செவ்வாய், 18 ஜூலை, 2017
நல்லாசிரியர் விருது அறிவிப்பு தாமதம்
நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் விருது பெற்றவருக்கு மட்டும், தேசிய அளவில் விருது வழங்கப்படும். ஆண்டு தோறும், மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியானவர்களின் விண்ணப்பங்கள், ஜூலை முதல் வாரத்திற்குள் பெறப்படும்.
இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பம் குறித்து, இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. முன்பு போல, வெறும் அனுபவத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், திறமையாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கும் வகையில், விதிகள் மாற்றப்படுகின்றன. அதனால், விண்ணப்ப அறிவிப்பு தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனிடையே, உரிய நேரத்தில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகாததால், ஆசிரியர் தினத்தில் திட்டமிட்டபடி, விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பல் துலக்குவது முதல் கணினி வரை மாணவர்களுக்குப் பயிற்சி - அசத்தும் அரசுப் பள்ளி...
''கல்வி என்பது பாடம் படிப்பது, மார்க் எடுப்பது மட்டுமில்லை. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் சிலர் வாழ்க்கையில் தோற்றுப் போவதுண்டு. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்களும் வாழ்க்கையில் பெரியதாக ஜெயிப்பதுண்டு. கல்வி, சுயஒழுக்கம், சமூக பிரக்ஞை, தேசப்பற்று என எல்லாம் கலந்த மாணவர்கள்தான் தேவை. அதனால்தான், நாங்க தினமும் இருபது நிமிடங்கள் ஒதுக்கி, அரசுப் மாணவர்களைச் சகல விஷயங்களிலும் செம்மை நிறைந்தவர்களாக உருவாக்கும் பயிற்சி கொடுக்கிறோம்'' என்கிறார்கள் மனோகர் மற்றும் வெங்கடேஷ். இருவரும் கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கே படிக்கும் மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதலில் பேசிய ஆசிரியர் மனோகர், "அரசுப் பள்ளியில் சேர்த்தால், பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிடுமோன்னு நினைக்கிற பெற்றோர்கள் அதிகம். நானும் கிராமப் பகுதியிலிருந்து படித்து, ஆசிரியர் வேலைக்கு வந்தவன்தான். அதனால், கிராமத்தின் சூழல் எனக்குத் தெரியும். நான் ஆசிரியர் வேலைக்கு வந்ததால், வறுமையிலிருந்த என் குடும்பம் நிமிர்ந்திருக்கு. அதுமாதிரி இங்குள்ள மாணவர்களின் வாழ்க்கையையும் உயர்த்தணும்னு நினைச்சேன். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களைக் கேள்விகள் கேட்க பழக்கினோம். கேள்வி கேட்கும் ஞானம்தான் அறியாமையை விரட்டி அடிக்கும் என்பதை அவர்களுக்குப் புரியவெச்சோம். ஆரம்பத்தில், அவர்களின் கேள்விகள் அபத்தமாக இருந்தாலும், பிறகு அறிவுப்பூர்வமா கேட்க ஆரம்பிச்சாஙக். அவர்களுக்குப் பதில் சொல்றதுக்காகவே நாங்க கூடுதல் தகவல்கள் சேகரிக்க ஆரம்பிச்சோம்.
கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவது அடிப்படை விஷயம்தான். அவர்களை நல் மனிதர்களாக உருவாக்குவது முக்கியம் என்பதை உணர்ந்து, இரண்டு வருடங்களாக அதை நோக்கி மாணவர்களை அழைச்சுட்டு போறோம். ஸ்கவுட் வழியே பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல் எனச் சமூக அக்கறைகொண்டவர்களாக மாற்றினோம். தமிழ்நாட்டில் ஸ்கவுட் செயல்படும் ஒருசில பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்களும் மதியம் 12 முதல் 12.20 வரை நேரம் ஒதுக்கி, மாணவர்களின் பன்முக திறன்களை வெளிகொண்டு வருகிறோம்'' என்றார்
தொடர்ந்து பேசிய ஆசிரியர் வெங்கடேஷ், "அந்த இருபது நிமிட பன்முகப் பயிற்சியில், திங்கள் கிழமை மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கிறோம். சின்னச் சின்ன தலைப்பு கொடுத்து, அவர்களைப் பேசவைக்கிறோம். இதனால், வருங்காலத்தில் அவர்களுக்குப் பேச்சாற்றல் வளர்வதோடு, தாழ்வுமனப்பான்மை நீங்கும். ஆளுமைத் திறனும் தலைமைப் பண்பும் பெருகும். செவ்வாய்க் கிழமைகளில் மத்திய அரசு செயல்படுத்தும் விஞ்ஞான் பிரச்சார் நெட்வொர்க்கில் உள்ள வீடியோக்களை யூடியூப்பில் டவுன்லோடு செய்து, எல்.இ.டி திரையில் காட்டுகிறோம். தொடர்ந்து உள்ளூரிலேயே கிடைக்கும் சின்னச் சின்னப் பொருள்களில் எக்ஸ்பிரிமென்டல் டெமோ காட்டுறோம். அதாவது, காற்று, நீர், புவியீர்ப்பு, எலெக்ட்ரிக்கல், விசை என அறிவியல் சம்பந்தமான ஆற்றல்களைச் செய்முறைகளாக செஞ்சு விளக்குகிறோம். மாணவர்களையும் அவர்கள் கோணத்தில் அந்த ஆற்றல்களை விளக்க கிடைக்கும் பொருள்களில் எக்பிரிமென்டல் செஞ்சுட்டு வரச் சொல்றோம்.
புதன் கிழமை ஸ்கவுட் வழியே சேவை, தேசப்பற்று, உடற்பயிற்சி சம்பந்தமான விஷயங்களை உணர்த்துறோம். இது சம்பந்தமான மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவும் தயார்படுத்துகிறோம். வியாழக்கிழமை, மாணவர்களுக்கான நன்னடத்தை, உடல்நலம், கலை சம்பந்தமான திறமைகளை வளர்க்கும் பயிற்சி கொடுக்கிறோம். கம்பியூட்டர் அறிவை வளர்க்கவும் கூடுதலா பயிற்சி தருகிறோம். 'கிரீன் ஓ கிரீன்' மாணவர்களுக்கு மரக்கன்று நடவைப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு, கிராம மக்களுக்குத் துணி பை வழங்குவது, பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே பாத்திரங்களில் தண்ணீர்வைத்து பறவைகளின் தாகம் தீர்ப்பது எனப் பல விஷயங்களில் ஈடுபடுத்துகிறோம். வெள்ளிக்கிழமை உடல்நலம் சம்பந்தமான பயிற்சி தருகிறோம். விளையாட்டு, உடற்பயிற்சி, பற்களைச் சுத்தமாக பராமரிப்பது போன்றவை இதில் அடங்கும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய போட்டிகளை மாதா மாதம் நடத்தி, அதில் ஜெயிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மைலி பேட்ஜை அணிவித்துக் கௌரவிக்கிறோம்'' என்று பட்டியலிட்டு வியக்கவைக்கிறார்.
அதோடு, தண்ணீர் தினம், வன தினம், சுற்றுச்சூழல் தினம் என ஒவ்வொரு சிறப்பு தினங்களின்போதும் அது சம்பந்தமா நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்கள் மனதில் விழிப்புஉணர்வை விதைப்பதாகச் சொல்லும் மனோகர் மற்றும் வெங்கடேஷ், ''எங்கள் மாணவர்கள் எல்லா விஷயத்திலும் முதன்மையானவர்களாக, சிறந்த மனிதர்களாக வருங்காலத்தில் மிளிர வேண்டும். அதற்காகத் தொடர்ந்து உழைப்போம். இது தவிர பள்ளியில் நவீன வகுப்பறை, கூடுதலான கணினி வசதி ஏற்படுத்த நினைக்கிறோம். பொருளாதாரம் இல்லை. ஸ்பான்சர்ஸ் கிடைத்தால், எங்களின் செயல்பாடு பலமடங்கு அதிகரிக்கும்" என்று கோரிக்கையோடு புன்னகைக்கிறார்கள்
500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது விரைவில் அறிவிப்பு.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் : 12025 / 2014 தேதி 04.12.2014 மற்றும் 858 / 2015 தேதி : 31.07.2015 தீர்ப்புகளின் படி 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.
