>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

"ENGLISH SPEECH & ESSAY" FOR INDEPENDENCE DAY


  •  INDEPENDENCE DAY SPEECH [200 WORDS] - CLICK HERE
  •  INDEPENDENCE DAY SPEECH [250 WORDS] - CLICK HERE
  •  INDEPENDENCE DAY SPEECH [300 WORDS] - CLICK HERE
  •  INDEPENDENCE DAY SPEECH [400 WORDS] - CLICK HERE
  •  INDEPENDENCE DAY SPEECH [500 WORDS] - CLICK HERE

Android App Training By Google For Govt school Teachers - Reg SPD Proceedings!

100 Teachers per District | Schedule 





 

மாணவர்களின் மன அழுத்ததுக்கு நாங்களும் ஒரு காரணம்'' - சொல்கிறார்கள் ஆசிரியர்கள்...

வீட்டில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்லும் பிள்ளைகளை வியந்து பார்ப்போம். நம் கருத்தை எதிர்த்து 'இப்படிதான் எங்க ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க சொல்றதுதான் கரெக்ட்''  என சொல்லி பூரிப்படைவார்கள் குழந்தைகள். குழந்தைகள் அதிகம் நம்புவது அவர்களுடைய ஆசிரியர்களைதான்.
முன்னரெல்லாம் ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர் ''கண்ணு தலையைத் தவிற மத்த எடத்துல எங்க வேணும்னாலும் அடி பின்னி எடுங்க சார்'' என்பார்கள். ஆனால் தற்போது 'ஏன் என் குழந்தையை அடிச்சீங்க'' என்கிற அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. இதற்கு யார் காரணம்? யாரிடத்தில் தவறு? பேசினோம் ஆசிரியர்களிடம்.
சேலம் அரிசிபாளையம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையான விமலா அப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வீடு வரை சென்று பேசக் கூடியவர். தொடக்க நிலை ஆசிரியர் விமலாவகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உள்ள அழுத்தம் குறித்து பேசுகிறார்....
‘‘தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் துறுதுறு குழந்தைகளைச் சாமளிக்க ஒரு தாயின் மனநிலை வேண்டும். ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டாலே பிரச்னைகள் குறைந்துவிடும். வகுப்பறைக்குள் நுழையும் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை  வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். அரசுப் பள்ளிக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் குழந்தைகள் படிக்க வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். ஒரு சிலர் வீட்டுப் பிரச்னை காரணமாக பள்ளிக்கு வருவதே நின்று விடும். அப்பா அம்மாவுக்குள் நடக்கும் பிரச்னைகளால் குடும்பம் பிரிந்து விடுகிறது. குழந்தைகள் தாயுடன் பாட்டி வீட்டுக்கு சென்று விடுகின்றனர். 
அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. அவர்களை பின் தொடர்ந்து மீண்டும் பள்ளி வர ஊக்குவிக்கிறோம். அப்படி வந்தால் மீண்டும் முதலில் இருந்து பாடம் நடத்த வேண்டும். வீட்டுப் பிரச்னைகளால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. பாடம் நடத்துவதோடு அவர்களிடம் பர்சனலாகப் பேசி தன்னம்பிக்கை அளிக்கவும் கவுன்சிலிங் கொடுக்கிறோம். தொடக்கப் பள்ளி ஆசிரியையின் பணி தேர்ச்சி அடைய வைப்பதோடு நின்று விடுவதில்லை. அந்தக் குழந்தை தொடர்ந்து படிக்க பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுப்பது வரை நடக்கிறது’’ என்கிறார் விமலா. 
உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரியும் முரளி இது குறித்துக் கூறுகையில், ‘‘ஆசிரியர்களின் ஆயுட்காலத்தைப் பற்றி ஒருவர் ஆய்வு செய்துள்ளார். பணியில் இருக்கும் போதே இறக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். பணி ஓய்வு பெற்றாலும் ஆசிரியரின் ஆயுட் காலம் குறைவாகவே உள்ளது. காரணம் அவர்கள் தங்களது பணி நாட்கள் முழுவதும் பேசிக் கொண்டே இருக்க ஆரிரியர் முரளிவேண்டும். 
இன்றைய ஆசிரியர்கள் வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் அதிகம். கற்பித்தல் என்பது குறிப்பிட்ட பாடம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதாக இருந்தகாலத்தில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர்கள் பாடம் நடத்த முடிந்தது. இப்போது குறிப்பிட்ட பாடத்தை எடுத்துக் கொண்டால் அதை ஒரு மதிப்பெண் கேள்வி, பொருத்துக அல்லது விரிவான விடை என்று மதிப்பெண் அடிப்படையில் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 எல்லோரையும் தேர்ச்சி சதவீதம் துரத்துகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சென்ற ஒரு மாணவனிடம் தேர்வு அறைக்குள் நுழையும் நேரத்தில் (9.55 மணிக்கு) அவனது பிளட் பிரஷ்ஷர் செக் செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அங்கு கண்காணிப்புப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் பிளர் பிரஷர் செய்யப்பட்டது. மாணவரை விட அதிகளவு பிளட் பிரஷர் ஆசிரியரிடம் காணப்பட்டதாம்.  இன்றைய ஆசிரியர்களின் நிலைமை இப்படிதான் உள்ளது. ஆசிரியர்கள் வேலையை விரும்பிச் செய்யும் சூழல் இல்லை. மதிப்பெண்கள் மட்டுமின்றி கல்வி அறிவுத் தேடலாக மாறும் போது தான் பிரஷர் குறையும்,’’ என்கிறார் முரளி. 
ஆசிரியர் பிரவீன்குமார்ஆசிரியர்கள் வகுப்பறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார் கூறுகையில், 'வீட்டிலிருந்து கிளம்பும்போது என்ன பிரச்னைகளை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டால் மாணவர்களே நலனே முதன்மையாக இருக்க வேண்டும். 
முன்பெல்லாம் மாணவர்கள் 13 வயதைத் தொட்டால் அதை அடசலன்ட் என்பார்கள். தற்போது அதை 10 வயதிலிருந்தே அடசலன்ட் என்று சொல்லப்படுகிறது. இந்த வயதில் ஈகோ பார்க்கத் தொடங்கும் மாணவர்களிடம் கண்டிப்பையோ, தண்டனையையோ பொதுவெளியில் ஆசிரியர்கள் காட்டக் கூடாது. 
தவறு செய்த மாணவனை தனியாக அழைத்துப் போய் தான் நடந்த தவறை விளக்க வேண்டும். சாதியைச் சொல்லி திட்டுவது, நிறத்தை காராணம் காட்டி திட்டுவது, மற்றவர்களுடன் கம்பேர் செய்வதை மாணவர்கள் துளியும் விரும்புவதில்லை. அப்படி செய்வதாலேயே மாணவர் தற்கொலை, தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடத்தை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமே அவர்களுடைய வேலையில்லை. மாணவர்களுக்கு புரியும்படி கற்பிக்கப்படும்போதுதான் ஆசிரியர் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும். 

