திங்கள், 13 நவம்பர், 2017
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
தமிழகத்தில் கல்விக் கூடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 3,000 பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேல்நலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
EMIS - Browser Problem Solution
இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும்..
இது சில ப்ரௌசர்களில் அப்டேட் ஆவதாக நமக்கு சென்ற வாரம் மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS) சார்பாக நடந்த காணொலி காட்சியில் தகவல் தந்தனர்.. அந்த ப்ரௌசர் விபரங்கள் கீழே.....
Mozila Firefox - Developer Edititon
Internet Explorer - Edge Browser
இதில் ஏதாவது ஒரு ப்ரௌசரை நிறுவிய பின் அட்மிட் செய்து பார்க்கவும் ..
முதல் தடவை அட்மிட் ஆகாது, ஆனால் இரண்டாவது, மூன்றாவது முயற்சியில் கண்டிப்பாக அட்மிட் ஆகும்..
அதன் பின் தடங்கலின்றி அந்த கணினியில் தொடர்ந்து அட்மிட் செய்யலாம்... அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விடும்...
85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி!!!
85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை
படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி ஈடுபட்டுள்ளார்
துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடி உள்ளார்.
இந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன்னும் 5 மொழிகளில் பாட கற்றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.
இந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.
அடுத்த மாதம் 29-ந் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
முதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர்தான் துபாய்க்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பானிய பாடல் பாடினார். எனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித்தது. அதை கற்றேன். வழக்கமாக 2 மணி நேரத்தில் ஒரு பாடலைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன்னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற்றுக்கொண்டு விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரைப் பொருத்தவரையில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு!!!
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் நகல், இன்று(நவ.,13) வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக,
தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செப்டம்பரில், பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்கள், இன்று பிற்பகல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு, அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின், இரு நகல்கள் எடுக்க வேண்டும். அவற்றை, வரும், 15ம் தேதி காலை, 10:00 மணி முதல், 17ம் தேதி மாலை, 5:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில்,கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
400 இடங்களில் வாடகை சைக்கிள் சவாரி திட்டம்: 5,000 சைக்கிள்களுடன் களமிறங்குது மாநகராட்சி
சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, 400 இடங்களில், 5,000 சைக்கிள்களுடன், வாடகை சைக்கிள் சவாரி திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இது, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின், 'ஸ்மார்ட் சிட்டி'களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சென்னை மாநகரில், நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து மேம்பாடு, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பை தடுப்பது என, ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை, மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண, சர்வதேச அளவில், பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழிகளை, சென்னை மாநகராட்சியும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
'ஸ்மார்ட் கார்டு'
முதற்கட்டமாக, இருசக்கர வாகன போக்குவரத்தை குறைக்க, சைக்கிள் பயண திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.அதன்படி, பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வாடகை சைக்கிள் சவாரி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.சென்னை நகரில், சில முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், 400 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவற்றில், பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், 5,000 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில், சைக் கிளை எடுக்க விரும்பும் பயணியர், ஆதார் எண்ணுடன், தங்கள் விபரங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். அதன்பின், சைக்கிள் பயணத்திற்கான, 'ஸ்மார்ட் கார்டு' பயணியருக்கு வழங்கப்படும்.இந்த கார்டை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர், தனக்கு விருப்பமான நிலையங்களில் இருந்து, வாடகைக்கு சைக்கிள் பெற்று, அதை, மீண்டும் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல் அரை மணி நேரத்திற்கு, இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். பின், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வாடகை வசூலிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு முந்தைய ஆய்வு கூட்டத்தை, தனியார் நிறுவனங்களுடன், நவ., 9ல், சென்னை மாநகராட்சி நடத்தி உள்ளது. விரைவில், டெண்டர் விடப்பட்டு, விதிகளின் படி, தனியார் சைக்கிள் போக்குவரத்து நிறுவனம் தேர்வு செய்யப்படும் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனி பாதை
சென்னையின் முக்கிய சாலைகளில், சைக்கிள் திட்டத்துக்காக, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட தனி பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிள் பாதைகளில் மற்ற வாகனங்கள் சென்றால், அபராதம் விதிக்கவும், போலீசாருடன், சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதே போல், அனைத்து சாலைகளிலும் சைக்கிள் பயணம் செய்வதற்கான, சிறிய தடுப்புச்சுவர் கொண்ட தனிபாதை அமைக்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னையின் இந்த முன்னோடி திட்டத்திற்கு, மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட, மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படும்நகரங்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
55 மாணவரை கைவிட்ட அரசு, பள்ளி நடத்தும் கிராம மக்கள்!!!
சிவகங்கை:சிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம
மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சி அலங்கம்பட்டியில் 1986ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் அலங்கம்பட்டி, பாப்பாகுடி, சாலுார் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தன்னார்வ நிறுவனம், பள்ளியை நடத்த முடியாமல் 2012 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்தனர். அங்கு பணிபுரிந்த ஆசிரியர் சங்கரபாஸ்கர், சொந்த முயற்சியால் ஆறு மாதங்கள் சம்பளம் வாங்காமலேயே பள்ளியை நடத்தினார்.
'பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என கல்வி அமைச்சர், கலெக்டருக்கு கிராமத்தினர் மனு கொடுத்தனர். ஆனால் பள்ளியை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து கிராமமக்களே தங்களது சொந்த செலவில் பள்ளியை நடத்தி வருகின்றனர். அவர்கள் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளனர்.
அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி துவங்கலாம். விதிமுறை இருந்தும் பள்ளியை ஏற்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கிராமமக்கள் கூறியதாவது:
கிராமமக்கள் கூறியதாவது:
2012-13 முதல் 5 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் 55 குழந்தைகள் உள்ளனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பாப்பாகுடி, மேட்டுப்பட்டி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர். வசதியில்லாதோரின் குழந்தைகள் தொடர்ந்து இங்கு பயின்று வருகின்றனர். தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்து மனு கொடுத்ததின் விளைவாக 65 சென்ட் இடம், பள்ளி கட்டடம், தளவாட சாமான்களை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சொன்னார். 2015 ல் பதிவு செய்து கொடுத்தும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர், என்றனர்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரமதயாளன் கூறுகையில், ''நான் அக்டோபரில் இருந்து தான் பொறுப்பு அலுவலராக உள்ளேன். அலங்கம்பட்டியில் பள்ளி துவங்குவது குறித்து
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்!!!
சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைத்து
அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.அரசு பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் சங்கம் அமைத்து பள்ளிகளுக்கு பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிப்பதாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 662 இடங்களை நிரப்ப செப்டம்பரில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் 482 இடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாமா என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
ஓவியம், இசை, தையல் போன்ற சிறப்பு பாடங்களுக்கு உயர்கல்வியில் போதிய
முக்கியத்துவம் இல்லை. எனவே அந்த பாடங்களை நடத்த பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து விட்டு, தற்போது காலியாக உள்ள இடங்களை பட்டதாரி பணியிடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.இதன்படி அரசு பள்ளிகளின் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இன்றி கூடுதலாக 500 பணியிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஞாயிறு, 12 நவம்பர், 2017
பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவியில், 1,065 இடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 23 முதல், 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, நிர்மலா மேல்நிலை பள்ளி மற்றும் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வரும், 24, 25ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இன்ஜினியரிங் பாடங்களுக்கு, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், வரும், 23 முதல், 25 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்
தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு:தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், நவ., 15ல் இருந்து, 25 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று, பதிவு செய்யலாம். விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 125 ரூபாய் மற்றும் இணையதள பதிவு கட்டணம், 50 ரூபாய் என, மொத்தம், 175 ரூபாயை பணமாக, மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.
தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பிளஸ் 2 துணை தேர்வெழுதிய மாணவர்கள் நாளை முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:
கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற மேல்நிலைத் துணைத் தேர்வெழுதிவிடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 13ம் தேதி (நாளை) பிற்பகல் முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும்பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரியவிடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லதுமறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Application For Retotalling/revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வரும் 15ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 17ம் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ் ஆசிரியர்கள் - ஊக்க ஊதியம் இல்லை
நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 858 தமிழ் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், பி.எட்., முடித்ததால், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
'இவர்களுக்கு, பி.எட்., படிப்பு கட்டாயம் ஆக்கப்படவில்லை. பி.எட்., முடித்த தமிழ் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க வழிவகை இல்லை' என, கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
TET : தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு சலுகை
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தகுதி காண் பருவம் முடிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கட்டாய கல்வி சட்டம், 2010 அக்., 23ல் அமல்படுத்தப்பட்டது. இதில், ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதித் தேர்வு கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதால், 2011 நவ., 15ல், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதே மாதம், பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால், அத்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களுக்கு, பணி வரன்முறை ஆணை வழங்கப்பட்டிருப்பினும், தகுதி காண் பருவம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முன், பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, முழுமையாக தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதனால், பணி நியமனம் பெற்றவர்களில், 2010 ஆக., 23க்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோர், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.
புதிய சலுகையாக, 'பணி நியமனம் பெற்றவர்களில், அதற்கான விளம்பரம், 2010 ஆக., 23க்கு முன் வெளியாகிஇருந்தால், அவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவத்தை முடித்து, ஆணை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வதில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள .இஆசிரியர்கள்....
பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்..அப்போது ஊதியஉயர்வோடு Next higher payல் சற்று கூடுதலான ஊதியமும் கிடைக்கும்...ஆனால் இ.ஆக்கு மட்டும் ஊதிய உயர்வை தாண்டி த.ஆ 4500 Levelல்next higher pay ல் 1 ரூபாய் கூட கூடுதலாக வழங்கப்படவில்லை....36200 தொடங்கி65500 வரை Level 2800ல்உள்ளதைப் போலவேLevel4500லும் உள்ளது..துல்லியமாக ஒரு ஊதிய உயர்வு மட்டுமே.த. ஆவாக பதவி உயர்வு பெறும் இ.ஆக்கு வழங்கப்பட்டுள்ளது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)