>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 19 அக்டோபர், 2017

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை....

தமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊதியக்குழு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்திய 6 வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது.
இதனை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் அமைப்புகள் பல்வேறுபோராட்டங்களை நடத்தின. இந்நிலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்திய கல்வித் துறை செயலர் ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தும் போது, கடந்த ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதியக்குறைபாடு முற்றிலும் களையப்படும்என உறுதி அளித்தார்.மேலும் 2011 தேர்தல் பரப்புரையிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஊதியக் குழு முரண்பாடுகள் களையப்படும் என்றார். ஆனால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 7ஆவது ஊதியக்குழு அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் நீக்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடிப்படை ஊதியத்தில் ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்பட்டு, இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக ஊதிய இழப்பை சரி செய்து 7ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி துணை அரசாணையை வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....

ஊதிய முரண்பாடுகளைய வலியுறுத்தல் : தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளி தலைமை ஆசிரியர்களின், ௨௧ ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என, தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு அறிவித்துஉள்ள படிகள்மற்றும் சலுகைகளை, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை, ௧௮ ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். ஊதிய உயர்வை, ௨௦௧௬ முதல் கணக்கிட்டு, ௨௧ மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.தலைமை ஆசிரியர்களுக்கு, மூன்று ஊதியக்குழுக்களில், தற்காலிக நிவாரணமான, தனி ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு, தீர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்...

பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று துவங்கி வைத்தார்.
இதில் 'நீட்'உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும்துவங்கியது.இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
இயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர்.
சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.
கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும்.
சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். “ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை.
இன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும்.
நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்றார். பணி நியமனம் குறித்து விளக்கத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அளித்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல்துறை இயக்குனர் திரிபாதி நன்றி

NEET - 2018 | ஜனவரி 7-ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. 

BRTE:தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும்தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது.
மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன.மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக மாறுதலில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் 1.10.2016க்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெற்று வரும் 31ம் தேதிக்குள் பட்டியலிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வகையில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர் அழைப்பு

'சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், அவர் கூறியதாவது:பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள், 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அதில், சில கட்டடங்கள் சேதமடைந்தும், சில பயன்பாட்டுக்கு இல்லாமலும், உள்ளன. அதுபோன்ற கட்டடங்கள், சீரமைக்கப்படுகின்றன. தேவையானால், இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்படும். அதுபோன்ற கட்டடங்கள் இருந்தால், தகவல் தெரிவிக்கலாம்.
பள்ளி மாணவர்கள், செடி நட்டு வளர்த்தால், அவர்களுக்கு, 5 மதிப்பெண் வழங்கப்படும் என்ற உத்தரவு, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. 'நீட்' தேர்வுக்காக ஆந்திராவில் பயிற்சி முடித்துள்ளவர்கள், தமிழத்தில் விரைவில் பயிற்சியை துவக்க உள்ளனர்.

சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு....

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஜூலை26ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 23ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. தற்போது கேள்விகளுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு  வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த விடைக்குறிப்பில் ஆட்சேபம் அல்லது தவறான விடைகள் இருந்தால், தேர்வு எழுதியவர்கள்  20ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துகள் அடங்கிய மனுக்கள் தபால் மூலமோ அல்லது  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கும் போது, தகுந்த புத்தகங்கள் அல்லது  வழிகாட்டிகளில் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 18769  பட்டதாரிகளுக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடந்தது. 
இந்த சான்று சரிபார்ப்பின்போது கலந்து  கொள்ள இயலாத 701 பேருக்கும், 2017ம் ஆண்டில் பி.எட் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட் சான்று அளிக்காத 535 பேருக்கு மீண்டும் சான்று  சரிபார்ப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட நபர்கள் 25ம் தேதி முதல் 27ம் தேதி  மதுரையில் உள்ள நிர்மலா மகளிர் மேனிலைப் பள்ளியிலும், விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப்  பள்ளியிலும் நடக்கும் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி  இயக்குநர் நிலை -1 காலிப் பணியிடங்கள் 3375 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி  நியமனத்துக்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிற துறைகளில் உள்ள 149 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு சென்னை  அசோக் நகர் மகளிர் மேனிலைப் பள்ளியில் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது. 
மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாடத்திட்டம் : இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர். 
எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.
தமிழ் கட்டாயம் : இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

ஏழாவது ஊதியக்குழு - ஊதிய நிர்ணயம் செய்தலுக்கான படிவம் ( தமிழில் )

Prepared by,
Mr N.VELMURUGAN M.Sc., B.Ed.,M.Phil.,
BT ASST IN SCIENCE
GHS,
NO.1 KOTHUR,
VELLORE DT

2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை: 9 லட்சம் அரசு ஊழியர்கள், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!

தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இதன் மூலம், தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரல் நுனியில் கொண்டுவரப்படுகிறது. இதற்காக விப்ரோ நிறுவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளராக இணைத்து தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் 6 மண்டல கருவூல கணக்குத்துறை இணை இயக்குநர் அலுவலகங்கள், 6 சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 3 சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 32 மாவட்டக் கருவூலங்கள், ஓய்வூதியர் உதவி அலுவலகம், 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23,648 அலுவலர்கள் டிஜிட்டல் மயாமக்கல் மூலம் நேரடி இணைய வலையில் இணைக்கப்படுவர்.


