படுவது இல்லை.
இவர்களை பணிநியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக கடந்த 26.08.2011ல் சட்டப்பேரவை விதி எண் 110ல் மறைந்த முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுபடி அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கி இருக்கவேண்டும். ஆனால் ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இதனால் இந்த 6 ஆண்டுகளில் மே மாத சம்பளமாக ஒவ்வொருவரும் ரூ38 ஆயிரம் இழந்து வருகின்றனர்.
பணிநியமன அரசாணை 177ல் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியர் கூடுதலாக அதிகபட்சமாக 4 பள்ளிகள் பணிபுரிந்து, அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ஆணையிடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாணை செயல்படுத்தவே இல்லை. அதைப்போலவே அடுத்த வெளியிடப்பட்ட அரசாணை 186லும் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியர் கூடுதலாக அதிகபட்சமாக 2 பள்ளிகள் பணிபுரிந்து, அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ஆணையிடப்பட்டு இருந்தது. அதுவும் செயல்படுத்தபடவில்லை. இதெல்லாம் செயல்படுத்தி இருந்தால்கூட அனைவரும் அதிக சம்பளத்தை பெற்றதோடு, கிட்டதட்ட முழுநேர பணி செய்திருப்பர். ஆனால் பள்ளிகளில் எல்லா வகையிலும் முழுநேரமாக பயன்படுத்தப்படும் நிலையே பரவலாக கையாளப்பட்டு வருகிறது.
அதே சமயம், நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் பள்ளிகளை இழுத்துமூடி போராட்டம் நடத்தும்போதெல்லாம், பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமாக பள்ளிகளை இயக்க அரசு உத்தரவிட்டு வருகிறது. இதற்கு தனியாக ஊதியம் எதுவும் வழங்கியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான அனைத்து வேலை நாட்களிலும் முழுநேரப்பணி, குறைந்தபட்சம் சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவற்றை இனிமேலாவது அரசு கவனத்தில் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
நவம்பர் 2ல் தற்போதைய முதல்வரை சந்தித்தபோது சிறப்பு காலமுறை ஊதியம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 ஆண்டுகளில் 8 கல்வி அமைச்சர்களையும், 3 முதல்வர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தும் இதுவரை முன்னேற்றம் எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கை குறித்து கவலையில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் கூறுகையில், 2012ல் பணி அமர்த்தபடும்போது 16549 பகுதிநேர ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் நவம்பர் 2014ல் அரசாணை வெளியிடப்பட்டபோது 15169 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கீடு சொல்லப்பட்டு 1380 காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது காலிப்பணியிட எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பள உயர்வுக்கு இந்த நிதியை வழங்கலாம் அல்லது கூடுதலாக பள்ளிகளை அனைவருக்கும் வழங்கலாம். எனவே அரசு இதனை கருத்தில் கொள்ளவேண்டும். 5 ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை ஆண்டுதோறும் ஊதிய உயர்வுகூட சரிவர வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. ஒப்பந்த பணியாளர்களுக்கும் சமவேலை சமஊதியம் வழங்கவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்தி பகுதிநேர ஆசிரியர்களைப்போல உள்ள அனைத்து ஒப்பந்த பணியில் உள்ளவர்களுக்கும் அரசு சலுகைகளை கிடைக்க வழிவகை செய்ய அரசு முன்வரவேண்டும்.
சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு தரப்படும் EPF, ESI, போனஸ், குறைந்தபட்ச ஊதியம் போன்ற அடிப்படை விதிகளை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசு செய்யவில்லை. இருந்தாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்று நம்பிக்கை வைத்திருப்பதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு செவ்வனே அறப்பணிசெய்து வருகின்றனர். தமக்கு பாடம் நடத்தும் ஆசிரியருக்கே பகுதிநேரம்தான் வேலையா என மாணவர்களே கவலை தெரிவித்து வருகின்றனர். படிப்படியாக பணிநிரந்தரம் செய்திருந்தால்கூட இந்த 6 வருஷத்தில கிட்டதட்ட அனைவருமே நிரந்தரம் செய்யப்பட்டிருப்பர். தமிழக அரசே இந்த திட்ட வேலையில் இவ்வளவுபேரை ஒப்பந்த தொகுப்பூதிய பகுதிநேர வேலையில் அமர்த்தியது. எனவே அரசின் கொள்கை முடிவினை எங்களின் வாழ்வாதாரம் கருதி மனிதநேயத்துடன் பணிநிரந்தர அறிவிப்பை இந்த சட்டசபை கூட்டத்தொடரிலாவது அரசு அறிவிக்க வேண்டும் என்றார். மேலும், கடந்த ஜீன், ஜீலை மாதங்களில் நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையின்போது திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு“பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது, பணிநிரந்தரம் செய்ய விரைவில் கமிட்டி அமைக்கப்படும்” என பள்ளிக்கல்வி அமைச்சர் பதிலளித்து சொன்னபடி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இவண்,
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர் : 9487257203
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)