🖌🖌🖌 பாட வாரியாக பணியிட மாறுதல் பெறுவோர் விவரம்.
தமிழ் - 35 ;
ஆங்கிலம் - 45 ;
🏝🏝🏝 கணிதம் - 180 ;
இயற்பியல் - 70 ;
வேதியியல் - 70 ;
தாவரவியல் - 35 ;
விலங்கியல் - 35 ;
வரலாறு - 15 ;
புவியியல் - 15 .
மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். .
தமிழ் - 35 ;
ஆங்கிலம் - 45 ;
🏝🏝🏝 கணிதம் - 180 ;
இயற்பியல் - 70 ;
வேதியியல் - 70 ;
தாவரவியல் - 35 ;
விலங்கியல் - 35 ;
வரலாறு - 15 ;
புவியியல் - 15 .
மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். .
நமது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 29.07.2017 அன்று மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும். பின்னர்
வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல் நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல் நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
மாணவர் - ஆசிரியர் இடையேயும் சமத்துவம் வேண்டும்!..அரசுப்பள்ளியில் ஓர் ஆச்சர்ய ஆசிரியர்
இந்தியாவின் எதிர்காலம் ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில்தான் உருவாகிறது என்றார்கள் அறிஞர்கள். நாட்டின் எதிர்காலம் மட்டுமின்றி ஒரு தனிமனிதனின் எதிர்காலமும் அதே பள்ளியில்தான் உறங்கிக்கிடக்கிறது. அதைத் தட்டி எழுப்புகிற வல்லமை ஒரு ஆசிரியருக்கு மட்டுமே உண்டு.
கல்வியின் அவசியத்தை உணர்ந்துகொண்டாலும் அரசுப்பள்ளிகளின் மீது இன்னமும் சமூகத்தின் பார்வை பாரபட்சமாகவே உள்ளது. தனியார் பள்ளிகளே அவர்களின் பார்வையில் தனித்துவம் பெற்றிருக்கிறது. குறைந்தபட்சம் என்ஜினீயராவது ஆகிவிடுவார்கள் என்பதால் எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பிராய்லர் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கவே விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் அரசுப்பள்ளிகள் காற்றாடாமல் இருக்கச் செய்யும் மொத்த சிரமும் அரசுக்கும் ஆசிரியர்கள் மீதும் ஏற்றப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் மீது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள மதூர் அரசுத் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், மாணவர்களைப் பள்ளியுடன் ஒன்றிப்போகச் செய்ய ஒரு புதுவழியை செயல்படுத்திவருகிறார். மாணவர்கள் அணியும் பள்ளி யூனிஃபார்மையே தானும் அணிந்து பள்ளிக்கு வருகிறார் தினமும். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இது மாணவர்கள் மற்றும் ஊர்க்காரர்களிடையே ஒருவித பிணைப்பை உருவாக்கியிருக்கிறது.
ஸ்ரீதரன்தலைமை ஆசிரியர் ஸ்ரீதரனிடம் பேசினோம். “என் சொந்த ஊர் மதுராந்தகம். போலியோவினால் சிறுவயதிலேயே என் இடது கால் ஊனமாகிவிட்டது. உடல் குறைபாட்டைக்காரணம் காட்டி என்னை வீட்டில் முடக்கிவிடாமல் என் பெற்றோர் என்னை படிக்க ஊக்குவித்தனர். ஆசிரியர் பயிற்சிப் படித்து ஆசிரியரானேன். 14 வருடப் பணிக்குப்பிறகு கடந்த 3 வருடங்களாக மதூர் அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசியரியராகப் பணியாற்றிவருகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். எந்த மனிதனுக்கும் உடை என்பது அவனை எடைபோடப் பயன்படும் முதல் விஷயம். சிறுவயதில் வழக்கறிஞர் ஆவது என் லட்சியமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இருந்தாலும் சிறுவயதிலிருந்தே நான் வெள்ளை சட்டை கறுப்பு பேன்ட் உடையைத்தான் அணிந்துவந்தேன். ஒருவரது உடை எதிராளியின் மனதில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு.
