வியாழன், 19 அக்டோபர், 2017
TET & TNPSC தேர்வுக்கு 3-4 வருடங்கள் படித்தாலும் ஏன் சிலரால் தேர்ச்சி பெற முடிவதில்லை? - TIPS!!!
TET Exam & TNPSC Exam - How to Study without Tired - Tips
TNPSC தேர்வுக்கு ஒரு மாணவன் அல்லது மாணவி, பல வருடங்கள் படித்தாலும் ஏன் தேர்ச்சி பெற முடிவதில்லை?.
- A COMPLETE ANALYSIS.
Thanks to: Gkanthakumar GK
#ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்களின் மாபெரும்தவறுகள் :
பயிற்சி மையங்களில் ஏன் தேர்ச்சி விகிதம் 10% குறைவாக இருக்கிறது?
ஒருவருக்கே ஏன் பல வேலை கிடைக்கிறது ஆனால பல வருடம் படிக்கும் ஒரு மாணவன் ஏன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறுவதில்லை ?
நான் விரைவில் வெற்றி பெற்று விட்டேன் என் நண்பர்கள் ஏன் அதே புத்தகத்தை படித்தும் வெற்றி பெற முடியவில்லை போன்ற கேள்விகள் என்னிடம் எப்பொழுதும் எழுவதுண்டு.
நான் விரைவில் வெற்றி பெற்று விட்டேன் என் நண்பர்கள் ஏன் அதே புத்தகத்தை படித்தும் வெற்றி பெற முடியவில்லை போன்ற கேள்விகள் என்னிடம் எப்பொழுதும் எழுவதுண்டு.
வேலைக்கு சென்று 10 வருடம் ஆகிவிட்டது சமுகத்திற்கு ஏதாவது செய்வோம் என பீகாரின் ஆனந்து அவர்களின் சூப்பர் 30 போன்று 2 பேருடன் ஆரம்பித்த எனது அமைப்பில், நான் இரண்டு வருடம் தீவிர பயிற்சி அளித்தும் (லாப நோக்கமின்றி) 30 மாணவர்களில் 17 பேர் மட்டும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர்?
என் மாணவர்கள் செய்த தவறுகள் என்ன?
4 வருடங்கள் நான் பயிற்சி கொடுத்த சில பயிற்சி மையங்களில் கிடைத்த அனுபவம் போன்றவற்றை துணை கொண்டு நான் ஆராய்ச்சி செய்த பொழுது கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத துண்டியது.
#1 தன்னம்பிக்கை இல்லாதது:
TNPSC போன்ற போட்டி தேர்வுகளில் பாஸாக வேண்டுமானால் ஒரு மாணவனுக்கு இருக்கு வேண்டிய முதல் தகுதி தன்னம்பிக்கை.
என்ன தான் திறமையுடையவர்களாக இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாதவர் தோல்வியையே தழுவ வேண்டி இருக்கும்.
தன்னம்பிக்கை உள்ளவர் எவரும் எந்த ஒரு இடர்பாட்டையும் எளிதில் சமாளித்து தேர்வில் வெற்றி பெற்று விடுவார்.
#2. பயிற்சி மையத்தை மட்டுமே முழுமையாக நம்புவது:
சரியான பயிற்சி மையம் மட்டும் அமைந்து விட்டால் எந்த ஒரு சராசரி மாணவனும் அதிகபட்சம் இரண்டு வருடங்களில் கட்டாயம் பாஸ் பண்ணிவிட முடியும் , அனால் தற்பொழுது பயிற்சி மையங்களை விட வியாபார மையங்களே அதிகம் உள்ளது, வணிக நோக்கில் தான் எல்லா பயிற்சி மையங்களும் செயல்பட்டாலும் சரியான வழிகாட்டும் பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து விட்டால் உங்களின் வேலை பாதியாக குறைந்துவிடும் .
