சனி, 18 நவம்பர், 2017
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு வெற்றிக்கு வழிகாட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
இந்தியாவில் பொறியியல் படிப்பில் சிறந்த கல்வி நிறுவனங்களாக உள்ள ஐ.ஐ.டி-யில் சேர்வதற்குப் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் போட்டி போடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி-க்கள் இருந்தாலும், அதில் தமிழக மாணவர்களின் சேர்க்கை என்பது மிகவும் குறைவு. தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நுழைவது ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது. இதனை மாற்றியமைக்க தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன. தமிழக அரசு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு முன்பே, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளைத் தன் பள்ளியில் ஆரம்பித்து முன்னோடியாக மாறியிருக்கிறார் வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் திருமுருகன்.
பெரும்பாலும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி வரும் வேளையில் தமிழில் கணிதம், இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கத்துடன் பயிற்சி வகுப்பு எடுப்பதுடன், அந்தப் பயிற்சியை செல்போனில் படம்பிடித்து யூ டியூப்பிலும், வாட்ஸ்அப் வழியாகவும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறார் திருமுருகன். இந்த வீடியோவை தமிழகத்தில் உள்ள அரசு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தில் பதிந்து வருகிறார்.
"தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியமாக இருந்த காலத்திலேயே நான் வழங்கிய பயிற்சியின் மூலம் ஐ.ஐ.டி-யிலும், அரசுப் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்தனர். நுழைவுத்தேர்வு கைவிடப்பட்டபோது பயிற்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். நீட் தேர்வின் மூலமே மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதால் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களும் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும்வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு வீடியோக்களையும், கேள்விகளையும் வாட்ஸ்அப், யூ டியூப்களில்
பதிவு செய்து வருகிறேன். இதுவரை, யூடியூப்பில் 47 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன். இதையும் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் இணைய வழியே கேள்விகள் கேட்டும் விளக்கம் பெறலாம். அரசும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதால் இனி, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்விலும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் அதிக இடங்களைப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்றார் நம்பிக்கையுடன்.
இவர், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு கணிதம் (IIT JEE Mathemstics) குறித்தும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஐ.ஐ.டி தேர்வுக்கான அடிப்படைகள் குறித்தும் புத்தகங்கள் எழுதி வருகிறார்.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து திருமுருகன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"விரைவில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான ஜே.இ.இ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தயங்காமல் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐ.ஐ.டி-யில் சேர முதல் கட்டமாக மெயின் தேர்வு எழுத வேண்டும். அதில் நிறைய மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி-க்களில் உள்ள 9,700 இடங்களில் சேர்க்கப்படுகின்றனர் என்பதால் ஜே.இ.இ முதன்மைத் தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற்றிட முயல வேண்டும்.
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை ஒரு வருடம் தனிப் பயிற்சி பெற வேண்டும் என்றாலும் பள்ளிப் பாடங்களை முறையாகப் புரிந்து படித்திருந்தால் முதல் தேர்விலேயே அதிக மதிப்பெண்ணைப் பெறலாம்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைக் கருத்தில் கொண்டு தயாராக வேண்டும்.
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேட்கப்படுகின்றன. எனவே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேள்விகளைப் படித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலத் திறமையை மேம்படுத்திக் கொள்வது நல்லது.
நுழைவுத்தேர்வுக்கான கேள்விகள் எல்லாம் ஆப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். கேள்விக்கு நான்கு விடைகளும் பொருந்திபோவதுபோல் அமைத்திருப்பார்கள். அதில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2018-ம் ஆண்டில் ஐ.ஐ.டி-ஜே.இ.இ (அட்வான்ஸ்) தேர்வை இணையம் வழியாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான மாதிரித் தேர்வை எழுதிப் பார்ப்பதோடு கணினியைச் சிறந்த முறையில் இயக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. தவறான விடையை எழுதினால், ஏற்கெனவே சரியான விடைக்கான மதிப்பெண் குறைந்துவிடும். எனவே, தெரியாத கேள்வியாக இருந்தால் அதற்கு விடையளிக்காமல் தவிர்ப்பது நல்லது.