தலைமை ஆசிரியர்களுக்கு சிறார்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி...


வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!

ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க  திட்டமிட்டுள்ளது ஜியோ.

அதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ  பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த  திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது  கூடுதல் தகவல்.
திட்டம் விவரம் :
இந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவைவழங்க உள்ளது.1 gbps  வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை  பெரும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்உதயசந்திரனை மாற்ற முயல்வது சரியா? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனை,மாற்றப் போவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம்  உதயச்சந்திரன் கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நேர்மையாகச் செயல்படும் உதயச்சந்திரனுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விவாதம் நடத்த வருமாறு அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனுக்குச் சவால் விடுத்துள்ளார். இதற்கு, மக்கள் கீழ் உள்ள சர்வேயில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.  

டி.என்.பி.எஸ்.சி குரூப்2 ஏ விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு !!

கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைத்தாள் இன்று (ஆக 9 )வெளியிடப்பட்டது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த 6-ம் தேதி நடைபெற்ற குரூப்2
ஏவுக்கான தேர்வு நடைபெற்றது உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதற்கான விடைத்தாள் www.tnpsc.gov.in என்ற இணைய தள முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கறப்பட்டுள்ளது.

விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!..

எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் நேரம் தவறாமை மிக அவசியம். ஒழுங்கு முறையின் கீழ் வரும் இந்தப் பழக்கம் உயர்ப் பணிகளிலும் நம்மை அமர வைக்கும். அது பள்ளிகளிலிருந்தே தொடங்கினால் வாழ் முழுக்க அந்த மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். 

பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை முடித்தப் பிறகு அவர்கள் செல்லும் பணிகளிலும் அவர்கள் சரியான நேரத்திற்காக பாராட்டுக்களைப் பெறுவதோடு, பதவியுயர்வும் பெற முடியும். இந்த காலம் தவறாமை மற்றும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கும் வரும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தியை பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவுள்ளது.
அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் லிஸ்டினை பள்ளிக் கல்வி இயக்குநரகம் கேட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் பதினொன்றாம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்து இணை இயக்குநர் (தொழிற்கல்வி) முகவரிக்கு மெயில் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை :79.நாள்14.7.17

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை :79.நாள்14.7.17

ஊரக வளர்ச்சித்துறை
➖➖➖➖➖➖➖➖
துவக்கப் பள்ளி 1000+300
➖➖➖➖➖➖➖➖
நடுநிலைப்பள்ளி 1500+500
➖➖➖➖➖➖➖➖
உயர்நிலைப் பள்ளி 2250+750

➖➖➖➖➖➖➖➖
மேல்நிலைப்பள்ளி 3000+1000
➖➖➖➖➖➖➖➖
பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் - மத்திய அமைச்சர் விஜய்கோயல்...
'பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் கட்டாயமாக்கட்டுள்ளன. இவற்றைக் கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கக்பட்டுள்ளதாக' மாநிலங்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் அறிவித்துள்ளார்.

'சிபிஎஸ்இ பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளைப் போன்றே மாநில கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் செயல்பட வேண்டும். அனைத்துப் பள்ளியிலும் மைதானங்கள், விளையாட்டுக்கான உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டிருக்க வேண்டும், உடற்கல்வி போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக'த் தெரிவித்த மத்திய அமைச்சர் விஜய்கோயல், 'ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 45 நிமிடங்கள் விளையாட்டு அல்லது உடற்கல்வி என்று நேரம் ஒதுக்க வேண்டும். இதைப்போலவே, யோகா, நீச்சல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட எட்டு அம்சங்களில் இரண்டு அம்சங்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கட்டாயம்' என்றும் அறிவித்திருக்கிறார்.
பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

வறுமை, கல்வியறிவின்மை, ஊழலை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு...

ஊழல், கல்வியறிவின்மை, வறுமை ஆகியவை நாட்டின் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இவற்றை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

வௌ்ளையனே வௌியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 75-ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
2017ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டுக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிடும். 1942ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டுக்கு இடையில் இருந்த அதே உத்வேகத்தை உருவாக்குவது அவசியம்.
நாட்டின் வளர்ச்சிப் பாதையை ஊழல் மோசமாக பாதித்துள்ளது. ஊழல், வறுமை,கல்வயறிவின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை மிகப் பெரிய சவால்களாக நமக்கு இருக்கின்றன. இதில் இருந்து நம் நாடு விடுபட வேண்டும். இதில் இருந்து அனைவரும் விடுபடுவது அவசியமாகும். ஒரு நேர்மறையாக மாற்றத்துக்கு நாம் செல்வது அவசியம்.
கடந்த 1942ம்ஆண்டு ‘செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷம் பிரபலமாக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு  ‘நாங்கள் செய்வோம், உறுதியாகச் செய்வோம்’ என்ற முழக்கம் இருக்கும்.
2022ம் ஆண்டுக்குள் இந்தியா கண்டிப்பாக நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இது மற்ற நாடுகளுக்கு உத்வேகமாக இருக்கும்.
கடந்த 1942ம் ஆண்டு சூழல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சாதமான சூழலாக இருந்தது. இப்போது, அதே சூழல், அதாவது உலகச் சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது.
 அடுத்த 5 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க  எம்.பி.க்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.
இந்த வௌ்ளையனே வௌியேறு இயக்கம் என்பது புதிய தலைமையை உருவாக்கியது. மகாத்மா காந்தியின் போராட்டத்துக்கு ஆதரவை பெருக்கியது. இந்த சூழலை நாம் நினைவு கூர்ந்து, நமது நாட்டை வலுப்படுத்த வேண்டும்.
இந்த இயக்கத்தில் நாட்டின் அனைத்து தரப்பு, பகுதி மக்களும், சமூகத்தினரும், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றாக இணைந்து போராடினார்கள். இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்ற முழுக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்கள் தங்கள் உரிமைகள் குறித்து அறிந்து இருக்கும் அதே நேரத்தில் கடமையையும் மறந்துவிடக்கூடாது.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஊழலை ஒழிப்போம். ஏழை மக்களுக்கு உரிமையை பெற்றுத் தருவோம்.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். ஊட்டத்துக் குறைபாட்டை முடிவுக்கு கொண்டு வருவோம், மகளிர் முன்னேற்றத்துக்கான தடைகளை நீக்குவோம், கல்வியறிவின்மையை நீக்குவோம். அதை நாம் செய்வோம்
இவ்வாறு அவர் பேசினார்.