பயிற்சி மையங்களை நம்பி மாணவர்கள் எவ்வாறு ஏமாறுகிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்
a.அளவுக்கு அதிகமான விளம்பரங்கள்
b.தேர்ச்சி பெற்றவர்களை விட அதிக மாணவர்களை பாஸானதாக காட்டுவது
c.விளம்பரத்தை பார்த்து ஏமாறுவது
d.சென்ற தேர்வில் எங்கள் மேட்டிரியகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என விளம்பரபடுத்துவது
e.அதிகமாக நோட்ஸ் எழுத வைக்கும் பயிற்சி மையாங்கள்
f.தேர்ச்சி விகிதத்தை % பார்க்காமல் எண்ணிக்கையை பார்த்து சேர்வது
g. கும்பல் அதிக உள்ள பயிற்சி மையம் தரமமனது என நினைப்பது.
ஒரே வகுப்பில் 200 TO 400 பேருக்கு பாடம் நடத்துவது கட்டாயம் மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது
மீன்டும் சொல்கிறேன் பயிற்சி மையம் 20-30% உதவிதான் செய்ய முடியும் , நீங்கள் தான் படிக்க வேண்டும் , பயிற்சி மையம் செல்லாமலும் பாஸானவர்கள் பலர் உண்டு .
ஆனால் அவர்களுக்கு வழி காட்டுதல் சரியாக இருந்து இருக்கும்.
#3. நோட்சுகளை மட்டும் நம்புவது:
புத்தக சேகரிப்பில் இறங்கி விடுவது.
என்னால் "மெட்டிரியல் மெண்டல்கள்" என செல்லமாக நான் குறிப்பிடும் இவர்கள் முக்கிய வேலையே படிக்க பல பயிற்சி மையங்களின் notes சேகரிக்கிறேன் என்ற பெயரில் படிப்பை மறந்து book சேகரிப்பில் இறங்கி விடுவது தான்.
இவர்களின் பார்வையில் அதிக மெட்டிரியல் / புத்தகங்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என நம்புகிறவர்கள் but my view is More luggage less comport .
#4. பயிற்சி மையத்தில் சென்று விட்டாலே வேலை கிடைத்துவிடும் என நம்புவது.
பயிற்சி மையம் சென்று விட்டாலே வேலை கிடைத்து விடும் என நம்பும் மாணவர்கள் பலர் உள்ளனர்.
நான் ஒரு முறை பஸ்ஸில் செல்லும் பொழுது ஒரு மாணவரிடம் பேச்சு கொடுக்க நேர்ந்தது அப்பொழுது அவர் ஒரு பிரபல பயிற்சி மையத்தில் 4 வருடமாக படித்து வருவதாகவும் ஆனாலும் இன்னும் தேர்ச்சி பெற முடியவில்லை எனவும் அதனால் வேறு எந்த வேலைக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பயிற்சி மையம் சென்று படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் உண்மை என்ன வென்றால் இன்று உள்ள போட்டி நிலையில் குறைந்தது 9 மாதம் முதல் 1 வருடம் தீவிரமாக படித்தால் நிச்சயம் வேலைகிடைத்து விடும்.
தேர்வு அறிவிப்பு வந்தவுடன் பயிற்சி மையம் சென்றால் பெரும்பாலும் தோல்விதான் வரும் என்பதை உணர மாணவர்கள் மறுக்கிறார்கள்.
#5. Over confidence
140 எடுத்து விட்டோம் அடுத்த தேர்வில் வெற்றி உறுதி என நம்பி அடுத்த தேர்விலும் தோல்வி அடைவது சீனியர் மாணவர்கள் செய்யும் மிக பெரிய தவறு ஆகும்.
அதற்கு காரணம் over confidence ஆகும் . வேலைக்கு செல்லும் வரை ஒரு மாணவன் படித்து கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் cut off க்கு அருகில் வந்து தோல்வியை தழுவும் அவலம் நேராது.
ஒரு தோல்வி ஒரு வருடத்தை வீண் செய்து விடும்.
#6. படித்து கொண்டே வேலைக்கு செல்வது
ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணக்க முயற்சி செய்வது உடனடி வெற்றிக்கு உதவாது.
சிலரது குடும்ப சூழ் நிலை வேலைக்கு சென்றே ஆக வேண்டும் ஆனால் நல்ல நிலையில் உள்ள பலரும் வேலைக்கு சென்று கொண்டே படிக்கிறார்கள்.
