>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 3 நவம்பர், 2017

17 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் 'ரெடி'

கோவை : கோவை மாவட்டத்தில், 17 ஆயிரத்து 539 இலவச லேப்டாப்கள் பள்ளிகளுக்கு, நேரடியாக அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுக்க, கடந்த 2015-16 கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்போது இலவச லேப்டாப் வினியோகிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 131 அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மூலம், நேரடியாக லேப்டாப் வினியோகிக்கப்பட்டது. அசல் மதிப்பெண் சான்றிதழ் பின்புறம், லேப்டாப் பெற்றதற்கான குறிப்பை, பதிவு செய்து மாணவர்களுக்கு வினியோகிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'இலவச லேப்டாப் பெற, தகுதியுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளில் இருந்து தகவல் அளித்துள்ளோம்.இவர்கள், தற்போது கல்லுாரிகளில், இரண்டாமாண்டு படித்து வருவதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதில், காலதாமதம் ஏற்படும். எனவே, வரும் ஜனவரி மாதம் முடிய, இலவச லேப்டாப் விநியோகிக்கப்படும்.இதனால், மாணவர்கள் பதற்றம் கொள்ள தேவை யில்லை' என்றனர்.

நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்....

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
'ஹெல்ப் லைன்'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், கவுன்சிலிங் நடத்தவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்கும் திட்டம் உள்ளதா என, தெரிவிக்கும்படியும், அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார்.
இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், ௩௨ மாவட்டங்களிலும், 'ஹெல்ப் லைன்' வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவு ெவளியான தேதியில் மட்டும், ௧௦ ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தேர்விலும், நுழைவு தேர்விலும் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக, முறையாக பயிற்றுவிக்கப்படும்.ரூ.75 லட்சம்ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. ௭௨ லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு அமைப்புகளால், ௧,௪௨௨ போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், அரசியல் கட்சிகள், ௯௩௩ போராட்டங்களையும், மாணவர்கள், ௩௧௩ போராட்டங்களையும் நடத்தினர். நீட் தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசார ணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.

முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பொதுத் தேர்வு எழுதும், ௧௦ம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அரசு பொதுத் தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது.இதற்காக, ௧௦ முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, இடைத்தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்தேர்வுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:காலாண்டுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இடைத்தேர்வில் வினாத்தாள் இடம்பெறும். தற்போது, முன் அரையாண்டு தேர்வு நடத்துவதால், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்கவேண்டிய நிலை உள்ளது. அதற்கு, போதிய அவகாசம் இல்லை. எனவே, முன் அரையாண்டு தேர்வை மாற்றி, இடைத்தேர்வு மட்டும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெட்ரிக் பள்ளிகளில் அதிக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். அதே போல், அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுவதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு

மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது.இதுகுறித்து மாநாட்டு தலைவர் அருணா விஸ்வேஸ்வரன்(முதல்வர், அத்யப்பனா பள்ளி, மதுரை), செயலாளர் ஹம்ச பிரியா (முதல்வர், மகாத்மா பள்ளி, மதுரை) கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தரம் மேம்பாடு, கற்பித்தல் முறையில் புதிய மாற்றங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் தேவைகள் குறித்துவிவாதிக்க ஆண்டுதோறும் சகோதாயா சார்பில் தேசிய மாநாடு நடத்தப்படுகிறது.முதன் முறையாக இந்தாண்டு மதுரை சகோதயா சார்பில் ராஜாமுத்தையா மன்றத்தில் 'தரமான கல்வி' என்ற தலைப்பில் நடக்கிறது.இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள், செயலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
சென்னை மற்றும் டில்லி சி.பி.எஸ்.இ.,இயக்குனர், கூடுதல் இயக்குனர்கள் உட்பட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.முதல் நாள் நிகழ்ச்சியை முன்னாள் மத்திய அமைச்சரும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் துவக்கி வைக்கிறார். மதுரை கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்கின்றனர். இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், சுற்றுச்சூழல், கலை, பண்பாடு, இசை, யோகா, ஆன்மிகம், சித்தா உட்பட பல்வேறு தலைப்புகளில் 19 நிபுணர்கள் பேசுகின்றனர்.
இன்று மாலை 'மதுரையின் கதை' என்ற தலைப்பில் கடம்பவனம் முதல் மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வரை 'பழங்கால மதுரை' மற்றும் திருவள்ளுவர் முதல் எம்.எஸ்.சுப்புலட்சுமி வரை சாதனைகளையாளர்களை விவரிக்கும் 'மார்டன் மதுரை' என்ற தலைப்பிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் முறையாக ஆங்கில வில்லுப்பாட்டு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) குறித்த தகவல்கள், பள்ளிகள், பாடத் திட்டங்கள் உட்பட கல்வி தொடர்பாக 42 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் உள்ள 75 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, என்றனர்.பேட்டியின்போது மாநாட்டு நிர்வாகிகள் பரமகல்யாணி, திலகா, சுப்புலட்சுமி, தீபலட்சுமி, முத்துக்கிருஷ்ணன், முருகதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமலர் 'பட்டம்' கிடைக்கும்
இந்நிகழ்ச்சிக்கான 'பிரின்ட் பார்ட்னராக' 'பட்டம்' தினமலர் மாணவர் பதிப்பு இணைந்துள்ளது. மாநாட்டில் 'பட்டம்' அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பள்ளி மாணவர்கள் எண்ணங்களை வண்ணமயமாக்கும் தினமலர் மாணவர் பதிப்பு கிடைக்கும். இந்த இதழை பள்ளிகளில் பெற அரங்கில் தொடர்பு கொள்ளலாம்.

முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்

முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவம் படிக்கும் மாணவர்கள், முதுநிலை படிப்பில் சேர, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தனியாகவும், எம்.டி.எஸ்., படிப்புக்குதனியாகவும், தேர்வு நடத்தப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான தேர்வு, ஜன., ௭ல், கணினி வழி தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கான, 'ஆன் - லைன்' பதிவு, அக்., ௩௧ல் துவங்கியது; நவ., ௨௭ வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

G.O.NO : 163 பள்ளிக்கல்வி நாள்:10.07.2017- தமிழக மாணவர்களுக்கு கலைத்திருவிழா திட்டம் அறிமுகப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது!

NMMS ONLINE APPLY LINK


மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்!

 “ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில  அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன . அது ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!
முதலில்…. ‘Senior Citizens’ * ‘மூத்த குடிமக்கள்’ எனப்படுவோர் யார்..?
 60 வயது மற்றும் அதற்கு மேலான வயது டைய இந்திய குடிமக்களுக்கு இப்பெயர் பொருந்தும். இதனால். இவர்களுக்கு என்னன்ன சிறப்பு நன்மைகள், சலுகைகள் மற்றும் இட ஓதுக்கீடு போன்றவற்றை இந்திய – தமிழக அரசுகள் செய்துள்ளன என்பது பற்றி, இங்கே உங்க ள் பார்வைக்கு தயாராக, நான் அறிந்த சிலவற்றை வைத் து கோர்க்கப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு இது ..!
இதில், நான் அறியாமல் தவறான தகவல்கள் அல்லது அரசின் தற் போதைய மாற்றங்கள் அல்லது புதிய சேர்பித்தல்கள் இருப்பின் மாற் றுவதற்காக, அவசியம் பின்னூட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்க  ள் சகோஸ்.
(1) மூத்த குடிமக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள்
------------------------------------------------------------
இந்திய மூத்த குடிமக்கள் சம்பந்த ப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரி மை வழங்கப்பட்டு அவை துரித மாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங் கப்பட்டு… அவ்வழக்கு அகற்றலை உறுதிப்படுத்த அனைத்து உயர் நீதி மன்றங்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி ஆலோசனை கூறியுள்ளா ர். [இந்திய அரசு கடிதம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (SD  பிரிவு) அமைச்சகம், புது தில் லி, எஃப் எண் 03.11.1999 தேதி யிட்ட 20-76/99-SD]
(2) தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)
-------------------------------------------------------------
தகவல் அறியும் உரிமை சட்ட த்தில் மூத்த குடிமக்கள் தாக்க ல் செய்தால்… அம்முறையீடு கள் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுபடி, அதற்கு மட்டும் மற் றவர்களின் தாக்கலைவிட உயர் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
(3) உடல்நலம்
-----------------------
மூத்த குடிமக்களுக்கான இவர் கள் எந்த மருத்துவ பரிசோத னை ஆனாலும் மருத்துவம னையின் வருகை டோக்கன் நம்பர் வரிசை இன்றி நேரடியா க மருத்துவரை அணுக முடியு ம். இதை ஏனோ பல தனியார் மருத்துவமனைகள் பின்பற்று வதில்லை. ஆனால், அரசு மரு த்துவமனைகள் மற்றும் ஆரம் ப சுகாதார மையங்களில் மூத் த குடிமக்களுக்கு என தனி வரி சைகளில் வர இடம் உள்ளது. தில்லி அரசு தில்லியில், இவர் களுக்கென தனியாக, ‘மூத்த குடிமக்கள் சிறப்பு மருத்துவமனை ஒன் றை இயக்குகிறது. ஆனால், மருத்துவமனைகளில் கட்டண சலுகை இருப்பதாக நான் அறியவில்லை. ஏனெனில், பொதுவாக வயதானா ல்தானே பலநோய்கள் வருகின்றன! தனியார் மருத்துவமனைகளின்  வியாபார இலாபமே வயதான நோயாளிகளை வைத்துத்தா னே! அப்புறம் எப்படி பில்லில் சலுகை என்று கையை வைப் பது..?
(4) வரி-சேமிப்பு
------------------------
58 இலோ அல்லது அதற்கு முன்பேயோ வாலண்டரி ரிடையர்மென்ட் தந்திருந்தா லும்கூட வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ள தகுதி வயதை (65 வருடங்கள்) அடைந்தால் … மூத்த குடிமக்களுக்கு என, அவர்களின் பென்ஷன் போக் குவரத்தில் வரு மான வரி சிறப்புத் தள் ளுபடி உண்டு.
 பொதுவாக… வயது குறைந்து இருந்தால் மட் டுமே இன்ஷ்யூரன்ஸ், சேமிப்பு திட்டம் ஆகிய இதிலெல்லாம் சேர்த்துக்கொள்வர்கள். ஆனா ல், வருமான வரி சட்டம் பிரிவு 80 C, 1961 ன் படி , 01.04.2007 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்வது யாதெனில்…. அஞ் சல் அலுவலகம் வைப்பு கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின்கீழ் முத லீடு செய்யப்படுவது 5 ஆண்டு நீட்டிக்கப்பட்டு ள்ளதாம்.
(5) வங்கி
--------------
 அரசு பொது துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அத ன் பெரிய நெட்வொர்க் மூலம் இயங்கும் சில சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றில் ‘மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில்… மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் வட்டி விகித ம் மற்றவர்களைவிட அதிகமாகவே தர ப்படுகிறது.
பல வங்கிகள், குறிப்பாக, பாரத ஸ்டேட்வங்கி, பின்வரும் வாடிக்கை யாளர் சேவைகளில்… மூத்த குடிமக்கள் எனில்… பொதுவாக பரிந்து  ரைக்கப்பட்ட கட்டணத்தில்  50% மட்டுமே வசூலிக்கிறது.
