சனி, 21 அக்டோபர், 2017
ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், '7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விளக்கக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் மண்டலச் செயலாளர் பேராசிரியர் குமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் பேசியவர்கள், "தமிழக அரசு அமைத்த ஊதியக்குழு, தனது பரிந்துரையை தமிழக முதல்வரிடம் சில தினங்களுக்கு முன் அளித்தது. இதை ஆராய்ந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்குழு ஒப்புதல் தந்ததன் அடிப்படையில், ஊதிய உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், பல்வேறு குறைபாடுகளுடன் அறிவித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. ஜாக்டோ-ஜியோ சார்பாக குறைபாடுகளைக் களைந்து, துணை அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த ஊதியக்குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களையாமல் அறிவித்துள்ளதால், அடிப்படை ஊதியத்தில் 15 ஆயிரத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் என்று அறிவித்துவிட்டு, அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைவான ஊதிய விகிதமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதைச் சரிசெய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். இல்லையேல், வரும் 23-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதுகுறித்து முறையிட உள்ளோம்.
நீதிமன்றம் சாதகமான பதிலை அளிக்கும் என நம்புகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், நீதிமன்ற அனுமதியுடன் அடுத்த கட்ட போராட்டம்குறித்து மாநில மையம் கூடி முடிவெடுக்கும்” என்றார்.
பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு...
தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 1 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?
நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.
3,௦௦௦ ஆசிரியர்கள்
'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.
இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.
வழிகாட்டுதல்கள்
பின், தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.
பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும். வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு அரையாண்டு தேர்வு
தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
வெள்ளி, 20 அக்டோபர், 2017
ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்' முதல்வரிடம் குவியும் மனுக்கள்
தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
ஊதிய,உயர்வில்,ஆசிரியர்கள்,மெர்சல்,முதல்வரிடம்,குவியும்,மனுக்கள்
மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., ௧௧ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.
இன்று விளக்க கூட்டம்
இந்த உயர்வு அறிவிப்பு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள்
தெரிவித்துள்ளனர். நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள், மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகம் முன், இன்று விளக்க கூட்டம் நடத்துகின்றனர்.
அதன்பின், 'நீதிமன்றத்தை அணுகுவோம்; அதிலும், முடிவு கிடைக்காவிட்டால், போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
முதல்வரிடம் மனுக்கள்
அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ -ஜியோ கிராப்' உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஆசிரியர், அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் வகையில், ஊதிய உயர்வு வரும் என, எதிர்பார்த்தோம். ஆனால், ௨௧ மாத நிலுவை தொகையை தர, தமிழக அரசு மறுத்து விட்டது.
அதேபோல், ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. இந்த பிரச்னைகளால், ஊதிய உயர்வில் குழப்பம் அதிகரித்துள்ளது. அவற்றை சரிசெய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் : அண்ணா பல்கலை கண்டனம்
'கட்டணம் செலுத்தாத கல்லுாரி மாணவர்கள், டிசம்பர் தேர்வில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலை மற்றும்அதன் இணைப்பு கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சார்பில்,
செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரி நிர்வாகங்களே தேர்வு நடத்தி, திருத்தம் செய்கின்றன.
செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரி நிர்வாகங்களே தேர்வு நடத்தி, திருத்தம் செய்கின்றன.
தேர்வு ஏற்பாடு : இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட, இணைப்பு இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, டிசம்பரில், தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், கல்லுாரி விபரங்கள், அண்ணா பல்கலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, கல்லுாரிகளே வசூலித்து, அண்ணா பல்கலையில் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல கல்லுாரிகள், தங்கள் மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலித்தாலும், அதை செலுத்தாமல் உள்ளன.
சுற்றறிக்கை : இந்நிலையில், அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தை, அண்ணா பல்கலையில் செலுத்தும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே, தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும்; மற்றவர்களுக்கு கிடைக்காது. 'அதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதற்கு, கல்லுாரிகளே பொறுப்பு' என, எச்சரித்துள்ளது.
நெட்' தேர்வு: ஹால் டிக்கெட்
பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியராக சேர, 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதேபோல், முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின் உதவித்தொகையுடன், ஆராய்ச்சி படிப்பில் சேரவும், 'நெட்'தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., ௫ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், ௯௧ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட் ெவளியிடப்பட்டது. அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
அதேபோல், முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின் உதவித்தொகையுடன், ஆராய்ச்சி படிப்பில் சேரவும், 'நெட்'தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., ௫ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், ௯௧ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட் ெவளியிடப்பட்டது. அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், தபாலில் அனுப்பப்பட மாட்டாது என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இனி GOOGLE மேப்பை வைத்து மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்... வருகிறது புது வசதி!
இனி கூகுள் மேப் ஆப்பைக் கொண்டு பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தையும் தெளிவாக பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதிகளை பெற்ற கூகுள் மேப்பின் புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் எப்படி இருக்கும் என மொத்த டெக் உலகமும் தற்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது.