கேள்விகளுக்கு வேகமாக விடை அளிக்க ஷார்ட் கட் முறையினை அறிந்துகொள்வது முக்கியம். இது மதிப்பெண்ணை அதிகப்படுத்தி வெற்றியை கைவசப்படுத்தும்.
வெள்ளி, 17 நவம்பர், 2017
தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்...
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
JACTTO GEO போராட்டம் - பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.
கடந்த செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் தமிழகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன்,
ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல், சில கேள்விகளை எழுப்பி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.நீதிபதியின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல்கள் செந்தில்குமார், சங்கரன், சூரியபிரகாசம் ஆகியோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ‘எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்க வேண்டும் என்றே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று புரிந்து கொள்ளாமல், தங்கள் பேச்சு சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகின்றனர்’ என்றார்.
ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல், சில கேள்விகளை எழுப்பி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.நீதிபதியின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல்கள் செந்தில்குமார், சங்கரன், சூரியபிரகாசம் ஆகியோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ‘எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்க வேண்டும் என்றே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று புரிந்து கொள்ளாமல், தங்கள் பேச்சு சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகின்றனர்’ என்றார்.
அதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கின் மீதான விசாரணையில், சமூக வலைத்தளங்களில் வேண்டாத கருத்துகளை பதிவு செய்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.இதையடுத்து பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் 11 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விவரம் வருமாறு:–
மாயகிருஷ்ணன்(தேவியாக்குறிச்சி), பாலகிருஷ்ணன்(அனியாபுரம்),
ஜான் பிரேம்குமார்(கொளத்தூர்),
கவிதா(ஏலகிரி),
ரமேஷ்(மோகனூர்),
கோவிந்தன் (அழகாபுரம்),
செல்வன்(செவந்திப்பட்டி),
பக்தவச்சலம்(சென்னை),
பொன்ரத்தினம்(தர்மபுரி), திருக்குமரன்(காரியாமங்கலம்) மற்றும் சொர்ணலதா...
'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'
திருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்'நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்கின்றன,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர்கண்ணப்பன் பேசினார்.
'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம், வளர்ச்சி பணிகள் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கண்ணப்பன், நேற்று ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு பள்ளியாக சென்ற அவர், மாணவர்கள் மத்தியில் பேசினார்.திருப்பூர், நொய்யல் வீதி பள்ளியில், அவர் பேசியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நனவாக்க, அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணியில் சேர முயற்சிக்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.
'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம், வளர்ச்சி பணிகள் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கண்ணப்பன், நேற்று ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு பள்ளியாக சென்ற அவர், மாணவர்கள் மத்தியில் பேசினார்.திருப்பூர், நொய்யல் வீதி பள்ளியில், அவர் பேசியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நனவாக்க, அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணியில் சேர முயற்சிக்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.
பாடப் புத்தகங்கள் மட்டுமே, முழு அறிவுத் திறனை வளர்த்து விடாது; பாடப் புத்தகத்தை கடந்த அறிவு, அவசியம்.'தினமலர்' நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' ஆகியவை மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கின்றன. இவற்றை மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர் நலனுக்காக, 'புத்தக பூங்கொத்து' என்ற பெயரில், நுாலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான தலைப்பில் படிக்கும் புத்தகங்கள், அறிவை விரிவடைய செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமைஆசிரியர்களுக்கு அபராதம்
டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN 7th PAY - பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி(HRA) குறைப்பு.
சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது.சென்னைக்கும், அதனை சுற்றி 32 கி.மீ., க்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1பி) ல் கோவை, மதுரையும் உள்ளன. இந்த இரு மாநகராட்சிகளில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரு மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது.சென்னைக்கும், அதனை சுற்றி 32 கி.மீ., க்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1பி) ல் கோவை, மதுரையும் உள்ளன. இந்த இரு மாநகராட்சிகளில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரு மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
அதேபோல் கிரேடு '2' ல் இடம் பெற்றுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இருந்து 8 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேடு (3) ல் இடம்பெற்றுள்ளநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் கிரேடு '2' ல் இடம் பெற்றிருந்தன. தற்போது எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தில் அந்த பட்டியலில் இருந்து இரு நகராட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்சேவியர் கூறுகையில், ''சிவகங்கை, தேவகோட்டை போன்று மாநிலம் முழுவதும் பல நகராட்சிகள் கிரேடு '2' ல் நீக்கப்பட்டுள்ளன.இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் வீட்டுவாடகைப்படி 3,200 ல் இருந்து 2,400 ரூபாயாக குறைந்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட தலைநகராகவும் உள்ளது. இதனை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும்,'' என்றார்
நீட் தேர்வு பயிற்சி மையங்கள்: ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?
தமிழக மாணவர்களின் நலனுக்காக அரசு தொடங்கியுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஏஎஸ் தேர்வுக்கு சிறந்த பயிற்சி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவை) தேர்வுக்கு ஏழை மாணவர்களைத் தயார் செய்வதற்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையம் மிகச் சிறந்த பயிற்சியை அளித்து வருகிறது. சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள இம்மையத்தில் ஆண்டுக்கு 225 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உணவுக்காக மாதம் ரூ. 2,250 வீதம் தமிழக அரசு வழங்குகிறது. இங்கு பயில்பவர்களில் ஆண்டுக்கு 40 முதல் 50 பேர் வரை குடிமைப் பணிகள் தேர்வில் தகுதி பெற்று பணி வாய்ப்பைப் பெறுகின்றனர். அந்த மையம் அரசு சார்பில் நடத்தப்படுவதே இதற்குக் காரணம்.
இப்போது தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் நீட் தேர்வுகான பயிற்சி மையமும் முழுக்க முழுக்க அரசு சார்பில் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இது குறித்து தமிழக அரசு குடிமைப் பணிகள் (ஐஏஎஸ்) பயிற்சி மைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறியது: மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் நோக்கத்தில், பயிற்சி மையங்களைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் பயிற்சி மையத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.kaninikkalvi.blogspot.in
நீண்ட காலத்துக்கு...
தனியார் பயிற்சி மையம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது நீண்ட காலத்துக்குப் பலன் தராது. மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் முதன்மைத் தேர்வு வரை ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் நிலையான நேர்முகத் தேர்வுக்கு மட்டுமே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.kaninikkalvi.blogspot.in
தனியாரைக் காட்டிலும்...
நீட் போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி மாணவர்களைத் தயார் செய்வது என்பது, குடிமைப் பணிகளுக்கு அளிக்கப்படுவது போன்று கடினமானது அல்ல. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட பாடத் திட்டங்களில்தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்பதால், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு எளிதாகப் பயிற்சி அளித்துவிட முடியும். வேகமாக விடையளிக்கும் பயிற்சி மட்டுமே கூடுதலாகக் கற்றுத்தர வேண்டியிருக்கும்.
எனவே, அரசு இப்போது அறிமுகம் செய்துள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலத்து பயனுள்ளதாக அமையும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற ஆலோசகர் சிவராமன், தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பயிற்சி அளிப்பது, அந்த நிறுவனம் பிரபலமடையவே பயன்படும். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பயிற்சி மையங்கள் ஈர்ப்பதற்கும் வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, இப்பயிற்சி மையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க தலைசிறந்த கல்வியாளர்களையும் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும் அரசு பயன்படுத்த வேண்டும் என்றார்.
வியாழன், 16 நவம்பர், 2017
1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்:
உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது
தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது.
இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசுதேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும்மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும்.இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும்.
அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறைபெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம்.
காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி
இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி மேலும் கூறும்போது,"டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)