அதனால் அவர்களால் வெற்றி பெற முடிவதில்லை வருடம் 5000*12=60000 ஆசைப்பட்டு கொண்டு அரசு வேலையில் கிடைக்கும் 16000*12= 192000 இழந்து விடுகிறார்கள்.
வேலைக்கு சென்று கொண்டே படித்து வெற்றி பெற்ற கதைகள் பல உண்டு ஆனால் அதற்கு மிக பெரிய மன உறுதி வேண்டும். தியாகம் செய்யாமல் எதுவும் கிடைக்காது
#7. புரிந்து படிக்காதது
மனப்பாடம் செய்ய முயல்வது
புரிந்து படித்து விட்டால் மனப்பாடத்திற்கு அவசியம் இல்லை மேலும் கேள்விகள் எந்த முறையில் வந்தாலும் விடை அளித்து விடலாம்.
இது தெரியாமல் சிலர் நாள் முழுவதும் படித்தால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்து கொண்டு புத்தகமே கதியாக கிடக்கின்றனர் அது தவறு.
ஒரு தேர்வில் வெற்றி பெற நிலையாக 7 மணி நேர படிப்பே போதுமானது .
#8. தமிழுக்கு கொடுக்கும்முக்கியத்துவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது.
தமிழுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது.
உங்களின் வெற்றியை/ வாங்கும் ரேங்கை குறைத்து விடும் , இதில் சென்னையை தவிர வெளி மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையங்களும் ஒரு காரணம் என கூறலாம்.
நடந்து முடிந்த குருப் 4 தேர்வே நல்ல உதாரணம் இதில் தமிழில் அனைவரும் 85-90 வரை எடுத்து உள்ளனர் அனால் பொது அறிவு பாடத்தில் பழைய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து உள்ளதை வைத்து அறிந்து கொள்ளலாம்.
தமிழை எவர் உதவி இன்றி குறிகிய காலத்தில் படித்து விடலாம் ஆனால் மற்றவை குறுகிய காலத்தில் படிக்க முடியாது.
#9. தேடல் இல்லாதது..
Knowledge is power தேடல் என்பது பலருடன் பேசி, web search தேர்வு பற்றி பல புதிய விபரங்களை அறிந்து கொள்வது தேடல் நிறைய தகவல்களை அளிக்கும்.
நேரத்தை மிச்சபடுத்தும் வெற்றியின் வேகத்தை அதிகரிக்கும்
#10. தேர்வானவர்களின் தொடர்பில் இல்லாது இருப்பது:
Where we are where they are என தெரிந்து கொள்ள கட்டாயம் மற்ற பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் தேர்வான சீனியர் மாணவர்கள் தொடர்பில் இருப்பது அவசியம்.
அப்பொழுது தான் தம்முடைய தவறுகளும், திறமைகளும் தெரிய வரும்.
#11. காதல்
சிலர் காதலித்து கொண்டு தங்கள் கடமையை மறப்பது.
இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் திறமையான மாணவர்கள் அல்லது மாணவிகளின் படிப்பை பாழ் செய்து விடுகிறது.
காதலை உங்களை ஊக்குவிக்கும் சக்தியாக நினைப்பதும், மாறாக நினைவிழக்கச் செய்யும் போதையாக நினைப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.
#12. சொல் பேச்சை கேட்காதது:
நல்ல அறிவுரைகளை ஆசிரியர் கூறினாலும் கேட்க மறுப்பது நண்பர்கள் சொன்னாலும் கேட்க மறுப்பது மற்றொரு குறை ஆகும்
#13. Face Bookக்கே கதியாக கிடப்பது
முக நூல் நல்ல விஷயம் தான் ஆனால் face book கதியாக கிடப்பது உங்கள் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவாது.
வெற்றியை தாமதபடுத்தும் . ஒரு மாணவனுக்கு நான் அறிவுறை கூறிய பொழுது அவர் சார் நீங்களும் எப்பொழுது பார்த்தாலும் face book இருக்கிங்க என எதிர் கேள்வி கேட்டார்.
அதற்கு நான் நான் வேலைக்கு சென்று 11 வருடம் ஆகிவிட்டது எனக்கு இனி படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றேன்.
