>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

PET Teacher TRB Exam 2017 - Study Materials | Full Collection....

Special Teacher PET (Physical Education) TRB Exam 2017 - Study Materials

  • PGTRB | PET Study Material - 1 | Olympic
  • PGTRB | PET Study Material - 2 | Olympic
  • PGTRB | PET Study Material - 3 | Olympic
  • PGTRB | PET Study Material - 4 | Olympic
  • PGTRB | PET Study Material - 5 | Olympic
  • PGTRB | PET Study Material - 6 | Olympic
  • PGTRB | PET Study Material - 7 | Olympic
  • PGTRB | PET Study Material - 8 | Olympic
  • PGTRB | PET Study Material - 9 | Olympic
  • PGTRB - UGTRB - PET | Study Material 1 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 2 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 3 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 4 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 5 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 6 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 7 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 8 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 1 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 2| G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 3 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 4 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 5 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 6 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 7 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 8 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 9 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 10 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 11 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 12 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 13 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 14 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material- Unit 15 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 16 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 17 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 18 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 19 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 20 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 21 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 22 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 23 | G.Saravanan

"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு தேறமாட்டான் என்று வெளியேற்றிய பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றேன்..." - டிஸ்லெக்ஸியாவை வென்ற ஹரீந்திரன் #InternationalLiteracyDay

"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லி என்னை வெளியேத்துன ஸ்கூல்லயே, கெரியர் கவுன்சலிங் கொடுக்கச் சொல்லிச் சிறப்புப் பேச்சாளரா என்னைக் கூப்பிட்டாங்க, டிஸ்லெக்ஸியா ஒரு நோய் அல்ல. எழுத்துகளை மெதுவாகக் கற்றுக்கொள்ளும் குறைபாடு மட்டுமே" என்கிறார் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இன்று வழக்கறிஞராகவும், தொழிலதிபராகவும் சுழன்று கொண்டிருக்கும் ஹரீந்திரன்.

இன்று உலக எழுத்தறிவு தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகில் எழுத்தறிவின்மையைப் போக்கும் எண்ணத்தில், 1965 செப்டம்பர் 8 ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மாநாடு ஒன்றை நடத்தியது. பல நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். உலகளவில் எழுத்தறிவின்மையைப் போக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, 1965 நவம்பர் 17-ம் தேதி, 'செப்டம்பர் 8 -ம் தேதி'யை  உலக எழுத்தறிவு தினமாகக் கடைபிடிப்பது என பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அடிப்படை எழுத்தறிவை போதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் சிறுவயதில் எழுத்தறிவைப் பெற முடியாமல் போனவர்களுக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத்தறிவைப் போதிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எழுத்து ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்கிறார் ஒளவையார். ஆனால் பள்ளிக்கூடங்களில் சில குழந்தைகள்  எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் தவறாகவே சொல்வார்கள். 'D'-ஐ  ' B' என்பார்கள். 'ஆ'- வை 'இ' என்பார்கள். அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தக் கற்றல் குறைபாட்டுக்கு 'டிஸ்லெக்ஸியா'என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எழுத்துகளை அடையாளம் காண முடியாமல் தடுமாறுவார்கள்
அப்படி டிஸ்லெக்ஸியாவில் பாதிக்கப்பட்டு, இவனால் கற்றுக்கொள்ளவே முடியாது என்று நிராகரிக்கப்பட்டு, படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்று பல பள்ளிகளிக்குச் சிறப்புப் பேச்சாளராக சென்று கொண்டிருக்கிறார் ஹரீந்திரன். 