அதைத்தான் இப்போது பள்ளி விஷயத்தில் செயல்படுத்த முடிவெடுத்தேன்.
பொதுவாக அரசுப்பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு பெரிய அபிப்பிராயம் இருப்பதில்லை. அது அவர்கள் தவறில்லை. அரசுப்பள்ளிகளின் தரம் குறித்து அப்படி ஓர் அழுத்தமாக அபிப்பிராயம் அந்தக்காலம் முதலே இருக்கிறது. பெற்றோர்களின் இந்த எண்ணத்தை மாற்ற என்னாலான முயற்சிதான் இந்த யூனிஃபார்ம் யோசனை. எல்லோரும் சமம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவே காமராஜர் பள்ளி மாணவர்களுக்கு ஒரேமாதிரியான உடை திட்டத்தை கொண்டுவந்தார். இப்போது தான் அணியும் அதே உடையை ஆசிரியரும் அணிவதைப்பார்க்கிற மாணவனுக்கு ஆசிரியருடன் இன்னமும் இணக்கமான நட்பு உருவாகும். இருவருக்கும் இடையிலான இடைவெளி குறையும்.
இறுக்கமான ஒரு உணர்வு தவிர்க்கப்பகிறது. அவர்கள் உடையையே நாமும் அணிவதால் அவர்கள் எளிதாக நம்மிடம் ஒன்றிப்போகிறார்கள். மாணவர்கள் மனநிலை ஒருபக்கம் என்றால், தினமும் நான் பள்ளிக்குப் பேருந்தில் வரும்போது என்னைப் பார்க்கிற பெற்றோர்கள் சகஜமாக உரையாடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள். இது பள்ளியின் சூழல் ஆரோக்கியமாக மாற உதவுகிறது.
எனக்கு முன்னரே ஈரோட்டில் ராமமூர்த்தி என்ற ஆசிரியர் இப்படி மாணவர்களின் யூனிஃபார்மில் வருவதாகக் கேள்விபட்டிருக்கிறேன். இம்மாதிரி முயற்சிகள் அரசுப்பள்ளிகளின் மீதுள்ள அபிப்பராயத்தை மாற்ற முயன்றால் அதுவே எனக்கு சந்தோஷம் என்றார்.
எங்கும் எதிலும் புதுமையான சிந்தனையைச் செயல்படுத்த விரும்பும் ஸ்ரீதரன் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டவர். மனைவி வங்கிப்பணியாளர். வெள்ளையனே வெளியேறு நடந்த தினத்தில்தான் தனது திருமணத்தை நடத்தியிருக்கிறார். பள்ளியிலிருந்து மாணவர் யாரேனும் நின்றுவிட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களின் மனதை மாற்ற முயல்கிறார் ஸ்ரீதரன். போலியோ பாதிப்பு பற்றிய விழிப்புஉணர்வு இல்லாததால் தன் இடது காலை இழந்துவிட்டதாகக் கூறும் ஸ்ரீதரன் ஆண்டுதோறும் போலியோ தடுப்பு ஊசி போடப்படும் தினத்தன்று எந்த வேலையானாலும் ஒதுக்கிவிட்டுத் தானே தன் சொந்த செலவில் ஆட்டோ, மைக் இவற்றை ஏற்பாடு செய்துகொண்டு தங்கள் பகுதியில் பிரசாரம் செய்வார் என்கிறார்கள். “செலவை மட்டும் பார்த்துக்கொண்டு வேறு ஆட்களை பிரசாரத்திற்கு அனுப்பலாம். ஆனால் போலியோ பாதித்த காலோடு நான் செய்கிற பிரசாரம் பெற்றோர்களின் மனதில் அழுத்தமாகப் பதியும். அதற்காகவே எந்த வேலையானாலும் தவிர்த்துவிட்டு நானே பிரசாரம் செய்வேன்.” என நெகிழ வைக்கிறார் ஸ்ரீதரன்.
