>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13-ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன் மதுரையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்.13, 14 தேதிகளில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கைஎடுத்தல், பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு விரைவாக பணப்பலன் வழங்குதல், பள்ளி வளாகங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் மாணவர்களை மரக்கன்றுகள் நட ஊக்குவித்தல், பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தயாரித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1 - 12 வகுப்பு வரை தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்!!! - விரைவில் அமலாகிறது.


டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து தினமும் ரூ.2ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசு உற்பத்திக்கு உதவும் விதத்திலான தேவையற்ற பொருட்களை 48 மணி நேரத்தில் அகற்றிக் கொள்ளுமாறு வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளாட்சித் துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றாதவர்கள் மீது பொதுசுகாதாரத் துறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.23 கோடியில் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தக் காய்ச்சல் தமிழகத்தில் மட்டும்தான் இருப்பதாக எண்ணக்கூடாது, இது உலகமெங்கும் இருக்கிறது என்றார்.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து காப்பீட்டுத் திட்ட அலுவலர் வட்டாரத்தினர் கூறியபோது, “ஏற்கெனவே, டெங்குபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கட்டாயம் என்ற நிலையில் உள்ள நோயாளி மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியும். ஆனால், தற்போது டெங்கு பாதிப்பு இருப்பதாக பாசிட்டிவ் ரிப்போர்ட் தெரியவந்தாலே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும். நோயாளி எத்தனை நாள் சிகிச்சை பெறுகிறாரோ அத்தனை நாட்களுக்கு மருத்துவமனைக்கு காப்பீட்டுத்திட்டத்தின் வாயிலாக இத் தொகை சேர்க்கப்பட்டுவிடும்” என்றனர்.

தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது: கே.பி.அன்பழகன் பேட்டி

தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தமிழகத்தில் 44.3% மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு.