i) டூப்ளிகேட் பாஸ்புக்/ அறிக்கை பெறுத ல்,
ii) காசோலை புத்தகங்கள் வழங்குதல்,
iii) வங்கிக்கணக்கில் ஆகக்குறைந்தபட்ச இருப்பு அல்லாத பராமரி ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் அபராத கட்டணங்கள்,
iv) சமநிலை சான்றிதழ் வழங்குதல்,
 v) கையொப்ப சரிபார்த்தல், போன்றன ‘சீனியர் சிடிசன்’ எனில் பாதி கட்டணம் தான்..!
மேலும் வேறு என்னவெல்லாம் சிறப்பு வசதிகள், சலுகைகள் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியம்  பெறுவோருக்கு உள்ளன என உங்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்று சரி பார்க்கவும்.
(6) தொலைத்தொடர்பு
-----------------------------------
 ஒரு புதிய தொலைபேசி இணை ப்பு விண்ணப்பிக்கும் மூத்த குடி மக்களுக்கு பல சிறப்பு ஏற்பாடு களை தொலைத்தொடர்பு துறை செய்து ள்ளது. விண்ணப்பத்தில்… மூத்த குடிமக்கள் எனில் தனி மு ன்னுரிமை வகை ஓதுக்கீடு செய் யப்படும். ஒரு மூத்த குடிமக்கள் புகார் முன்னுரிமை அடிப்படை யில் பரிசீலிக்கப்படும். சட்டம் போட்டுள்ளார்கள். அதன்படி நடக்கி றார்களா என்றுதான் தெரியவில்லை. தக்க சான்றிதழ் தனது மாதா ந்திர கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது.
(7) இந்திய ரயில்வே
-------------------------------
60 வயது அல்லது அதற்கு மே ற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயிலில் எங்கே சென்றாலும் … டிக்கட்டில் 30% தள்ளுபடி உண்டு. அதுவே… அவர் மூத்த குடிமகள் எனில் ( பெண் எனி ல்)ரயில் டிக்கெட்டில் 50% சலு கை உண்டு..! இந்த தள்ளுபடியானது… சதாப்தி… ராஜதானி உட்பட எல்லா ரயில்க ளிலும் உண்டு.
தயவுசெய்து டிக்கட் எடுக்கும் பொழுதும், பயணம் செய்யும் பொழுது  ம் அனைத்து மூத்த குடிமக்களும், தங்கள் வயது குறிப்பிடப்பட்டுள்ள அரசின் ஒரு புகை ப்பட அடையாள அட்டையை உடன் அவசிய ம் எடுத்து செல்லுங்கள். சலுகை பெறுங்கள் சீனியர் சிடிசன் சகோஸ்…!
அதுமட்டுமா… டிக்கெட் வாங்குவதற்கு, முன் பதிவு அல்லது ரத்து செய்வதற்கு என… அனைத்து ரயில் நிலையங்க ளிலும் உள்ள மூத்த குடிமக்களுக்கென தனி கவுண்டர்கள்/வரிசைக ள் உள்ளன. ஒரே ஒரு கவுண்டர் வரிசை என்றால்… மூத்த குடி மக் கள் வரிசையில் நிற்கவேண்டி ய ஆவசியம் இல்லை..!
நேரே கவுண்டர் சென்று சான்றிதழ் காட்டி டிக்கட் வாங்கிக் கொ ண்டு போய் கொண்டே இருக்க வே ண்டியதுதான்.
இந்த சலுகையை எல்லாம் பெ ற்று பயன்பெறுங்கள் சீனியர் சிடிசன் சகோஸ். அதேநேரம், வரிசையில் நிற்கும் மற்றவர்க ள் இவர்களை தங்களுக்கான சலுகையை பெற அனுமதியுங்கள் சகோஸ். மாறாக, ” யோவ் பெரிசு! என்ன நீ பாட்டுக்கு  நேரா கவுண் டருக்கு போறே…? வரிசைலே நிக்கிறவன்லாம் மனுஷனா தெரிய லையா…? கண்ணாடியை போட்டுட்டு இந்தப்பக்கமும் கொஞ்சம்  பாரு…!” என்றெல்லாம் தர்மப் படி மட்டுமல்ல… சட்டப்படியும் சக  ஜூனியர் சிடிசன்ஸ்… வா யைத்திறக்கக்கூடாது..!!! அறிய வும்.
மேலும், மூத்த குடிமக்கள் வசதி க்காக அனைத்து முக்கிய சந்தி ப்புகள், மாவட்ட தலைமையகம் மற்றும் பிற முக்கியமான ரயில் நிலையங்களில் எல்லாம் சக் கர நாற்காலிகள் எல்லாம் உள்ளன. பயன் பெறுங்கள்.
(8) ஏர்லைன்ஸ்
-------------------------
மூத்த குடிமக்கள் எனில், ‘சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு’ இந்திய  ன் ஏர்லைன்ஸ் விமான சிக்கன வகுப்பு கட்டண த்தில் 50% தள்ளுபடி பெரும் உரிமை உண்டு.
இதுவே, ஏர் இந்தியா என்றால்…. 45% தள்ளு படி வழங்குகிறது. (வய து வரம்பு : ஆண்கள் 65 + & பெண்கள் 63 + ).
இந்தியாவில் செயல்படும் மற்ற ஏர்லைன்ஸ்களும் மூத்த குடிமக் களுக்கு தள்ளுபடி வழங்கும். அதுபற்றி நீங்கள் உங்கள் பயண திட்ட த்தை ஏஜண்டிடம் கூறும் போது நினைவூட்டுங்கள்.
(9மாநில சாலை போக்கு வரத்து
--------------------------------------------------
மாநில சாலை போக்குவரத்து து றை தமது அனைத்து பேருந்துக ளிலும் முன் வரிசையில் 2 இரு க்கைகள் மூத்த குடிமக்கள் அமர… ‘முதியோர் இருக்கை’ மற்றும் ‘ஊனமுற்றோருக்கான இருக்கை’ என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. ஆனால், முதியோர் இருக்  கை & ஊனமுற்றவர் இருக்கை என்பது ‘மாற்றுத்திறனாளிகளி ன் இருக்கை’ என்று பெயர் மாற் றம் பெற்றதேயன்றி இதெல்லா ம் சரிவர நடைமுறையில் நம் மால் கடைப்பிடிக்கப்படுவதுமி ல்லை. நான் அந்த சீட்டுகளில் அமரவேமாட்டேன். இப்போதெ ல்லாம் அப்படி எழுதப்பட்டு இரு ப்பதையும் தனியார் பேருந்துக ளில் காண முடியவில்லை.
தமிழகம்  உட்பட பல மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கு என ரயி ல்வே போலவே மாநில அரசுப்பேருந்திலும் முன்பதிவில் கட்டண  சலுகைகள் தருகின்றன.முன்பதிவின்பொ ழுது விசாரித்து பயன் பெறுங்கள்.
(10) சட்டம் & சீர்திருத்தம்
--------------------------------------
எங்கெல்லாம்… “சீனியர் சிட்டிசன்” என்ற சலுகையை சட்டப்படி பெற விரும்புகிறீர் களோ, அங்கெல்லாம் உங்கள் கையில் இருக்க வேண்டியது மத்திய/மாநில அரசி ன் உங்கள் ஃபோட்டோ ஒட்டிய ஓர் ஐடி கார்டு. அதில் முக்கியமாக உங்கள் date of birth இருந்தாக வேண்டும்..!
இந்திய அரசால், சமீபத்தில் மூத்தகுடிமக்க ள் மற்றும் பெற்றோர் நலனுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இவர்களுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அதற்குரிய ஏற்பாடுகளை உருவாக்குகிறது