" 'டிஸ்லெக்ஸியா' என்பது ஒரு நோய் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அது உண்மையில்லை. டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவான கற்றல் திறன் (Slow learning) உடையவர்களாக இருப்பார்கள் அவ்வளவுதான்.  நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எழுத்துகளை வாசிக்க, எழுத மிகவும் சிரமப்படுவேன். பிறரிடம் போய் பேசக்கூட  தயங்குவேன். பெரும்பாலும் தனியாகவே இருப்பேன். அதனால் நான் படித்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். 
பிறகு  தி.நகரில், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் பள்ளியில் என் பெற்றோர் என்னைச் சேர்த்துவிட்டார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் முறை சிறப்பாக இருந்தது. தவறாக வாசித்தாலோ எழுதினாலோ. 'நீ மக்கு, எதுக்குமே லாயக்கு இல்லை' என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். மிகவும் கனிவாகப் பேசி மீண்டும் மீண்டும் சொல்லிப் புரியவைப்பார்கள். அதனால் பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றேன் . இன்று பி.காம், பி.எல் முடித்து விட்டு வழக்கறிஞராக இருக்கிறேன். அதுபோக, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன். என்னிடம் 100 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். அதுபோக பல பள்ளி, கல்லூரிகளில் கேரியர் கவுன்சலிங் கொடுக்கிறேன். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயாளியாகக் கருதாமல் அவர்களைச் சரியாக ட்யூன் செய்தால் வழக்கமான மனிதர்களை விட சிறப்பாக உருவாவார்கள். 
'டிஸ்லெக்ஸியா' -வால் பாதிக்கப்பட்டவர்கள் தனித் திறனுடையவர்கள். அவர்களால் குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல் இருக்கமுடியாது. ஒரே வேலையைச் செய்ய விரும்ப மாட்டார்கள். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட பலர் இன்று இசையமைப்பாளராக, சவுண்ட் இன்ஜினீயர்களாக,  பத்திரிக்கையாளர்களாக, எப் 3 ரேஸர்களாக இருக்கிறார்கள்... "என்கிறார் அவர்..

"கற்றல் குறைபாடு மரபு வழியாக ஏற்படலாம். நரம்பியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் ஏற்படலாம். இதை வருமுன்னே தடுக்க முடியாது. ஆறு வயதுக்கு மேல்தான் தெரிய வரும். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது போன்று கற்றுக் கொடுக்க முடியாது. 'மல்டி சென்சரி' (Multi sensory) அணுகுமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டும். 
அதாவது,  கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டு உணரவைத்துக் கற்றுக் கொடுக்கும் முறைக்கு 'மல்டி சென்சரி' என்று பெயர். இம்முறைப்படி, கற்றுக் கொடுத்தால், எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
முன்பு, குழந்தைகளின் விரல் பிடித்து மணலிலோ அரிசியிலோ எழுதக் கற்றுத் தருவார்கள். இதற்கு,  `நுண் நரம்பியல் பயிற்சிகள்’ என்று பெயர். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த முறைப்படி கற்றுத்தர வேண்டும். இந்தக் குழந்தைகளை மேம்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் உள்ள தனித்திறன்களைக் கண்டறிய வேண்டும். அத்திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடிக்கடி உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.  இது 
அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.
பள்ளிகளில் யாருக்கேனும் இதுபோன்ற குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தால், ஆசிரியர்கள்  உடனே அக்குழந்தையின் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற மாணவர்களுக்கு முன்னால் அவர்களை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.  அவர்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அன்போடும், பக்குவமாகவும் சொல்லிக் கொடுத்தால்,  இதற்கான சிறப்புப் பள்ளிகளே தேவைப்படாது..." என்கிறார் மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன்.
20-ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், லியோனார்டோ டாவின்சி மற்றும் ஓவியர்கள் பாப்லோ பிக்காசோ அலெக்சாண்டர் கிரகாம்பெல், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட பலர் இந்தக் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. இவர்கள் புரிந்த சாதனைகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சரியான பயிற்சியும், ஊக்கமும் அளித்தால் சமூகத்தில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. கல்வித்துறையினர் செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கொள்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள எந்த ஒரு பொதுத்தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும்வகையில், இம்மாதம் இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இதற்காக, சென்னை தலைமையிடமாக கொண்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை ரூ.432 கோடி மதிப்பில் கணினி மையமாக மாற்றப்படும். முதுநிலை ஆசிரியர்கள் 3336 பேரும், 748 கணினி ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு, இதுபோன்ற நிலைமைகள் வருகிற திங்கள்கிழமைக்கு மேல் இருக்காது என்றார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் வேறுபட்டகருத்துகள் உள்ளன. 2013-14-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மதிப்பெண்களில் வித்தியாசம் உள்ளது. அப்போது 70 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலே, வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, 85 முதல் 95 சதவீதம் பெறுகிறார்கள். வெயிட்டேஜ் என்கிற நிலை இருக்கிறது. அவர்களுடன் சமரசம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒத்துழைப்பு தந்தால், பழைய பாடத்தைப் படித்துவிட்டு கல்வியாளர்களாக இருக்கின்றவர்களின் எதிர்காலம் இல்லாத நிலையை மாற்றுவதற்கு ஒருகுழுவை அமைத்து, அந்த குழுவின் மூலம் பரிசீலனை செய்து இவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'

அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், 2.4 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் நிர்ண
யிக்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. இதுவரை, 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, பல்லவன் இல்லத்தில், அதிகாரிகள் அடங்கிய துணைக் குழுவினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, அரசுக்கு, 'ஸ்டிரைக் நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:அரசு போக்குவரத்து கழகங்கள், நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. அதனால், காலாவதியான பஸ்கள் தான், அதிகளவில் இயக்கப்படுகின்றன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆயுள் காப்பீடு, அஞ்சல் காப்பீடு, கூட்டுறவு
சங்கங்களுக்கான பிடித்தம் உள்ளிட்ட, 5,500 கோடி ரூபாயை, நிர்வாகம் செலவு செய்து விட்டது; தற்போதும் செலவு செய்து வருகிறது.
செலவு செய்த தொகையை வழங்குவது,
போக்குவரத்து கழகத்தின்
நஷ்டத்தை ஏற்பது, 13வது ஊதிய ஒப்
பந்தத்தை நிறை
வேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை,
அரசுக்கு பலமுறை
தெரிவித்துள்ளோம். அவற்றுக்கு தீர்வு காண, அரசு, இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மேலும், சிறிய தொழிற்சங்கங்களை இணைத்து, அரசுக்கு சாதக
மான வகையில், ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்ய, அரசு திட்டமிடுகிறது. அதுபோன்ற சங்க நிர்வாகிகளுக்கு, சலுகை காட்டுகிறது. அதனால், வரும், 24ம் தேதியிலோ, அதற்கு பின் வேறு தேதியிலோ, வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானித்து
உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு

மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் நடக்கிறது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் ௧ முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம். பள்ளிகளில், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.'இந்தாண்டுக்கான, மாநில அளவிலானதேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் துவங்கும்' என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம், நாளை முதல் மீண்டும் துவங்கும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிர
மணியன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
ஆனால், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூடி, ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கைகளுடன், தற்போது, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்
பதையும் இணைத்து, 11ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
அன்று அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; 12ம் தேதி மறியல்; அதன்பின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
போராட்டத்தோடு நீதிமன்ற வழக்கையும் சந்திப்போம். 28 ஆசிரியர்கள் சங்கம், 64 அரசு ஊழியர் சங்கம் என, மொத்தம், 92 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். வேலைநிறுத்தம்அவர் அளித்த உறுதியை ஏற்று, சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தன; சில சங்கங்கள், 'வேலைநிறுத்தம் நடைபெறும்' என அறிவித்தன.போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அதையும் மீறி, நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் துவங்கியது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, அரசு தலைமைச் செயலர் கிரிஜா, அறிக்கை வெளியிட்டார்.நீதிமன்ற உத்தரவை மீறி, சில சங்கங்கள் சார்பில், நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. அதில், 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். நடவடிக்கைஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதை மீறி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வராதவர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முறையாக, மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படாது. மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 9 செப்டம்பர், 2017

