>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 1 டிசம்பர், 2017

பள்ளிக்கல்வி - பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - இயக்குனர் செயல்முறைகள்

கனமழை - 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

DSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்..

DECEMBER 2017 | DIARY....

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.
3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,
5.12.17- உலக மண் தினம்,
9.12.17- குறை தீர்க்கும் நாள்,
11.12.17- உலக மலைகள் தினம்,
18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு .
24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை.
2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.

சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வகுப்பில் 25% இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பம்


வியாழன், 30 நவம்பர், 2017

இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி- ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்பு

நேற்று 28-11-2017 இந்தியாவில் முதல்முறையாக Space Science technology gallery,  VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இது குறித்த இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்த (Space Science and technology) Bangalore exposure education (BEE ) என்ற program Activity Educator நிறுவனம் மூலம் முதலில் பதிவு செய்யும் 20 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கோடு, வணிக நோக்கம் இல்லாமல் செயல்படுத்த முன்வந்துள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் அடையும் பயன்:
1. வான் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச அளவிலான அறிவை பெற இயலும்
2. உலக அளவில் அதிக வேலை வாய்ப்பு, அதிக சம்பளம்,  மற்றும் மதிப்பு வாய்ந்த தங்களது மேற்படிப்பை Space Science and technology , Aviation, Astronant, Aerospace, Astronomy, Aeronautical, Astro Physics,  போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உந்துதல் அடிப்படை அறிவு மற்றும் ஆர்வத்தை உண்டாக்கும்
3. கற்றலுக்கான சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்
4. சுய கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும்
5ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும்.
கல்வி நிறுவனங்கள் பெறும் பயன்:
1, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் தங்களது கல்வி நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முறையான பயிற்சிகள் வழங்கப்படும்
2. தங்களது கல்வி நிறுவனத்தில் அறிவியல் வள மையம் துவங்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் அறிவியல் விழிப்புணர்வு களப்பணி செயல் திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகார சான்று பெறுவதற்கும் தொடர்பணிக்கும் செயல் திட்டங்கள் கொடுப்பதன் மூலம் தங்களது நிறுவனம் நற்பெயர் ஈட்டும்
3 .உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அறிவு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்பட வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
4. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் பரப்புதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவற்றிற்காக தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது.
பதிவு செய்ய விரும்பும் கல்வி நிறுவனங்கள் கீழ்கண்ட முகநூல் பக்கத்தில் இது குறித்த விபரங்களை காணலாம்.
www facebook.com/groups/ISCOPE
Email முகவரி indiaiscope@gmail.com
கைபேசி எண்: 7892898919

ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்'

'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள்விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின், 'தீன்தயாள் ஸ்பேர்ஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
இதன்படி, இந்தியா முழுவதும், அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 920 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டிற்கு, 6,000 ரூபாய், உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழக மாணவர்கள், 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துமாணவர்கள், டிச., 12க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து, எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மற்றொரு, செயல் திட்டம் தரப்படும். அதை சிறப்பாக செயல்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை, tamilnadupost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்துக்கும், 200 லிருந்து, 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு, முன்னோட்டமாக, அனைத்து பாடங்கள் உள்ளடக்கி, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 7 முதல், 23 வரை, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
வழக்கமாக, பிளஸ் 1 வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும், வேறு வேறு தேதிகளிலும், காலை, மாலை என மாற்றி நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2வுக்கு தேர்வு நடக்கும், அதே நாளில், அதே நேரத்தில்,பிளஸ் 1க்கும் தேர்வு நடத்தப்படுகிறது, டிசம்பர், 7 - தமிழ் முதல்தாள், டிசம்பர், 8- தமிழ் இரண்டாம்தாள், டிச., 11- ஆங்கிலம் முதல்தாள், டிசம்பர் 12- ஆங்கிலம் இரண்டாம்தாள், டிச., 14- கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டிச., 15- உயிரியல், தாவரவியல், வரலாறு, டிச., 18 - கணிதம், விலங்கியல், டிச., 19 - வணிகவியல், புவியியல்,டிச., 21- வேதியியல், கணக்கு பதிவியல், டிச., 23- இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடக்கின்றன.பிளஸ் 2, பிளஸ் 1 இரு வகுப்புகளுக்கும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:15 மணி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூர் CEO-BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி

புதன், 29 நவம்பர், 2017

SABL, ALM, SALM TIMETABLE - PRINTOUT MODEL TO PASTE IN CLASSROOMS

8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!