பின்னர் VAO முடிவு வந்தபின் சார் நிங்க சொன்னது சரிதான் என மன்னிப்பு கேட்டார்.
ஒரு மாணவன் அல்லது மாணவி, நாள் ஒன்றிற்கு 15 நிமிடத்திற்கு மேல் face book பார்க்க கூடாது.
முகநூல் சிந்திக்கும் திறனை குறைக்கிறது என்பது உண்மை.
#14. பொழுதுபோக்குக்கு முக்கியத்தும் கொடுப்பது:
நன்றாக படிக்க பொழுதுபோக்கு தேவை.
ஆனால் பொழுதுபோக்கே வாழ்க்கை அல்ல ஒரு வேலைக்கு செல்லும் வரை பொழுது போக்கை குறைத்து கொள்ள வேண்டும்.
அல்லது படிப்பு சார்ந்த பொழுதுபோக்குகளைக் கண்டறியலாம்.
#15. தேர்வு வந்தவுடன் மட்டும் படிப்பது..
தேர்வு அறிவிப்புகள் தற்பொழுது 90 நாள் அவகாசம் கொடுப்பதால் தேர்வு அறிவிப்பு வந்தவுடம் படிக்க ஆரம்பிப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாது.
வேலைக்கு செல்லும் வரை தொடர்ச்சியான தயாரிப்பில் இருக்க வேண்டும், இது மிகவும் முக்கியம்.
#16. பேப்பர் படிக்காதது.
பேப்பர் மட்டும் தினசரி படித்து விட்டால் current affairs தனியாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை
இந்த தவறுகளை மட்டும் சரி செய்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
(வரும் சனி, தனியார் ஸ்டடி மெட்டீரியல்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா? என்பது பற்றி பார்ப்போம்.)
நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.
அஜி
சென்னை.
மீண்டும் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்???
உள்ளாட்சி தேர்தலை, மேலும் தள்ளிப்போடும்
நடவடிக்கைகளில், மாநில தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.
கடந்தாண்டு, இதே மாதம் உள்ளாட்சி தேர்தலை, இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது. மனு தாக்கல் முடிந்த நிலையில், தி.மு.க., தொடர்ந்த வழக்கில், தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆரம்பத்தில், தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளில், மாநில தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டியது. ஆனால், 2016 டிசம்பரில், ஜெயலலிதா மறைந்த பின், அரசியல் நிலவரம் மாறியது. இதனால், ஆளும் கட்சியில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, தலைமை தேர்தல் கமிஷன் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் கிடப்பில் போட்டுள்ளதாக, தி.மு.க., வழக்கு தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், அதற்கு அசராமல், தேர்தலை தள்ளிப்போடும் மறைமுக நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கிஉள்ளது. இதற்காக, வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள், கையில் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், மாநில தேர்தல் கமிஷனர், மாலிக் பெரோஸ்கான் தலைமையில், வார்டு மறுசீரமைப்பு கமிஷனின் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் நடந்தது. அதில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் பங்கேற்றனர். வார்டு மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கலெக்டர்கள் பலரும், 'டெங்கு' ஒழிப்பு, பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில், கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், வார்டு மறுவரையறை பணிகள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது. இதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், காலம் கடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை குழந்தைகளின் படிப்புக்கு ரூ.3 கோடி நிதி!!!
இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் பல குழந்தைகள் படிக்க முடியாமல்
தவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு இந்தியாவில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு, இந்தியாவிலுள்ள ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவும் நோக்கில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிதி திரட்டி வருகிறது.
சமீபத்தில் வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியில் பிரதாம் யு.எஸ்.ஏ. அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் 360 பேர் பங்கேற்றனர். அதில் நடிகர் ஆர்.மாதவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் 1.75 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
இவ்வாறு பிரதாம் யு.எஸ்.ஏ. அரசு சாரா அமைப்பு ஏழை குழந்தைகள் கல்வியறிவு பெற 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ளது.
31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு..
பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை
பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார்.
இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிமுடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிமுடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.
போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!
தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு
மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள்.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை அமல்படுத்துவது என 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 7 முதல், 15 வரையில் தொடர் போராட்டம் செய்தார்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். நீதிமன்றத்தின் கண்டிப்பால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியவர்கள், உயர் நீதிமன்றத்தை (மதுரைக் கிளை) நாடினார்கள். நீதிபதிகள் சுதாகரன், சாமிநாதன் இருவர் கொண்டபெஞ்சு, மதுரை நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதி மன்றத்துக்கு வழக்கை மாற்றியது. அக்டோபர் 23ஆம் தேதி, தலைமைச் செயலாளர் ஆஜராகி ஜிபிஎஃப் சம்பந்தமான அறிவிப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மத்திய அரசு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் ரூ18 ஆயிரம் வழங்காமல் ரூ15,700 என்றும், பென்ஷன் ரூ 9 ஆயிரத்திற்கு பதில் ரூ. 7500 எனவும் அறிவித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது தமிழக அரசு என்கிறார் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதி பாலு.
அக்டோபர் 23ஆம் தேதி வழக்கு இருப்பதால், அன்று தலைமைச் செயலாளர் சரியாக அறிவிப்புகள் தாக்கல் செய்யவில்லையென்றால், அக்டோபர் 24ஆம் தேதி, அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஜாக்டோ ஜியோவினர் அவசரமாகக் கூடுகிறார்கள்.
“தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம்பேர் இருக்கிறார்கள், 2006 ஜனவரி 1ஆம் தேதி ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. இந்த முரண்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சண்முகம், உமாநாத் இருவர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த மாதம் 23ஆம் தேதி வழக்கிருப்பதால், தற்போது அறிவித்துள்ள ஏமாற்று ஊதியக் குழுவைப் பற்றி அரசு ஊழியர்களுக்கு விளக்குவதற்கு வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலை நகரில் ஜாக்ட்டோ ஜியோவினர் விளக்ககூட்டம் நடத்துவோம்” என்றார் பாலு.
23ஆம் தேதி, நீதிமன்றத்தில் அவகாசம் கேட்பதற்கு அரசு சார்ப்பில் ஆலோசனையில்
இருப்பதாகச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகம் வட்டாரத்தில். எந்த முடிவாக இருந்தாலும் 24ஆம் தேதி ஜாக்ட்டோ ஜியோவினர் கூடுவதற்கு, முன்னதாகவே அழைப்பு கொடுத்துள்ளார்கள்.
இயற்கைப் பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டினால், தமிழக அரசு அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் இப்போது பெரிய கேள்விக்குறி.
21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்...
'21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.
மதுரையில் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் கூறியதாவது:
சம்பளக்குழு முடிவுகள் 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மூன்று மாத போராட்டங்களுக்கு பின் அரசு, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பிடம் பேசி ஒப்புக் கொண்டபடி சம்பளக்குழு அறிக்கையை பெற்று அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு, ஏழாவது சம்பளக்குழுவில் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு 15 ஆயிரத்து 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது ஏமாற்றமளிக்கிறது.
குறைந்த பட்சம் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க, வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளநிலை உதவியாளர்கள் சம்பளம் வழங்காதது ஏமாற்றத்தை தருகிறது.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு 30 சதவீத சம்பள உயர்வும் ஏமாற்றம் தருகிறது. அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் பணிபுரியும் மூன்று லட்சம் பேரில் ஐந்தாண்டுகள் பணி முடித்தவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியத்தை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேர் படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது. இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 1.1.2016 முதல் சம்பள மாற்றப்பயனை அனுபவித்து வரும் நிலையில் தமிழக அரசு 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.
அதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து சென்னையில் அக்., 21ல் அரசு பணியாளர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர், என்றார்.
பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி...
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள்.
இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘கூடு’ (NEST) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டி 5 வகுப்பு மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ப அஞ்சல் தலையின் மாதிரியை ஏ4 தாளில் வரைந்து உதவி தலைமை இயக்குநர் (ஏடிஜி-அஞ்சல்தலை சேகரிப்பு), அறை எண்:108, டாக் பவன், புதுடெல்லி - 110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாதிரிகள் அஞ்சல் தலைகளாகவும், சிறப்பு அஞ்சல் உறைகளும் வெளியிட பயன்படுத்திக் கொள்ளப்படும். அஞ்சல்தலை மாதிரிகளை அக்.20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு
அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர். அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர், பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு....