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் தமிழகம் முழுவதும் மறியலில் 7 லட்சம் பேர் கைது

ஜாக்டோ-ஜியோ அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 7 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 
ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது தொடர்பாக ஜாக்டோ-ஜியோவில் நிலவிய கருத்து மோதல் காரணமாக கணேசன், இளங்கோவன் தலைமையில் ஒரு அணியும், சுப்பிரமணி, மாயவன் தலைமையில் ஒரு அணியாகவும் ஜாக்டோ-ஜியோ பிரிந்தன. இந்நிலையில், சுப்பிரமணி, மாயவன் தலைமையிலான அணியினர் நேற்று தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் இந்த அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் (ஜெஎஸ்ஆர்க), இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (சிஏ), தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், சத்துணவு பணியாளர்கள் சங்கம், சமூக நல அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம், நிர்வாக அலுவலர்கள் சங்கம் என 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 
கடந்த 8 ஆண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது என்பதால் அவர்கள் புதிய ஓய்வு ஊதிய  திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் கணேசன் அணியில் உள்ளவர்களும் சங்கத்தின் விதிகளை மீறி நேற்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. அதனால் அந்த வகை பள்ளிகள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் 55 சதவீதம் ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் நேற்று பள்ளிக்கு வரவில்லை. அதனால் அந்த வகை பள்ளிகள் பாதிக்கப்பட்டன. 
தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டன. 
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழி்யர்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இன்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. நாளை தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை திமுகவின் சார்பில் எம்.பி.,க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சந்தித்து வேலை நிறுத்த போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவை தெரிவித்தனர். 

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப உத்தரவு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தை விதிகள் 20, 22 மற்றும் 22Aன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு 

JACTTO - GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம் - போராட்ட வியூகம் :
📌11.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
📌12.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்
📌13.9.2017 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்
ஜேக்டோ ஜியோ போராட்டம் தலைமைச்செயலக சங்கம் மற்றும் நீதித்துறை சங்கம் உட்பட 92 சங்கங்கள் பங்கேற்பு.

TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. கல்வித்துறையினர் செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கொள்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள எந்த ஒரு பொதுத்தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும்வகையில், இம்மாதம் இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இதற்காக, சென்னை தலைமையிடமாக கொண்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை ரூ.432 கோடி மதிப்பில் கணினி மையமாக மாற்றப்படும். முதுநிலை ஆசிரியர்கள் 3336 பேரும், 748 கணினி ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு, இதுபோன்ற நிலைமைகள் வருகிற திங்கள்கிழமைக்கு மேல் இருக்காது என்றார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் வேறுபட்டகருத்துகள் உள்ளன. 2013-14-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மதிப்பெண்களில் வித்தியாசம் உள்ளது. அப்போது 70 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலே, வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, 85 முதல் 95 சதவீதம் பெறுகிறார்கள். வெயிட்டேஜ் என்கிற நிலை இருக்கிறது. அவர்களுடன் சமரசம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒத்துழைப்பு தந்தால், பழைய பாடத்தைப் படித்துவிட்டு கல்வியாளர்களாக இருக்கின்றவர்களின் எதிர்காலம் இல்லாத நிலையை மாற்றுவதற்கு ஒருகுழுவை அமைத்து, அந்த குழுவின் மூலம் பரிசீலனை செய்து இவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

