>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 24 நவம்பர், 2017

பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த சேலத்தில் இணையவழி பண்பலை தொடக்கம் :

தமிழகத்தில் முதல்முறையாக, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர், மாணவர்களின் திறனை ஊக்குவிக்க சேலத்தில் இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், இணையவழி பண்பலை கல்வி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. பண்பலை சேவையை, மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். தொழில்நுட்ப பிரிவு துறைத்தலைவர் விஜயலட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார். இணையதளத்தில் மாங்கனி பண்பலை அல்லது டயட்(DIET) சேலம் என்ற தளத்தில் மூலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பண்பலை சேவையை தொடங்கி வைத்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறியது:தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி செய்திகள், கற்றல் கற்பித்தலின் தற்போதய முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திற்கு இணையான செய்திகள், பாடல்கள், கதைகள் மற்றும் சொற்பொழிவுகளை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பாடும் திறன், கதை கூறும் திறன், புதிர்கள், நாடகங்கள், பாடக்கருத்துகளை வழங்கும் விதம் ஆகியவை மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைவளர்த்துக்கொள்ள முடியும். மேலும், கற்றலில் ஏற்படும் சந்தேகங்கள், தெளிவுரைகளையும் போக்கும் வகைகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக, இந்த ஒலிபரப்பு சேவையை தினமும் அரை மணி நேரம் பள்ளி இடை வேளை நேரத்தில் கல்வி தொடர்பான தகவல்கள் இந்த பண்பலை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேம்படுத்தி முழுநேரமாகவும், உடனுக்குடன் தகவல்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.  வானொலி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கேசவன், மணிகண்டன், கவிதா கலந்து கொண்டனர். 

வியாழன், 23 நவம்பர், 2017

NAS MODEL QUESTION PAPER FOR 10th STD

SSA - VIDEO CONFERENCE FOR BLOCK LEVEL "EMIS" - CO - ORDINATORS

+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசாணை வெளியீடு



JACTTO GEO CASE - அரசின் கோரிக்கை நிராகரிப்பு - வழக்கு டிசம்பர்- 8 அன்று ஒத்திவைப்பு

டிசம்பர்- 8 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வீடியோகான்பிரன்சிங் முறையிலான விசாரணை கோரிய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

Maths SLM Kit- Tamil










சுவர் சித்திரங்கள் வாயிலாக ஆங்கிலம் வாசிக்கும் திறனை மேம்படுத்தல்-ஆசிரியர் கட்டடம்

இங்கிலீஷ் பேசுவோம் ஜோரா கலக்குவோம்- ஆடியோ-1

Income tax slab in 2017-18 individual tax payers &HUF



பள்ளி வேலைநேரத்தில் அலுவலகம் வரக்கூடாது.ஈரோடு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு.

New Draft Syllabus 2017 - 11th & 12th Standard தாவரவியல் பற்றி ஆய்வு செய்த போது

1.பாடத்திட்டம் CBSE  போலவே அமைக்கப்பட்டுள்ளது .

2. கல்லூரிகளில் உள்ள பாடப்பகுதிகளும் அதைத் தவிர்த்து இணைக்கப்பட்டுள்ளன.
3.நமது பழைய பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகள் தவிர பல பகுதிகள் சேர்க்கப்படுள்ளன.
4.சுருக்கமாக சொன்னால் கல்லூரியில் உள்ள 3 ஆண்டு பாடங்கள் 70% இரண்டாண்டுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது . ஆசிரியரை பொருத்தமட்டில்  நடத்திவிடலாம்.
5. மாணவர்களை பொறுத்தவரை 6 பாடங்கள் (கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 ஆண்டுபாடங்கள்   (6X 3=18  ஆண்டுகள்) ) பாடத்தை 2 வருடங்களில் படிக்கவேண்டும்.
6. வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்படவில்லை  தற்போது XI வகுப்பிற்கு  100 மதிப்பெண்ணுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது . எந்த வகையிலும் போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தராது .ஏனென்றால் அது  பழைய முறைப்படியே உள்ளது . அதை வெளியிட வேண்டும்.
7. மொத்தத்தில் பாடம் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஓகே.
அறிவியல் பாடங்களை பார்த்து மாணவர்கள்  சராசரி,  மிகக்சராசரி மாணவர்கள்  சேர யோசிப்பர்.
By Mr.Venkatesh Alagappan