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும்.
இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதன் விபரம்:
● அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கட்டட மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். புவி ஈர்ப்பு கம்பிகள், செயல்பாட்டில் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்
● சுவிட்சுகள், மின் விசிறி, கணினி, ஆய்வக மின் கருவிகள் போன்றவற்றில், மின் இணைப்பு சரியாக உள்ளதாக என, சோதிக்க வேண்டும். பள்ளி கட்டடத்துக்குள் செல்லும், மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, மின் கசிவு ஏற்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்
● மின் கம்பத்திலிருந்து, பள்ளி கட்டடத்துக்கு, மின் வினியோகம் செய்யப்படும் குறைந்த மின்னழுத்த கம்பிகளில் சேதம் உள்ளதா, அவற்றில் மரங்கள் உரசுகிறதா என்பதை, மின் வாரிய ஊழியர்கள் வாயிலாக ஆய்வு செய்து, முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.
பருவ மழை : பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவிருப்பதால் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் வட கிழக்கு பருவ மழை துவங்கும்;
அடுத்த ஆண்டு ஜன., இரண்டாம் வாரம் வரை மழை நீடிக்கும்; தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்யும். புயல், வெள்ளம்,
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகள் வட
கிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும்.அதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சென்னை உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படும்.
அடுத்த ஆண்டு ஜன., இரண்டாம் வாரம் வரை மழை நீடிக்கும்; தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்யும். புயல், வெள்ளம்,
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகள் வட
கிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும்.அதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சென்னை உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே பாடங்களை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழைக்கு விடுமுறை விட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தர வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வட கிழக்கு பருவ மழைக்கு விடுமுறை விட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தர வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்தா? : தெளிவுபடுத்த சங்கம் வலியுறுத்தல்...
தகுதி இல்லாத, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 'கல்தா' கொடுக்கும், உயர் கல்வித் துறையின் திட்டம் குறித்த, உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்' என, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, 83 அரசு கல்லுாரிகளில், 1,650 பேர், மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகின்றனர். 10 ஆயிரம் ரூபாயாக இருந்த ஊதியம், 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், 'யு.ஜி.சி., விதிப்படி, நெட், செட் தேர்ச்சி மற்றும், பி.எட்., தேர்ச்சி பெற்றவர்களை, கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும்' என, அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், உயர் கல்வித் துறைக்கு மனு அளித்துஉள்ளனர்.இதையடுத்து, யு.ஜி.சி., விதிப்படி, தகுதி பெறாத விரிவுரையாளர்களின் பட்டியலை, உயர் கல்வித் துறை சேகரிக்கிறது. இந்த நடவடிக்கையால், கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 83 அரசு கல்லுாரிகளில், 1,650 பேர், மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகின்றனர். 10 ஆயிரம் ரூபாயாக இருந்த ஊதியம், 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், 'யு.ஜி.சி., விதிப்படி, நெட், செட் தேர்ச்சி மற்றும், பி.எட்., தேர்ச்சி பெற்றவர்களை, கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும்' என, அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், உயர் கல்வித் துறைக்கு மனு அளித்துஉள்ளனர்.இதையடுத்து, யு.ஜி.சி., விதிப்படி, தகுதி பெறாத விரிவுரையாளர்களின் பட்டியலை, உயர் கல்வித் துறை சேகரிக்கிறது. இந்த நடவடிக்கையால், கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர், அருணகிரி வெளியிட்டு உள்ள அறிக்கை:கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் சேரும் போது, அந்த கால கட்டத்தில் இருந்த கல்வித் தகுதிக்கு ஏற்ப, தேர்வு செய்யப்பட்டனர். முறைப்படி விண்ணப்பம் பெற்று, துறை தலைவர் அடங்கிய, தேர்வு குழு வழியாக, கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கே, ஆண்டுதோறும், மீண்டும் பணி வழங்கப்படுகிறது. எனவே, இது குறித்து, உயர் கல்வித் துறை உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)