COMBINED CIVIL SERVICES EXAMINATION-II, 2017 - 2018 (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES) KEY ANSWERS

TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II, 2017 - 2018 (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES)
(Date of Examination:06.08.2017)
       1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 16th August 2017 will receive no attention.

புதன், 9 ஆகஸ்ட், 2017

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடங்களை நிரப்ப ஐகோர்ட் தடை

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடங்களை நிரப்ப தடை விதித்தும் அந்த இடங்களை காலியாக வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவர் நம்புராஜன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு!!

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப
கல்வித்துறையால், ஜூனில் நடத்தப்பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று(ஆக.,9) வெளியாகிறது. தேர்வு முடிவை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின், www.tndte.com இணையதளத்திலும், பாலிடெக்னிக் கல்லுாரி தேர்வு மையங்களிலும், தெரிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், உரிய ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கண்ணியமாக உடை அணியுங்கள் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றும், கண்ணியமாக உடை அணியுங்கள் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட். கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.
அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர்கள், புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளை கூறியிருப்பார்கள். மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும். கல்லூரிகளில் இந்த ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது.
கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வரவேண்டும். தேவையான மற்றும் தவிர்க்க முடியாத விடுமுறையை தவிர மற்ற விடுமுறைகளை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இனிமேல் விமானத்தில் பறக்கலாம் ராமேஸ்வரம், தஞ்சை, வேலூருக்கு!!... விரைவில் விமான சேவை ...

மத்திய அரசின் மண்டலங்களை இணைக்கும் விமானச் சேவைத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.
மாநில அரசும், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையமும் இந்த 3 நகரங்களுக்கும், நகரங்களுக்கு இடையேயும் விமானப் போக்குவரத்து வசதியை தொடங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர்கூறுகையில், “ ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவது குறித்து கடந்த வாரம்  மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதில் வேலூருக்கு முதலில் விமானச் சேவை தொடங்கப்பட முடிவுசெய்யப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டே விமான நிலையம் தொடங்குவதற்கான நிலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விட்டது. ஏறக்குறைய 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஏராளமான வடமாநில மக்கள் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரிக்கு வருகை தருகிறார்கள். மேலும், ஏலகிரி சுற்றுலா தளம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஆகியவை இருப்பதால் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் பாரம்பரிய இந்துமக்கள் சுற்றுலாதளம் என்பதால் இங்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இருந்து இந்துக்கள், ராமேஸ்வரத்துக்கு எளிதாக பயணிக்கும் வகையில் அங்கு விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக உச்சப்புளி விமான நிலையத்தை தயார் செய்து வருகிறோம். தஞ்சையில் விமானப்படை தளம் இருப்பதால், அதையே பயன்படுத்தி, விமானநிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

Flash News:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி

3456 முதுநிலை ஆசிரியர்கள்,உடற்தகுதி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.
மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை
4% ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை தற்போதைக்கு நிரப்பக்கூடாது.
மாற்றுத்திறனாளிகளின் உடற்குறைபாடு தன்மை குறித்து 2 வாரத்தில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் உடற்குறைபாட்டை நிர்ணயிக்கும் வழக்கு விசாரணை ஆக.28 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

DSE PROCEEDINGS- Higher Secondary H. M. Promotion counseling will be conducted Tomorrow 10/08/2017

 ( THURSDAY )

7th Pay Commission Pay Fixation of Kendriya Vidyalaya Teachers | Full Details,...

பள்ளிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடுதல் குறித்து தமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் அறிவுரை வழங்கி உத்தரவு.