NTSE Exam 2017 - Social | Question Paper with Answer Key

NTSE Exam 2017 - Question with Answer Key
  • NTSE Exam 2017 - Social Question Paper with Answer Key | Mrs.S.Geetha
Prepared by Mrs. S.Geetha, BT Asst, GGHSS, Manalmedu, Nagai Dt.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு NMMS-தேர்வு பயிற்சி புத்தகம் இலவசமாக வழங்கி அசத்தும்

 அரசு பள்ளி ஆசிரியர்


வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நகராட்சி நடுநிலைப் பள்ளி, பெத்லேகம்-ஆம்பூர்.

         பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்,                        C. சரவணன் அவர்கள் தனது சொந்த முயற்சியால் சொந்த பணம் 20,000 செலவழித்து, அரசு பள்ளி  மாணவர்கள் NMMS தேர்வை எளிமையாக எதிக்கொள்ளவும், சிந்தனைத் திறனை மேம்படுத்தி இத்தேர்வில் வெற்றி பெற வழிகாட்டி நூலாக அமைய  19.11.17 அன்று ஆம்பூர் ப்ரியா மஹாலில் விசை விருது நிகழ்ச்சியில் மாண்புமிகு, வருவாய் மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர், K.C.வீரமணி அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்டது.
இந்த NMMS புத்தகத்தை அரசுப்பள்ளியில் சேர்ப்போம்! அறிவுத் திறனை வளர்ப்போம்!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார்.
NMMS தேர்வில் வெற்றிபெற்றால் மாதம் 500 ரூபாய்  +2 வரை அவர்களது வங்கி கணக்கில் சேர்ந்துவிடும்.
இந்த தேர்வானது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் தேர்வு வைக்கப்படும்.
சென்ற ஆண்டு இந்த பள்ளியை சார்ந்த 3 மாணவிகள் இவரது முயற்சியால் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
*"ஒரு மாணவனின் அடித்தளத்தை நாம்* *சரியாக அமைத்து கொடுத்தால்,* *அவர்களுடையே வாழ்வு சிறக்கும்"* என்பதற்கு ஏற்றவாறு *NMMS* என்ற முதல் படியை அடுத்து *TRUST,NTSE,TNPSC,TET,IBPS,SSC,RRB,UPSC* போன்ற தேர்வுகளை எளிதில் எதிக்கொள்ள சாத்தியமாகிறது.
எனவே இத்தகைய நல்ல உள்ளம் படைத்த ஆசிரியரின் பணியும், வாழ்வும் சிறக்க வாழ்த்துகிறோ.
                                  போன்: 9597063944

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி 

பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 11 முதல் 15-ஆம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று பயனடையலாம். மொத்த காலியிடங்கள்: 1270

பணி: Assistant Professor

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engg and allied - 190
2. MechanicalEngg and allied - 191
3. Electrical Engg and allied - 158
4. Electronics Engg and allied - 155
5. Computer Engg/IT and equivalent - 177
6. Chemical Engg and allied - 59
7. English: 34 Posts Physics - 59
8. Mathematics - 77
9. Chemistry - 52
10. Geology - 5
11. Food Technology - 14
12. Metallurgy and allied - 11
13. Mining Engg and allied -13
14. Textile Engg and allied - 4

சம்பளம்: மாதம் ரூ.70,000

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் எம்.இ, எம்.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி., எம்.ஏ., பட்டம் பெற்று NET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தமிழகத்தில் திருச்சி என்ஐடி-ல் நடைபெறும். மற்ற மையங்கள் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:www.npiu.nic.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடுதல் சார்பாக CEO செயல்முறைகள்


புரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன

மதுரை: 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்துறை வெளியிட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தில் 20 சதவீதம் வரையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு கூறுவது போல் புதிய வரைவு பாடத்திட்டம் புரட்சியை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே' என கல்வியாளர்கள் கருத்து 
தெரிவித்துள்ளனர்.

'கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறையில் மாற்றங்கள், அறிவியல் தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம், தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு, கலாசாரம் மற்றும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என புறப்பட்ட புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அதற்கான வரைவு பாடத்திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வகை பாடங்களையே மீண்டும் மீண்டும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு வடிவமைத்த இந்த வரைவு அறிக்கை குறித்து கல்வியாளர்கள் 
கூறியதாவது:
சாந்தி, முதல்வர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் அடிப்படையில் தான் வரைவு திட்டத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 1- 5 வகுப்புகளுக்கு ஏற்கெனவே மெட்ரிக் பள்ளிகளில் இருந்த பாடங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. கணிதம் பாடத்தில் 'ஜாமெட்ரிக்' பகுதியில் கிராம மாணவர்களும் எளிதில் புரிந்து படம் வரையும் வகையில் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.மூன்று - ஐந்தாம் வகுப்புகளின் சமூக அறிவியலில் சமச்சீர்பாடத் திட்ட பாடங்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி பாடங்களை மேலும் தரமானதாக மாற்றியிருக்கலாம். மேல்நிலை அறிவியல் பாடம், மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தரமானதாக உள்ளது.பத்தாம் வகுப்பு அறிவியலில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பகுதி 
சம அளவில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பிளஸ் 1 பாடங்கள் இனி மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.பிளஸ் 2 பயாலஜி பகுதியில், மாணவர்கள் படிக்க தயங்கும் 92 பக்கம் கொண்ட 'மனித உடற்கூறுகள்' பாடத்தை ஐந்து பாடங்களாக பிரித்து மாணவர்கள் 
எளிமையாக படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் சுற்றுச்சூழல் பகுதியில் 'இ வேஸ்ட்' உட்பட புதிய பகுதிகள் இணைக்கப்
பட்டுள்ளன. பிளஸ் 1ல் 'வகைப்பாட்டியல்' (டாக்ஸ்சானமி) உட்பட புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆசிரியரின் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சரவணன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வியாளர், மதுரை: புதிய பாடத் திட்டம் வடிவமைப்பு என்பது தேசிய கலைத் திட்டம் (என்.சி.எப்.,) 2005ம் ஆண்டு வகுத்துள்ள வழிகாட்டுதல் படிதான் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மத்திய பட்டியலில் கல்வித்துறை இருப்பதே இதற்கு காரணம். மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்படாத வரை சுதந்திரமான முறையில் பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. நிபந்தனைக்கு உட்பட்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.புதிய வரைவு திட்டத்தில், பழைய பாடத் திட்டத்தில் இருந்து 20 சதவீதம் வரையே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரோபோட்டிக், நானோ சயின்ஸ், பாலியல் பேதங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து புதிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
உதாரணமாக 'மொழித்திறன்' என்ற தலைப்பில் பேசுதல், எழுதுதல்... என உட்தலைப்புகள் உள்ளன. அவை தற்போதைய நிலையில் இருந்து எவ்வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது பாடப் புத்தகங்கள் வெளியான பின் தான் தெரியும். மதிப்பீடு செய்வதன் மூலம் 
மட்டுமே மாற்றங்களை உணர முடியும். இயற்கையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் படைப்பாக்கல் திறன் அதிகம். ஆனால், விளையாட்டிற்கு என தனி கலைத் திட்டம் உருவாக்கப்படவில்லை.
சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்: வரைவு பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழி கற்பதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி.,- சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களை ஆய்வு செய்து தேவையான பகுதிகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீடு முறைகள், அகில இந்திய போட்டித் தேர்வுகள், உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளில் நம் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. உடற்கல்வி மற்றும் கைத்தொழில், ஓவியம், நெசவு போன்ற தொழில்கல்வி, கணினி கல்விக்கான புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அறிவியலில் தற்போதைய தொழில் நுட்பத்திற்கேற்ப பல வகை பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் தரமான தாள்களில் பல வண்ணங்களில் 