7வது ஊதிய குழுபரிந்துரைகள் பற்றிஅமைச்சரவை கூடி முடிவுஎடுக்க போவதாகதகவல்கள் வந்த வண்ணம்இருக்கின்றன. அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு கோரிக்கையைஏற்க கூடாது என்று சட்டபஞ்சாயத்து இயக்கம்தமிழக முதலமைச்சர்மற்றும் துணைமுதலமைச்சருக்கு அவசரகடிதம் எழுதி உள்ளோம்.
நேரில் சந்தித்து விளக்கம்தர தயாராக உள்ளோம்என்பதையும்
தெரிவித்து உள்ளோம் எனசட்ட பஞ்சாயத்துஇயக்கத்தின் தலைவர்சிவ.இளங்கோகூறியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:
அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) 3 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி கடந்த 3 மாதகாலமாக பல்வேறுபோராட்டங்களை நடத்திஅரசிற்கு நெருக்கடிஅளித்து வருகின்றனர். 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படி சம்பளத்தைஉயர்த்தவேண்டும் மற்றும்புது ஓய்வூதிய திட்டத்தைநிறுத்திவிட்டு பழையஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்தவேண்டும்என்பது அவர்களுடையமுக்கியமானகோரிக்கைகள். அதுசம்மந்தமாக தமிழகஅமைச்சரவை நாளை கூடிமுடிவெடுக்க போவதாகசெய்திகள் வந்த வண்ணம்இருக்கின்றன. சட்டபஞ்சாயத்து இயக்கம்தன்னுடையகருத்துக்களையும்ஆலோசனைகளையும்இந்த கடிதம் மூலம்தெரிவிக்க விரும்புகிறது. (இது சம்மந்தமாகஏற்கனவே 18 செப்டம்பர்அன்று ஒரு கடிதம் எழுதிஇருந்தோம்.)
கட்டாயம் இல்லை:
மத்திய அரசின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டுபரிந்துரைக்கப்பட்டுள்ள7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்கவேண்டிய கட்டாயம் தமிழகஅரசிற்கு இல்லை. 1988இல்மத்திய அரசுஊழியர்களுக்குஇணையாக ஊதியம் தரவாய்மொழி உத்திரவாதம்மட்டும் தான் தமிழக அரசுதந்துள்ளது என்பதைகுறிப்பிட விரும்புகிறோம்.
வரி வருவாய் சரிவு:
தமிழக அரசின் சொந்தநிதி வருவாய் - 99590  கோடி
ஊழியர்களின் சம்பளம்  - 47000 கோடி
ஓய்வூதியம் - 21000 கோடி
அதாவது தமிழக அரசின்சொந்த வரி வருவாயில் 67%ஊழியர்களின் சம்பளம்மற்றும் ஓய்வூதியத்திற்குபோய் விடுவதால் வளர்ச்சிதிட்டங்களுக்கு நிதிபற்றாக்குறை நிலவிவருகிறது. இது தவிரமாநில அரசின் கடன் 4லட்சம் கோடியாகஇருக்கிறது. கடந்த நான்குவருடங்களாக தமிழகஅரசின் சொந்த நிதிவருவாயும் (மொத்தவருவாயில் 61%) குறைந்துகொண்டே வருகிறதுஎன்பதையும் சுட்டிக் காட்டவிரும்புகிறோம்
GST தாக்கம்:
தமிழக அரசின் ஜூலைமாத வரி வருவாய் - 5000கோடி
GST மூலம் கிடைத்தவருவாய்  - 2750 கோடி
Non GST வரி வருவாய் - 2250கோடி (மது மற்றும்பெட்ரோல்-டீசல் மூலம்கிடைத்த வருவாய்)
மறைந்த முதல்வர்ஜெயலலிதா அளித்தவாக்குறுதி படி தமிழக அரசுபடிப்படியாகமதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயத்தில்உள்ளது. மத்திய அரசுபெட்ரோல்-டீசலை GSTக்குள்கொண்டுவர மும்முரமாகஇருக்கிறது. இதனால் Non GST வரி வருவாய்எதிர்காலத்தில் பாதியாக குறையும் பட்சத்தில் கடும்நிதி பற்றாக்குறை ஏற்படும்.
GSTயினால் கடும்நெருக்கடியில் இருக்கும்பஞ்சாப் அரசு, அரசுஊழியர்களுக்கு சம்பளம்தர முடியாமல் திணறிவருகிறது. ஜனவரி மாதம்முதல் தமிழக அரசிற்கும்இதே நிலை ஏற்பட வாய்ப்புஇருப்பதாக பொருளாதாரவல்லுநர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.
FRBMA சட்டத்திற்கு எதிராகஅமையும்:
7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்றால்தமிழக அரசிற்கு 20000கோடி வரை கூடுதலாகசுமை ஏற்படும். இதனால்தமிழக அரசின்  Fiscal deficit-GSDP Ratio மீண்டும் 3% மேற்(3.34%) செல்லும்.  (Fiscal deficit-GSDP Ratio should not be above 3% as per the Fiscal responsibility and budget management act). 7வது ஊதியகுழுவை ஏற்றால் FRBMAசட்டத்திற்கு எதிராகஅமையும் என்பதைகோடிட்டு காட்ட இயக்கம்விரும்புகிறது.
வேலைநிறுத்தம் சட்டப்படிகுற்றம்:
Tamilnadu Government employees act 1973 (Clause 22) மற்றும்  ESMA சட்டப்படியும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவது சட்டப்படிகுற்றம். TK ரங்கராஜன் vsதமிழக அரசு (2003) சுப்ரீம்கோர்ட் வழக்கிலும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபடஎந்தவித தார்மீகஉரிமையும் இல்லை என்றுஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டுருக்கிறது.சட்டத்தை மதிக்காமல் மீண்டும்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டால் சட்டப்படிஅவர்களை வேலையில்இருந்து நீக்க முடியும்என்றாலும் அவர்களின்வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இரண்டு பணிஉயர்வையும் சம்பளஉயர்வையும் (Promotion and Increment) ரத்து செய்யலாம்.
நீதிமன்றம் தலையிடமுடியாது:
சம்பள உயர்வு என்பதுஅரசின் நிதி நிலைமையைகருத்தில் கொண்டுஎடுக்கப்படும் கொள்கைமுடிவு என்பதால்நீதிமன்றம் இதில் தலையிடமுடியாது. நீதிமன்றம்தலையிட முற்பட்டால், அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு பற்றி முடிவுஎடுப்பது அரசினுடையஅதிகார எல்லைக்குள்உட்பட்டது, நீதிமன்றங்கள்எந்த உத்தரவையும்பிறப்பிக்க முடியாது என்றுநீதிமன்றத்தில்தெரிவித்துவிடலாம்.
செயற்திறனுக்கேற்பசம்பளம்:
மத்திய அரசின் ஊதியகுழுவின்பரிந்துரைகளையும் நிராகரித்துவிட்டுசெயற்திறனுக்கேற்பசம்பளம் (performance based appraisal system and people satisfaction index) என்றகொள்கையை தமிழக அரசுஅமல்படுத்திஇந்தியாவுக்கேமுன்னுதாரணமாகதிகழவேண்டும். சிறப்பாகசெயற்படும்ஊழியர்களுக்கு மத்தியஅரசின் ஊழியர்களை விட10% அதிகமாக ஊதியம்தரலாம்.
தற்பொழுதே,போக்குவரத்துஊழியர்களுக்கு தமிழகஅரசு சரியாக சம்பளம்தரமுடியாமல் இருப்பதாகசெய்திகள் வருகின்றது.ஆதலால் தற்போதுள்ளசூழ்நிலையில், அரசுஊழியர்களுக்கு சம்பளஉயர்வு சாத்தியமில்லை. 2% (தமிழக மக்கள்தொகையில்) அரசுஊழியர்களுக்கு (12 லட்சம்), 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படி சம்பளஉயர்வு கொடுத்தால்அனைத்து தமிழகமக்களும் (8 கோடி மக்கள்)பாதிக்கப்படுவார்கள். இதுஅரசு ஊழியர்களுக்குஎதிரான செயல் இல்லை,மக்களுக்கு ஆதரவானசெயல் என்பதை அரசுஊழியர்களுக்கு புரியவைத்து, அவர்கள்ஒப்புதலோடு இதைசெயல்படுத்த வேண்டும்.
அரசு சரியான முடிவுஎடுத்தால் சட்ட பஞ்சாயத்துஇயக்கம் அரசிற்குதுணையாக நின்று, மக்கள்இடையே விழிப்புணர்வைஏற்படுத்த அனைத்துமுயற்சிகளையும் எடுக்கும்.
இது சம்மந்தமாகவும்பென்ஷன் திட்டம் பற்றியும்நேரில் சந்தித்து விளக்கம்அளிக்க தயாராகஉள்ளோம். நேரில் சந்திக்கநேரம் ஒதுக்கி தருமாறுதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்.