இதன் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சம்பளப் பட்டியல், ஊதிய உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும். கடந்த 2016 நவம்பரில் சென்னை, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. 
இதன் தொடர்ச்சியாக 32 மாவட்டங்களுக்கும் விரிவாகக்கம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம், ஒரு அரசுப் பணியாளர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நாள் தொடங்கி ஓய்வு
பெறும் வரை உள்ள அரசுப் பணி வரலாறு முழுவதும் கணினிமயமாக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 79 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பெறுதலில் உள்ள தாமதங்கள், நேர்காணலில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் 79 ஆயிரம் பேரையும் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து இவர்களும் டிஜிட்டல் மயத்துக்குள் வந்துவிடுவர். வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்கள் நேர்காணல் விவரம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள், படிவங்களைப் பெற ஓய்வூதியர் தரவு தளம் உருவாக்கப்படுகிறது. 
இந்த தளத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தேவையின்றி வங்கிக்கோ, கருவூலத்துக்கோ, பணிபுரிந்த அலுவலகத்துக்கோ அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. 
இத் திட்டத்தின் மூலம், மாநில அரசுக்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை நொடிக்கொரு முறை அறிந்து கொள்ளலாம். இதற்காக அலுவலர்களுக்கு எண்ம ஒப்பம் (டிஜிட்டல் கையெழுத்து) வழங்கப்பட்டு, விரல் ரேகைப் பதிவு மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். 
அரசு ஊழியர்களின் பணி விவரங்கள், விடுப்பு, இப்போதைய நிலை ஆகியவற்றையும் மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை கருவூலம் மூலம் கையாளுவதிலும் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 
நிகழாண்டு 26.61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1790.19 கோடி வறட்சி நிவாரணத் தொகையானது மின்னணு தீர்வை (ஈசிஎஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதில் செலவிடப்படும் சூழலில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதுதொடர்பாக, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 
வரும் டிசம்பருக்குள் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டுவிடும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கான தரவு தளமும் உருவாக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் எளிதாகக் கிடைக்கும். 
அரசின் நிதி நிர்வாகப் பணிகளும் இணைய வழியில் இருந்த இடத்தில் அமர்ந்து செயல்படுத்த முடியும். பணிப் பதிவேடுகள் காணமாமல் போகும் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் டிஜிட்டல் மயம் பெரிதும் உதவியாக அமையும். ஆதாரப் பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகளை தாமதமின்றி முறையாக அறிவிக்கலாம் என்றார்.

அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு அறிவிப்பு!!!

ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு...

"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் "

ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை, சமீபத்தில், அரசு வெளியிட்டது. 'ஊதிய உயர்வு, அக்., முதல் அமலாகும்' என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்ற எதிர் பார்த்திருந்த, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு, இம்மாதம்,13ம் தேதி,அவசர ஆலோசனை நடத்தியது.இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு விசாரணையின்போது, ஊதிய முரண்பாடு குறித்து முறையிடுவது எனவும், அரசு சாதகமான பதில் தராவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்கவும்,முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பரிந்துரையின் படி, 2016, ஜன., முதல், ஊதிய உயர்வு கணக்கிட வேண்டும். தமிழக அரசு, 21 மாத சம்பள உயர்வுக் கான நிலுவை தொகையை, தர மறுத்துள்ளது.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தியதில் உள்ள, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என, ஆறு ஆண்டுகளாக கோரினோம். அதை செய்யாமல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அறிவித்ததால், குளறுபடி அதிகரித்துள்ளது.அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, அடிப்படை ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை; அதிகாரிகளுக்கே சாதகமாக உள்ளது. எனவே, 20ம் தேதி, மாநிலம் முழுவதும் விளக்க கூட்டம் நடத்த உள்ளோம்.
ஊதியகுளறுபடிகளை, நீதிமன்றத்திலும் தெரிவிக்க உள்ளோம். தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, அரசுக்கு ஆதரவாக, ஜாக்டோ - ஜியோவில் இருந்து பிரிந்து உருவான, ஜாக்டோ - ஜியோ கிராப் நிர்வாகிகளும், முதல்வர், பழனிசாமியை சந்தித்து, மனு அளித்துள்ளனர். அதில், ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என, தெரிவித்துள்ளனர்.
அனைத்து தரப்பிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளதால், வரும், 23ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன், ஜாக்டோ - ஜியோவை சமரசம் செய்யும் முயற்சியை, அரசு துவக்கி உள்ளது. உயர்மட்ட குழுவினரை அழைத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.அப்போது, சம்பள நிலுவைக்கு பதிலாக, சலுகை திட்டங் களை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைப்பதற்கும் அரசு தரப்பு முன்வந்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல், 'ஸ்டிரைக்' காலத்தில் ஊழியர்கள் எடுத்த விடுமுறையை சரிக்கட்டவும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக,தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி 2017 நவம்பர் 2 மற்றும் 3 அன்று இரண்டு கட்டமாக சார்ந்த குறுவள மையத்தில் நடைபெறுகிறது.....




கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை

மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர்.
அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு என்பது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு வழங்க வேண்டியதுஅரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பது இல்லை.இதற்கு காரணம் மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது.
தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. எதிர்காலத்தில் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால்தான் அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.79.5உலகின் மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 10.9 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த இடத்தில் ஆசியா (12 சதவீதம்) உள்ளது.40 உலகளவில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015ன் படி, 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2000ம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். உலகில் இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் 15 - 34 வயதுக்குட்பட்டவர்கள். இதில் பாதி பேர் பெண்கள்.

NEW HRA SLAB IN SINGLE PAGE | TN 7 Th PAY COMMISSION

CONVEYANCE ALLOWANCE TO VISUALLY CHALLENGED, LOCOMOTOR DISABLED AND HEARING IMPAIRED INCREASED FROM RS 1000 TO RS 2500 AS PER G.O 307 DATED ON 13.10.2017

G.O MS ;306 :7TH PAY COMMISSION NEW REVISED PAY ALLOWANCE - OFFICIAL ORDER PUBLISHED