வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 19 - 24 வரை நடந்தது.
மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் நிலவிய சிக்கல் தீர்ந்ததால், 'வரும், 28 - 30 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறித்துள்ளது.
மாணவர்களின் பெயர் பட்டியல், பல்லைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; எஸ்.எம்.எஸ்., வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலையின் கீழ் உள்ள, அனைத்து கல்லுாரிகளிலும், வரும், 31 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.
மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் நிலவிய சிக்கல் தீர்ந்ததால், 'வரும், 28 - 30 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறித்துள்ளது.
மாணவர்களின் பெயர் பட்டியல், பல்லைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; எஸ்.எம்.எஸ்., வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலையின் கீழ் உள்ள, அனைத்து கல்லுாரிகளிலும், வரும், 31 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.
நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து
'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கவுன்சிலிங் : தனியார் கல்லுாரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கும் சேர்த்து, முதன்முறையாக, பொது கவுன்சிலிங், இன்று துவங்கி, செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: நீட் தேர்வுக்கான மாநில தர வரிசை பட்டியலை ஆய்வு செய்ததில், பி.சி., - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓ.சி., - மற்ற வகுப்பு பிரிவு, 415; ஓ.பி.சி., - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு, 285 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருந்தால் மட்டுமே, அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கும், கவுன்சிலிங் நடப்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இம்முறையால், பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும் அபாயமுள்ளது. எனவே, ஐ.ஐ.டி., உட்பட கல்வி நிறுவனங்களில், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' நிர்ணயித்து, கவுன்சிலிங் நடத்துவது போல, மருத்துவப் படிப்புக்கும், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறினால், பள்ளிக்கூடங்கள், 'நீட்' பயிற்சி என்ற பெயரில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர் 'பாடம்' நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து, 250 மாணவர்களே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து, கவுன்சிலிங் நடத்தியதால் தான், பிளஸ் 1 பாடத்திட்டம் கற்பிக்காமல், நேரடியாக, பிளஸ் 2 வகுப்பு கையாளப்பட்டது.
இவர்கள், மருத்துவப் படிப்பில், முதல் பருவத்திலேயே, 'அரியர்' வைக்கின்றனர்.
வாய்ப்பு அதிகம் : நீட் தேர்வு வரவேற்கத்தக்கது; சமீபத்தில் நடந்த நீட் தேர்விலும், 50 சதவீத கேள்விகள், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை முழுமையாக படித்தவர்கள், இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அடுத்த ஆண்டு முதல், இத்தேர்வு நடத்தும் அதிகாரத்தை, சி.பி.எஸ்.இ., அல்லாமல், தனி அமைப்பிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்...
'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் பலர், ஆதார் எண் விபரங்களை குறிப்பிடாமல் உள்ளனர்.
இது குறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களின் சுய விபரங்களில் தவறு ஏற்படாமல் இருக்க, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விபரங்கள், கட்டாயம் தேவை. காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தவர் மட்டும், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி!!
தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா நகரில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னை விட தோழி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு விரட்டும் திரவ மருந்தினை கலந்து கொடுத்துள்ளார்.
இதனை அறியாத தோழி அந்த தண்ணீரை குடித்துள்ளார். அதன்பின் அவருக்கு வாந்தி வந்துள்ளது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் தோழியை அனுமதித்தனர். தற்பொழுது அவரது நிலைமை சீராக உள்ளது.
இதுபற்றி பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து நடந்த விசாரணையில், மாணவி தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து அதனை மற்றொரு மாணவியின் பையில் மறைத்து வைத்த காட்சி பள்ளி கூட அறையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், குற்றவாளியான மாணவி தனது வீட்டில் வைத்து கொசு விரட்டும் மருந்தினை உட்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை
என்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாமக்கல்லினைச் சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசை பட்டியல் தொடர்பான விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
தமிழக அரசினை பொறுத்த வரையில் ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக பாடாத திட்டத்தில்மாற்றம் செய்யப்படவில்லை? அதே போல கற்ப்பிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வினை பொறுத்த வரையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி கேள்விகள் கேட்கப்பட்டால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?
அதேபோல இரண்டு வகையிலான பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?