EMIS : NEW UPDATED EMIS FORM

ஊதிய உயர்வு குறித்த முதல்வரின் அறிக்கை முழு விவரம்...




சனி, 14 அக்டோபர், 2017

ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.
பென்சன்தாரர்கள்
பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு
சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.
இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
இந்த முடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

TN 7 th PAY - List Of Levels Of Pay ( Regular Government Employees)


TN 7th PAY - New Pay Fixation Table Published

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு.

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, நாளை காலை, 11:15 மணிக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் முறையாக திருநங்கை பிரித்திகா யாசினி எஸ்.ஐ.யாக பதவி ஏற்றார்!!


நாட்டிலேயே முதல் முறையாக தமிழக காவல் துறையில் எஸ்.ஐ.யாக
தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1078 ஆண் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கையான பிரித்திகா யாசினியும் தேர்வு செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் சென்னை மாநகர காவல் துறைக்கு ஆண், பெண் மற்றும் திருநங்கை பிரித்திகா யாசினி என 244 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 244 உதவி ஆய்வாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில், புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழக்கின் தன்மைகள் குறித்தும், அதற்கேற்ப குற்றவாளிகளை பிடிக்கும் முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இதையடுத்து 244 உதவி ஆய்வாளர்களுக்கும் சென்னை முழுவதும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டிலேயே முதல் முறையாக உதவி ஆய்வாளருக்கு தேர்வான திருநங்கை பிரித்திகா யாசினி சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கில் உதவி ஆய்வாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்று கொண்டார்.

நீட்' போராட்டத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!!!

தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு எதிரான 
வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 'நீட் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், 'நீட்' போராட்டம் தொடர்பாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 'நீட்' போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 9-ஆம் தேதி மீண்டும் நடைபெறும்' என்றும் தெரிவித்திருந்தது.
விசாரணை: இந்நிலையில், அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஓய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 'இந்த விவகாரத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை, சட்டம், ஒழுங்கு ஆகியவை பாதிக்கப்படாத வகையிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பெண்கள், மாணவிகள் அதிகளவில் ஈடுபடுவதால் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை அதிகளவில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நீட் தேர்வு போராட்டங்களுக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு!!

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை 
தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் அனைத்து இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,க்கான தேர்வுகள் டிச.,20, அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ படிப்புகளுக்கு டிச.,27, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பிற்கு ஜன.,3 முதல் தேர்வுகள் துவங்குகின்றன.
இத்தேர்வுகளுக்கு அக்.,20க்குள் அபராதமின்றியும், அக்.,27க்குள் ரூ.100 அபராதத்துடனும்,நவ.,6க்குள் ரூ.300 அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., வங்கி ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டண ரசீதை விண்ணப்பத்துடன்
இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்

தேசிய அடைவுத் தேர்வு - 3, 5, 8ம் வகுப்பு மாதிரி வினாக்கள்

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் - அமைச்சரவை ஆலோசனை!

வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது -  7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
7வதுஊதிய குழு பரிந்துரைகள் மற்றும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

SSA -SPD PROCEEDINGS- SWACHH BHARAT VIDYALAYA PURASKAR AWARD 2017 சார்பாக காணொலிக் காட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் 11.10.2017 அன்று மாலை 3 மணிக்குள் நடைபெறுதல் சார்பு.

TNPSC : குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.