வியாழன், 19 அக்டோபர், 2017
2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை: 9 லட்சம் அரசு ஊழியர்கள், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!
தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரல் நுனியில் கொண்டுவரப்படுகிறது. இதற்காக விப்ரோ நிறுவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளராக இணைத்து தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் 6 மண்டல கருவூல கணக்குத்துறை இணை இயக்குநர் அலுவலகங்கள், 6 சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 3 சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 32 மாவட்டக் கருவூலங்கள், ஓய்வூதியர் உதவி அலுவலகம், 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23,648 அலுவலர்கள் டிஜிட்டல் மயாமக்கல் மூலம் நேரடி இணைய வலையில் இணைக்கப்படுவர்.
இதன் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சம்பளப் பட்டியல், ஊதிய உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும். கடந்த 2016 நவம்பரில் சென்னை, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின.
இதன் தொடர்ச்சியாக 32 மாவட்டங்களுக்கும் விரிவாகக்கம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம், ஒரு அரசுப் பணியாளர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நாள் தொடங்கி ஓய்வு
பெறும் வரை உள்ள அரசுப் பணி வரலாறு முழுவதும் கணினிமயமாக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 79 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பெறுதலில் உள்ள தாமதங்கள், நேர்காணலில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் 79 ஆயிரம் பேரையும் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்களும் டிஜிட்டல் மயத்துக்குள் வந்துவிடுவர். வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்கள் நேர்காணல் விவரம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள், படிவங்களைப் பெற ஓய்வூதியர் தரவு தளம் உருவாக்கப்படுகிறது.
இந்த தளத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தேவையின்றி வங்கிக்கோ, கருவூலத்துக்கோ, பணிபுரிந்த அலுவலகத்துக்கோ அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
இத் திட்டத்தின் மூலம், மாநில அரசுக்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை நொடிக்கொரு முறை அறிந்து கொள்ளலாம். இதற்காக அலுவலர்களுக்கு எண்ம ஒப்பம் (டிஜிட்டல் கையெழுத்து) வழங்கப்பட்டு, விரல் ரேகைப் பதிவு மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தலாம்.
அரசு ஊழியர்களின் பணி விவரங்கள், விடுப்பு, இப்போதைய நிலை ஆகியவற்றையும் மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை கருவூலம் மூலம் கையாளுவதிலும் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு 26.61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1790.19 கோடி வறட்சி நிவாரணத் தொகையானது மின்னணு தீர்வை (ஈசிஎஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதில் செலவிடப்படும் சூழலில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதுதொடர்பாக, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
வரும் டிசம்பருக்குள் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டுவிடும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கான தரவு தளமும் உருவாக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் எளிதாகக் கிடைக்கும்.
அரசின் நிதி நிர்வாகப் பணிகளும் இணைய வழியில் இருந்த இடத்தில் அமர்ந்து செயல்படுத்த முடியும். பணிப் பதிவேடுகள் காணமாமல் போகும் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் டிஜிட்டல் மயம் பெரிதும் உதவியாக அமையும். ஆதாரப் பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகளை தாமதமின்றி முறையாக அறிவிக்கலாம் என்றார்.
ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு...
"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் "
ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை, சமீபத்தில், அரசு வெளியிட்டது. 'ஊதிய உயர்வு, அக்., முதல் அமலாகும்' என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்ற எதிர் பார்த்திருந்த, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு, இம்மாதம்,13ம் தேதி,அவசர ஆலோசனை நடத்தியது.இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு விசாரணையின்போது, ஊதிய முரண்பாடு குறித்து முறையிடுவது எனவும், அரசு சாதகமான பதில் தராவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்கவும்,முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பரிந்துரையின் படி, 2016, ஜன., முதல், ஊதிய உயர்வு கணக்கிட வேண்டும். தமிழக அரசு, 21 மாத சம்பள உயர்வுக் கான நிலுவை தொகையை, தர மறுத்துள்ளது.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தியதில் உள்ள, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என, ஆறு ஆண்டுகளாக கோரினோம். அதை செய்யாமல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அறிவித்ததால், குளறுபடி அதிகரித்துள்ளது.அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, அடிப்படை ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை; அதிகாரிகளுக்கே சாதகமாக உள்ளது. எனவே, 20ம் தேதி, மாநிலம் முழுவதும் விளக்க கூட்டம் நடத்த உள்ளோம்.
ஊதியகுளறுபடிகளை, நீதிமன்றத்திலும் தெரிவிக்க உள்ளோம். தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, அரசுக்கு ஆதரவாக, ஜாக்டோ - ஜியோவில் இருந்து பிரிந்து உருவான, ஜாக்டோ - ஜியோ கிராப் நிர்வாகிகளும், முதல்வர், பழனிசாமியை சந்தித்து, மனு அளித்துள்ளனர். அதில், ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என, தெரிவித்துள்ளனர்.
அனைத்து தரப்பிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளதால், வரும், 23ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன், ஜாக்டோ - ஜியோவை சமரசம் செய்யும் முயற்சியை, அரசு துவக்கி உள்ளது. உயர்மட்ட குழுவினரை அழைத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.அப்போது, சம்பள நிலுவைக்கு பதிலாக, சலுகை திட்டங் களை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைப்பதற்கும் அரசு தரப்பு முன்வந்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல், 'ஸ்டிரைக்' காலத்தில் ஊழியர்கள் எடுத்த விடுமுறையை சரிக்கட்டவும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக,தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை
மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்
'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர்.
அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு என்பது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு வழங்க வேண்டியதுஅரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பது இல்லை.இதற்கு காரணம் மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது.
தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. எதிர்காலத்தில் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால்தான் அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.79.5உலகின் மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 10.9 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த இடத்தில் ஆசியா (12 சதவீதம்) உள்ளது.40 உலகளவில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015ன் படி, 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2000ம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். உலகில் இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் 15 - 34 வயதுக்குட்பட்டவர்கள். இதில் பாதி பேர் பெண்கள்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறையில் புரட்சிகரமான திட்டங்கள் வெளியாகும்: செங்கோட்டையன்....
பிளஸ் 2 போட்டித்தேர்வு பயிற்சி மையங்களில் இணைந்து பயில http://www.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறையில் புரட்சிகரமான திட்டங்கள் வெளியாகும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
TN 7th Pay - HRA GO Released - G.O.Ms.No.305 Dt: October 13, 2017
HRA G.O RELEASED-G.O.Ms.No.305 Dt: October 13, 2017 OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Issued
# HRA SLAB GO 305 - Click Here
# GO 306 - Click Here
# GO 307 - Click Here
வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக அரசுப்பள்ளியில் குறைந்த செலவில் "ஸ்மார்ட் கிளாஸ்" தொடங்கிய பள்ளி
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம்,
சிந்தகாமணிபெண்டா அரசு நடுநிலைப்பள்ளியில்ஆங்கில பட்டதாரிஆசிரியர் A.அருண்குமார் அவர்களின் முயற்சியினால் குறைந்த செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடங்கப்பட்டது. இம்முறையில் தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலம் எளிதாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆசிரியரை தொடர்பு கொள்ள 9786884566
Click Here Video
சிந்தகாமணிபெண்டா அரசு நடுநிலைப்பள்ளியில்ஆங்கில பட்டதாரிஆசிரியர் A.அருண்குமார் அவர்களின் முயற்சியினால் குறைந்த செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடங்கப்பட்டது. இம்முறையில் தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலம் எளிதாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆசிரியரை தொடர்பு கொள்ள 9786884566
Click Here Video
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபடாவிட்டால் கடும் நடவடிக்கை : முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு அலுவலக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு அலுவலக வளாகத்தில் முறையாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படாததே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை முதன்ைம தலைமை பொறியாளர் ஜெயசிங் சுற்றறிக்கை ஒன்ைற அனுப்பியுள்ளார்.
அதன்படி, டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரசு அலுவலக வளாக கட்டிடத்தில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மரம், செடிகளில் இருந்து விழுகிற காய்ந்த சருகுகள், குச்சிகள் மற்றும் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.
இதற்காக கூடுதல் தினக்கூலி பணியாளர்களை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி குப்பைகளை அகற்றலாம். இதற்காக, ஆகும் செலவை பராமரிப்பு நிதியில் இருந்து செலவு செய்து கொள்ளலாம். இந்த பணியை உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் கண்காணிக்க வேண்டும். இதை செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதை ெபாறியாளர்கள் செய்ய தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இைத தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்கள் கட்டுபாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள அரசு அலுவலகங்கங்களில் இதற்காக தனியாக ஊழியர்களை நியமித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். வரும் நவம்பர் 8ம் தேதி வரை இப்பணியில் ஈடுபட பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளியில் காப்பீடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள் தயார்...!
தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின், திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்; தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
மத்திய மற்றும் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 ஏப்ரலில் அமலானது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தர விடப்பட்டது. இதற்காக,2014 வரை, ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.
இதையடுத்து, ஐந்து ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கி, 'ஆசிரியராக பணிபுரிவோர்,
2019 மார்ச், 31 க்குள், 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது, 1 - 5ம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் பெற்று, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், 'டெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் எடுத்திருப்பதுடன், பட்டப்படிப்பு, பி.எட்., முடித்து, 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளின்படி, பல ஆசிரியர்கள் தகுதி பெறாததால், பெரும்பாலான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசிடம், பல்வேறு அமைப்புகள் மனு அளித்தன.அவற்றை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிசீலித்து, சலுகை திட்டம் ஒன்றை, கடந்த மாதம் அறிவித்தது.
அதன்படி, 'பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண்ணும் எடுக்காமல், 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெறாத வர்கள், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசியதிறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு, டிப்ளமா கல்வியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டது.ஆனால், 'சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து
நீக்கப்படுவர்' என்றும், மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, கடந்த மாதம், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக, பீஹாரில், 2.85 லட்சம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
ம.பி., 1.90 லட்சம்; உ.பி., 1.95 லட்சம்; மேற்கு வங்கம், 1.69 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின் படிப்பில் சேர விண்ணப்பித்து உள்ளனர். ஆந்திரா, 8000; தெலுங்கானா, 17 ஆயிரத்து, 8௦௦ மற்றும் கேரளாவில், 831 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)