CPS MISSING CREDITS CLEARING STEP – BY – STEP PROCEDURE

CLICK HERE. ...

குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது..


சென்னை,
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனிதனித்தாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,  விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி,  CCSE-IV என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

வியாழன், 2 நவம்பர், 2017

15ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்!!

புதன், 1 நவம்பர், 2017

குழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது?

மறதி என்பது பெருநோயாக நம்மைப் பீடித்திருந்தாலும் ஆசிரியை சுகந்தியை மறந்துவிட முடியுமா?
> 2009 டிசம்பர் 3...
பனி சூழ்ந்த காலை. சுகமாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை, வலுக்கட்டாயமாக எழுப்பினார்கள் தாய்மார்கள். பல் துலக்கி குளிப்பாட்டி, கெஞ்சி உணவூட்டும்போதே, வாசலில் பள்ளி வேன் சத்தம் கேட்டது. வேதாரண்யம் வட்டம், கரியாபட்டினம், 'கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி'க்கு அழைத்துச்செல்லும் வேன் அது. அழுத குழந்தைகளுக்கு மாலையில் சாக்லேட் வாங்கித் தருவதாக உத்தரவாதம் தந்து, முத்தம் தந்து வேனில் ஏற்றிவிட்டார்கள். அவர்களில் பலருக்குத் தெரியாது, தங்கள் குழந்தையின் சிரிப்பை இனி பார்க்க முடியாது என்பது.
வேனில் 20 குழந்தைகள், பாதுகாப்புக்குச் சுகந்தி டீச்சர், ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை, சுகந்தி. எளிய குடும்பத்தில் பிறந்து, விரும்பி ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தவர். மழை மெல்லிய சாரலாய் தூறிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்தவாறும் பாட்டுப் பாடியவாறும் இருக்கும் குழந்தைகளைச் சுமந்து செல்கிறது வேன்.
பனையடிகுத்தகை சாலை அருகே செல்லும்போது ஓட்டுநரின் மொபைல் சிணுங்குகிறது.. எடுத்துப் பேசியவாறே ஓட்டுகிறார். திடீரென அவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன், அருகிலிருந்த குளத்துக்குள் பாய்ந்தது. குளத்தில் 20 அடிக்கும் மேல் நீர் இருந்ததால், விழுந்த வேகத்தில் வேன் மூழ்கத் தொடங்குகிறது.
உள்ளிருந்த குழந்தைகளுக்கும் ஆசிரியைச் சுகந்திக்கும் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து உதவிக் குரல் எழுப்பவும் அவகாசமில்லை. குழந்தைகள் வேனுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து நீரைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். 20 குழந்தைகளுமே எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள்.
சுகந்திஆசிரியை சுகந்தி, வேன் ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். தன் பலம் முழுவதையும் திரட்டி செயலில் இறங்கும் சுகந்தி, ஒவ்வொரு குழந்தையாகப் பிடித்து கரைக்குக் கொண்டு வருகிறார். நீரின் ஆழத்திலிருந்து குழந்தையை மீட்டுவருவது எவ்வளவு சவாலானது.
ஆனாலும், தன் உயிர் பற்றி துளியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் குளத்தின் ஆழத்துக்குச் செல்கிறார் சுகந்தி. தன் உயிரின் இறுதி மூச்சுக் காற்று அந்தக் குளத்தின் நீரில் கலக்கும் வரை, குழந்தைகளைக் காப்பாற்றப் போராடினார். இறுதியில், குழந்தைகளை நேசித்து, அன்பு பாராட்டி, கல்வி போதித்த அந்த ஆசிரியை, குளத்தின் நீருக்குத் தன் உயிரை ஒப்படைத்துவிடுகிறார்.
அதற்குள் சத்தம் கேட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் கூடிவிட்டார்கள். அவர்களைப் பார்த்த ஓட்டுநர், தப்பித்து ஓடிவிடுகிறார். என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக் குழந்தைகளை மீட்க, இறுதி வரை உதவுகிறார் கிளினர். 20 குழந்தைகளில் 11 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துபோனார்கள்.