உலகில் எந்த இடத்திற்கும் யாரிடமும் வழி கேட்காமல் செல்லும் வகையில் அனைவருக்கும் உதவியாக இருக்கும் ஆப் கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆப் ஆகும். அமெரிக்காவில் இருக்கும் தெருக்கள் தொடங்கி ஐநாவரத்தில் இருக்கும் தெருக்கள் வரை அனைத்தையும் துல்லியமாக காட்டும் வசதி கொண்டது இந்த கூகுள் மேப்ஸ் ஆப்.
ஒவ்வொரு முறையும் இந்த ஆப்பில் வெளியிடப்படும் அப்டேட்டில் புதிய அம்சங்கள் நிறைய இணைக்கப்படும். டிராபிக்கை அறிவது, ஆப் லைனில் பார்ப்பது என சில புதிய வசதிகள் உருவாக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெளியிடப்பட இருக்கும் அப்டேட்டில் பதினாறு அடிக்கு பதிலாக பல்லாயிரம் அடி பாய முடிவு செய்திருக்கிறது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய அப்டேட்டில் சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களையும் பார்க்க வகை செய்துள்ளது கூகுள். பூமியில் இருந்து ஜூம் அவுட் செய்துவிட்டு சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களை தேர்வு செய்து எளிதாக அதை ஜூம் செய்து இதன் மூலம் பார்க்க முடியும்.
அதுமட்டும் இல்லாமல் அருகில் உள்ள துணைக் கிரகமான நிலா, கிரகங்களான செவ்வாய், புதன், வியாழன் போன்ற கிரகங்களின் மேற்பரப்பை மிக துல்லியமாக இதன் மூலம் பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தொலைவில் உள்ள கிரகங்களான புளுட்டோ, நெப்டியூன் போன்ற கிரகங்களின் மேற்பரப்பையும் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இப்போதே மேப்ஸ் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்!!
சென்னை: தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களை ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைத்து இணைய சேவை வழங்கப்படும்
அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,000 கோடி மத்திய அரசு பங்களிப்புடன் தமிழக அரசு பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,230 கோடியே 90 லட்சத்தை மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வியாழன், 19 அக்டோபர், 2017
7th Pay Commission News,G.O and Form & Calculation Sheets etc.
1. 7th PAY COMMISSION G.O PUBLISHED : TN G.O Ms - 303 Dt.11.10.2017
2. Simple 7th pay calculator (all calculation sheets in one link)
1.CLICK HERE-7th PAY COMMISSION TO KNOW YOUR PAYMENT
THANKS TO-Mr.M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt Boys Hr Sec School
Mariammankoil ,Tanjavur Dist-613501.
Cel:98 43 47 0024 mskedusoft@gmail.com
2.7th Pay Simple Calculation Software .......Latest Version Click here To View .....
THANKS TO
THANKS TO-Mr.M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt Boys Hr Sec School
Mariammankoil ,Tanjavur Dist-613501.
Cel:98 43 47 0024 mskedusoft@gmail.com
THANKS TO-Mr.M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt Boys Hr Sec School
Mariammankoil ,Tanjavur Dist-613501.
Cel:98 43 47 0024 mskedusoft@gmail.com
2.7th Pay Simple Calculation Software .......Latest Version Click here To View .....
THANKS TO
BY N.VELMURUGAN M.Sc.,B.Ed.,M.Phil.,
B.T ASST IN SCIENCE
GHS, NO.1 KOTHUR, VELLORE DT
8883711907
3. PAY FIXATION MODEL EDUCATION DEPT ....
4. DA Arrear Software (New)
THANKS TO-Mr.M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt Boys Hr Sec School
Mariammankoil ,Tanjavur Dist-613501.
Cel:98 43 47 0024 mskedusoft@gmail.com
5. 2016 - உங்க சம்பளம் எவ்வளவுன்னு தெரியலையா இதோ உங்களுக்காக .....
IMPORTANT
1.ENTER YOUR GPF/CPS NO...
2.ENTER YOUR SUFFIX CODE...
3.ENTER YOUR DATE OF BIRTH...
6. 7th PAY COMMISSION OPTION FORM (NEW)
8. TAMILNADU GOVT 7th PAY COMMISSION HIGHLIGHTS (7 POINTS)
1)TN -7th PC- தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை (3% + 3 %)
2)TN 7th PC- ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு (3%)
3)TN-7th PC- HRA SLAB
4)TN-7th PC- அகவிலைப்படி மத்திய அரசை பின்பற்றி வழங்கப்படும் ( அப்படியானால் DA 5%)
5)TN - 7th PC - CONVEYANCE
ALLOWANCE (1000 TO 2500 HIKE )
6)TN - 7th PC - HILL ALLOWANCE (1500 TO 6000 HIKE )
7)TN - 7th PC - WINTER ALLOWANCE ( 500 TO 1500 HIKE )
2)TN 7th PC- ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு (3%)
3)TN-7th PC- HRA SLAB
4)TN-7th PC- அகவிலைப்படி மத்திய அரசை பின்பற்றி வழங்கப்படும் ( அப்படியானால் DA 5%)
5)TN - 7th PC - CONVEYANCE
ALLOWANCE (1000 TO 2500 HIKE )
6)TN - 7th PC - HILL ALLOWANCE (1500 TO 6000 HIKE )
7)TN - 7th PC - WINTER ALLOWANCE ( 500 TO 1500 HIKE )
10..7th Pay Commission Level Of Pay
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)