நீட் தெரிவினைப்பொறுத்த வரையில் அதனை நடத்துவதற்கு என்று தனியான நடுநிலையான அமைப்பு வேண்டும்.
மாநில பாடத் திட்டத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மானவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். இதன் காரணமாக தற்பொழுது பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
நீட் விவகாரத்தை தமிழக அரசின்முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்
பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது ஏன்?
நாடு முழுவதும் பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது நீட் தேர்வை நடுநிலையான அமைப்பு நடத்தாமல் சிபிஎஸ்இ நடத்தியது ஏன் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதி 1184 மதிப்பெண் பெற்றுள்ளேன். எனது மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் 199.25 ஆகும். ஆனால் நீட் தேர்வில் 154 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளேன். இதனால் எனக்கு மருத்துவப் படிப்பில் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனது மருத்துவப் படிப்பு கனவாகி விட்டது.
நீட் தேர்வு விஷயத்தில் ஒரு நிலையான உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை. இந்த இக்கட்டான நிலை தமிழக மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றிருந்தும் மருத்துப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்ணும், அதிக கட் ஆஃப் மதிப்பெண்ணும் எடுத்துள்ள என்னை மருத்துவ கலந்தாய்வுக்கு அழைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவி கிருத்திகா தரப்பு வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து மொத்தம் 83 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே சிபிஎஸ்இ தரப்பு மாணவர்கள்.
மாநில பாடத்திட்டத்தில் படித்து பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 எடுத்தவர்கள் கூட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க முடியாத கடினமான நிலையில் தமிழக மாணவர்கள் உள்ளனர். எனவே, தமிழக மாணவர்களுக்கு உரிய இடத்தை தருமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் வக்கீல் வேல்முருகன் இடையிட்டு மனுவைத் தாக்கல் செய்து வாதிடும்போது, நீட் தேர்வை சிபிஎஸ்இ தான் நடத்துகிறது.
பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இது தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிட்டார். சிபிஎஸ்இ தரப்பில் வக்கீல் வி.பி.ராமனும் ஆஜராகி, நீட் தேர்வு தொடர்பான எந்த வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
அப்போது அவரிடம் நீதிபதி, கேள்வித்தாளை யார் தயார் செய்தது என்று கேட்டார். அதற்கு வி.பி.ராமன் சிபிஎஸ்இதான், ஆனால், மாநிலப் பாடத்திட்டமும் கேள்வித்தாளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது.
ஆனால் நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலமாகவும் தமிழகம்தான் உள்ளது. நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. இதில் யாரையும் குறை சொல்லமுடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி தீர்மானத்தையும் நிறைவேற்றின.
ஜல்லிக்கட்டுக்குப் பிறகு நீட் தேர்வு விஷயத்தில்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்றபோது, சிபிஎஸ்இயை இந்த தேர்வை நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன். இந்த தேர்வை சிபிஎஸ்இ நடத்தாமல், கேள்விகளை சிபிஎஸ்இ தயாரிக்காமல் நடுநிலையான ஒரு அமைப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டு இருக்காது. நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேநேரம், தமிழகத்திற்கான மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதும் சந்தேகமே. எனவே இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு நாளை பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார். வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் முன்னதாக வழக்கு நேற்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, ‘நீட்’ விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நிலையான முடிவையும் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே எடுக்கவில்லை. மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிற்பகலில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் டி.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆகஸ்ட் 24(வியாழக்கிழமை) முதல் 31-ம் தேதி வரை (25 மற்றும் 27-ம் தேதி விடுமுறை நீங்கலாக) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுதவும் (எச் வகையினர்), எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும் 1.10.2017 அன்று 16வயது மற்றும் 6 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாக (எச்பி வகையினர்) தேர்வெழுதவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
சேவை மையங்களின் பட்டியலைத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. எச் வகை தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். அதேபோல், எச்பி வகை தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல், திறன் தேர்வுக்கு ரூ.2 ஆக மொத்தம் ரூ.187 செலுத்த வேண்டும். பார்வையற்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
செப்.25 தேர்வு தொடக்கம்;
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். ஒப்புகைச்சீட்டை தனித்தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வெழுத வேண்டும். பிளஸ் 2 துணைத்தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 10-ம் தேதி முடிவடையும்.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)