இந்த நிகழ்வு கேட்பவரைக் கண்ணீரில் உறைந்துபோகச் செய்தது. ஊடகங்கள் வழியே கேட்டவர்களும் பார்த்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியை சுகந்தியை மானசீகமாக வாழ்த்தினார்கள். அவரின் இறப்பை, தன் வீட்டில் ஒருவரின் மரணமாக உணர்ந்தார்கள்.
> வேதாரண்யம் வட்டம், நாகக்குடையான் கிராமத்தில் மாரியப்பன், அன்னலெட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் சுகந்தி. அவருக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. எளிமையான குடும்பம். ஆனாலும் படிப்புமீது ஆர்வம்கொண்ட சுகந்தி 10, 12-ம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றார். மேல் படிப்புக்குக் குடும்பச் சூழல் இடம் தராவிட்டாலும், சிரமப்பட்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.
78 சதவிகிதம் பெற்று, முதல் இடத்தில் தேர்ச்சியடைந்தார். மிகச் சொற்பமான சம்பளம் என்றாலும், தன் லட்சியப் பணியான ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்துகொண்டிருந்தார். மாலை நேரத்தில் தன் வீட்டின் அருகே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷனும் எடுத்துக்கொண்டிருந்தார்.
படிப்பு ஏழ்மையை விரட்டும் என பிள்ளைகளைப் படிக்கவைத்த பெற்றோருக்குச் சுகந்தியின் மரணம் பேரிடியாக விழுந்தது. தூக்கி வளர்த்த பெண்ணை, சடலமாகப் பார்க்க நேரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். வருத்தத்தைப்போலவே வறுமையும் குடும்பத்தைச் சூழ்ந்தது. சுகந்திக்கு அறிஞர் அண்ணா விருதும் 25,000 ரூபாய் பணமும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. சுகந்தி மரணத்தின்போது என்ன நடந்தது, என்னென்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவை என்னவாயிற்று என சுகந்தியின் தம்பி ராஜ்மோகனிடம் பேசினோம்.
“சுகந்தி அக்கா இறந்ததிலிருந்து வீடு வீடாகவே இல்லை. எட்டு வருஷம் ஆயிடுச்சு. ஆனாலும், அந்த வலி இப்பவும் இருக்கு. அப்பா ஊரில் கிடைக்கும் ஏதாச்சும் வேலைகளுக்குப் போவாங்க அம்மா நிலைமைதான் ரொம்ப கஷ்டம். கல்யாணம், காட்சின்னு போகிற இடங்களில் அக்காவோடு படிச்சவங்க, தங்கள் குழந்தையோடு வந்திருக்கிறதைப் பார்த்துட்டு வந்து அழுவாங்க.
'நம்ம சுகந்திக்கும் இந்நேரம் குழந்தைகளோடு சந்தோஷமாக இருந்திருப்பாளே'னு சொல்லிட்டே இருப்பாங்க. ரொம்ப சிரமப்பட்டுத்தான் பெரிய அக்கா கல்யாணத்தை முடிச்சோம். அவங்க டெம்பரவரியா ஒரு வேலைக்குப் போயிட்டிருக்காங்க. நான் கோயம்புத்தூரில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். சுகந்தி அக்கா இறந்தப்போ, கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்தாங்க...'' என்ற ராஜ்மோகன், பேச்சை நிறுத்தி, கலெக்டர் வந்திருந்தாரா என யோசிக்கிறார். அருகிலிருந்து அம்மாவிடம் கேட்கிறார். வந்ததாக அவர் சொன்னதும் தொடர்கிறார்.
''கவர்மென்ட் தந்த ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தார். எனக்கு அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, எட்டு வருஷமாக அலையறோம். எதுவும் நடக்கலை. 'டிப்ளமோதான் படிச்சிருக்கே, அரசு வேலை எதுவும் கிடைக்காது'னு சொல்றாங்க. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி பண்ணிட்டிருக்கேன். அந்த வேலை கிடைச்சா குடும்பத்துக்கு உதவியா இருக்கும்" என்றவர், அம்மாவிடம் சுகந்தி பற்றிப் பேசச் சொல்கிறார். ஆனால், ''சுகந்தி...'' என்று பெயரை ஆரம்பித்ததுமே வார்த்தை வராமல் அழத் தொடங்கிவிட்டார் அந்தத் தாய்.
சுகந்தியின் தியாகத்தைப் பற்றி ஆவணமாக்கும் முயற்சியில் 'சுகந்தி டீச்சர்' எனும் சிறுநூலை வெளியிட்டுள்ளார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பாபு எழில்தாசன், "நான் அவங்க வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் மனசுக்கு கஷ்டமாக இருக்கும். சுகந்தி டீச்சரோட இழப்பு அந்தக் குடும்பத்துக்கு ஈடே செய்ய முடியாதது" என்கிறார். (இப்படங்கள் அந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவை)

கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை (02.11.2017)

* சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை.

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் கல்வி குறித்தும் அதன் முக்கியத்துவமும் குறித்தும் வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்களின் ஆலோசனைகள்..


*”நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம்”*
 பள்ளிகளில் கணினிக் கல்வியானது மாணவர்கள் தொழில் வளர்ச்சி பெற முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வசதியுடன் உள்ள கணினியானது மாணவர்கள் புதிய திறன்கள் மற்றும் தற்போதைய படிப்பினைகளை மேன்மையான முறையில் கற்றுக்கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல், இணையக் கூற்றுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் திறம்பட பயிற்றுவிக்கப்படுகிறது.
கணினிகள் மற்றும் இண்டர்நெட் சார்ந்த பயன்பாடுகள் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் கணிப்பொறி இன்று ஒரு இன்றியமையாத சாதனமாக மாறி வருகிறது. மேலும்,  தனியார் பள்ளிகளின் பல்வேறு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு கணினிகளை பயன்படுத்தி, புதிய தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர் (தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தவிர…).
(செல்வி. ரங்கநாயகி - ஈரோடு).
*”பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகமும், கணினிக் கல்வியும்”*
தற்போது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலே பயிற்றுவிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். அவர்கள் கல்வியாண்டின் இறுதியில் தங்கள் பிள்ளைகள் உயர் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவும், சக மாணவர்களை விட கல்வியிலும், திறமையிலும் தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு “கணினி பற்றி எதுவும் தெரியாது”  என்ற நிலையை விரும்பவில்லை. உயர் கல்வியின் நவீன வசதிகள் மற்றும் போதிய தகவல் தொழில்நுட்ப இணைய வசதி உள்ள பள்ளிகளுக்கு அவர்களின் குழந்தைகளை அனுப்பவே விரும்புகின்றனர். தனியார் பள்ளிகள் கல்வியில் முன்னணி வகிக்கின்றன; மேலும் அதிகமான தொகையை கட்டணமாக எடுத்துக்கொள்கின்றன. ஏனெனில், இன்றைய நவீன கல்விமுறையில் “கணினிக்கல்வி” அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வசதியான தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாது என்பதே கசப்பான உண்மை. தமிழகத்தில் இன்றுவரை கிராமப்புற மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் கணினிக்கல்வி கிடைக்கவில்லை. இன்றுவரையில் கணினி அறிவியல், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படைகளை அறியாதவர்களாகவே அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர். கல்வியில் கூட ஏன் இத்தனை பாரபட்சங்கள்..??
“கணினி மற்றும் இணையம்” ஆகியவை மாணவர்களின் படைப்புத்திறன் மற்றும் கற்பனைத்திறனை மேம்படுத்தவதோடு மட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்பங்களை எளிதாக புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. மாணவர்கள்தான் ஒரு நாட்டின் வருங்கால தலைவர்கள். தற்போதைய பள்ளி மாணவர்கள்தான் எதிர்காலங்களில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் படைப்பாளிகளாவர். எனவே, கல்வியின் அபிவிருத்திக்கு கணினிகள், இணையம் மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி ஆரம்ப கல்வியிலிருந்தே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
(திரு. அகிலன் - வேலூர்).
*”கணினி ஆசிரியர்களின் முக்கியத்துவம் - பள்ளிக்கு குறைந்தது ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்வது அவசியம்”*
பள்ளிகளில், கணினி சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் அனைத்து துறை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது இன்றைய தனியார் துறைகளின் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் ஒப்பிடுகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.
கணினிகளை எப்படி முறையாக பயன்படுத்துவது, மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல், பவர் பாயிண்ட், இணைய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நிரல்களை கையாள்வது குறித்தும் வலைத்தள வடிவமைப்பு, இணையத்தை முறையாக பயன்படுத்துவது போன்றவற்றினை பி.எட்., பயின்ற கணினி ஆசிரியர்களால் தான் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க முடியும்.
மேலும்,  எவ்வாறு பல்வேறு பயன்பாடுகளைப் (Apps) பயன்படுத்துவது, எவ்வாறு கணினி சாளர இயங்குதள நிரலைப் பயன்படுத்தி மாணவரின் கணினி அறிவை மேம்படுத்துவது, கட்டுரைகள் (அ) கவிதைகள் எழுதும் திறன் கொண்ட மாணவர்களை தமிழ் மொழியில் கணினியில் தட்டச்சு செய்ய பயிற்சி கொடுப்பது போன்ற மேன்மையான கல்விப் பணிகளுக்கு கணினி ஆசிரியர் அவசியம் தேவை. கணினியில் இடம்பெறும் கணிதம் போன்ற வகுப்புகளை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பயிற்றுவிக்க  மைக்ரோசாஃப்ட்-எக்செல் போன்ற பிரதான கணினி பயன்பாடுகள் கணினி அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியும், தெளிவாகவும் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் இன்று அவசியமாகும்.
நவீன யுகத்தில் கணினியின் முக்கியப் பங்கு, ஒவ்வொரு துறையிலும் கணினியின் பல்வேறு பயன்கள் என்ன என்பதை கற்பிப்பதற்கும், பள்ளிகளில் கணினி ஆசிரியர் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறார்.
இதை, நடைமுறைப்படுத்த முயற்சித்தேன். ஆனால், நடைமுறைக் கல்வியைக் காட்டிலும் தத்துவார்த்த ரீதியாக கணிப்பொறியினைப் பற்றி தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் கற்க முடிகிறது. இதனை அரசுப்பள்ளியில் முறையாக நடைமுறைத்திபடுத்தினால் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். மேலும், பெற்றோர்களுக்கு அரசு பள்ளி மீது உள்ள அவநம்பிக்கையும், அதிருப்தியும் விலகும்; இதனால், அரசுப்பள்ளிகள் சர்வதேச கல்வித்தரத்திற்கு வெகுவாக உயரும்.
தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் 27 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதே  தவிர அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுத்தரவில்லை..
(திருமதி. ஹேமாராணி - சென்னை)
*”வளர்ந்த நாடுகளில் கணினிக் கல்விக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் தரவதற்கான காரணம்…”*
பல வளர்ந்த நாடுகள் அவற்றின் அரசு பள்ளிகளுக்கு கணினி பயன்பாடுகளையும், உயர்தர தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. சிறந்த தொழில்நுட்ப கல்வியானது மாணவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கைத்திறன் மிகுந்தவர்களாகவும் இருக்க உதவுகின்றது.
அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொழில்நுட்பங்கள், விளையாட்டுக்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இன்று  உலகில் முன்னணி நாடுகளாகவும், வளர்ந்த நாடுகளாகவும் திகழ்கின்றன. உயர்தரமான தொழில்நுட்ப கருவிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தரமான முறையில் வழங்குவதால் அந்த நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இவ்வாறான அதிநவீன வளர்ச்சியினால் Google, Microsoft, Facebook  போன்றவற்றை உருவாக்கியவர்கள் அந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இதுவரை உருவாக்க முடியவில்லையே… ஏன்..??
வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் முன்முயற்சி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஒரு வாய்ப்புக் கூட வழங்காமல் வேலையில்லா ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளது. உயர் சம்பளம் தேவையில்லை; வாய்ப்பு மட்டும் தாருங்கள்; பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியருக்கு மட்டும்.
(திரு. கோவிந்தன் - கோவை)
*”தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...”*
தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் “கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing),  இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc. போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது;  இதனால், பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers) கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது, தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.
தகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.
(திரு. ராஜ்குமார் - கடலூர்).
*”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”*
தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு பள்ளிகளுக்கு  பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை..?? தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை..??
பிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது…
நவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும், கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும் பின்தங்குகிறது.
(திரு.ச. கார்த்திக் - நாமக்கல்).
*”கணினிக்கல்விக்கு வருகின்ற நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டுகிறோம்...”*
தமிழகத்தில் கணினிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் மீது முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
“தொழில்மயமாக்கல் (Shabdkosh)”  என்பது ஒரு சூத்திரம் அல்லது வெளிநாட்டு முதலீடு மட்டுமல்ல; இந்தியாவில் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, காத்திருக்கும் வேலைவாய்ப்புகளற்ற இளைஞர்களின் விகிதத்தை குறைக்கும் ஒரு விதிமுறையும் ஆகும்.
மிகவும் வசதி படைத்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர்களே இதன் மூலம் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே முழுப் பயனையும் அடைகின்றனர். இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் இளைஞர்கள் பயனைடையும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தினால் இங்கு தமிழகத்தில் பல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசின் பல திட்டங்கள் இளைஞர்களைச் சென்று சேர்வதில்லை. இதனால்தான் B.E., MCA., MBA., போன்ற பட்டதாரிகள் உயர்நீதிமன்றத்தின் துப்புரவு பணிக்குச் செல்லும்  அவலமான நிலையும் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைவு மற்றும் தரமான கல்வியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு கணினி அறிவியல் கல்விக்கு அதிக பட்ஜெட் நிதியை வழங்கி வருகிறது. இது மிகவும் பெரிய விஷயம்! இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வித்துறையிலும், கல்வியின் அமைப்பிலும் உள்ள கறுப்பு துளைகளை அகற்றுவதன் மூலம் தமிழகம் கல்வியில் சிறப்பானதொரு  வளர்ச்சியை அடைய முடியும்.
நமது இந்திய தேசத்திலிருந்து ஊழலை அகற்றும் ஒரே நல்வழி கல்விதான்.
இன்றைய நவீன யுகத்தில் “கணினிக்கல்வி” மிகவும் முக்கியமான ஒன்றாகும்; சர்வதேச அளவில் நமது மாணவர்களும், சமூகமும் வெற்றியடைய கணினி அறிவியல் போன்ற நவீன பாடத்திட்டங்களை இன்றைய கல்விமுறையில் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.
(திரு. சரவணன் - கிருஷ்ணகிரி).
தமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும் கணினி!! எதிலும் கணினி!!” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வரை இல்லை.
இந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுகிறோம்..!!
புகைப்படம் :திரு வேலு.
செய்தித் தொகுப்பு:
திருமதி ஜமுனாமணி
நன்றியுடன் :
திரு வெ.குமரேசன்
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்தை நவம்பரில் பெறும்போது ஊதிய உயர்வுடன் பெற வேண்டும்.
இந்நிலையில், நிதித்துறைச் செயலர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில், ‘நவம்பர் 20-க்குள், அக்டோபருக்கான புதிய ஊதிய நிலுவைத்தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் கணக்கிட்டுப் பெற்று வழங்க வேண்டும். நவம்பர் சம்பளத்தை டிசம்பரில் வழங்கும்போது, புதிய சம்பளம் வழங்கப்பட வேண் டும்’ என்று கூறியுள்ளார்

DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்

பக்கம்-1 தற்போதைய விவரம்

பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
 பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்
பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்
பக்கம்-7 துறை தேர்வு விவரம்
பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி
பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம்
பக்கம்-15-16 பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு விவரம்
பக்கம்-17 தற்காலிக/நிரந்தர பணி துறவு
பக்கம்-18-19 2003 வேலைநிறுத்தம் மூலம் தற்காலிக பணி நீக்க விவரம்
பக்கம்-21 ஒரு துறையிலிருந்து வேறு துறைக்கு மாறுதல் நியமனம்
பக்கம்-25 ஈட்டிய விடுப்பு இன்றைய இருப்பு விவரம்
பக்கம்-26 மகப்பேறு விடுப்பு விவரம்
பக்கம்-27 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் மருத்துவ சான்றின் மருத்துவ விடுப்பு
பக்கம்-28-29பதவி உயர்வு மூலம் ஊதிய மறுநிர்ணயம் மட்டும்
பக்கம்-30-32 ஊதிய குழு நிர்ணயம்
பக்கம்-31-33 இடைக்கால நிவாரணம்
பக்கம்-34 இளையோர் மூத்தோர் ஊதிய விவரம்
பக்கம்-35-44 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-45 ஊக்க ஊதிய உயர்வு மட்டும்
பக்கம்-46 தேர்வு/ சிறப்பு நிலை ஊதியம்
பக்கம்-47 உயர் கல்விக்கான துறை அனுமதி
பக்கம்-55-58 வாரிசு நியமன விவரம்
பக்கம்-61 பணி சரிபார்ப்பு
விவரம்
ஓ.மு L.Dis
மூ.மு K.Dis
ப.மு D.Dis
நி.மு R.Dis
செமுஆ Proc
ந.க R.C
அரசாணை G.O
இரு Standing Order No.

ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மே மாதம் கோடை விடுமுறையின்போது, பொது கவுன்சிலிங் முறையில், விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.
மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர்.இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர்.
அதை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் ஏற்று, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, 'நிர்வாக மாறுதல்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.'கடுமையான புகார்கள்,ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிர்வாக காரணங்களால், மாறுதல் வழங்கலாம்.
நிர்வாக மாறுதல்களை பொறுத்தவரை, முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை காலங்களில் மட்டும், வழங்க வேண்டும். மற்ற நேரங்களில் மாற்றினால், மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கும். இதை, அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்' என,பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.

TNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.

மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர் பங்கேற்கவில்லை.
ஜூலை 24 முதல் 28 வரை மதுரையில் நடந்த முதற்கட்ட சரிபார்ப்பில் 623 பேர்பங்கேற்கவில்லை. அவர்கள் சான்றிதழை இரண்டாம் கட்டமாகசரிபார்க்க அக்., கடைசி வாரத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 331 பேர் மட்டும் பங்கேற்றனர்.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. இணைப்பு: நேர்மை உறுதிமொழி!!!