>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 16 நவம்பர், 2017

ஸ்மார்ட் போர்டு அமைத்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை

பள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வான, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வான, 199 இளநிலை உதவியாளர்கள், 125 தட்டச்சர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, 10 பேருக்கு, பணி நியமன ஆணைகளை,முதல்வர் பழனிசாமி வழங்கினார். மற்றவர்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட, மாவட்டக் கல்வி அலுவலர்களும், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், நியமிக்கப்பட்ட தட்டச்சர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரும், பணி நியமன ஆணை வழங்கினர்.

புதன், 15 நவம்பர், 2017

திருப்பூர் DEEO செயல்முறைகள்- மேல்நிலைக்கல்வி/இடைநிலைக்கல்வி -மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மைத்தன்மை வழங்குதல் சார்பு

சி.பி.எஸ்.இ., அவகாசம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்

100 இடங்களில் நுழைவு தேர்வு இலவச பயிற்சி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.

மத்திய அரசின், 'நீட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு,தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.நடவடிக்கை : முதற்கட்டமாக, சென்னை உட்பட, 100 இடங்களில், இந்த பயிற்சி துவக்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 25 இடங்களில் பயிற்சியைதுவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.பொது தேர்வில் தரப்பட்டியல் ஒழிப்பு, எஸ்.எம்.எஸ்., வழியே தேர்வு முடிவு அறிவித்தல், பிளஸ் 1க்கு பொது தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 2,373 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் என, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.இந்த பயிற்சி திட்டத்தில், 73 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பயிற்சி நடக்கும்.தேர்வு விடுமுறை மற்றும் பொது தேர்வு விடுமுறையில், தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மொத்தம், 30 புத்தகங்கள் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பு : இந்த பயிற்சிக்கு, 'ஸ்பீட் அகாடமி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. முதலில், 100 மையங்கள் திறக்கப்படுகின்றன; பின், கூடுதலாக, 312 மையங்கள் திறக்கப்படும்.நாங்கள் தரும் இலவச பயிற்சியை பெற்று, நீங்களும் முயற்சித்து, மத்திய அரசின் எந்த தேர்வானாலும், அதில், தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''மத்திய அரசு எத்தனை நுழைவு தேர்வுகளை நடத்தினாலும், அதை தகர்த்தெறிந்து, தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், இந்த திட்டத்தில் பயிற்சிஅளிக்கப்படும்.''வகுப்பில் மட்டுமல்ல, வீட்டிலும் பயிற்சி பெறும் வண்ணம், பயிற்சி வகுப்புகள் அடங்கிய, சி..,யும், மாணவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், மாணவியர் பங்கேற்றனர்.'ஜெட் வேகத்தில் கல்வித்துறை' - துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், தற்போதைய போட்டி தேர்வு பயிற்சியும், மாணவர்களை முன்னேற்றும்.பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஜெட் வேகத்தில், துறையில் வளர்ச்சிபணிகளை மேற்கொண்டு வருகிறார்,'' என்றார்.

EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW

EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது .மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம்  இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும்.  அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit)  வசதி செய்யப்பட்டுள்ளது

சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு

சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது விலைக்கு வாங்குவதற்கோ ‘HBA (House Building Advance)’ எனப்படும் முன்தொகை, கடனாக அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த முன்தொகை பெறுவதற்கு ரூ.30 லட்சமாக இருந்த சொந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்தொகை கடனுக்கு 9.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இந்த வட்டிவிகிதம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கப்பட்டு வந்தது. இதை சற்று தளர்த்தி இருவரில் ஒருவர் பெயரில் அல்லது இருவரது பெயரிலும் கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சொந்த வீட்டுக்காக ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பணியாளர்கள், முன்தொகையான ரூ.25 லட்சம் அன்றி வங்கியிலும் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் தங்கள் வீடுகளின் பத்திரங்களை அடமானமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' விடம் கூறும்போது, ''மத்திய அரசுப் பணியாளர்கள் சொந்தமாக வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் அரசிடம் பெறும் கடனுக்கான தவணைத் தொகை, தனியார் வங்கிகளை விடக் குறைவு என்பதே அதற்கானக் காரணம்.சொந்த வீடு வாங்குவதற்கான முன்தொகை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. எனவே தற்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அதை விரிவுபடுத்த அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 34 மடங்கு அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனாக அளிக்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடுகட்ட அதன் விலையில் 80 சதவீதம் வரை முன்தொகை அளிக்கப்படுகிறது. இதில் கட்டப்படும் வீடு கிராமப்புறத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

