சனி, 11 நவம்பர், 2017
வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு
தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும். அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள்பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
இணையதளத்தில் பாலிடெக்னிக் பாடங்களை வீடியோ வடிவில் பார்க்கலாம் : உயர்கல்வித்துறை அமைச்சர் 83 பதிவுகளை வெளியிட்டார்
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இணையதளம் வழியாக பாலிடெக்னிக் மாணவர்களின் கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை 720 பகுதிகளாக பிரித்து வீடியோவாக எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டது.
அதில் முதல்கட்டமாக 83 வீடியோக்கள் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். கே.பி.அன்பழகன் இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைத்தார். DOTE, பாலிடெக்னிக் என்று யூடியுப்பில் பதிவு செய்து இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கலாம். நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைகழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,670 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக அந்த தொகை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் சரிபார்த்து இனிமேல் தான் வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக அரசுத்தரப்பில் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
நியாயமான முறையில் எங்களுக்கு வந்து சேர வேண்டியது வந்து சேரும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். ஆகவே தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, சரியான முறையில் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் சின்னம் எங்களுக்கு வந்து சேரும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளி, 10 நவம்பர், 2017
TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறையில் 595 பின்னடைவு காலிப்பணியிடங்களும்,
286 தற்போதைய காலிப்பணி இடங்களும், தொடக்கக்கல்வி துறையில் 28 பின்னடைவு காலிப்பணி இடங் களும், சமூக பாதுகாப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.இதன்படி, தகுதியானவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ந்தேதி வெளியானது. இதில் தொடக்கக்கல்விபட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரிஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
286 தற்போதைய காலிப்பணி இடங்களும், தொடக்கக்கல்வி துறையில் 28 பின்னடைவு காலிப்பணி இடங் களும், சமூக பாதுகாப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.இதன்படி, தகுதியானவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ந்தேதி வெளியானது. இதில் தொடக்கக்கல்விபட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரிஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன், கொடைக்கானலை சேர்ந்த கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சியாமளா ஆகியோர் கூறியதாவது:-சான்றிதழ் சரிபாப்பு முடிந்து, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானதும், நாங்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து பணியில் இருந்து விலக்கிவிட்டார் கள். இந்த பணியை நம்பி கடந்த 4 மாதங்களாக தவமாய் தவம் இருந்து காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் பணிக்கு சென்று 2 மாதம் சம்பளத்தையும் வாங்கிவிட்டனர்.பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எங்களை மட்டும் ஓர வஞ்சனையாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் காத்து இருங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நாள்? இப்படி காத்து இருப்பது. மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டோம். வீட்டில் எவ்வளவு நாள் சும்மா இருக்கமுடியும்? எங்கள் வேதனையை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கான அழைப்பை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்? என்பதை அவர்கள் தெரிவித்தால் நிம்மதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றால், ‘தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்ற வார்த்தையை மனவேதனையில் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனரை நேரில் சென்று பார்க்க முயற்சித்த போது அவர் சந்திக்கவில்லை.மேலும், செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் : சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு
அறநிலையத் துறை தேர்வுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு பட்டியலை, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து அறநிலையத் துறை செயல்அதிகாரிபதவியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு,ஜூன், 10ல் தேர்வு நடந்தது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், தகுதியானவர்களுக்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இந்து அறநிலையத் துறை செயல்அதிகாரிபதவியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு,ஜூன், 10ல் தேர்வு நடந்தது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், தகுதியானவர்களுக்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
மோட்டார் வாகன பராமரிப்பு துறையில், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பதவியில், மூன்று இடங்களுக்கு, வரும், 17ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான விபரம் மற்றும் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் ஆணை
தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. லெட்டர் பேடு சட்டக்கலூரிகள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
மேலும் போலி வழக்கறிஞர்களை நீக்கிய பிறகே தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் போலி வழக்கறிஞர்களை நீக்கிய பிறகே தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: தமிழக அரசு
அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 563 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு வருடம் தோறும் ஜூன் மாதம் நடைபெறும்.
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுத்த பின், மருத்துவ கலந்தாய்விலும் கலந்து கொண்டு இடம் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுவதால், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது.
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுத்த பின், மருத்துவ கலந்தாய்விலும் கலந்து கொண்டு இடம் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுவதால், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது.
இந்த சூழலை தவிற்பதற்காக வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக முன்னரே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதன்படி தற்போது இது அதிகார பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார். இதில் வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் சேர்க்கை செயலாளர் இந்துமதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக ரைமண்ட் உத்திரியராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)