“அரசுப்பள்ளி மாணவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் வராது என்ற அபிப்பிராயத்தை மாற்ற விரும்புகிறேன். இன்றும் எங்கள் பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்துவிட்டு 6 வது படிக்க பக்கத்து ஊர் பள்ளிக்குப் படிக்கச் செல்லும்போது அவர்களின் ஆங்கிலத்திறமையைப் பார்த்துவிடடு என்னைச் சந்திக்கிறபோது அதைச் சொல்லிப் பாராட்டுவார்கள்.
ஸ்ரீதரன்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகத் திறமையானவர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருவித இணக்கமான சூழல் உருவாகி ஆசிரியர்கள் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினால் அரசுப்பள்ளிகளை அடித்துக்கொள்ள ஆளிருக்காது. சமீபத்தில்தான் எனக்குத் திருமணம் ஆனது. பிறக்கும் குழந்தையை இதே அரசுப்பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என இப்போதே என் மனைவியிடம் சத்தியம் வாங்கிவிட்டேன்” என சன்னமான குரலில் சிரிக்கிறார் ஸ்ரீதரன்.
'மாற்றத்தை நீங்கள் விரும்பினால் அதை முதலில் உங்களிடமிருந்துதான் துவங்கவேண்டும்' என்பார்கள். ஸ்ரீதரன் செய்துவருவது அதைத்தான். வாழ்த்துகள் ஸ்ரீதரன்!
"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?" - பிரின்ஸ் கஜேந்திர பாபு...
மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்யும் வகையில் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பில் 1000-க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் கூட, நீட் தேர்வில் போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.நீட் தேர்வுக்கான கேள்விகள் என்பது சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் இருக்கிறது. எனவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கடினமாக இருக்கும். எனவே, அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைஎழுந்தது.
இதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நாங்கள் விலக்கு பெற்று விடுவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூறி வந்தார்.எனவே, மாணவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், நீட் தேர்வுத் தேதியும் நெருங்கி வந்தது. தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து பெரும்பாலான தமிழகமாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் பெரும் அளவில் தேர்ச்சியும் பெறவில்லை. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எல்லோரும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள்தான்.இந்தச் சூழலில் தமிழக மாணவர்களைக் காப்பாற்றும் வகையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
இந்த நிலையில்தான் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விபடிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களில் கூட்டமைப்பைச்(COTSO) சேர்ந்தவர்கள் 17-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசினர். " கடந்த ஆண்டு +2 முடித்த மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்று கூறினர். ஆனால், அதில் இருந்து தமிழகத்துக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்துக்கு விலக்கு அளித்தது.
இதேபோல நமக்கும் நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு கிடைக்கும் என்று கடந்த ஆண்டு ப்ளஸ் ஒன் படித்து, இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதிய நாங்கள் எதிர்பார்த்தோம். +2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் இரவு பகல் பாராது படித்தோம். நீட் தேர்வு கட்டாயம் என்பது கடைசி வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இப்போது நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. கட்டாயம் என்று சொன்ன பிறகு எங்களுக்கு படிக்க இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நேரம் கிடைக்கவில்லை.