CCE All 3 Terms Annual Calculator For Primary, Upper Primary and 9th std

1.    அன்பார்ந்த ஆசிரியர்களே,  இந்த  CCE  CALCULATOR  ல்   ஒவ்வொரு பாட ஆசிரியரும் தங்களது  FA(A),FA(B)  ஆகியவற்றின் 4  மதிப்பெண்களையும் , SA  மதிப்பெண்ணையும்


2.    ENTRY  பக்கத்தில் மட்டும் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தால் போதுமானது

3. மூன்று பருவத்திற்கும்  பதிவு செய்து விட்டால்  கடைசியாக உள்ள ANNUAL REPORT FINAL  என்ற பக்கத்தில் உள்ளவற்றை PRINT எடுத்தல் போதுமானது தேர்ச்சி அறிக்கை தயார்

4.  BRC   அலுவலகத்திலிருந்து  SCHOLASTIC  FORM  கேட்டால்  BRC 1 , BRC2, BRC 3  ஆகிய பக்கங்களை பருவத்திற்கு ஏற்ப PRINT  எடுத்தால் போதுமானது.

5. SCHOOL REGISTER ல் பதிவு செய்வதற்கு ஏற்ப SCHOOL REGISTER  பக்கம் தயார் செய்யப் பட்டுள்ளது

6. ATTENDNANACE  பக்கத்தில்  மாணவர்களின் வருகையையும்,  பள்ளி வேலை நாட்களை TOTAL WORKING DAY  வரிசையில் முறையே பதிவிடவும்


இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது


11 ஆம் வகுப்பு வரலாறு கையேடு

12 th வரலாறு சென்டம் மார்க்

5 ஆம் வகுப்பு நவம்பர் இரண்டாவது வாரத்திற்கான பாடக்குறிப்பு அனைத்து பாடத்திற்கும் pdf வடிவில்

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில்அறிவியல் பாடம் கற்க ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு....

திண்டுக்கல்:'அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 9 ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை வளர்க்க புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒரு பள்ளியில் இருந்து 100 மாணவர்கள் ஒருநாள் கல்லுாரிக்கு சென்று அங்குள்ள நுாலகம், ஆய்வகம், கம்ப்யூட்டர் லேப் ஆகியவற்றை பார்வையிடுவர்.அங்குள்ள பேராசிரியர்கள் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு பாடத்தை நடத்துவார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி ஆர்வம் அதிகரித்து ஆராய்ச்சிக்கு துாண்டுதலாக அமையும். இளம் விஞ்ஞானிகளை உருவாக்க இவ்வகையில், ஒரு பள்ளிக்கு 100 பேர் வீதம் 10 பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் இன்று (15ம் தேதி) கல்லுாரிகளுக்குச் செல்கின்றனர்.
எந்தெந்த பள்ளிகள்ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காந்திகிராம பல்கலைக்கும், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் எஸ்,.எஸ்.எம். பொறியியல் கல்லுாரிக்கும், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.எஸ்.என்.ஏ.கல்லுாரிக்கும், கோமணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லுாரிக்கும், இ.ஆவாரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வத்தலக்குண்டு பாலிடெக்னிக்கிற்கும் செல்கின்றனர்.குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லுாரிக்கும், தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன கலையம்புத்துார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பழநி சுப்பிரமணியம் பொறியியல் கல்லுாரிக்கும், வில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கும் செல்கின்றனர்.
மாணவர்களுக்கு அழைத்து செல்லும் போக்குவரத்து செல்வு,சாப்பாடு உள்ளிட்ட செலவுகளை ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ்,. உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா பயஸ் செய்து வருகின்றனர்.

நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பிளஸ்2 படிக்கின்றனர். இவர்களில், நான்கு லட்சம் பேர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள், பிளஸ் 2க்கு பின், மருத்துவம் படிக்க, நீட் நுழைவு தேர்விலும், தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிக்க, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், நீட் தேர்வு எழுத, சரியான பயிற்சி இல்லாததால், இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீட் உட்பட, மத்திய அரசின் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 412 மையங்களில், பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்காக, மாணவர்கள், சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தங்கள் பள்ளி அல்லாமல், வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக, தனியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: தற்போது வீட்டிலிருந்து, பள்ளி இருக்கும் இடம் வரை மட்டுமே, பஸ் பாஸ் உள்ளது. ஆனால், நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையம், வேறு இடத்தில் இருப்பதால், இந்த பாசை பயன்படுத்தி, அங்கு செல்ல முடியாது. சாதாரண கூலி தொழிலாளரான பெற்றோரால், பஸ் டிக்கெட்டுக்கு பணம் தர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

செவ்வாய், 14 நவம்பர், 2017

குழந்தைகளைக் கொண்டாடுவோம்



குழந்தைகளைக் கொண்டாடுவோம் நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினைத் தொடக்கி வைத்துப் பேசிய  இணைஇயக்குனர் திரு .பொ.பொன்னையா அவர்கள் குழந்தைகளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்பது குறித்தும், கல்வியாளர்கள் சங்கமம் செயல்பாடுகள் குறித்தும் மகிழ்ச்சியோடு கலந்துரையாடியது ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்...