மாணவனுக்கு தண்டனை: 


ஆசிரியை கைது....

திருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே ஊரைச் சேர்ந்த, 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். 


நவ., 25ல் வழக்கம் போல், மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். பணியில் இருந்த ஆசிரியை விஜயா, 47, அந்த மாணவனை கூப்பிட்டு, ஏன் தலைமுடி நீளமாக வைத்துள்ளாய்? என, கேட்டுள்ளார். பின், சக மாணவரைவிட்டு முடியை வெட்ட சொல்லியுள்ளார். அன்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவன், பள்ளியில் நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறியுள்ளான்.  
அவர், கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில், இச்சம்பவம் உண்மை என, தெரியவந்ததையடுத்து, விஜயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புகாரையடுத்து, கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, விஜயாவை நேற்று கைது செய்தனர்.

10th English Model Question Paper and Study Materials

10th New Study Material
  • 10th English Model Question Paper and Study Materials | R. Anbarasu - English Medium 

R.ANBARASU.M.A.,B.Ed.,
P.G.Asst in English.,
KIDS PARK.MAT.HR.SEC.SCHOO, COVAI-POLLACHI MAON ROAD,
KINATHUKADAVU, COIMBATORE

வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்!



18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரவேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், எளிதில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ள 18 வயது பூர்த்தியானஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நாள் அன்று வாழ்த்துக்கள் வருவதுடன் வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் இணைவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். அந்த லிங்க்க்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டால் போதும், உடனே உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைந்துவிடும்இந்த புதிய முறையால் வாக்காளர் பட்டியலில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்.....

தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது.


இதில், 24 புகார் மனுக்கள் இருந்தன. தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, தர்மபுரி டவுன் மகளிர் போலீசார் சார்பாக, 15ம் தேதி, புகார் பெட்டி வைக்கப்பட்டது.
இதில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் வெளியில் சொல்ல முடியாத புகார்களை, மாணவியர் பெயர் குறிப்பிடாமல், மனுவாக எழுதி போடலாம் என, அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ், எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, இந்த பெட்டியை திறந்தார். இதில், 24 புகார்கள் இருந்தன. அதில், பள்ளிக்கு வரும் மாணவியரை கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள், பஸ்சில் பயணம் செய்யும் போது தொந்தரவு கொடுப்பவர்கள்... மேலும், தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ள, 'பஸ் பாஸ்' கொண்டு வரும் மாணவியரை, தரக்குறைவாக பேசும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் என்பது உட்பட, 24 புகார்கள் இருந்தன.''இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்து, அதன் அடிப்படையில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கூறினார்.

TNPSC Group 2 Exam, 'ரிசல்ட்' வெளியீடு

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7 முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில், 49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.


அவரை மக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பள்ளியின் கட்டடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளது. கட்டடங்கள் கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இல்லாததால் கட்டடம் கட்ட முடியாமல் உள்ளது.
இதனையடுத்து இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.பெங்களூருவில் இன்ஜினியராக பணி
புரியும் கிருஷ்ணன் கூறியதாவது: எனது சொந்த ஊர் சாத்தனுார். ஆண்டு தோறும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியுள்ளோம். எங்கள் கிராமத்து இளைஞர்கள் பள்ளி கட்டடத்தை சீரமைத்து கொடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லாத நிலை குறித்து தெரியவந்தது. பள்ளிக்கு பின்புறம் எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கி பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளேன். இதே போன்று அந்தந்த பகுதியில், வசிக்கும் வசதி படைத்தவர்கள் தங்களது கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டும், என்றார்.