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த நாங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி அமைந்த கேள்விகளைக் கொண்ட நீட்தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும். எங்களுடன் படித்த மாணவர்கள் +2 வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் அதிக மதிபெண்கள் எடுத்ததால் இப்போது, அவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழக மாணவர்கள் பாதிக்காதவாறு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர்பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், "நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தரப்பினர் வசதியில்லை அதனால், நீட் தேர்வுக்கான கோச்சிங் கிளாஸுக்கு போக முடியவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு தரப்பினர், ஓரளவுக்கு வசதி இருக்கிறது. ஆனால், கோச்சிங் சேர்வதற்கான நேரமில்லை என்று சொல்கின்றனர். இப்போது இருக்கும் மாநில அரசு, எம்.ஜி.ஆரை பின்பற்றுவதாகச் சொல்கிறது. இந்திரா காந்தி காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது மத்திய அரசு மாநிலங்களுக்கு அரிசி விநியோகம் செய்தது. அப்போது, தமிழகத்துக்குக் குறைவாக விநியோகம் செய்ததை எதிர்த்து எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம்இருந்தார்.
காவிரி பிரச்னைகாக முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'அ.தி.மு.க ஜெயித்தால், நீட் தேர்வு கட்டாயம் தமிழகத்துக்கு வராது. வந்தாலும் தகுந்த சட்டம் அமைத்து அதற்கு தடைக் கோர முடியும்' என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். இப்போது ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பின்பற்றுவதாக சொல்கிறார். ஆனால், மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் நீட் தேர்வை எதிர்த்து அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை.
நீட் தேர்வு குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருக்கிறார்? இங்கு கூடியிருக்கும் மாணவர்கள் முதலமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். முதல்வரை பார்ப்பதற்கு முன்பாக நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்த உள்ளனர். கல்லூரிகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் மெழுகுவத்தி ஏற்றி அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.
மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து +2வில் மதிப்பெண்கள்வாங்கினாலும், இரண்டு மூன்று மாதங்கள் படித்து தேர்ச்சி பெறும் நீட் தேர்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும்.
மருத்துவப் படிப்பில் 85% உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!!..
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பின்னணி என்ன?
மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தமாணவரான தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.அதில், ''சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் உள்ள 2,500 இடங்களில் 319 இடங்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டு தற்போது மாநில வழிக்கல்வி, மத்திய வழிக்கல்வி என மாணவர்களை பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. மருத்துவ கவுன்சில் விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்.
ஓபிசி பிரிவினர் என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, பாடத் திட்டத்தின் அடிப்படையில் 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்குவது என்பது சட்ட விரோதமானது. இந்த அரசாணையை செயல்படுத்தும் அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது. எனவே கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.
இந்நிலையில் ஜூலை 14-ம் தேதியன்று வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டார்.இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) உயர்நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:''மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீடு செய்தது அரசின் கொள்கை முடிவு.
தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு சிபிஎஸ்இ வழியாகப் படித்தவர்களுக்கு மட்டுமே எளிதாக இருந்தது.மாநில வழிப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங்களில் கிடையாது.குறிப்பாக தமிழக அரசு நீட் தேர்வை எதிர்க்கும் சூழ்நிலையில், சிபிஎஸ்இ வழியாகக் கற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் அதிகமாக நுழைய இம்முறை வழிசெய்யும்.சாதிய ஒதுக்கீடுகள் தவிர்த்து தேசிய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என ஏராளமான ஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன.
இத்துடன் இதுவும் சேர்ந்தால் மாநில வழிப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள்.அரசாணையையும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியே பிறப்பித்துள்ளோம். அதனால் உள் இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது.
" ஏகலைவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள்... அரசுப் பள்ளிகளில்...."
Writing and Reading of phonetics of English alphabets by first standard student k.kaviya...in one month...
" ஏகலைவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள்...
எங்கள் அரசுப் பள்ளிகளில்...."
அரசுப் பள்ளிகளுக்கும் , தனியார் பள்ளிகளுக்கும் அமைப்பு ரீதியாக இருக்கக் கூடிய வேறுபாடுகளில் ஒன்று...
தனியார் பள்ளிகள் சமூகத்தில் ஒரு நிறுவனம்... அரசுப் பள்ளிகள் சமூகத்தின் ஒரு அங்கம்...எனவே இப்பதிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையேயான வேறுபாடுகளை அலசி ஆராயும் ஒன்றெனக் கருதலாகாது....
