புதன், 20 டிசம்பர், 2017
செவ்வாய், 19 டிசம்பர், 2017
கேரள பள்ளி மாணவர்களுக்கு 'மொபைல் ஆப்' பயிற்சி
கேரளாவில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும்வகையில், 30 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர்பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், ஒரு லட்சம் பேருக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.முதற்கட்டமாக, கிறிஸ்துமஸ்விடுமுறையில், 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி,எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஏற்கனவே, செப்டம்பரில் நடந்த பயிற்சி வகுப்பில், சில அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்பட்டன. தற்போது, அதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
ஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ - ஜியோ முடிவு
'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில், கோரிக்கைமனு அளித்தனர்.
அவர்கள் அளித்த பேட்டி:
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 2016 ஜன., 1 முதல், ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 21 மாதம் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது; அதை வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளையும்,குறைகளையும் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.
நிறைவேற்றாவிட்டால், ஜனவரி இறுதியில், சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்..
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது.
அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்என்று உத்தர விட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ‘வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, “வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்றுபதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்திருந்தது.இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்என்று உத்தர விட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ‘வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, “வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்றுபதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்
அரசின் EMIS App அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை...
☀கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின் கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.
☀மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
☀சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.
☀அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.
☀முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.
_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,
State EMIS Team_
State EMIS Team_
நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!
நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த
திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த
திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
EMIS - SPD - VIDEO CONFERENCE MEETINg- SPD மூலம் நேற்று சொல்லப்பட்ட விஷயங்கள் தகவல்கள்!
🖌ஆதார் பதிவு ELCOT மூலம் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🖌ஆதார் எடுப்பதற்கு தேவையான வசதிகளை (permanent aadhaar kit with technicians) ஒரு ஒன்றியத்தில் ஒரு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்வது.
🖌EMIS entry தற்போது உள்ள இரண்டு மாவட்ட தொகுப்பினை மூன்று மாவட்ட தொகுப்பாக மாற்றம் செய்வது.
🖌அரசின் அதிகாரப்பூர்வமான EMIS - Mobile phone android Application இன்று (20/12/17) மாலை 4.00 மணிக்கு மேல் வெளியிடுவதாக தகவல். Application download செய்வது சம்பந்தப்பட்ட தகவல்கள் வந்த பிறகு பணிகள் மேற்கொள்ளவும். இதர application download செய்து பதிவேற்றம் செய்ய வேண்டாம்.
🖌EMIS entry- மேற்கொள்வதற்கான data recharge செலவு அனைத்து பள்ளிகளின் SMC A/cல் செலுத்தப்படும்.
மேற்படி தொகையினை பணி மேற்கொள்வோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்குவது.
மேற்படி தொகையினை பணி மேற்கொள்வோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்குவது.
பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் டிபிஐயில் ஆர்ப்பாட்டம்...
பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இனியும் காலம் கடத்தினால், தீவிர போராட்டம் நடத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம் பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்க வேண்டும், விதிப்படி பதவி உயர்வு, பணிவரன் முறை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இது தவிர முன்தேதியிட்டு பணி வரன்முறை, நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நெருக்கடிகளை நீக்குதல், உதவியாளர் பதவியில் நேரடியான நியமனத்தை ரத்து செய்வது, குறித்தும் கேட்டு வருகிறோம்.
அத்துடன் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அரசும் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு பிறகு எங்கள் கோரிக்கை நிறைவேற்றாமல் அரசு காலம் கடத்தி வந்தால் தீவிர போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.
தேர்வில் முறைகேடு ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை - TRB முடிவு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.
அந்த மனுவில், தேர்வில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.
மேலும் தேர்வில் இடம் பெற்ற ஓ.எம்.ஆர் தாள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் இறுதி விடைக்குறிப்பில் தரப்பட்டுள்ள மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக 18ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து திருத்திய சான்று சரிபார்ப்பு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது.
நேற்று மாலைவரை எத்தனைபேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் தயாரிக்க உள்ளது. இந்த பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிகிறது. மதிப்பெண்களில் மாற்றம் வந்தவர்கள் தாங்களாக முன் வந்து மதிப்பெண் மாற்றம் குறித்து ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் போடும் போது அதில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பம் செய்யும் நபரே பொறுப்பு என்பதால், சான்றுகள், முகவரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் சரிபார்ப்பு நடத்தவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது. விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகப்படியாக மதிப்பெண்களில் திருத்தம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், என அனைத்து தரப்பினர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)