கட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.
2014ல் பேஸ்புக் நிறஉவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. கட்டணம் இல்லாத, விளம்பரமும் இல்லாத ஒரு ஆப்புக்கு இவ்வளவு அதிக விலை கொடுத்து பேஸ்புக் வாங்கியது ஏன் என்ற கேள்வி அப்போது எல்லோரிடமும் எழுந்தது.
இதற்கான விடைதான் தற்போது வெளியாகியுள்ள தகவல். ஆம்.. வாட்ஸ்அப் இனிமேல் கட்டண சேவை அளிக்கும் ஆப் என்ற வகையில் மாறப்போகிறது.
வர்த்தக நோக்கம் கட்டண சேவை என்றதும், நெட்டிசன்கள் ஆதங்கப்பட தேவையில்லை. வாட்ஸ்அப்பில் வர்த்தக டூல் ஒன்று சேர்க்கப்படுகிறது. அதை பயன்படுத்துவோருக்குதான் கட்டணம். இந்தியாவில் 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள், அவர்களை குறிவைத்து வர்த்தக நிறுவனங்கள் இந்த கட்டண சேவையை பயன்படுத்தலாம்.
விளம்பரதாரர்கள் 
இந்தியாவில்தான் வேறெந்த நாட்டைவிடவும் அதிகப்படியானோர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். இவர்களை, வணி நிறுவனங்களோடு இணைப்பதுதான் புதிய கட்டண சேவையின் நோக்கம். டிவிட்டர், பேஸ்புக் போலவே, வர்த்தக நிறுவனங்கள் ரியல்தான் என்பதை உறுதி செய்ய வெரிஃபைட் குறியீடு பயன்படப்போகிறது.
வாடிக்கையாளர்கள் தொடர்பு 
கட்டணம் செலுத்தும் வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இவற்றை பிளாக் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு வசதி உண்டு. உணவகங்கள், சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரை வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ள இது உதவும்.
பல சேவைகளுக்கு வாய்ப்பு 
புக்மைஷோ ஏற்கனவே வாட்ஸ்அப்புடன் இணைந்து இதுபோன்ற சேவையை வெள்ளோட்ட அடிப்படையில் செய்து வருகிறது. எப்போது வெரிஃபைடு குறியீட்டுடன் வாட்ஸ்அப் தனது வணிக சேவையை தொடங்கப்போகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வீசாட் என்ற மெசேஜ் ஆப், பிறகு மேம்படுத்தப்பட்டு, கார், ஆட்டோ புக் செய்வது, பில் கட்டுவது உள்ளிட்ட பல சேவைகளை அளிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

SCERT- LEARNING OUTCOMES BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS- POSTPONED TO 04.10.2017 TO 14.10.2017

வியாழன், 7 செப்டம்பர், 2017

TRB - சிறப்பாசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு காரணமாக 10,11,12ம் வகுப்பு -  காலாண்டு பொதுத் தேர்வில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய திருப்பத்தூர் மாவட்டம் : 9ம் தேதி முதல்வர் அறிவிப்பு

வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, வாகன பிரசார துவக்க விழா, நேற்று வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வணி வரி துறை அமைச்சர் வீரமணி, ''வரும் 9ம் தேதி, வேலுார் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்,'' என்றார்.
மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, வேலுார் மாவட்டத்தை பிரித்து, திருப்பத்துாரை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். 
புதிய மாவட்டத்திற்கு, திருப்பத்துார் அல்லது ஏலகிரி மாவட்டம் என, பெயர் வைக்கப்படும்.
புதிய மாவட்டத்தில், திருப்பத்துார், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு தாலுகாக்கள் சேர்க்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை பல்கலை தேர்வு, 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சென்னை; தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 
தேர்வு முடிவை, www.ideunom.ac.in இணையதளத்தில், இரவு, ௮:௦௦ மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை...

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு பெற்ற தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் தேவையான அளவுக்கு ஏற்படுத்தப்பட வில்லை என்றும், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பள்ளி களில்,ஆசிரியர் நியமனம் குறித்து, வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன் விபரம்: பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இந்த விதிகளை, பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, 1 - 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்க, ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளி யில் பயிற்சிகள் நடத்துவது அவசியம். 10 சதவீதத்திற்கு மேல் காலியிடங்கள் இல்லாமல், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 60 வயதில் ஆசிரியர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும், 'டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.