எங்கள் அரசுப் பள்ளிகளில்...."
அரசுப் பள்ளிகளுக்கும் , தனியார் பள்ளிகளுக்கும் அமைப்பு ரீதியாக இருக்கக் கூடிய வேறுபாடுகளில் ஒன்று...
தனியார் பள்ளிகள் சமூகத்தில் ஒரு நிறுவனம்... அரசுப் பள்ளிகள் சமூகத்தின் ஒரு அங்கம்...எனவே இப்பதிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையேயான வேறுபாடுகளை அலசி ஆராயும் ஒன்றெனக் கருதலாகாது....
அமைப்பு ரீதியாக இருக்கக் கூடிய இத்தகைய வேறுபாட்டின் விளைவாக...அரசுப் பள்ளிகள் சமூகத்தின் ஒரு அங்கமாக, உறவாக இருக்கக் கூடிய தன்மையினால்...மாணவர்களின் கல்வி நலன் மற்றும் திறன் சார்ந்து ஏற்படக்கூடிய ஆக்கப்பூர்வமான விளைவு சார்ந்த ஓர் நிகழ்வின் பதிவு இது....
சமூகத்தின் ஓர் அங்கமாக இருத்தலால் ...சமூகத்தின்பால் அக்கறை கொண்டதாக, சமூகத்தோடு நலன் சார்ந்து இசைந்து போகிற தன்மை அரசுப் பள்ளிகளுக்கு உண்டு....இதன் நேரிடை விளைவாய்... பெயர் சேர்க்காத , ஐந்து வயது பூர்த்தியாகாத குழந்தை கூட நமது பள்ளிகளில்... தமது அக்கா அல்லது அண்னணோடு வகுப்பறைகளில் நம்மோடு பயணிப்பது என்பது அரசுப் பள்ளிகளில் மட்டுமே காணக்கூடிய ஒரு நிலையாகும்....
அவ்வாறு ஐந்து வயதிற்கு முன்பே வகுப்பிற்கு வந்து....நம்மோடு கலந்து....பயணிக்கும் குழந்தை...நமக்கென்று சில ஆச்சரியங்களை... அதன் விளைவாக நமக்கென்று நல்ல அனுபவங்களை தருவதை ....பல ஆசிரியர்கள் தம் பணிக்காலத்தில் கடந்து வந்திருப்பர்....இதைப் படிக்கும் இந்த நேரத்தில் அத்தகைய மகிழ்ச்சியான நினைவுகளை ...நினைத்து பார்ப்பதென்பது தவிர்க்க இயலாத ஒன்று...
என்னுடைய வகுப்பில் தற்போது ஒன்றாம் வகுப்பு பயிலும் க.காவ்யா என்னும் குழந்தை ....மேற்கூறியது போலவே சென்ற ஆண்டு நான்கு வயதில் என் வகுப்பில் வரத்தொடங்கியது....மற்ற மாணவர்களோடு விருப்பத்தின் பேரில் படிப்பது....கீழ்மட்டக் கரும்பலகையில் கிறுக்குவது என்று சுதந்திரமாக இருந்தது....பிப்ரவரி மாத அளவில் இரண்டு குறிப்பேடுகளை தந்து எனக்கும் வீட்டுப்பாடம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டு கொஞ்சம் அதிர்ச்சி தந்தது....
அந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாக .....சென்ற வருடத்தின் பார்த்தல் , கேட்டல் மற்றும் மூன்று மாத வீட்டுப்பாடத்தின் கிறுக்கல் அனுபவங்கள் .....இந்த கல்வியாண்டின் கடந்த ஒரு மாதத்தில் பட்டை தீட்டப்பட்டதன் விளைவு யாதென நான் மகிழ்ந்தவாறு ...நீங்களும் கண்டு மகிழ ...சிறு காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு....
ஊ ஒ ந நி பள்ளி
கட்டளை
மரக்காணம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்...
கட்டளை
மரக்காணம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)