அச்சிட்டு வழங்க வேண்டும்.
பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்: கலாசாரம், பண்முக தன்மை மற்றும் தமிழக சமய நல்லிணக்கம் பேணும் வகையில் இடம் பெற்ற மொழிப் பாடங்கள் வரவேற்கத்தக்கது. பயன்பாட்டு முறையிலான இலக்கணம் கற்பித்தல் என்ற புதிய விதிமுறை மூலம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தல் என்பது எளிதாகும். பாலினம் சமத்துவம், மாற்றுத்திறனாளிக்கு மாற்று கற்பித்தல் 
மற்றும் மதிப்பீட்டு முறை, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெற செய்த முயற்சி வரவேற்கத்தக்கது.
மெய்நிகர் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) முறையால் கருவிகள் மூலமான கற்பித்தல் முறையில் கற்றலை முழுமையாக்கும் முயற்சியாக உள்ளது. தேர்வு பயத்தை போக்கும் வகையில் மாணவர்களின் அனைத்து திறன்களையும் மதிப்பிட மாற்று மதிப்பீட்டு முறை அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
பள்ளி மதிப்பீட்டு முறைகளில் ஓபன் புக், ஓபன் ரிசோர்சஸ் எனும் திறந்த வெளி புத்தக முறை மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவியலில் நானோ தவிர புதிய வரவுகள் குறைவாக உள்ளன. தமிழ், சமூக அறிவியல் தவிர அனைத்து வரைவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.
நாராயணசாமி, முன்னாள் பாடநுால் ஆசிரியர் (சமச்சீர் கல்வி), பச்சையப்பா இந்து 
நாடார் மேல்நிலைப்பள்ளி, காமாட்சிபுரம், தேனி: புதிய பாடத்திட்ட மாற்றத்திற்கான வரைவு அறிக்கையில், 'நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் அளவில் பாடங்கள் இணைக்கப்படும்' என தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய பாடத்திட்டத்துடன் தமிழக பாடத்திட்டம் ஒத்துவராத ஒன்றாக இருந்தது. தற்போது மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வேதியியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் கணித பாடங்களின் விபரங்கள் மாற்றியமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. குறிப்பாக வேதியியலில் 'சுற்றுச்சூழல் வேதியியல்' பாடங்களை புதிதாக இணைத்துள்ளனர்.இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும். நடப்பு நிகழ்வுகளை பாடவாரியாக சேர்த்திருப்பதும் நன்மையே. தமிழில் ஏற்கனவே உள்ள இலக்கண, இலக்கியம் தவிர்த்து 'வாழ்வியல் நெறிகள்' சார்ந்து புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் மொழியியல் குறித்த புரிதல் மேம்படும். எனினும் பாடத்தின் முழுமையான வடிவம் வெளிவந்த பின்தான் விரிவான 
கருத்துக்கள் வெளிவரும்.
பெர்ஜின், இயற்பியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி: அறிவியல் பாடத்தை பொறுத்தவரை உணவு, பருப்பொருள், உயிரினங்கள், நகரும் பொருட்கள், பொருட்கள் செயல்படும் விதம், இயற்கை வளங்கள், இயற்கை நிகழ்வுகள் என ஏழு பிரிவாக பிரித்துள்ளனர். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இப்படித்தான் உள்ளது. என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இருந்து முழுமையான பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.முன்பு கருத்துருவாக இருந்த பாடங்களை தற்போது 'அப்ளிகேஷன் ஓரியன்ட்டடு' முறையில் படிப்பதை நடைமுறை வாழ்க்கையோடு நேரடி தொடர்புபடுத்தியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டை நேரடி வாழ்க்கையோடு 
தொடர்புபடுத்தியுள்ளனர்.என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் முன்பு விடுபட்ட பாடங்கள் எல்லாம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. எல்லா பாடங்களுக்கும் தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் விதமாக உள்ளன. நிறைய பாடங்களை மொபைல் ஆப்ஸ், ஸ்மார்ட் கிளாஸ் உடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.இதன்மூலம் ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், வேறு ஆசிரியர் உதவியுடன் அல்லது உபகரணங்கள் உதவியுடன் ஸ்மார்ட் கிளாசில் பாடங்களை படிக்க முடியும். இதே போல் மாணவர் வர முடியாத நிலையில், மொபைல் ஆப்ஸ் மூலம் பாடங்களை படிக்கலாம்.
கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து, அங்கு இல்லாத சில பாடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 
போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
ெஹன்றி பாஸ்கர், வித்யாகிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர், காரைக்குடி : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது, புதிய வரைவு பாடத்திட்டம் தரமுள்ளதாக உள்ளது. போட்டி தேர்வுகளுக்கான எல்லா வித அம்சங்களும் புகுத்தப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களும், அடிப்படை கல்வியுடன் கூடிய தொலை நோக்கு கல்வியும் சேர்த்து உள்ளது. எந்தவிதமான 
போட்டி தேர்வுகளாக இருந்தாலும், இந்த வரைவு பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை கற்பிப்பதற்கான கால நேரத்தில், அதற்கான தேர்வுகளுக்கு மாணவர்களை தயாரிப்பது ஆசிரியர்களின் பெரும் பங்காக உள்ளது. வரும் காலங்களில் மாணவர்கள் இந்திய அளவில் உள்ள எந்த தேர்வையும் எதிர்கொள்ள முடியும். 
ஒவ்வொரு பாடத்திற்கான வெயிட்டேஜ் (புளூபிரின்ட்) மதிப்பெண் கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நடப்பதால் இரண்டு ஆண்டில் பாடத்திட்டத்தை முழுமையாக படிக்க வாய்ப்பு உள்ளது. மாணவரை முழு தகுதியாக்கும் பாடத்திட்டமாக இது உள்ளது. மதிப்பெண்ணின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்
படுத்தும் போது இதில் மாற்றம் வரலாம். கடந்த 2006-ம் ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தும்போது வரைவு பாடத்திட்டத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டது, 
குறிப்பிடத்தக்கது.
முருகேசன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, வீரசோழன்: மாணவர்கள் சிந்தித்து செயல்பாட்டுடன் படிக்கும் வகையில் புதிய பாடத் திட்ட வரைவுகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும்வகையில் உள்ளது. சூத்திரங்கள், வரைபடங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதாக கற்கும் முறையில் உள்ளது. பாடப் புத்தகங்களை இணையதளத்தில் பி.டி.எப்.,வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறையும் எளிதாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை அலைபேசியிலேயே கூட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியிடப்படும் புதிய பாடத் திட்ட வரைவு தேசிய அளவில் பிற பாடத் திட்டங்களுக்கு நிகராகவும், தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

TNPSC Study Material - with Question Bank

Latest - TNPSC Group 4 Exam - Useful Study Materials
* TNPSC Study Material - with Question Bank | Kaviya

KUMAR M.A.BEd,D.T.Ed,HDCA. (ENGLISH TEACHER),

SHREE BCR MATRICULATION.HR.SEC. SCHOOL

KARIMANGALAM,

DHARMAPURI.

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்





புதன், 22 நவம்பர், 2017

TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்
ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம்
பின்புறம் உள்ளது.
ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்
044-24351116
7299722103
 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.
 குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.
ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்..
சென்னை- 044-24351116
திருச்சி- 94871 57922

TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்
ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம்
பின்புறம் உள்ளது.
ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்
044-24351116
7299722103
 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.
 குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.
ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்..
சென்னை- 044-24351116
திருச்சி- 94871 57922