குழந்தைகளைக் கொண்டாடுவோம் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த SCERTஇணைஇயக்குனர் திருபொன்குமார்  அவர்கள் கலந்துகொண்டு
ஆசிரியர்களைக் கொண்டு மாணவர் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்று முதன்மைக்கல்வி அலுவலராக இருந்தபொழுது செய்துகொண்டிருந்தேனோ,செய்ய நினைத்தேனோ
 அதனை இந்தக் கல்வியாளர்கள்சங்கமம் செய்துகொண்டிருக்கிறது எனப்பாராட்டி ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் மகிழ்வைப் பரிமாறிக் கொண்ட அழகிய தருணம்....






மாங்கனி நகரின் மாணவர் திருவிழா*

*குழந்தைகளைக் கொண்டாடுவோம்* நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு தனது முதல் புத்தகமான *அறம் செய விரும்புவோம்* நூலையும் தனது பெற்றோர் கைகளால் வெளியிடச் செய்து,
தன் வளர்ச்சிக்குக் காரணமானவன் என் நண்பன்தான் என மேடையில் அவரை அறிமுகம் செய்து வைத்து,
 *ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம்* என அசத்திய நெஞ்சிற்கினிய தோழர்
 *புதிய தலைமுறை திரு.மோ.கணேசன்* அவர்களுடைய பங்களிப்பு நெகிழ்ச்சியாக இருந்தது..

*என் உருவத்தில் மட்டுமே காந்தி இருக்கிறார் ஆனால் இங்குள்ள ஒவ்வொருவர் உள்ளத்திலும் காந்தியைப் பார்க்கிறேன்*என கல்வியாளர்கள் சங்கம நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழச் செய்த திரைப்பட நடிகர் *காந்தி கனகராஜ்*
அவர்களது பங்கேற்பில் நெகிழ்ச்சியுற்றது அரங்கம்...

TN 7th PAY - ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் - அரசு அறிவிப்பு.



01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.

திங்கள், 13 நவம்பர், 2017

TNPSC: VAO& GROUP IV Notification and Exam Date & Apply Last Date Deatils Announced


’டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி !

பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியராக பணிபுரிவோர் குறித்த தகவல்களை திரட்டுமாறு, இயக்குனர் கார்மேகம், தொடக்க கல்வி

அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தேசிய ஆசிரியர் கல்விக்குழும ஆணைப்படி, ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர், மேல்நிலை வகுப்பில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆசிரியர் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதேபோல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, இளங்கலை கல்வியியல் படிப்புடன், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு, ஆசிரியர் தகுதித்தேர்விலும்(டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010 ஆகஸ்டில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 ன் படி, மத்திய அரசு உத்தரவு ஏற்கப்பட்டது. எனவே, பள்ளிகளில் பணிபுரிய, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது.

ஆனால், அரசு வேலை பெற மட்டுமே, டெட் தேர்வு எழுத வேண்டுமென்ற, தவறான புரிதல் உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை போல, சுயநிதி பள்ளிகளிலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே, பணியில் அமர்த்த வேண்டுமென, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்யுமாறு, தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’டெட் தேர்வில் தேர்ச்சி பெற, 2019 வரை கால அவகாசம் உள்ளது. இதற்குள், ஆசிரியர் பணிக்கான அனைத்து குறைந்தபட்ச தகுதிகளையும், பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சுயநிதி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.


புதிதாக பணியில் சேர்ந்தோர், கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும், ஆசிரியர்களின் கல்வித்தகுதி விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என்றனர்.

கற்றல் விளைவுகள் பயிற்சி அட்டவணை :

உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் :

தமிழ் & ஆங்கிலம் : நவம்பர் 15 & 16

அறிவியல் & கணக்கு : நவம்பர் 20 & 21

சமூக அறிவியல் : நவம்பர் 22 & 23

*தொடக்கநிலைஆசிரியர்கள் :*

50% : நவம்பர் 22 முதல் 25 வரை


50% : நவம்பர் 27 முதல் 30 வரை

G.O Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pension/Family Pension and Retirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners of Statutory Boards - Orders